Advertisement

சபாஷ்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராள சலுகை அறிவிப்புகள்:மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என உறுதி: 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவார்களாம்

சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்; 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகை அறிவிப்புகளை, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என, உறுதி அளித்ததோடு, இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடாததால், சபாஷ் பெற்றுள்ளது.
தமிழகத்தில், மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.அப்போது பேசிய கருணாநிதி, ''தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற, தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
*மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும்
*'லோக் ஆயுக்தா' சட்டம் கொண்டு வரப்படும்
*சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்
*வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்
*சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்
*நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவின்டால் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்
*கரும்பு, டன் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும்
*மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து உள்ள, அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு தரப்படும்
*விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களும் ஆண்டுதோறும் வேட்டி, சேலையுடன் *பொங்கல் பரிசு, 500 ரூபாய் வழங்கப்படும்
*100 நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகளுக்கு மேலும், 50 நாட்கள் சேர்த்து, 150 நாட்கள் என, புதிய சட்டம் இயற்றப்படும்

*கிருஷ்ணகிரியில், தோட்டக்கலை பல்கலைக்கழகம் நிறுவப்படும்
*நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்
*2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 200 தடுப்பணைகள் கட்டப்படும்
*சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்
**மீனவர்களுக்காக, ஐந்து லட்சம் வீடுகள் கட்டப்படும்
*மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்
*மீன்பிடி தடைக்கால நிவாரணம், மழை - வெள்ள நிவாரணம், 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்
*தனி ஜவுளி ஆணையம் நிறுவப்படும்
*கைத்தறி நெசவாளர்களுக்கு, 200 யூனிட்இலவசமின்சாரம் தரப்படும்
*விசைத்தறிகளுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் உண்டு
*ஆட்டோ ஓட்டுனர் சொந்தமாக ஆட்டோ வாங்கிட, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்
*புதிய கல்வி கவுன்சில் நிறுவப்படும்கல்வி கடன் தள்ளுபடி
*மாணவர்களின் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி தரப்படும்
*கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்பட்டு, கட்டணம் செலுத்த முடியாத, ஏழை - எளிய மாணவர்களுக்கு, தொழில் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்
*அரசு துறைகளில் காலியாக உள்ள, மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
*படித்து விட்டு, வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை தரப்படும்
சர்க்கரை ஆலைகளில், 10 சதவீத, 'எத்தனால்' உற்பத்தி செய்யப்படும்
*மதுரை முதல் துாத்துக்குடி வரை மற்றும் சென்னை முதல் ஓசூர் வரை தொழிற்சாலைகள் நிறைந்த நெடுஞ்சாலை அமைக்கப்படும்
*மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும்
*15 நாட்களில், புதிய குடும்ப அட்டைகள், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் தரப்படும்
*நியாய விலை கடைகளில், மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும்
*மகளிருக்கு, 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும்
*கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் காப்பீடு உண்டு
*திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் வழங்கப்படும்
*பேறுகால உதவித் தொகை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
*மாற்றுத்திறனாளிகளுக்கு, கட்டணமில்லா பயண சலுகையுண்டு
*மதுரை, துாத்துக்குடி, திருச்சியில் வர்த்தக மையங்கள் அமைக்கப் படும்
*கோவில் நிலங்களை பாதுகாக்க, நில வங்கி ஏற்படுத்தப்படும்
*முக்கிய கோவில்களின் தேரோடும் வீதிகள், கான்கிரீட் வீதிகளாக மாற்றப்படும்
*கிராம கோவில் பூஜாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப் படும்
*பயணிகள் பேருந்துகளில், ஜி.பி.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்படும்
*திருச்சி, மதுரை, கோவையில், 'மெட்ரோ' ரயில் சேவை துவக்கப்படும்
*ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்
*மீண்டும், 'நமக்கு நாமே' திட்டம் நடைபெறும்
*மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வகை செய்யப்படும்
*ஒற்றை சாளர முறையில், 60 நாட்களில், கட்டட அனுமதி தரப்படும்
சிறப்பு வகை கைபேசிகள் வாங்க வசதியற்றவர்களுக்கு, அரசு செலவில் கைபேசிகள் தரப்படும்
*பொது இடங்கள் அனைத்திலும், தகவல் தொடர்புக்காக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்
இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இலவச அறிவிப்புகள் இல்லை:கடந்த, 2006 தேர்தலின் போது, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும், 'டிவி' என, இலவசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பின், 2011ல், அ.தி.மு.க., இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாடு, ஆடு என, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியது.

இதனால், தேர்தல் அறிக்கை என்றால், அதில் இலவசம் கட்டாயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த முறை, தி.மு.க., சார்பில், வாஷிங் மிஷின், பிரிஜ் என, இலவசங்கள் இருக்கும் என, தகவல் பரவியதால், அதை விட கூடுதலாக அறிவிப்பு களை வெளியிட, அ.தி.மு.க., தரப்பு தயாராக இருந்தது.

அதற்காகவே, 'தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடட்டும்' என, அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையை தள்ளி போட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், இலவச அறிவிப்பு இல்லாமல், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (519)

  • K.R.Sekar - Chennai,இந்தியா

    TASMOC மூடிவிடுவேன் என்று யாராவது சொன்னால் இதுதான் கெதி, நீங்கெல்லாம் அயல் நாடு சென்று குடிப்பிங்க, பாண்டிச்சேரியில் ரூம் போட்டு குடிபிங்க நாங்க எங்க போறது, இது எச்சரிக்கை, டெபொசிட் மட்டும்தான் போயிருக்கு, அப்புறம் கட்சி இருக்காது. எங்க அம்மாவுக்கு எங்களுக்கு என்ன வேணும்னு தெரியும், TASMOC படிபடியா மூடமாட்டோம் , கூட்டுவோம் அப்புறம் பரு 234 தொகுதியும் நாங்கதான். அடுத்த இலவசமே பாட்டில் தான் .

  • Dhanarajan - vadalur,இந்தியா

    ஆட்சியை பிடிப்பது நாட்டு மக்களுகாக இல்ல. தம் மக்களுக்காக. தமிழ்நாடு மூன்றாக பிரியபோகுது

  • g.s,rajan - chennai ,இந்தியா

    எங்க செவ்வாய்க் கிரகத்துலையா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை .

  • subhashini - chennai,இந்தியா

    ஒரு போண்டா வடை சுடும் பாட்டியின் கமெண்ட் 93 வயதில் எழுந்து நிற்கவே ரெண்டு பேர் பிடித்து கொள்கிறார்கள் பாக்கவே கண்றாவியா இருக்கு ..ஆனா என்ன செய்ய? தனக்கு பதவி வேணும்குற பித்து தலைக்கும் மேல இருக்கு ..புள்ளைக்கு வேற பதவி வேணும் நாளைக்கு ,,அதுனால தான் அண்ணாச்சி இவ்வளவு கஷ்டபடுராறு .. என்னமோ தேர்தல் அறிக்கையாமே அதுல நிறைய சொல்லியுருக்காராமே அதெல்லாம் இந்த வயசில இம்புட்டு தளர்ச்சியில இவருக்கு என்ன ஞாபகம் இருக்கும் ?ஞாபகம் இருக்குறேதே கஷ்டம் அப்ப்டீங்குரப்போ எப்படி நிறைவேற்றுவார் ன்னு புரியவேயில்லையே ? ..நமக்கு கொடுத்த இவங்க தேர்தல் அறிக்கை பிரச்சார காகிதத்தை போண்டா போட்டு பிள்ளைங்களுக்கு மடிச்சு கொடுக்க வைச்சுக்க வேண்டியதுதான்

  • THIRUMAVALAVAN.P - Coimbatore,இந்தியா

    தேர்தல் அறிக்கையை நீங்கள் வெளியிட்டுவிட்டீர்கள், நாங்கள் எடுத்து பத்திரப் படுத்தியிருக்கிறோம். நீங்களாவது 'சொன்னதை செய்வீர்களா?' என்று பார்க்கத்தான் போகிறோம்.

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    சொல்ல மறந்தது: "3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு நாங்கள் ஆட்சிக்கு வந்து, எங்கள் ஆட்சி காலத்தில் தரத்தவறினால் அடுத்துவரும் ஆட்சியாளர்கள் தர வலியுத்துவோம்"

  • r sampath - mumbai,இந்தியா

    இலவச திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் நோட்டு அடிக்கிற மிஷின் டெல்லியிலிருந்து வாங்க வேண்டும்

  • roja - Washington, D.C.,யூ.எஸ்.ஏ

    போன தி.மு.க., ஆட்சில் டிரைவர் / கண்டக்டர் ஒரு சீட்கு 3 லட்சம்.இப்போ பிளான் பண்ணிடான்கைய 3 லட்சம் சீட்.ஓ வசூல் அபாரம்...

  • நந்து - Karur,இந்தியா

    திமுக, அதிமுக இதில் எது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை இனி ஆண்டவனாலும் காப்பத்த முடியாது

  • krishnamoorthy - chennai,இந்தியா

    அட அம்மாவின் அறிக்கை முன் இவரெல்லாம் ஜுஜுபி ஆகிவிட்டாரே. கேழ்வரகில் நெய் ஒழுகிறது என்றால் கேட்பவனுக்கு மதி எங்கே என்று ஒரு சொலவடை உண்டு அட்ட அதுதான் தமிழன் மூளை கேட்டு 50 வருடமாயிற்றே.

  • Sivaraman - Pondicherry,இந்தியா

    ஸ்மார்ட் சிட்டி யில் உள்ள சில அம்சங்களும் இதில் உள்ளன.ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் திட்டங்களில் உள்ளவை

  • nycclown - New York,யூ.எஸ்.ஏ

    கொள்ளையர் மற்றும் திகார் ஜெயிலில் குடும்பம் நடத்தியவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் ....... வெட்கம்

  • nancy - chennai,இந்தியா

    டேய் உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஆப்பு ரெடியாகிகிட்டே இருக்குடா, இதுவரைக்கும் நீங்க பண்ண அட்டூழியம் போதும் .மூடிகிட்டு இருங்க ok

  • rithish - chennai,இந்தியா

    இன்னுமா இந்த ஊரு உங்களை நம்புது

  • ravi - chennai,இந்தியா

    யார் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து சலுகைகளை கொடுக்கிறீர்கள் - உங்களுக்கு ஆட்சிக்கு வரணும் - கொலை கொள்ளை அபகரிப்பு தாது மணல் granite கொள்ளைகள் சுதந்திரமாக நடத்தனும் - ரௌடிகள் அவர்கள் ராஜ்யத்தை நிலைநிறுத்தி ஊரான் சொத்துக்களை அபகரிக்கணும் - உங்களுக்கு எப்படி பல லட்சம் கோடி வந்தது - தமிழினத்தை அழித்த ராஜபக்செவே உங்களுக்கு எப்படி மக்களை சந்திக்க மூஞ்சி வந்தது - தமிழர்கள் என்ன சொரணை கெட்டவர்கள் என நினைக்கிறீர்களா- வெள்ளத்தின் போது 10 ஆம் நாள் வந்தீரே - கருமாதிக்கா வந்தீர்கள் - கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்றால் ஒரு சட்டம் இயற்றலாமா - கொள்ளை அடித்த எல்லா அரசியல்வாதிகளையும் கூண்டில் ஏற்றலாமா - முதலில் உங்கள் குடும்பம் உள்ளே போகும் - என்னமோ மக்கள் லூசு மாதிரி பேசிக்கொண்டு திரியாதீர்கள் - நீங்கள் ஆட்சிக்கு வரக்கூடாது - அந்த கொடுங்கோல் ஆட்சி மக்களுக்கு தேவையில்லை - சைதாபேட்டையில் 3 நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும் என்று 2006 இல் சொன்னீர்களே என்ன கிழித்தீர்கள் - உங்களை மக்கள் எப்படி நம்புவார்கள் - 2021 இல் பார்க்கலாம் -ஜெய் ஹிந்த்

  • Er Raja - New Delhi,இந்தியா

    குடும்ப தலைவரே இதில் கமிசன் தொகை குறைவா பெறப்படும் என சொல்லவில்லையே. அது எப்படி 2 G போன்று லட்சம் கோடிகளா? இல்லை ஆயிரம் கோடி / கொடிகளா( வாரிசுகளா )? இப்போது அழகிரி தலையீடு இருக்காது என உறுதியான தேர்தல் அறிவிக்கையில் இல்லை அது எப்படி மீண்டும் இருக்குமா , மொழி விழி உளி போன்று இப்போது எதாவது அறிமுகம் இப்போது செந்தமிழ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுமா எப்பது போற்ற செய்திகள் இடம்பெறவில்லை .....

  • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

    முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே. அதிமுகவிற்கு எதிர் கட்சிகளை எப்படி மதிக்க வேண்டும் மற்றும் மற்ற கட்சி தலைவர்களை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதையும் கற்று கொடுக்கப்படும் .

  • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    "மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும்" இததான் சூட்சுமம். இந்த தனிசட்டத்தில் திமுகவினருக்கு சாதகமாக சில அம்சங்களை போடுவார் கட்டுமரம். அவருக்கு தமிழனை அழிப்பதுதான் குறிக்கோள். தனிச்சட்டம் என்று போட்டு அதற்கு அப்போ அப்போ அமண்ட்மென்ட் போட்டு மக்களை ஏமாற்றுவார். கட்டுமரத்தின் பேச்சை நம்பி திமுகவிற்கு வாக்களித்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது.

  • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

    ஆஹா, எவ்வளவு நல்ல தேர்தல் அறிக்கை. கட்டுமரம் குடும்பத்தை தவிர யாருக்கும் பிரயோஜனம் இருக்காது. அதனால், மக்கள் அதை கண்டு கொள்ள வேண்டாம்.

  • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

    1)விவசாயிகள் கடன் பெறுவதே அதுத்து வரும் ஆட்சியில் அதனை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான். பேசாமல் கடன் சென்று சொல்லாமல் வருடாவருடம் ஏக்கருக்கு இவ்வளவு மானியம் என்று விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அரசு கொடுத்துவிடலாம். என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணமா? நம் மக்களின் வரிப்பணம்தானே. 2) கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் (?) நிச்சயம் மதுவை ஒழிக்கமாட்டார். அது அவர் பேசும் முரண்பட்ட பேச்சிலேயே தெரிகின்றது. என்னுடைய முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று நெஞ்சை நிமிர்த்து சொல்லமுடியுமா? முடியவே முடியாது. 3) தாமரை மலர்ந்தாலன்றி தமிழகத்திற்கு விமோசனமே இல்லை.

  • kumar - kotpad,இந்தியா

    தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளோ எனக்கு திருநாள் என்று சொன்னவர் கருணாநிதி. எனவே நடராஜரை உடைக்க நினைக்கிற கருணாநிதிக்கு ஒட்டு போடுவீர்களா, மக்களுக்காக நல்லாட்சி தரும் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

  • Mohan V - Thirunagar, Madurai ,இந்தியா

    நடைமுறை படுத்த முடியாது, எப்படியும் வெற்றி பெரும் நோக்கம் தான் .ஆனால், முடியாது தோல்வி நிச்சயம்.

  • Irudayarab Rajan - madurai ,இந்தியா

    ஒவ்வொருவருக்கும் 2 ஏக்கர் நிலம் என்னாசுசு என்று அண்ணனிடம் கேளுங்கள்

  • Bala - Chennai,இந்தியா

    Only DMK family will grow that's it.

  • Vijayaraghavan Tirumalairajan - chennai,இந்தியா

    நண்பர்களே, மாதத்திற்கு ஒருமுறை மன்கட்டணம் செலுத்துவதால் கட்டணம் குறையாது. மறுபரீசீலனை செய்து இதே அளவுக்கோ அல்லது உயர்த்தபட்டோ இருக்கும். 100 யூநிட் மேல் போனால் யூநிட் ரேட் ரூ 7 அதற்கு குறைவானால் 3 என்றாகலாம். மின் கட்டண குறைப்பை சொல்லவில்லை. ஆவின் பால் தரமானதாக இருக்கும் என சொல்லவில்லை. விலை குறைக்கப்படும் போது அதன் தரம் (நீர் கலத்தல், பருத்தி பால், மற்றும் பிறவிஷயங்களை கலத்தல் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை என்று கூற வில்லை.). நிறைய விஷயங்கள் இப்படி தான் உள்ளது. ராமதாஸ் சொல்வதை போல பிஎம்கே வையும் காபி அடிக்கிறாரோ? இதற்கு எதற்கு ஆறுமாத உழைப்பு . பிட் அடித்து பாஸ் செய்வதையும் ஏற்று கொள்ளலாமே. அரசு அதிகாரிகளுக்கு சாக்லேட் கொடுத்து எல்லாரையும் ஏமாற்றவா? அரசு அதிகாரிகள் விலை போகாமல் மக்களை காக்கவேண்டும்.

  • Cheran - Kongu seemai,இந்தியா

    உண்மையான நல்ல தேர்தல் அறிக்கை. இது செயல்பாட்டுக்கு வருமானால் பாராட்ட பட வேண்டிய ஒன்று. குறிப்பாக விவசாயத்தை மதித்தும், நெசவை மதித்தும் அறிவிக்க பட்ட ஒன்று.

  • MAGUDAPATHY - madurai,இந்தியா

    ஒண்ணு தெரிகிறது உலகத்தை சுற்றி பழத்தை பெறுவதை விட அம்மையப்பனை (அரசு ஊழியர்களை) சுற்றி பழத்தை அடைவது எளிது என எண்ணிவிட்டார் கருணாநிதி.

  • Appu - Madurai,இந்தியா

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே....

  • $$$$ - $$$$,இந்தியா

    அட பதர்களா 110 விதியில் அறிவித்த திட்டங்களே நிறைவேறாத போது இந்த தேர்தல் அறிக்கையையும் (அது தி மு க வாகட்டும்...இல்லை அதிமுக வாகட்டும்) நம்புகிறவனுக்கு வாயிலே பழம் இல்லேன்னா திருநெல்வேலி அல்வா தருவாங்க...நல்லா வழுக்கி கிட்டு போகும்..

  • rama - johor,மலேஷியா

    மிகச்சரியாக சரியாக சொன்னீர்கள் திரு மக்கரம் அவர்களே

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    "திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் வழங்கப்படும்". இது முழுக்க முழுக்க ஜெயா கொண்டு வந்த திட்டம் அதை இவர் மெருகேற்றி உள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கருணா சொல்லிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே நடை முறையில் உள்ள திட்டங்கள் தான். அதில் பா ம க அறிவித்த திட்டங்கள் சில , மத்திய அரசு கொண்டு வந்த சில , அ தி மு க அரசு கொண்டு வந்து அதை வெற்றி தேடி சென்ற திட்டங்கள் சில . தி மு க விற்கு கொள்கை இல்லை , திட்டங்கள் இல்லை. இது தான் உண்மை.

  • INNER VOICE - MUMBAI,இந்தியா

    ஏங்க? யாரு வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தை யாரும் kandukkaarthillai. இந்த மாவட்டம் ஒரு பாவமும் பண்ணாத இயற்கை எழில் உள்ள idam. paappom.

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    9 மாத பேறுகால விடுமுறை தரப்படும் என்கிறார். இது மத்திய அரசு 6 மாதத்திற்கு கொண்டு அறிவித்த ஒன்று. இது கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் சாப்ட்வேர் engineer களுக்கு தெரியும். இது தமிழக மக்களை முட்டாள் என நினைக்கும் நடவடிக்கை.

  • Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்

    ஏன் ராமேஸ்வரம் மீனவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை ஏனென்றால் இவரால் ஒன்றும் செய்ய இயலாது

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    நியாய விலை கடைகளில், மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும் , வாரம் ஒரு நாள் தான் தற்போது விடுமுறை. மாதம் தோறும் வழங்குவதால் மக்களுக்கு என்ன பயன் ?

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    15 நாட்களில், புதிய குடும்ப அட்டைகள், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் தரப்படும். இது ஜெயா ஏற்கனவே சொல்லிய 2011யின் அறிக்கை ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டு வருவோம் என்று. அவர் செயல் படுத்த முடிய வில்லை .என்ன காரணம் ? இவர் செயல் படுத்த போறாராம். அது எப்படி உங்களால் மட்டும் சாத்தியம் ?

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும் என்கிறார். இது கர்நாடகாவில் நடை முறையில் உள்ளது. தற்போது மத்திய அரசு ஒரு வேண்டத்தகாத மின் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதன் படி இந்தியாவில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதை கருணா ஆதரிக்கிறார்.

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    ரயில் நிலையங்களில் wifi வசதி உள்ளன. இவர் என்ன கொண்டு வர போகிறார் ?

  • SURESH SURESH - Bangalore,இந்தியா

    இது அனைத்தும் பா ம க முன்னரே தெரிவித்து உள்ளன . அதை இவர் உண்மையில் காப்பி அடித்து உள்ளனர். மேலும் மத்திய அரசு என்ன திட்டங்கள் என்ன வைக்கின்றனவோ அதையே இவர் வாசிக்கிறார். 5 முறை வெற்றி பெற்ற கருணாநிதி தொகுதி திருவாரூர். அங்கு சென்று பாருங்கள் மிகவும் கேவலமாக உள்ளன. பேருந்து நிலையங்கள் மிகவும் மோசமாக உள்ளன. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளன. இவர் 5 முறை வந்து அந்த தொகுதிக்கு என்ன பிரயோஜனம். சட்ட மன்றத்திற்கு வருவது இல்லை. வெறும் சம்பளத்தை வாங்கி கொண்டு என்ன திருவாரூர் மக்களுக்கு செய்து உள்ளார். சாக்கடைகள் திறந்த மயமாக உள்ளன. இது 1 வாரத்திற்கு முன்னர் பார்த்தது .

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    இதுல நெறைய நல்ல விஷயங்கள் பாமக, சீமான் அறிக்கையிலிருந்து சுட்டவை. மக்களுக்கு உண்மையாக இருப்போம், ஆட்டய போடுவதற்கும், ஓட்டு வாங்கவதற்கும் திட்டங்கள் கொண்டு வரமாட்டோம், விவசாயத்தை முக்கியமாக கருதுவோம், ரியல் எஸ்டேட்டை கட்டு படுத்துவோம், திமுக ஆளுங்க மது ஆலையை உடனடியாக மூடி மது விலக்குக்கு முன்னோடியாக இருப்போம், இயற்கை வளங்களை சுரண்ட மாட்டோம், வட்ட, மாவட்டங்களின் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம், லஞ்சம் கேக்க மாட்டோம், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வோம், இந்துக்களை புண்படுத்த மாட்டோம் ன்னு தேர்தல் அறிக்கை கொண்டு வாங்க, நாங்க ஓட்டு போடுறோம்.

  • Arumugam - London ,யுனைடெட் கிங்டம்

    2016 is good for thamizh people and good for tamilnadu because both thieves(DMK,ADMK) will be punished and erased from our land.

  • jagan - Chennai,இந்தியா

    85% ஆ தீ முகவின் 2011 தேர்தல் அறிக்கையின் காப்பி....

  • jagan - Chennai,இந்தியா

    வை கோ, சுடலையனுக்கு கட்சிக்குள் போட்டி என்று 1992இல் துரத்தினீர்கள், இப்போ அதே வை கோ சுடையலின் வெற்றிெவாய்ப்பை மொக்கை அணி மூலம் நிர்மூலம் ஆக்கிவிட்டார்......இந்த தோல்வியுடன் தீ முக மீண்டும் பிளவுபடும், அதோடு காலி ........... பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம்...ஹா ஹா ஹா (சிரிக்கும் சைக்கோ).....

  • GOPALASAMY - bengaluru,இந்தியா

    தலீவா அப்படியே இந்த அறிக்கையை 2021, 2026 தேர்தல்களிலும் ubayokapadutthalaam. பத்திரமாக வச்சிருங்க .

  • கைப்புள்ள - nj,இந்தியா

    நம்ப வெச்சு கழுத்த புடிச்சு கரகரன்னு அறுப்பதில் கருணாக்கு நிகர் வேறு யாருமே இல்லை. இதே போல பல தேர்தல் அறிக்கைகளை நம்பி ஓட்டு போட்ட மக்களை கரகரன்னு கழுத்தறுத்து நம்பிக்கை துரோகம் செய்தவர்தான் இந்த கருணாநிதி. அதே போலதான் இந்த தேர்தல் அறிக்கையும் பார்ப்பதற்கும் கேப்பதர்க்கும் அப்படியே ரொம்ப நல்லா இருக்கிற மாறி தெரியும். சரின்னு நம்பி ஓட்டு போட்டதுக்கு அப்புறம் தான் தெரியும் கருணாவோட சுயரூபம் மறுபடியும். சொத்துக்களை அபகரிப்பதில் இருந்து, கோடானு கோடி ஊழல்கள், அடியாட்களின் வெறியாட்டம், அடக்குமுறைன்னு மக்களின் துன்பமான வாழ்க்கை. கருணாவுடைய தேர்தல் அறிக்கையை தூக்கி அப்படியே குப்பையில் போட்டு விட்டு கருணா எப்பேர்பட்ட ஆள் என்று மட்டும் யோசியுங்கள் மக்களே. அப்பொழுது தெரியும் நமக்கு வேண்டியது மீண்டும் ஒரு அடியாட்களின் அராஜக மன்னனின் சாம்ராஜ்யமா என்று.

  • Elango K - Vellore,இந்தியா

    ஒரு விஷயத்த எல்லாரும் புரிஞ்சிக்கணும்..... 1)3.80 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போறோம்னு சொல்லி இருக்காங்க .... அதை எப்படி பண்ண போறங்கனு சொல்லவே இல்லை... காரணம் அவங்க கட்சி காரங்கள வச்சி பணம் வாங்கிட்டு வேலை கொடுப்பாங்க.... திறமைய மதிச்சு ஒழுங்கா எக்ஸாம் வச்சு வேலை கொடுக்கணும்..... 2) எந்த ஒரு அரசு அலுவலகங்களையும் பொது மக்களால் காசு கொடுக்காம வேல வாங்க முடியல... அதை ஒழிக்க எந்த திட்டமும் இந்த தேர்தல் அறிக்கைல் இல்லவே இல்லை..... எப்படியாவது ஆட்சியை பிடிக்கணும்... 4) விவசாய கடன் ரத்து... அதை அவங்கள வாங்குற அளவுக்கு கொண்டு சென்றதே நீங்கதான்... 5) எல்லா திட்டங்களுக்கும் நிறைவேற்ற ஆகுற செலவுக்கு .... மொத்த காசையும் ஊழல் பண்ணாம மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்து முன்னெற்ற பாதைக்கு கொண்டுசென்றாலே போதும்... 6) வெறும் அறிக்கை வடிவத்துல தான் திட்டம் இருக்கும் ... சட்டமும் புத்தக வடிவில் தான் இருக்கும்... இது இரண்டும் மக்களுக்கு எப்போ செயல் வடிவத்துல வருதோ அன்றைக்குத்தான் மக்களுக்கு நல்ல காலம் ....அதற்கு வழி .....ஊழல் இல்லாத ஆட்சி .... தன் கடமையை சரியாய் செய்யும் அரசு அதிகாரிகள்.... நேர்மையான மக்கள் ..... இது மூன்றும் என்றைக்கு கிடைக்குதோ அன்றைக்குத்தான் நம் நாடு முன்னேறும் ...............

  • $$$$ - $$$$,இந்தியா

    லோக் ஆயுக்தா வந்ததுன்னா 75 சதவீத உடன் பிறப்புகள் கம்பி எண்ணி களி தின்ன வேண்டியிருக்குமே? பரவால்லியா?

  • Raj - Chennai,இந்தியா

    கடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம். குறிப்பாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் போய் சிகிச்சைப் பெற்று வந்தபிறகு இந்த இரு ஆண்டுகளில் ரொம்பவே மோசம். தன்னிலை மறந்து அவர் காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதேதோ பேசுகிறார். அந்தப் பேச்சிலும் தெளிவில்லை. தன்னால் சிரிக்கிறார்... அல்லது கண்ணீர் வடிக்கிறார். நடையில் பெரும் தள்ளாட்டம். அவரைக் குறை சொல்வதற்காக இப்படி எழுதவில்லை. இருக்கும் நிஜத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா? I am not telling lies. He may affected by Parkinson, and part of memory loss. Blood vessel may be partially blocked at brain. Because of low blood circulation it is happened. If not giving proper treatment he will loss his memory . Soon he will forget everybodies name except his family person. He should take rest at house. Because of his age, operation will be success 50% only. Whatever may be he is not fit for politics. He is a patient now.

  • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

    இதுவரை தமிழகம் கண்டிராத தேர்தல் அறிக்கை ....இலவசம் இல்லை மிக்க சந்தோசம் ...எல்லோரையும் இலவசம் என்ற பேரில் சோம்பேறியாக்கியது போதும் ...ஜெயாவையும் அவரது கூன்பாண்டி அடிமைகளையும் விரட்டியடிக்கும் சக்தி இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது ..

  • prabu v - Perambalur,இந்தியா

    இந்த DMk 2016 தேர்தல் அறிவிப்பு வரவேற்க koodiyathu

  • Vel - Coimbatore,இந்தியா

    உண்மையிலேயே சிறப்பான சாத்தியமான திட்டங்களாகவே இருக்கிறது. சிறு சிறு குறைகள் இருந்தாலும் திமுக 95% நம்பலாம் . இதற்கு முந்திய முறை Rs 1 அரிசி, விவசாய கடன்தள்ளுபடி , நகர்புற கட்டமைபில் ,சாலை வசதிகளில்,108 ஆம்புலன்ஸ், மகளிர் சுயஉதவி திட்டம் ஆகியவற்றில் சொன்னதை செய்தார்கள். வேகமாக செயல் படுத்த ஸ்டாலினை விரைவாக முதல் அமைச்சராக்க வேண்டும். இது நமக்கு நாமே சுற்றுபயணத்தில் மற்றும் முந்தய துணை முதலமைச்சர் பதவியின் போதும் தெரிந்து கொண்டது

  • MALA - erode ,இந்தியா

    இவ்வளவு சொல்றாங்க. கல்விகடன் தள்ளுபடி பண்ணலாமே. ஏழை மாணவா்கள் பயன் பெறுவாா்கள்

  • manitha neyan - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்

    நல்ல விசயம்

  • Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா

    அது போன மாசம் . இது இந்த மாசம் .

  • Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா

    முதல் கை எழுத்துன்னு சொன்னது தளபதி . கலைஞரில்ல. தனிச்சட்டம்னு சொல்லியாச்சு . 5 வருஷத்துக்குள்ள எப்போ ? இது வலையில் சிக்காத திமிங்கலம் . 7 ஆலைகளை மூடிட்டு எப்படி அந்த மதுபான ஆலை தொழிலாளர்களை வாழவைப்பது ? .

  • vijayaraja - manama,பஹ்ரைன்

    போகாத ஊருக்கு வழி கேட்ட கதை மக்களை ஏமாற்ற விட்ட அறிக்கை டாஸ்மார்க் வளர்ச்சிக்கு உழைப்பார் மக்களே நம்பாதீங்க

  • kumar - chennai

    இரண்டு ஏக்கர் நிலம் எத்தனை பேருக்கு கொடுக்கபட்டது, அது போலத்தான் இந்த தேர்தல் அறிக்கை

  • Dina - Bangalore,இந்தியா

    சமூக அக்கறை கொண்ட அன்பு வாசகர்களே, எனது ஆதங்கத்தை பதிவு செய்ய ஆசை படுகிறேன். நம் நாட்டின் அரசியல் சட்டம் சரியா? மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை சரியா? யார் நம்மை ஆள்வது? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் படிக்கிறோம், வேலைக்கு செல்கிறோம் ஆனால் எவ்வளவு கஷ்ட படுகிறோம். அரசியலில் முறையாக படித்தவர் உண்டா? இல்லை அரசியலுக்கு தான் கல்வி தகுதி உண்டா? யார் வேண்டுமானாலும் நம்மளை ஆட்சி செய்யலாம். இதை பதிவு செய்யும் போது கூட நான் உணர்ச்சி வச பட்டவனாய் இருக்கிறேன். நமக்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்காதா? நாம் ஆதங்க பட்டு பேசுவதை யாரவது செவி கொடுத்து கேட்பார்களா? நாம் மட்டும் ஏன் இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். இந்த தேர்தல் அறிக்கை யாருக்கு லாபம்? இந்த தேர்தலை புறகணிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நம் அரசியலே மாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு நமக்கு எத்தனை சுற்றுகள்- கல்வி தகுதி தேவை, ஆங்கிலம் தேவை, ஆளுமை திறன் தேவை, கணினி அறிவு தேவை- வருடத்திற்கு ஒரு முறை திறமை பரிசோதிக்க பட்டு சம்பள உயர்வு, சரியாக வேலை செய்யவில்லை என்றால் பணி நீக்கம். அரசியலில் இப்படி எதாவது ஒன்று உண்டா? என்ன தகுதி உள்ளது இந்த அரசியல் வாதிகளிடம்? ஜெயித்து விட்டால் 5- ஆண்டு நாம் கேள்வி கேட்க முடியுமா? இதுபோல பல கேள்விகள் என்னுள் எழுகின்றன நண்பர்களே என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். நான் ஒருவன் மட்டும் முயன்றால் முடியாது. என் கருத்து சரி என்று உங்களுக்கு தோன்றினால் தேர்தலை புறக்கணியுங்கள். நம்மை ஆளுவதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. சிந்திப்போம் நண்பர்களே... (என் ஆதங்கத்தை முழுமையாக கூற முடியவில்லை ). I am against Election and Election Method

  • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

    ஒழிக்கப்படவேண்டிய தேசத்துரோக கட்சி.

  • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

    தமிழக அழிவின் விருட்சம் திமுக.

  • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

    இன்னமும் கூட திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிலர் நினைப்பதை பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது.

  • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

    இந்த தேர்தல் அறிக்கையை தமிழர்கள் வரவேற்கும் பொது திமுக அவர்களின் மறதியில் கொண்டுள்ள நம்பிக்கையும் தமிழக மக்களின் பலவீனத்தை நன்கு தெரிந்து அவர்களை ஏமாற்றும் வித்தையும் தெரிகிறது.

  • karthik - chennai,இந்தியா

    1. நீர்பாசனத்துக்கு தனி அமைச்சர் 2. விவசாயத்துக்கு தனி budget 3. விவசாய கடன் தள்ளுபடி 4. ஏழை மாணவர்களுகு கடன் தள்ளுபடி 5. கோவை திருச்சி மதுரை மெட்ரோ 6. மாவட்டம் தோறும் முதியோர் இல்லம் 7. ஆவின் பால் 7 ரூபாய் குறைப்பு 8. மதுவிலக்கு 9. தாது மணல் அரசாங்கம் ஏற்பு -2 லட்சம் வேலைவாய்ப்பு. 10. காஞ்சிபுரம் ஜவுளி பூங்கா 11. அண்ணா உணவகம் ( அம்மா உணவகம் நல்ல திட்டம் ஆகையால் ) 12. 10,000 கோடி தூர் வார திட்டம் 12. பால் கொள்முதல் மொத்தமாக ஆவின் 13. Hosur மதுரை தூத்துக்குடி தொழில் வளர்ச்சி முக்கியத்துவம் .. நீங்க பாருங்க ADMK தேர்தல் அறிக்கையில அப்படியே copy அடிப்பாங்க 10,000 ரூபாய்ன்னா, 20,000 ரூபாய் அதிகமா இருக்கும் அவ்வளவுதான் .. ஆனா மக்கள் நம்பமாட்டார்கள் . இதைவிட கலைஞர் சொன்னா செய்வார் ஆகையால் தான் மக்கள் DMK தேர்தல் அறிக்கை நம்பறாங்க. DMK 2016 தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார். marks 85 out of 100.

  • sankaranarayanan - tirunelveli,இந்தியா

    படியரிசி தருவேன் என்று சொன்னவர்களுக்கு - அளக்க சொல்லியா தரவேண்டும்

  • karthik - chennai,இந்தியா

    அண்ணா காலத்தில் வெளியிடப்பட்ட DMK தேர்தல் அறிக்கை தான் இந்தியாவின் முதல் தேர்தல் அறிக்கை . Its really good team work by DMK for went all the district & prepared தேர்தல் அறிக்கை. Hope ஸ்டாலின் will give better output . eventhough DMK did corruption they did some useful developments like மெட்ரோ , Tidel பார்க், Hogenakkal Water Scheme , உழவர் சந்தை , அண்ணா library , ELCOT , 22 bridges ( Total 22 bridges ) in சென்னை mainly கத்திபாரா( கிண்டி) Butterfly look , பூங்கா.. drainage system , மகளிர் சுய உதவி etc

  • 911Tamil - Somerset,சிங்கப்பூர்

    தாத்தாவிற்கு குளிர் ஜுரம் - எங்கே மக்கள் நலக்கூட்டணி வந்தால் நம் சொத்தை பிடிங்கி விட போறாங்கன்னு பயம் - 28 சீட்டுக்கு மேல் கிடைத்தால் தமிழ் இன துரோகியை இன்னும் தமிழக மக்கள் இன்னும் நம்புகிறார்கள் என்று அர்த்தம் - வெட்கக்கேடு - ஜெய் ஹிந்த்

  • VOICE - CHENNAI,இந்தியா

    அறிக்கை நன்றாக உள்ளது அது போல் சொல்வதை செய்ய வேண்டும், இருப்பினும் சில குறைகள் உள்ளது. குடும்பத்தின் முதலாவது பட்டதாரிக்கு முன்னுரிமை என்பதை காட்டிலும் கண்டிப்பாக அரசு வேலை என்றால் நன்றாக இருக்கும். வாரத்தில் 5 நாட்கள் வேலை சனி மற்றும் SUNDAY விடுமுறை விட்டால் வணிகர் பயன் பெறுவார். வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை கொடுப்பதை காட்டிலும் வேலை உருவாக்கி ஒருவருக்கு ஒரு வேலை என்ற நிலைப்பாடு வரவேண்டும். லேப்டாப் மற்றும் t பதில் ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளி மற்றும் கல்லூரி தரம் உயர்த்தி தனியாருக்கு மேலான ஒரு நிறுவனமாக செயல் படுத்தினால் அணைத்து மாணவர்களும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் 10 வருடம் மேல் குடும்பத்துடன் இருப்பவருக்கு தனியார் மற்றும் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். தமிழ் நாடு தனக்கு என ஒரு பேங்க் RBI கீழ் உருவாகி அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சம்பளம் மானியத்தை அதன் மூலம் செயல் படுத்தலாம் மற்றும் தமிழகத்தில் வாழ்பவருக்கு அதில் வேலை வழங்கலாம். 10 வருடம் மேல் குடும்பத்துடன் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனத்திருக்கு வரி சலுகை அளிக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரம் முனேற்றம் அடைய வேண்டும் என்றால் வேலை முக்கியம். தமிழர்கள் உலகின் எத்தனயோ நாடுகளில் தங்களின் உழைப்பை கொடுத்து உள்ளார்கள். அனால் பிறந்த மண்ணில் அது போன்றதொரு வாய்ப்பு இல்லை. சிங்கப்பூர் ஒன்று போதும் இதற்கு சான்று. .

  • karthik - chennai,இந்தியா

    6 ஆண்டுகள் கழித்து இப்பதான் பார்கிறேன், தினமலர் வாசகர்கள் திமுக மிக பெரிய support and ஸ்டார் rating .. clear majority DMK 2016. கண்டிப்பா DMDK ( கேப்டன் ) feel பண்ணுவாங்க . ஏன்னா சேர்ந்த இடம் அப்படி. Yes .. (வைகோ)

  • Village People - Coimbatore,இந்தியா

    மக்களை ஏமாற்றும் அறிக்கை ...

  • Venkat Srinivasan - Mumbai,இந்தியா

    அன்புள்ள தேர்தல் கமிஷனர் அவர்களே, உங்கள் அறிக்கையில் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது அதற்க்கான நிதி ஆதாரம் பற்றி குறிப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று தீ மூ க அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவற்ற சுமார் 3.00 லட்சம் கோடி பணம் வேண்டும். மதுவை நீக்கிவிட்டு எப்படி இவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவர். கொஞ்சம் மக்களே சிந்தியுங்கள். கொள்ளை அடிப்பதற்காக பதவி வேண்டும் என்பதற்காக இப்பிடி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வெளியிட்ட அந்த கட்சியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டுகிறோம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    தேர்தல் வேலைகளில், நிர்வாகத்தில் திமுக வை மிஞ்ச வேறு கட்சிகளே கிடையாது என்பது நிஜம் தான் . எதிர் முகாம்கள் கொஞ்சம் அதிர்ந்து தான போயிருக்கின்றன. வி காந்த், அன்புமணி மீண்டும் ஜே போன்றோரை சி எம் ஆக நினைக்கக் கூட முடியவில்லையே.

  • ravi - coimbatore,இந்தியா

    உண்மையில் இந்த திட்டங்கள் மிகவும் வரவேற்க கூடியது ... நிச்சயம் தி மு க வெற்றி உறுதி செய்ய பட்டு விட்டது ....

  • siriyaar - avinashi,இந்தியா

    Karunanithi expert in writing. If it is a drama those are possible. But in practical nothing will happen. His target only to restore the power and stealing for coming five years . For that he will give any promise some one belive karunanithi means he is also part of his stealing party.

  • M.R. Raju - madurai,இந்தியா

    நல்ல தேர்தல் அறிக்கை, திட்டங்கள். தி மு க நிச்சயம் வெல்லும்.

  • M.R. Raju - madurai,இந்தியா

    இந்த 5 ஆண்டுகளில் பொய் ஒன்றை தவிர வேறு எதாவது நன்மை நாட்டுக்கு நடந்துள்ளதா. கல்வி, சுற்றுசூழல், தொழில் வளர்ச்சி, மாசு கட்டுப்பாடு, இயற்க்கை வளம் பாதுகாத்தல், சாலை போக்கு வரத்து மேம்பாடு, மக்களுக்கு பாதுகாப்பு, எதாவது சரியாக நடந்து உள்ளதா. யாராவது ஆதரத்துடன் நிருபீயுங்கள்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஒன்னரைக் கோடிப் பேருக்கு இலவச LPG இணைப்பு மற்றும் 1600 ரூபாய் " என்று மோடி அரசு அறிவித்தபோது , சிங்கப்பூர் மணி மற்றும் அவரைப் போல் "இலவச எதிரிகள்" எங்கு போயிருந்தார்கள்? அந்த செய்திக்கு விமர்சனங்களே இல்லையே. நன்றாக யோசித்து தயாரிக்கப் பட்டிருக்கிற அறிக்கை. நிர்வாகத் திறனில் திமுக வை மிஞ்ச ஆளே கிடையாது என்பது அரசியலுக்கும் அப்பாற்ப்பட்ட நிஜம். அண்டை மாநில நல்லுறவிலும் கலைஞர் தான் பெஸ்ட். இப்போதைய தமிழகத்தின்,பொதுஜனப் பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் அனைத்துமே திமுக ஆட்சியில் உருவானவை தான். இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? அதிமுக ஆட்சியில் தற்காலிக நன்மை தருகிற விஷயங்கள் மட்டுமே நடந்திருக்கலாம், அம்மா இட்லி, அம்மா பொங்கல் போன்றவை. ஆனால் உள்கட்டமைப்புகள் தான் நிஜ வளர்ச்சி. சிப்காட், எல்காட், சிட்கோ, சமத்துவபுரம், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், உழவர் சந்தைகள், கோயம்பேடு பேருந்து நிலையம், மேற்பாலங்கள், அரசு அலுவலகக் கட்டிடங்கள், திருவாரூர் காவல் நிலையக் கட்டிடம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டும் இன்று வரை திறப்புவிழா நடக்காமல் இருக்கிறது. அது மாதிரி பல அரசு அலுவலகக் கட்டிடங்கள், சட்டமன்றம் இன்னமும் ராணுவத் துறைக்குசொந்தமான கட்டிடத்தில் கடத்திக் கொண்டு , லட்சங்களில் மாத வாடகை கட்டிக் கொண்டிருக்கிறோம், மாநில அரசுக்கென சொந்தமாகக் கட்டிடம் கலைஞர் கட்டினார், அதைப் பயன்படுத்தாமல் அதிமுக அரசு ஆஸ்பத்திரி ஆக்கிவிட்டது. போகட்டும், வேறு சட்ட மன்றக் கட்டிடமாவது கட்டினார்களா? 16 முறை மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள் செய்தவை தான் என்ன? ஒன்றுமே இல்லை. ஆதலால், இனி மக்கள் செய்யப் போவது என்ன? என்று யோசிக்கவும். இங்கே திமுக தோர்க்க வேண்டும் என்று எழுதுவபவர்கள், நிர்வாக சீர்கேடான அதிமுக அரசை ஆதரிக்கிறீர்களா? நல்லது.

  • M.R. Raju - madurai,இந்தியா

    அம்மா ஜெயலலிதா இதுவரை எதாவது ஒரு திட்டத்தை முழுமையாக செய்தார் என்று ஒரு நபர் சொல்லுங்கள் பார்ப்போம். 32 அடிமைகளை வைத்து கொண்டு ஆட்சி செய்தவர். அவர்களுக்கு குனிந்து நிமிரவே நேரம் சரியாகவே இருந்தது. தி மு க வின் தேர்தல் அறிக்கையில் என்ன குற்றத்தை கண்டீர்கள். தினமலருக்கே சபாஸ் போட எண்ணம் வந்தது என்றால் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை தரும். மீண்டும் தி மு க ஆட்சியை பிடிக்கும் அமோக வெற்றி பெரும். தமிழினியன், மதுரை.

  • Raj - Chennai,இந்தியா

    இலவசம் இல்லாத அறிக்கை உண்மையில் பாராட்டுக்கள், ஆனால் முக்கியமான நீர் மேம்பாடு எங்கே? இவ்வளவு மழை பெய்தும் இப்பவே நீர் இல்லை? மின்சாரம் மேம்பாடு ? மணல், மரம், நீர் நிலை பாதுகாப்பு எங்கே?

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    இதுக்கு பேரு சபாசா ? முடியல ...பொருளாதார வளர்ச்சி திட்டம் இதில தேடுனா கூட கெடைக்கல....

  • Raj Kamal - Doha,கத்தார்

    நடுநிலையாளர்களும், கட்சிசார்பற்றவர்களும் முக்கியமாக மனசாட்சியுள்ளவர்களும் நிச்சயமாக இந்த தேர்தல் அறிக்கையை வரவேற்பார்கள். வேண்டுமானால் முழுமையான அறிக்கையை உற்றுநோக்கி படித்துப் பாருங்கள், இணையதளங்களில் உள்ளது.

  • Udayakumar - Dubsi,ஐக்கிய அரபு நாடுகள்

    தமக் DMK ORU THIRUTU பார்ட்டி.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    தினமலர் கொடுத்த தலைப்பிற்கு நன்றி.

  • Shanmugam - Manama,பஹ்ரைன்

    ஆக மொத்தம் 3 ஜி & 4ஜி க்கு வாய்ப்பு கேக்குறீங்க.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    பாமக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க திமுகவுக்கு ஒருமாதமா தேவைபடுகிறது ? ...ஜெராக்ஸ் காப்பி எடுக்க ஒரு மாசமா ? நல்ல வேகம் இதுக்கு ஒரு குழு வேற எம்ஜிஆரை பார்த்து காபி அடித்த மு க முத்து என்னவானார் ? வைகோவை பார்த்து நடை பயணம் போன ஸ்டாலின் என்னவானார் ? இப்போது பாமக தேர்தல் அறிக்கையை காபி அடிக்கும் அளவிற்கு திமுக அதல பாதாளத்தில் இறங்கி விட்டது

  • Lavangan - madurai,இந்தியா

    எல்லா வீடுகளுக்கும், சோலார் பவர் சப்ளையை இலவசமாக செய்யுங்களேன். யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள்.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    யார் ஆட்சிக்கு வந்தாலும், கிடப்பில் போடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து செயல்படுத்தபடுதல் வேண்டும், அது சென்னையை தாண்டி , கோவை, மதுரை மற்றும் திருச்சி என்று விரிவடைவது நல்லது, அதை காலம் கடத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்பதோடு மக்களுக்கு, மக்கள் கைகளுக்கு எட்டும் விதத்தில் கட்டணம் இருக்க வேண்டும், இல்லை என்றால் திட்டம் போட்டு ஒன்றும் பயனில்லை, அது இப்போதைய சென்னை மெட்ரோ போல சீண்டுவாரில்லாமல் போய்விடும்.

  • dubukku - sydney,ஆஸ்திரேலியா

    தமிழகத்தில் "கை சுத்தமான / ஒழுக்கமான " அரசியல் தலைவர்களை களை எடுத்த பெருமை கட்டுமரத்தை மட்டுமே சேரும். திமுகவில் மூன்றாம் கட்ட தலைவர் என்ற நிலையில் இருந்து அனைவரையும் முதுகில் குத்திவிட்டு , முதல் இடத்துக்கு வந்து , திமுகவை தங்கள் குடும்ப சொத்தாக மாற்றிய பெருமைக்கு சொந்தகாரர். கொள்ளை அடிப்பதை "தேன் பாத்திரத்தில் கை விட்டவன் நக்காமல் இருப்பான ?" என்ற தத்துவத்தை உதிர்த்த மாமேதை. தான் இருக்கும் காலத்திற்குள் தன் மகன்கள் , மகள் என குடும்பம் அனைவருக்கும் ஒரு திட வழியை ஏற்படுத்த இந்த வெற்றி மிக அவசியம் என நினைக்கிறது கட்டுமரம். அதற்க்கு ஏற்ப ஜால வார்த்தைகளை பயன் படுத்தி வெளிட்ட இந்த தேர்தல் அறிக்கை ஒரு கட்டு காகித குவியல் இதனால் தமிழகத்துக்கோ, தமிழ் மக்களுக்கோ ஒரு பயனும் இருக்காது என்பதை 100% ஆணித்தரமாக சொல்லமுடியும். கக்கன் , காமராஜர் போன்றவர்களை லட்சக்கணக்கில் பணம் சுருட்டியவர்கள் என்ற பொய் கூறித்தான் ஆட்சியை பிடித்தது இந்த கட்டுமரகூட்டம் அதைவிட கொடுமை ஊழலை நியாயப்படுத்தி பேசிய மாமேதையும் கூட. தமிழகத்துக்கு பிடித்த சனி திராவிடக்கூடாரம். அவை ஒழியும் காலம் வந்துவிட்டது. அதன் முதல் அடி திமுகவிற்கு இந்த தேர்தலில் வழங்குவோம்.

  • Udayakumar - Dubsi,ஐக்கிய அரபு நாடுகள்

    G யை விட மாட்டீர்களா, போன முறை 2G யால் உங்கள் ஆட்சி பறிபோனது நினைவில் வைத்து கொண்டு இம்முறை 3G & 4G யை பற்றி பேசவும்...

  • arumugam - chennai,இந்தியா

    அறிக்கை நன்றாக தான் இருக்கிறது. ஊழலற்ற ஆட்சி வேண்டும்

  • Ganapathy - Bangalore,இந்தியா

    3.5 லட்சம் காலி இடங்கள் நிரப்பப்படும். நன்றி. வேலை இல்லாத பல இளைஞர்களுகும் வாய்ப்பு கிட்டும். இதே மாதிரி தாது மணல், கிரானைட் மற்றும் கனிம வளங்களை குறித்து ஒரு கொள்கை அவசியம். மேலும் குடிநீர் மேம்பாட்டிற்கான திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

  • varun - trichy

    மக்களே தயவு செய்து திமுகவை நம்ப வேண்டாம்.....திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு ஊழல்நாடாக மாறிவிடும், கட்டப்பஞ்சாயத்து பெருகிவிடும், இருளில் மூழ்கிவிடும்...... சிந்திப்பீர் வாக்களிப்பீர்!!!!

  • Pradeep Kumar - chennai,இந்தியா

    ஞாபகம் உள்ளதா..?? 2006ல் தேர்தலுக்கு முன் நாள் தான் கலைஞர் ரூ.2 க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை அறிவித்து முதல்வர் ஆனார்.. அதனால் கடைசி நாள் வரை காத்திருப்போம்.. இவர்கள் 2 பேரும் போட்டி போட்டுகொண்டு இலவசம் அறிவிப்பார்கள்.. பொறுத்திருப்போம் ..

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற முடியாத தோல்வி அடைந்தவர்கள் கொல்லை புற வழியாக பேரவைக்கு வர வழி வகுக்கும் மேலவை மீண்டும் அமைக்க படும் . இது தேவைதானா ? சிந்திப்பர் மக்களே

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    மேல் சபை எதற்கு கருணாநிதி பேரன்கள் கொள்ளு பேரன்கள் பதவி வருவதற்கு. உடனே ஜெயா அவர்கள் மீண்டும் சட்டசபை கூடியதும் இது மாதிரி பிற்காலத்தில் யாரும் சட்டம் கொண்டு வராமல் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.உடனே ஜெயா வருவாரா என்று கேட்காதீர்கள். ஜெயா தான் அடுத்த முதல்வர். தயவு செய்து அடுத்த சட்டசபை கூடியதும் செயுங்கள்.

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    மீண்டும் மேலவை. அது தேவையா ?

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    நிறுவப்படும் கைத்தறி நெசவாளர்களுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் தரப்படும். விசைத்தறிகளுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் உண்டு. கைபேசிகள் வாங்க வசதியற்றவர்களுக்கு, அரசு செலவில் கைபேசிகள் தரப்படும். இது திமுக காரர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

  • T. Sivaraj - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழ்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்க ஐயா கொடுத்திருக்கும் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் எங்கிருந்து நிதி வருமாம்? அதையும் தெளிவா சொல்ல சொல்லுங்க. இவங்களை நம்புவோம். தமிழ்நாட்டின் கடன்சுமை ஏற்கனவே 4 லட்சம் கோடி பிறகு இந்த நலத்திட்டங்களுக்கு 2G பணம் வருமா?

  • Venkatesan Venkatesan - தேனீ,இந்தியா

    அருமையான தேர்தல் அறிக்கை. வாழ்த்துக்கள் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு .வெற்றி உறுதி .

  • M.Guna Sekaran - Madurai,இந்தியா

    சூப்பர். மக்களை மீண்டும் மீண்டும் அடிமை ஆக்குவதே இந்த அரிவுப்பு , இலவச மின்சாரம் யாருக்கு போய் சேரும் 1,2,ஏக்கர் உள்ள விவசாயிகள் பயிர் கடன்கள் எப்புட்டு ,எல்லாம் விவசாயி பயிர் கடன்கள் வாங்கியா பெரிய பெரிய முதலாளிக்கு தான் போய் சேரும் இந்த கடன் தள்ளுபடிம் இலவச மின்சாரமும் , 3ஜி / 4ஜி யாருக்கு வேணும் ,அரசு வேலை செயும் மகளிருக்கு மட்டும் தான் இந்த 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும், அப்போறம் பிரைவேட்டுல் வேலை செயும் மகளிருக்கு என்ன செய்யும் இந்த அரசு ,அதை பத்தி ஏதேனும் உண்டா ? முதலில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமா ? அரசு வேலை வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயம் 20,30 வருடம் என்று சட்டம் போட முடிஉமா ? அரசு வேலை பார்கும் நபர் லச்சம் வாங்கினால் எந்த வித அறிவுப்பு இல்லாமல் பதவி பறிக்க முடிஉமா ? அரசு வேலை பார்கும் நபர் யாரா இருந்தாலும் வருமானடிஎகு மேல் சொத்து சேர்ததால் ,அந்த வருமானடிஎகு மேல் உள்ள சொத்தை மட்டும் பறிமுதல் சட்டம் போட முடிஉமா ? இதை நீ தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இரூந்தால் திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் ஏதுவும் மக்களுக்கு தேவை இல்லை ,மக்களே கொஞ்சம் சித்திங்கல் ,இன்னும் அடிமையா இருக்க போறிங்களா ? யாரும் விலைவாசியை குறைப்போம் ,இனிமேல் எந்த விலைவாசியைம் கூடது என்று யாரும் சொல்ல மாட்டான் . அட்லிஸ்ட் இலவசம் தேவை இல்லை என்று மக்கள் கூற முன் வர வேண்டும் ,இலவசம் என்றால் மக்கள் அவனுக்கு ஓட்டு போட கூடாது .

  • அருண் குரு - Kuwait City,ஆப்கானிஸ்தான்

    2g வழக்கே இன்னும் முடியல அதுக்குள்ள 3g / 4g எல்லாம் தயாராயிடுச்சா ????? இந்த அறிக்கைக்கு தினமலர் சபாஷ் வேற ,,,,,,

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில கூட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நன்றி தெரிவிக்கவில்லை .... ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தால் நன்றி கூட சொல்லும் அடிப்படை பழக்கம் கூட கருணாநிதியிடம் இல்லை

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    திமுகவின் தேர்தல் அறிக்கை பாமக தேர்தல் அறிக்கையில் இருந்து பாதியும், அதிமுக ஆட்சித் திட்டங்களின் பெயரை மாற்றி மீதியுமாய் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதனை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தத் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பங்கும் இருக்கிறது. அவர்கள் ஆறு மாத காலம் உழைத்து கச்சத் தீவை மீட்ப்போம் என்ற அவர்களின் ஹைதர்அலி காலத்து வாக்குறுதியையும் அதில் சேர்த்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது

  • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

    சேரி, அடுத்து கொள்ளு பேரன் ,எள்ளு பேரன், ...எல்லோருக்கும் சொத்து சேர்க்க பெரியவர் புளுகு மூடிய அவுத்து விட்டுட்டு தொழிலுக்கு கிளம்பிட்டாரு..

  • கைப்புள்ள - nj,இந்தியா

    கருணாவை நம்பி ஏறக்குறை ரெண்டு லட்சம் பேரு செத்தாங்க இலங்கைல. என்ன தொட்ட நீ செத்தன்னு செந்தில் ஒரு படத்தில சொல்லுவாரு, அந்த மாறி என்ன நம்பின நீ செத்தன்னு தலிவரு சொல்ற மாறியே இருக்கு எனக்கு.

  • மறவன் - chennai,இந்தியா

    ஆகா அற்புதம். மே 19 க்கு பிறகு தமிழ் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடபோகின்றது .. மக்களே திமுக அதரவு சொந்தங்களே தயவு செய்து உங்கள் சுயநலம் கட்சி பாசத்தை மறந்து சிந்தியுங்கள் dr கலாம் காமராஜர் போன்ற மக்கள் தலைவர்கள் சேவையும் கட்டுமரத்தின் அடாவடிகளையும் சிந்தித்து பாருங்கள். ஒரு நல்ல மக்களின் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்பு எங்கேனும் இவர்களுக்கு இருக்கிறதா? தேர்தல் காலங்களை தவிர வேறு எப்போதாவது உங்களை பற்றி சிந்தித்து இருப்பார்களா ? ( அம்மையார் உட்பட )

  • கைப்புள்ள - nj,இந்தியா

    நம்ப வெச்சு கழுத்த புடிச்சு கர கரன்னு அறுப்பதில் கருணாக்கு நிகர் வேறு யாருமே இல்லை. இதே போல பல தேர்தல் அறிக்கைகளை நம்பி ஒட்டு போட்ட மக்களை கர கரன்னு கழுத்தறுத்து நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் இந்த கருணாநிதி. அதே போல தான் இந்த தேர்தல் அறிக்கையும் பார்ப்பதற்கும் கேப்பதற்கும் அப்படியே ரொம்ப நல்லா இருக்கிற மாறி தெரியும். சரின்னு நம்பி ஒட்டு போட்டதுக்கு அப்புறம் தான் தெரியும் கருணாவோட சுயரூபம் மறுபடியும். சொத்துக்களை அபகரிப்பதில் இருந்து, கோடானு கோடி ஊழல்கள், அடியாட்களின் வெறியாட்டம், அடக்குமுறைன்னு மக்களின் துன்பமான வாழ்க்கை. கருணாவுடைய தேர்தல் அறிக்கையை தூக்கி அப்படியே குப்பையில் போட்டு விட்டு கருணா எப்பேர்பட்ட ஆள் என்று மட்டும் யோசியுங்கள் மக்களே. வேண்டாம் நமக்கு மீண்டும் ஒரு அடியாட்களின் அராஜக மன்னனின் சாம்ராஜ்யம்.

  • Subramaniam Ramesh - madurai,இந்தியா

    செந்தில்: அண்ணே, இந்த கல்வி கடன் அப்படின்னு சொல்றாங்களே, அது மாநில அரசு எப்படி தள்ளுபடி செய்ய முடியும், அத கொடுத்தது பேங்க் தானே, அது மத்திய அரசு தானே செய்ய முடியும். கவுண்ட மணி: அடே, நம்ம தாத்தா என்ன சொல்றாருனா, 9 லக்குனங்களும் ஒன்றாக சேர்ந்த ஒருத்தன், ஒருத்தன்.........

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    மக்களின் வாங்கும் சகதியை உயர்த்துவோம் என கூறமாட்டார்கள்

  • g k - chennai

    சலுகைகளோ, தான தர்மங்களோ, இலவசங்களோ எங்களுக்கு தேவை இல்லை. ஊழலில்லாத நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் தான் எங்களுக்கு தேவை

  • vinu - frankfurt,ஜெர்மனி

    திமுக வெற்றி பெற்றால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று சென்ற வாரம் வரை சொன்ன முக, இன்றைய தேர்தல் அறிக்கையில் அதற்கு என்று தனி சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கு அமுல் படுத்துவாரம். முக அவர்களை இப்போதே உமது டகால்டி வேலைகளை ஆரம்பித்து வைத்து விட்டீர். உம்மால் மது விலக்கு கொண்டு வர முடியாது, கரணம் உமது கட்சியினர் நடத்தும் மது ஆலைகள் மூலம் கொழுத்த காசு கிடைகிறது. இந்த வயதில்லும் நீர் மக்களை என்ன மாதிரி ஏமாற்ற வார்த்தை ஜாலங்களை உபயோக படுத்துகிறீர். இப்போ எல்லாம் மக்கள் தெளிவா இருகிறானுங்க. விட்டால் உமக்கே ஸ்டிக்கர் ஒட்டிடுவானுங்க .

  • sachin - madurai,இந்தியா

    2016 இல் அப்போ அம்மையாருக்கு சங்கு தானா ??? இனி அம்மையார் சொல்லுவார் வீட்டுக்கு ஒரு கார் தருவேன், வீட்டுக்கு 10 லட்சம் தரவேன் (ஊழல் பணத்தில் சிறுதாவூர் ) இனி ஆடு இல்லை சிங்கம் தருவேன், இனி நம் ரோடு சிங்கபூர் போல ஆக்குவேன் அதுல என் முகம் தெரியும், படித்த எல்லாருக்கும் அரசு வேலை தருவேன் ஆனால் எல்லாரும் அதிமுக உறுப்பினர் ஆகா வேண்டும், எல்லாரும் இனி சாஸ்டாங்கமாக என் காலில் விழுந்தால் நான் உங்களுக்கு அமைச்சர், எம் எல் ஏ பதவி தருவேன், எல்லாருக்கும் நான் ஏரோப்ளேனில் போவதற்கு இலவச பாஸ் தருவேன், என் கார் வரும் பொது முக்கு,ரோடு,நடுத்தெருவில் நின்று கொண்டு நான் வரும் பொது யாரு தரைல விழுந்து வணங்குரான்களோ அவங்களுக்கு இன்னோவா கொடுப்பேன் , காவல்துறை ல உள்ள எல்லாரும் கட்சி ல சேர்த்து விடுவேன் , யார் யாருக்கு நெஞ்சில அடித்து அழ தெரியுமோ அவங்களுக்கு பரிசு உண்டு, தீ மிதிக்கணும்,அழகு குத்தனும்,பால் குடம் எடுக்கணும் , நாடு ரோட்டில் அழுது புரண்டு யாரு உருளுரான்களோ அவங்களுக்கு மாதம் தோறும் 10000 தரப்படும் என்று ஒரு தேர்தல் அறிக்கை வந்தால் அன்பு அதிமுக நண்பர்கள் இதை ஏற்று கொண்டு ஆகா ஓஹோ என்று புகழ்ந்து தாலி விடுவார்கள் சேகரன் க்கு காட்டாயம் அதிமுகவில் கீழே உருண்டு புரண்டு அழுவதற்கு ஒரு வாய்ப்பு அம்மையார் தருவார் உங்கள் விசுவாசத்தை நாடு ரோட்டில் காட்டுங்கள் சேகரா வாழ்த்துக்கள்

  • Rathinakumar KN - Madurai,இந்தியா

    சபாஷ் உங்கள் பத்திரிக்கையின் ஜால்ரா

  • பச்சை தமிழன் - தமிழ்நாடு,இந்தியா

    கட்சிகாரர்கள் நில ஆக்கிரமிப்பு செய்யமாட்டார்கள் என்று எங்குமே கூறப்படவில்லை. பஞ்சாயத்து தேர்தலை கட்சிக்காரர்களின் வன்முறையின்றி நடத்துவோம் எனறு எங்கும் கூறவில்லை. குடும்ப நிறுவனங்களின் படங்களை தவிர மற்றவர்களின் படங்களையும் வெளியிட அனுமதிப்போம் எனறு கூறவில்லை . கருணாநிதிக்காக தினந்தோறும் பாராட்டு கூட்டம் கூட்டமாட்டோமென்று எனற அறிவுப்பும் இல்லை.

  • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

    தலிவா...அடிச்சு மக்களின் நிலம் பிடுங்க படும், ரௌடிகளின் நாடாக தமிழ் நாடு மாற்றப்படும். இது எல்லாம் ஏன் தலிவா சொல்லல...

  • palaniappan - namakkal,இந்தியா

    கல்விக் கடன் என்ன தள்ளுபடியா இல்லை தள்ளுபடி மாதிரியா என்ன உங்கள் சாணக்கியம் தெரிகிறது உங்கள் அறிவிப்பில்

  • Mohan - Trichy,இந்தியா

    அனைத்து விவசாய கடனும் தள்ளுபடி என்று சொல்லியிருந்தால், அனைத்து விவசாயிகளும் பயன் பெறுவார்

  • S.KAMALAVEL - SIKKAL ,இந்தியா

    நதிகளை எல்லாம் இணைப்பீர்களா ?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    // அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வசதி./// இந்த வசதி. கல்வி சம்பந்தபட்டதர்க்கானதாக மட்டுமே இருக்கவேண்டும்.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    ///திருவாரூர், நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.///திருவாரூருக்கு அந்த தகுதி இருக்கிறதா? மொத்த மாவட்டத்தையே சேர்த்தால் தான் இதை செய்ய முடியும், இருக்கும் நகராட்சிகளையே தரம் உயர்த்தி, வசதிகளை செய்து கொடுத்தாலே மக்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும்.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    பலவற்றை வெளியிலிருந்து கடன்வாங்கி சேர்த்திருக்கிறார்கள், குறிப்பாக விவசாயதிர்க்காகன தனி நிதிநிலை அறிக்கை, அது பாமகவின் நீண்டநாளைய திட்டம்/செயலறிக்கை.மது விலக்கில் ஆரம்பம் முதல் ஆர்வமும், போராட்டமும் நடத்திவருபவர் ராமதாஸ் மட்டுமே, வைகோ கூட இடையில் காப்பி அடித்து நாடகம் நடத்தி வருகிறார்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசிய தேவை. லோக் ஆயுக்த மதுவிலக்கு போன்றவையும் அவசியமான திட்டங்களே. நல்ல தேர்தல் அறிக்கை.

  • Selvarajan Singaram - Cuddalore,இந்தியா

    ஜெயாவின் திட்டங்ளை அப்படியே காப்பியடித்து...கொஞ்சம் பாலிஷ் பண்ணி இருக்கிறார்கள் .... அவ்வளவுதான்... மது விலக்கு .... ? முதல் கையெழுத்து என்று சொன்னது - இதுக்கு பேர்தான் ... டுபாக்கூர் ... டகாச்சி பேச்சு .. அது ... அப்பாே ... அப்படியெல்லாம் உடனே மதுவிலக்கு என்றால் ... இருக்கிற சரக்கு தயாரிக்கும் ஆலைகளை வைத்து கொள்ளையடிக்கும் இவர்களின் கதி என்னாவது ... டி.ஆர்.பாலு தயாரித்த அறிக்கை ஆட்சே... பின்ன எப்படி இருக்கும் ... இலவசமே இல்லை என்று எழுதும் நீங்கள் விலைமலிவு கைபேசி என்பதை மறந்தது ஏனோ .. ? அதுவும் அது ... 2 ஜி மட்டுமே உள்ள கைபெசியாகத்தானே இருக்கும் ...? மீண்டும் மேலவை எதுக்கு சும்மா குந்திக்கினு வெட்டிக்கதை பேசி எங்களுடைய காசை கரியாக்கவும் உப்புசப்பில்லாத - உதவாகரைகளுக்கும் ஒரு வசதியான இடம்தானே ... அது - இவருடைய கட்சிக்குள் இருக்கும் சோம்பேறிகளை " சமாதான படுத்தவும் - இவர் விரும்பிய ஆள் எம்.எல்.ஏ ... சீட்டில் தோற்று போனால் பின்பக்க வழியா அழைத்து " மந்திரியாக்க " வழி தேடும் - திருட்டு வேலை இது ... இதுக்கு போய் " சபாஷ் " என்று எழுதிய உங்களின் விசுவாசம் நன்கு தெரிகிறது ...

  • MAKARAM - Coimabatore,இந்தியா

    கடந்த திமுக ஆட்சியில் அளிக்கப் பட்ட தேர்தல் அறிக்கையில் நிலமில்லாத விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்த நிலத்தையும் அபகரித்த பெருமை இன்னும் மறந்தபாடில்லை. இப்போதைய தேர்தல் அறிக்கையில் பாமக சொன்னவை, நாம் தமிழர் சீமான் சொன்னவை அவ்வப்போது பலரும் சொன்ன விஷயங்களை தொகுத்து இருக்கிறார்கள். திமுக நிலங்களை அபகரிக்கும். அடுத்து வரும் ஆட்சி மீட்டு கொடுக்கும். 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்துவார்கள். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் அதை சரி செய்ய வேண்டும். கச்சத்தீவை தாரை வார்ப்பார்கள். அடுத்த ஆட்சிக் காரர்கள் அதை மீட்க வேண்டும். காவிரியை கோட்டை விடுவார்கள்.அடுத்து வருபவர்கள் அதை மீட்க போராட வேண்டும். முல்லை பெரியாரை கை விடுவார்கள். அடுத்த ஆட்சியாளர்கள் அதை சரி செய்ய வேண்டும். காலம் காலமாக இருந்து வரும் தமிழ் புத்தாண்டு என்பதை மாற்றி கலாசாரத்திலும் தலையிடுவார்கள். அதையும் அடுத்த ஆட்சியாளர்கள் சரி செய்ய வேண்டும். மது விலக்கை ரத்து செய்வார்கள். இதையும் அடுத்த ஆட்சிக் காரர்கள் சரி செய்ய வேண்டும்.ஜல்லி கட்டை தாங்கள் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது நிறுத்த செய்வார்கள். பிறகு அவர்களே போராடவும் செய்வார்கள்.இந்தியை யாரும் படிக்க விட மாட்டார்கள். தங்கள் குடும்பத்தார் அதே இந்தியை படித்து வளம் பெற பதவி பெற உதவியாக இருப்பார்கள். எல்லோருக்கும் கடவுள் மறுப்பு உபதேசம் செய்வார்கள். ஆனால் தாங்கள் கோவில் விடாமல் ஆன்மிக சுற்றுலா செல்வார்கள். வழிபடுவார்கள். ஈழ தமிழர் வீழ காரணமாய் இருப்பார்கள். அவர்களுக்காக போராடவும் செய்வார்கள். இன்னும் என்ன செய்ய வேண்டுமோ?

  • venkatmani - karaikudi ,இந்தியா

    வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக-அதிமுக வை விட ஒரு படி மேல் தான் அந்த அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கையை வரவேற்கலாம்

  • A shanmugam - VELLORE,இந்தியா

    இவரென இவங்க அப்பா, அம்மா, தாத்தா பாட்டி சொத்திலிருந்த தமிழக மக்களுக்கு அளிக்கபோகிறார்கள். தமிழக மக்களின் உழைப்பை கசிந்து,பிழிந்து பல வகையான வரிகளின் மூலம் ஈன்ற பணத்தின் மூலம் இலவச சலுகைகளை செயல்படுத்த போகிறார். இது அரசின் கடமை அல்லவா? இதைபோய் சலுகையாக அறிவிப்பது "தமிழக மக்களுக்கு பிச்சை" போடுவதுபோல் உள்ளது.

  • Raja - Doha-Qatar,இந்தியா

    உங்களது தலையங்கத்திற்கு (சபாஷ்) எனது வாழ்த்துக்கள்....

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

    சொன்னதையும் செய்வார் சொல்லாததையும் செய்வார் கலைஞர். இதுவரை கண்டிறாத கலைஞர் ஆட்சியாக இருக்கலாம். தேர்தல் அறிக்கை அற்புதம். தொடரட்டும் அவரது சேவை.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    முந்தைய திமுக ஆட்சியில் செய்த தவறுகளை திருத்தி கொள்வோம் என்று சொல்வதற்கு பெயர் ..தேர்தல் அறிக்கையாம்

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    22.08.21973 முரசொலியில் "" தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவோம் ""20.07.2005 முரசொலியில் "" திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் படுத்துவோம்"" 19.04.2015 முரசொலியில் "" திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் படுத்துவோம்""அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு இல்லை.. என்றைக்கும் ஒரே பேச்சு.. இவிங்கள நம்பி இத்தனை வருடம் ஆட்சியை கொடுத்ததுக்கு....

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    வெல்ல முடியாத கட்சிகள் இப்படிதான் வாக்குறுதிகளை வாரி வழங்கும். இதில் கச்சதீவை மீட்போம், தமிழ் நாட்டுகாரனின் கறுப்பு பணத்தை 100 நாளில் மீட்போம் என்று சொல்ல மறந்து விட்டார்.

  • Ravi S - hosur,இந்தியா

    சீரான பார்வை சிறந்த நோக்கம் கிரேட் ...............

  • sankaranarayanan - tirunelveli,இந்தியா

    ஜெயிக்கபோவது இல்லை - எதை வேண்டுமானாலும் சொல்லலாம்

  • Ravi S - hosur,இந்தியா

    மிகவும் அருமை பாராட்டுக்குரியது

  • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

    ஆமாம். இனிமேல ஜனங்க என்ன என்னவெல்லாம் சாப்பிடலாம், என்னவெல்லாம் குடிக்கலாம், என்னவெல்லாம் பார்க்கலாம் என்றெல்லாம் அரசாங்கமும், நீதிமன்றங்களும் தீர்மானிக்கும் நிலை வந்ததே ஈஸ்வரா. இதென்ன இந்தியர்களுக்கு வந்த சோதனை?

  • Balaji - Khaithan,குவைத்

    தேவையில்லாத பொருட்களை இலவசமாக வழங்கப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் இந்த அறிக்கையை பாராட்டலாம்.... ஆனால் முற்றிலும் திட்டங்களே உள்ளது, இலவசமாக ஒன்றுமில்லை என்றும் சொல்வதற்கில்லை.... கோவை மற்றும் திருச்சியில் மெட்ரோ என்பதை வரவேற்கலாம்.... நெல் மற்றும் கரும்புக்கான குறைந்த பட்ச ஆதார விலையாக தெரிவித்துள்ளது, கிர்ஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் முதலான திட்டங்களை வரவேற்கலாம்.... மீனவர்களுக்காங்க அறிவிப்புகள் அனைத்தும் அவர்களை கவருவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன.... அவற்றுள் சிலவற்றை பாராட்டலாம்.... மதுவிலக்கு முதல் கையெழுத்து என்று சொல்லிக்கொண்டிருந்து விட்டு இப்போது அதை தடுக்க புதிய சட்டம் என்று சொல்லுவது நெருடலாக இருக்கிறது.... லோக் ஆயுக்த்தா பாமக விடமிருந்து எடுத்துக்கொண்டது.... மொத்தத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை நன்று என்றே சொல்ல வைத்துள்ளது..... ஆனால் இவையனைத்தும் நிகழ நடைமுறை சாத்தியம் (நம்பகத்தன்மை) எப்படி என்பதை சொல்லிவிட முடியாது....

  • Raja - Thoothukudi,இந்தியா

    காசா பணமா? அறிக்கைதானே. அதை கட்டாயம் நிறைவேத்தணும்னு சட்டமா? அம்மையாரும் தான் கடந்த தோ்தல்ல மின்மிகை மாநிலமா ஆக்கறேன்னாங்க. நம்பி ஓட்டு போட்டோம். இப்ப செஞ்சு காட்டிட்டாங்களா என்ன? தோ்தல் முடிஞ்ச வுடன் கடுமையான மின் தட்டுப்பாட்டை சந்திக்க போறோம். (அதுவரை கடன் வாங்கியாவது குடுப்பாங்க.) தோ்தல்ல ஜெயிக்கறதுக்கு மணலை கயிறா திரிக்க போறோம்னு ரீல் விடுவோம். அத நம்பி ஏமாந்தா நாங்க பொறுப்பில்ல.

  • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

    மக்களை ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... சென்னை மக்களின் தண்ணீர் தேவைக்கு மீண்டும் விராணம் திட்டத்தை தூசி தட்டி அதையும் அறிக்கையில் சேர்க்கலாமே... நல்ல 'லாபம்' கிடைக்கும்.

  • Kumar - Duabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒரே வழி மோடிதான். மக்களே சிந்தியுங்கள்..........என் வோட்டு மோடி கே............

  • Nature Lover - California,யூ.எஸ்.ஏ

    திமுக கூட்டணி - திமுக 24% காங் 4% மு.லீ. - 3% - (பு.த பெ.ம.க சிவகாமியின் கட்சி ) - 1% இதர ஓட்டுகள் - 3% மொத்தம் 35%, அதிமுக 30% இதர ஓட்டுக்கள் - 3% மொத்தம் 33%. ( கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 44% என்பது எப்படி கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த 44% என்பது அதிமுகவின் ஒரிஜினல் வாக்கு சதவீதம் கிடையாது) . கே.நல.கூ = தேமுதிக 5%, வைகோ 3%, வி.சி 2%, கம்.யூ - 1.5%, தா.ம.க - 1% இதர ஓட்டுகள் - 4.5% , மொத்தம் 17%, பா.ம.க - 5%, பா.ஜ.க - 3%, இதர ஜாதி கட்சிகள், சுயேட்சைகள் = 7% ஆக மொத்தம் 35 33 17 5 3 7 = 100%. . இதர ஓட்டுக்கள் என்பது, நடுநிலை புதிய வாக்காளர்கள் சுமார் 10-12% ( திமுகவை விட அதிமுகவுக்கு 4 - 5% அதிகம் ஒட்டு உண்டு. அது போல, தே. நல. கூ -க்கு நடுநிலை புதிய வாக்காளர்கள் = 4-5% ஒட்டு கிடைக்கும். இது தான் இப்போதைய நிலவரம். இதுதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்கள் 100% ஒட்டு போடுவார்கள் என்று நினைக்க முடியாது. அதிக பட்சம் 80% ஒட்டு போடுவார்கள் என்று எடுத்து கொண்டாலும் 20% வாக்காளர்கள் ஒட்டு போடமாட்டார்கள். ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை எந்த கட்சியில் அதிகமோ, அவர்களால் அந்த கட்சிக்கு பாதகம் ஏற்படலாம். அதுபோல இதர ஜாதிகட்சிகள் சுயேட்சைகளின் 7% சதவீத வாக்குகள் திமுக அல்லது அதிமுக அல்லது கே.நல.கூ-க்கு சாதகமாக விழுந்தால், அதன்படி வெற்றியும் அந்தந்த கட்சிகளுக்கு சாதகமாக மாறலாம். இந்த தேர்தலில் விநோதமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ, பாமக., பாஜக என்று ஐந்து முனை போட்டி இருந்தாலும், முக்கியமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ-க்கு தான் மும்முனை போட்டி. 30% தொகுதிகளில் திமுக - அதிமுகவும், 30% தொகுதிகளில், அதிமுகவும் - கே.நல.கூ-க்கும், 20% தொகுதிகளில் திமுக - கே.நல.கூ தான் நேரடி போட்டி நடக்கும். 10% தொகுதிகளில் பா.ம.க - மற்றகட்சிகளுக்கு கடும் போட்டி இருக்கும். இந்த 10% தொகுதிகளில், கே.நல.கூட்டணியின் வாக்கு வங்கி, பாமகவால் நிச்சயம் பாதிக்க படும். அதுபோல 10% இடங்களில் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நடை பெறும். எப்படி பார்த்தாலும், திமுக, அதிமுகவுக்கு இடையில் 2-4% வாக்கு வித்தியாசம் இருக்கும். கே.நல.கூ-க்கும் - திமுக அதிமுக இடையில் 10-12% வாக்கு வித்தியாசம் இருக்கும். திமுகவினர் 100% ஓட்டு போட்டால், திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக 100% வாக்கு அளித்தால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி இருக்கும். கே.நல.கூ - இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகளை பிரிக்குமே தவிர, வெற்றி பெற மிகவும் கஷ்டம். மேலும், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்தால், யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று நடுநிலை புதிய வாக்காளர்களுக்கு நல்ல அறிவு இருப்பதால், அவர்களின் வாக்குகள் மிகவும் முக்கிய இடத்தில இருக்கிறது. எப்படி பார்த்தாலும் திமுக ஆட்சியை பிடிக்கவும், அதிமுக ஆட்சியை இழக்கவும் விஷயங்கள் நடை பெறலாம். தேர்தல் கமிஷன் உதவியோடு, அதிமுக, கே.நல.கூ- மற்றும், பிஜேபி, பாமகவின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கினால், இதில் மாற்றம் நடைபெறலாம். ஆனால் நேர்மையோடு தேர்தல் நடந்தால் திமுக வெல்லும். அதிமுக எதிர்க்கட்சியாகும். கே.நல.கூ - ஒரு சில இடங்களில் வெல்லலாம் அல்லது குறைந்த ஓட்டுக்களில் தோல்வியை தழுவலாம். இதுதான் நிதர்சன உண்மை. மே 19 இதை நிருபிக்கும்.

  • Shanmugam Kannan - jammu,இந்தியா

    மது விலக்குக்கு தனி சட்டம் என்று சொல்லும் கருணா மாதிரி மக்களை மூடர்கள் என்று நினைப்பது யாரும் இல்லை. சட்டமில்லாமல் யாரும் மதுவிலக்கை அமல் படுத்த முடியுமா? அப்படியென்றால் சட்டத்தை இயற்றனும் என்று சொல்லி ஓட்டி விடலாம் என்று கணக்கு போடுகிறார? இலவசமில்லையாம் wifi கொடுப்பாராம். செல் பேசி கொடுப்பாராம். கடன் தள்ளுபடியாம். ஆனால் இலவசமாக இருக்காதாம். மக்கள் நல பணியாளர் நியமனம் போன்று கட்சி காரர் மூலம் கமிசன் வாங்கி மட்டும் தான் எல்லாம் நடக்குமோ ?

  • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

    யப்பா இங்கே கட்சிக்காறாங்க கடுமையா உலாவுராணுக...மொக்கை கருத்துக்கெல்லாம் like/dislike அள்ளி போடுராணுக. ஓ இதுதான் படிச்சவங்களுக்கு வேலைன்னு சொல்லுதோ திராவிட கட்சிகள்?

  • Pothumakkalil Oruvan - Jeddah,சவுதி அரேபியா

    நல்ல அறிவிப்புக்கள் இதெல்லாம் நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும். இதை கலைஞர் கண்டிப்பாக செய்வார் என்று எதிர்பாக்கலாம், இதிலிருது அந்த அம்மா எதெல்லாம் சுட போகுதோ தெரியில்ல

  • nallavan - tiruchy,இந்தியா

    நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையாக தெரிகிறது.குறிப்பாக மின்சார கணக்கீடு மாதம் ஒருமுறை என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.நன்றாகத்தான் உள்ளது .பாராட்டுக்கள். உங்களுடைய தவறுகளையும் திருத்தி கொள்ளுங்கள்.

  • Prasadh - Bangalore,இந்தியா

    கேவலமான தேர்தல் அறிக்கை... இதனால் யாருக்கும் பயனில்லை... வேண்டாம் திமுக, வேண்டாம் ஆதிமுக...

  • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, ஒவ்வொரு மாவட்டங்கள் வரியாக குழந்தை முதல் பெரியவர்கள் வரி மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைய உள்ளது, இலவசங்கள் இல்லாதது ஒரு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, விவசாயி நலன் சார்ந்த திட்டங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜட் இப்படி எண்ணற்ற நல்ல திட்டங்கள் உள்ளது, மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கட்டும், வாழ்த்துக்கள், நல்லாட்சி அமையட்டும்

  • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

    இந்த முட்டாள் தமிழ் மக்களை ஏமாற்ற இருக்க இருக்கும் ஒரே வழி அவர்களின் ஏழ்மை, அவர்களின் வறுமையை பயன்படுத்தி நம் மீது நம்பிக்கையை முதலில் வரவைப்பது, ஏமாற்றி ஆட்சிக்கு வருவது, அப்புறம் இருப்பதையும் பிடுங்கிக்கொண்டு மொட்டையடித்து விரட்டி விடுவது... இதை வைத்து கொள்ளையடித்து நாம் உலக பணக்காரன் வரிசையில் ஒரு படி முன்னேறிவிட வேண்டும். இதுதான் இந்த தேர்தல் அறிக்கையின் நோக்கம்.

  • அஞ்சாசிங்கம் மருதுபாண்டி - இராமநாதபுரம்,இந்தியா

    திமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி விடுவார் மு.க. இவர் அறிவித்த பல அறிவிப்புகளை செயல்படுத்தினால் தமிழகம் பெரும் நிதி சுமை, கடன் சுமையில் ஆழ்ந்து விடும். சாத்தியமில்லாத பல அறிவிப்புகள் சலுகைகள் என்ற பெயரில் வந்துள்ளன. தமிழ்நாட்டையே கூறு போட்டு விற்பது போல இலவச 2 ஏக்கர் நில திட்டத்தை அறிவித்தவர்தான் மு.க அவர்கள். இந்த திட்டத்தில் எவ்வளவு முறைகேடுகள், அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல எவ்வளவு நில பறிப்பு ,அராஜகத்தில் ஈடுபட்டனர் என்பது மக்களுக்குத் தான் தெரியும். எனவே, நல்ல மாற்றம் வேண்டுவோர் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாய் எனதருமை தமிழ்குடி மக்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

  • sree - klang,மலேஷியா

    திமுகவுக்கு எதிரான கருத்துக்களை சொன்னால் தினமலர் பணம் தருகிறதா. சேகர் சேகரன் தினமலர் அலுவலகத்தில் பணிபுரிகிறாரா ?

  • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

    கலைஞர் தேர்தல் அறிக்கை எப்பொழுதும் சொல்வதை செய்து முடிப்பார்கள் நம்பலாம்.

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    எல்லாவற்றையும் ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி கருணாநிதி கையெழுத்து போட்டு கொடுப்பாரா? அப்புறம் இதில் ஏதாவது நிறைவேற்ற வில்லையெனில் ஆட்சியை கலைத்துவிட்டு கைது செய்து உள்ளே தள்ளுவோம். இதற்கு சரியா? சும்மா வெற்று வாக்குறுதிகளை கொடுத்து தமிழனை இனி ஏமாற்ற முடியாது. ஜெய் ஹிந்த்.

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    கருணாநிதி அரசியலை விட்டு விலகி விட்டாலே அனைத்தும் சரியாகி விடும்.

  • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

    பரவாயில்லை. நீர் ஆதாரத்தையும், விவசாயிகளையும் கைவிடவில்லை .வெற்றிக்கு வழிவகுக்கும் தேர்தல் அறிக்கை .

  • Mahesh Rajappan - Bangalore,இந்தியா

    தேர்தல் அறிக்கை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது வெறும் வெத்து அறிக்கைதான். தினமலர் எப்பொழுது கலைஞரின் 'ஜால்ரா' மலர் ஆயிற்று? பத்திரிக்கைகளின் வேலை, உள்ளதை உள்ளபடி கூறுவதுதானே ஒழிய தீர்ப்பு கூறுவது அல்ல. இவர்களே தேர்தல் அறிக்கைக்கு "சபாஷ்" போட்டுக் கொள்கிறார்கள். தினமலர் ஆசிரியர் அவர்களே, தீர்ப்பு கூறுவது மக்களின் வேலை. நான் எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளன். எனது சந்தேகம் என்னவென்றால், 94 வயதிலும் கட்சிப் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுக் கொடுக்க இயலாத தலைமையை நம்பி நான் எப்படி ஓட்டளிப்பது? இந்த தேர்தல் களத்தில் இருந்து கலைஞர் விலகி தலைமைப் பண்புள்ள மற்றொரு தலைவரை மக்களுக்கு அடையாளம் காட்டினால் நான் தி.மு.க விற்கு வாக்களிப்பதைப் பற்றிப் பரிசீலிப்பேன். அப்படி அல்லாமல், தனக்குப் பிறகு தனது புதல்வர்கள் அடித்துக் கொள்வார்களோ என்ற பயம் இருக்குமாயின் அந்தக் கட்சிக்கு எதை நம்பி வாக்களிப்பது. அடுத்த 5 வருடத்தில் ஒரு நிலையான ஆட்சி தமிழகத்திற்கு வேண்டும். கலைஞருக்கு ஓட்டளித்து அவருக்கு அடுத்த ஒரு வருடத்திலோ 2 வருடங்களிலோ ஏதேனும் ஆகி விட்டால் அடுத்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பர்? இப்படி கட்சிக்கு உள்ளேயே குழப்பத்தை வைத்துக் கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்திப்பது ஏற்புடையது அல்ல.

  • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

    இரும்படிக்கிற எடத்துல இந்த ஈக்களுக்கு என்ன வேலை...? மாநிலம், அதன் நலனுக்கான திட்டங்கள் பற்றி பேசும் போது  'மையப்படுத்தப்பட்ட ஊழலம்மா' கட்சிகாரனுங்களுக்கு அந்த இடத்துல என்ன வேலை?.. இவங்கம்மாவுக்கும் இவங்களுக்கும் ஒரு நல்ல காரியம் செய்யல் துப்பில்ல.. கையாகாகாத கட்சிகாரனுங்க.. இவனுங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..? இவங்க ஊழலம்மாவால  'மதுவை ஒழிக்க கையாலாகாது.. ரெண்டு மடங்கு கட்டணம் ஏற்றியும் ஆவின் நஷ்டத்தை போக்க முடியாது... ரெண்டு மடங்கு கட்டணம் ஏற்றியும் 5 வருஷத்துல புதுசா 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க வக்கிருக்காது... ரெண்டு மடங்கு பேருந்து கட்டணம் ஏற்றியும் போக்குவரத்து துறையை நஷ்டத்துல இருந்து மீட்க முடியாது... உதார் விட்டபடி மோனோ ரயில், அவ்வளவு ஏன்.. ஒரு 'பொம்மை ரயில் திட்டம்' கூட கொண்டுவர துப்பு கிடையாது... 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் ஒரு நல்ல திட்டத்தையும் கண்ணுல காண்பிக்க கையாலாகாது.. அதிமுககாரங்களால 'ஒன்னும் முடியாதுன்னு' தான் உலகத்துக்கே தெரிஞ்சு போச்சே.. இந்த லட்சணத்துல வந்துட்டானுங்க கும்பலா கூவுறதுக்கு, கூவல் திலகங்கள்..

  • Veeramani - vellore,இந்தியா

    2016 WIN FOR DMK

  • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

    வரவேற்க வேண்டிய தேர்தல் அறிக்கை

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்த பேப்பர் அறிவிப்பை நம்பி மக்கள் ஒட்டு போடுவது இல்லை,. ஊழல் கட்சிகள் ஒழிய மக்கள் நல்ல முடிவு தருவார்கள்,.

  • Veeramani - vellore,இந்தியா

    Any way this time win for DMK

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    மின்கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கிடுவது மிகவும் நல்லது.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    உண்மையில் இலவசங்கள் இல்லாத இந்த தேர்தல் அறிவிப்பு சந்தோசமே, அதேபோல அதிமுகவும் ஏதும் சொல்லாது என்று நம்புவோமாக ?இலவசம் இல்லாத தமிழகம், மதுவில்லாத தமிழகம் தலைநிமிர வாய்ப்பு.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    சொல்லாததையும் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு செய்யக்கூடிய திறமையுள்ள ஒரே தலீவர் இவர்தான், நான் ஊழலை பற்றி சொன்னேன்..

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும். ‪‎உலகமகா‬ ஊழல் செய்த கொபசெவும், திருட்டு பிள்ளையும் யாருடையது..??

  • mohan - kumbakonam,இந்தியா

    திமுகவின் வெற்று தேர்தல் அறிக்கையும் நமது கேள்வியும். கச்சத்தீவை மீட்போம் அடகு வைத்தது யாரு..?? சல்லிக்கட்ட நடத்த முயற்சிப்போம் ‪‎நடத்தவிடாம‬ பண்ணினது யாரு..?? அண்ணா உணவகம் அமைப்போம் ‪‎அம்மா‬ உணவகத்தை ஏமாற்று வித்தை விகடன் ல சொன்னது யாரு..?? விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் ‪‎விவசாயிக்கு‬ காவிரியிலும், முல்லைப்பெரியாறு விலும் துரோகம் செய்தது யாரு..?? மீதேனில் கை எழுத்து போட்டதாரு..?? தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் ‪‎ஒன்பது‬ வருசமா மத்தியர்சில் இருந்து பொழுது ஒன்பது துவாரத்தையும் மூடி கிட்டு யிருந்தது யாரு..?? ஏரிகள் தூர்வாரப்படும் ‪‎ஏரியை‬ வளைச்சி வளைச்சி ஆட்டையைப் போட்டது யாரு..?? மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தம் ‪அதை‬ முதன் முதலில் அறிமுகப்படுத்திய அயோக்கியன் யாரு..?? மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் ‪அந்த‬ மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் ன்னு சொல்லி அசிங்கப்படுத்தியது யாரு..?? ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும் ‪உலகமகா‬ ஊழல் செய்த கொபசெவும், திருட்டு பிள்ளையும் யாருடையது..?? இன்னும் என்னென்ன காமிடி பண்ணப்போரானுங்களோ இந்த திருட்டு கும்பல் திமுக பாய்ஸ். :- ‪

  • kandakumar - Fahaheel,குவைத்

    அருமையான தேர்தல் அறிக்கை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • Ortran - chennai

    ஆட்சிக்கு வருமுன்பே நன்றாக தலைவர் யோசித்து, 53000 ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவோம் மற்றும் 3,00,000 வேலை வாய்ப்பு என்று நிறை வேற்ற முடியாத உறுதிகளுக்கு தலைக்கு சுமாராக 1,00,000 வேண்டாம் சுமாராக 50,000 என்று வைத்தால் கூட இது ஒரு குட்டி 2G , இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்கள் தமிழக தெலுங்கு கேரள மற்றும் கன்னட வாழ் திராவிட மக்களே நம்பாதீர்கள் நம்முடைய பலவீனம் குறி வைத்து,ஏமாற்றுகிறார்கள் கவனம் தேவை .

  • Karthi Keyan - Karaikudi,இந்தியா

    தாலிக்கு தங்கமாம்.. நல்ல காமெடி.. தி.க கூட்டமே அடுத்த வீட்டு பெண்களின் தாலிக்கு எதிரானது.. பெண்களே ஏமாற வேண்டாம்.. 2ஜி பணம் இருக்குறப்போ.. 3ஜி/4ஜி எல்லாம் கொடுபாங்கள்.. மாணவர்களே ஏமாற வேண்டாம்..

  • sudharshana - Aukland ,நியூ சிலாந்து

    உண்மையில் எனக்கு மலைப்பாக த்தான் இருக்கிறது , கருணாநிதியின் அறிக்கை. அவர் ஒரு ஆழமான அரசியல்வாதி என்பதையும், அரசியல் வெறி அவருக்குள் கனன்று கொண்டிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது... நான் தி முக அல்ல. அதற்காக இந்த முதிர்ந்த அரசியல் ஞானத்தை தள்ள முடியவில்லை. பலரும் பல விதமாக கூட்டணி பற்றி குமுறி கொண்டிருக்க யதார்த்தத்தை , யதார்த்தமாக ஏற்று கொண்டு அட , விடு ,போ போ மேலே மேலே போய்கொண்டே இரு என்று தன போக்கில் அவர் கட்சியை push பண்ணி கொண்டே போவது அதுவும் 92 ல் நிச்சயமாக என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. ஆனால் அதற்காக அவரும் பிராமணனை துரத்து வதை விட போவது இல்லை நானும் அதை மறக்க போவதும் இல்லை... ஜாதி கட்சிகள் அந்த அஸ்திவாரத்தில் ஆரம்பிக்க ப்பட்டது, நாட்டிற்கு கெடுதலே.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    தேர்தல் அறிக்கை எல்லாம் இருக்கட்டும்... சாகித் பாவ்லா பற்றியும், சாதிக் பாட்சா பற்றியும், சுடாலின் பற்றியும், வைகோ நேற்று பல லட்சம் பேருக்கு முன்னால்வைத்து ஒரு மிக கொடூரமான குற்றம் சாட்டினார்... அதுக்கு பதில் என்ன?... S FOR SAHID PAVLA , SADIQ BATSA & STALIN .. சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து, வைகோ ஜாடை மாடையாக அல்ல... பகிங்கிரமான குற்றசாட்டு, பல லட்சம் மக்கள் முன்னிலையில் வைத்தாரே, கோடி பேர் TV மூலம் நேரடியாக பார்த்தார்களே....அதுக்கு சுடாலின், மற்றும் திமுக, அல்லது திமுகவினரின் பதில்கள் என்ன?.. அட பதில் சொல்லுங்கய்யா... தில் இருந்தா?...

  • karunchilai - vallam,இந்தியா

    பூ , பூவே ..... காதுல சுத்த மலிவு விலைல.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    திமுகவின் தேர்தல் அறிக்கை உப்பு சப்பில்லாமல் உள்ளது... இதுக்கு தானா இவ்வளவு பில்டப்?... அண்ணா உணவகம், வேலை வாய்ப்பு ...இதெல்லாம் அதிமுக ஏற்கனவே அரைச்ச மாவுகள் தான்....அதிமுக தேர்தல் அறிக்கை வரும்பாருங்க ...அதிரடிக்கான் மச்சான் மச்சான் மச்சானே...

  • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

    எங்களது முதல் கையெழுத்து மதுவிலக்கு அமுல் என்று உறுதிபட ஏன் தெரிவிக்கவில்லை? நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் மதுவிலக்கு அமுல் படுத்தவே முடியாது என்று கூறினார். ஐயா அதற்கு இனி சாத்தியமில்லை என்று கூறினார். இன்று ஓட்டுக்காக மாற்றி பேசுகின்றார்கள். இவர்களை எப்படி நம்ப முடியும் நமக்கு ஒரே வழி மோடிதான். மக்களே சிந்தியுங்கள்.

  • CJS - cbe,இந்தியா

    அடுத்து பார்க்கலாம் நம் அம்மையாரின் தேர்தல் அறிக்கையை.

  • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

    எல்லாவற்றையும் விட இலவசம் இல்லை என்ற ஒரே காரனத்திர்க்காகவே இந்த தேர்தல் அறிக்கையை பாராட்டலாம்.

  • kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மிக அற்புதமான தேர்தல் அறிக்கை. இலவச பொருள் சேர்க்காதது பாராட்டுக்குரியது. இந்த அறிக்கையில் பாதி நிறைவேற்றினால்கூட சபாஷ் தான்

  • balakrishnan - coimbatore,இந்தியா

    மிகவும் முக்கியமான விஷயம் இலவச அறிவுப்புகள் இல்லை, இதற்காக பாராட்டலாம், இவர் குறிபிட்டுள்ள ஏராளமான நலத்திட்ட பணிகளுக்கு எப்படி நிதி ஆதாரம் வரப்போகிறது என்று தெரியவில்லை, போக்குவரத்து கழகம், மின்சார வாரியம் எல்லாம் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது, இதை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை, அம்மா ஆட்சியில் இந்த ஐந்து வருடத்தில் ஒன்னும் உருப்படியா பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை, ஒரு வேலை ஐயா வந்தால் நடக்கும் என்று நம்புவோம், கோவையை பொறுத்த வரையில் தி.மு.க ஆட்சிகாலத்தில் தான் நிறைய கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன, கடந்த ஐந்து வருட அம்மா ஆட்சியில் எதுவும் புதிதாக நடைபெறவில்லை, புதிய திட்டங்களும் இல்லை, உக்கடம் மேம்பாலம் திட்டம் முதல் நிதிநிலை அறிக்கையில் வாசிக்கப்பட்டது அதோடு சரி, விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புரவழிச்ச்சலை போன்ற திட்டங்கள் எல்லாம் ஊத்திகிச்சு,

  • hackim - riyadh

    படித்தவுடன் கிழித்து விடவும்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    வெள்ளத்துக்கு முக்கிய காரணமான ஏரி குள ஆறுகளின் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவோம். அதற்குக் காரணமானவர்களை சிறையில் தள்ளுவோம். விதிமீறல் கட்டிடங்களை ஒன்றுவிடாமல் இடிப்போம் என்ற வாக்குறுதி எந்நாளும் இவர்களிடமிருந்து வராது ஏனெனில் அது இவர்களே தான்

  • Vijay - Coimbatore,இந்தியா

    ஏற்கனவே 2G ல நிறைய பண்ணிட்டீங்க, இனிமேல் 3G / 4G வேறா ???? ஜமாய்ங்க.

  • Vel - Coimbatore,இந்தியா

    அற்புதம். இதை சாதிக்க கருணாநிதின் anupavamum ,ஸ்டாலினின் புத்தி கூர்மையும்,வேகமும் உதவும் .

  • Tamil Selvan - Chennai,இந்தியா

    இவர்கள் லோக் அயுத்தா கொண்டு வருவதும், சாத்தான் வேதும் ஊதுவதும் ஒன்றுதான்???...

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றாது என சொல்லியுள்ள அடிமைகள்...இதற்க்கு பதில் அளிக்கலாம்...இது வரை அம்மையார் அவர்கள் 185 முறை 110 விதியை கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளார்... அதில் பல அறிவிப்புகள் என இது வரை கிட்டத்தட்ட 700கும் மேற்பட்ட அறிவிப்புகள் அம்மையார் செய்துள்ளார். அம்மையார் அவர்கள் 2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை 110வது விதியின் கீழ் 19அறிக்கைகளைப் அறிவித்தார். அந்த 19 அறிக்கைகளிலும் 54 அறிவிப்புகள் இருந்தன. 2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை 61 அறிக்கைகளை வெளியிட்டார். இந்த 61 அறிக்கைகளில் 99 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை 46 அறிக்களைகளை வெளியிட்டார். இந்த 46 அறிக்கைகளில் 189 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை 39 அறிக்கைகளைப் வெளியிட்டார். இந்த 39அறிக்கைகளில் 235 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 2015ம் மற்றும் 2016ம் ஆண்டுகளில் அம்மையார் வெளியிட்ட 110 அறிக்கைகளின் நிலை பற்றி வேண்டாம்.... 2011-14 ஆண்டுகளில் மட்டும் 165 அறிக்கைகளை அம்மையார் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு அறிக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை செய்திருப்பதால், 165 அறிக்கைகளிலும், மொத்தம் 577அறிவிப்புகளை அம்மையார் அறித்தார்...2015-16 ஆண்டுகளில் சொன்னதை விடுத்து 2011-14 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதியை பற்றி ஏதுனும் சரியான அடிமை ஆண் மகன் இருந்தால் இதற்க்கு பதில் அளிக்கலாம்....அம்மையார் சொன்னதை செய்யாமல் விட்டதை கேள்வி கேட்க வாக்கு இல்லாத அடிமைகள்...இங்கு திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி கேள்வி கேட்பது கொடுமையிலும் கொடுமை ..2014 வரை வெளியிட்ட 577 திட்டங்களில் ...500 வேண்டாம்,,,,400 வேண்டாம்....300 வேண்டாம்....200 வேண்டாம்...100 வேண்டாம்...நிறைவேறிய 50 திட்டங்களை பட்டியலிட முடியுமா...தூதூதூ..இதெல்லாம் ஓர் பொழப்பு

  • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

    "சபாஷ்" என்று தலைப்பு கொடுத்ததன் மூலம் தி.மு.க ஆட்சிக்கு வருவதை தினமலர் விரும்புகிறது. ஆளும் கட்சியை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளை ஆதரிப்பதும் தினமலர் கொள்கை. ம. ந.கூ பற்றி உரைகல்லின் நிலைப்பாடு என்னவோ?

  • டந.செல்வசேகரன். - தேனி

    என்ன சபாஷ்! திமுகவின் தேர்தல் அறிக்கை யில் இப்போதுள்ள ஆட்சியின் விஷயங்களை அப்படியே உல்டாப் பண்ணப்பட்டது! இலவசமேயில்லை என்பதெல்லாம் மறைமுகமாக உள்ளது.உதாரணம் சலுகைவிலையில் கைபேசி!காவிரி பெரியார் டேம் பற்றி ஒன்றும் இல்லை!மொத்தத்தில் திமுக அறிக்கைக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது! ஆட்சிக்கு வந்தால் ஒருபடி நிச்சயம் மூன்றுபடி லட்சியம் இதுதான் திமுக தேர்தல் அறிக்கை அதிமுகாவின் ஜெராக்ஸ் காப்பி.வாய்ப்பேச்சி மாதிரிதான்!

  • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

    திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க போவதாக உறுதி, கல்விகடன் ரத்து, தனி வேளாண்மை பட்ஜெட், வேலைவாய்ப்பு உறுதி - வரவேற்க்கதக்கது

  • nizamudin - trichy,இந்தியா

    முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களையும் ( அண்ணா உணவகம் ) எடுத்துள்ளார் / MGR திரைப்பட நகர் / சத்து உணவில் பால் /இன்னும் நிறைய நல்ல திட்டங்கள் உள்ளன

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    இதோடு முக வின் நுற்றுர்க்கும் மேற்பட்ட குடும்ப நபர்கள் கட்சியிலும், அரசியலிலும் என்ன பதவிகள் வழங்க படும் என்று ஏன் அறிவிக்க இல்லை..?. இப்படி முதலிலே அறிவித்தல்பின் யாரும் குற்றம் சொல்ல முடியாது..முக இதை செய்ய வெண்டும்...

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    சொல்வதை செய்வதில் திமுகவின் நிழலை கூட தொட அதிமுகவிற்கு அருகதை இல்லை....திமுகவை பொறுத்த வரை 100 திட்டங்களை அறிவித்து 95 திட்டங்களை நிறைவேற்றும்.... அம்மையார் அவர்கள் அதே போன்று 100 திட்டங்களை அறிவித்து 5 முதல் 10 திட்டங்களை நிறைவேற்றுவார்...இதனை பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை....2014ம் ஆண்டு இறுதி வரை 165 முறை 110 விதியை பயன்படுத்தி உள்ளார்...அதில் 577 திட்டங்களை அறிவித்துள்ளார்...அதில் 10 % என்றாலும் 57 திட்டங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும்....100 வேண்டாம்...200 வேண்டாம்...300 வேண்டாம்....குறைந்தபட்சம் நிறைவேற்றிய அந்த 57 திட்டங்களையாவது அடிமைகளால் பட்டியலிட முடியுமா ? ஒட்டு மொத்த திமுக ஆட்சியில்....சொல்லி செய்ய தவறிய சில திட்டங்களை...வருட கணக்கில் பேசும் அடிமைகள்....2011-16 ஆண்டுகளில் அம்மையார் சொல்லி செய்ய தவறிய 5 அல்ல 10 அல்ல 100 அல்ல.... 500க்கும் மேற்பட்ட திட்டங்களை பற்றி பேசாதது....நயவஞ்சகத்தின் உச்சகட்டம்.....என்றோ....யாரோ...எப்போதோ....எப்படியோ..."அம்மையாரே சிறந்த ஆட்சியாளர்" என்று விதைத்த நஞ்சி....இன்று அடிமைகளை ஆட்டி படைக்கிறது....இதில் இருந்து வெளி வர....ஒரே வழி தான்..."எதையும் முடிவு செய்து ஆராயாதீர்கள்....தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்"...இதுவே சுய அறிவின் அடையாளம்

  • Nava Mayam - New Delhi,இந்தியா

    நிர்வாக திறனில் திமுக என்றாலே சபாஷ் தான் ...அம்மா எல்லாம் ஜஸ்ட் பாஸ் தான் ...அம்மாவுக்கு இலவசங்கள் கொடுத்து ஏமாற்றத்தான் தெரியும்...திமுக காலத்தில் கார் தொழிற்சாலைகள் , டைடல் பார் .. ஸ்பெசல் எகனாமிக் சோன் ...3000 மெகா வாட் அனல் மின்சார திட்டங்கள் , அண்ணா நூலகம் , புதிய சட்டசபை , மதுரை கோவையில் டைடல் பார்க் மெட்ரோ ரயில் , ஸ்ரிபெரும்பெதூர் தொழிற்பேட்டை , கோயம்பேடு பஸ் நிலையம் , ஒஎமார் சாலை மேம்பாடு என்று அடுக்கி கொண்டே போகலாம்...அம்மா காலத்தில் , மிக்ஷி , கிரைண்டர் , பேன் என்று அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருப்பார்கள் ..110 விதிகளின் படி வாயால் வடை சுடுவார்கள்...

  • Velu Karuppiah - Chennai,இந்தியா

    இந்த தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மேல் யாராவது உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்றால் நன்றாக இருக்கும். காரணம் இலவச செலவினங்களை பற்றி விரிவான அறிக்கை அளிக்க தெரிந்தவர்கள் இந்த செலவினங்களை ஈடு கட்ட வருவாய் ஆதாரங்களையும் தேர்தல் அறிக்கையில் தெளிவு படுத்தாத வரை இது ஒரு வெற்று அறிக்கையைத்தான் பார்க்க முடியும். ஒட்டு பெறுவதற்க்காக மக்களை ஒரு மாய கண்ணாடியை காட்டி ஒட்டு பெறுவது என்பது ஒரு பித்தலாட்டம். தேர்தல் ஆணையமே இதற்க்கு ஒரு கட்டுப்பாடு விதித்து வருவாய் ஆதாரங்களை வெளிப்படுத்தாத தேர்தல் அறிக்கைகளை அனுமதிக்க கூடாது. இப்படி செய்யாவிட்டால் போகிறபோக்கில் குப்பனும் சுப்பனும் கூட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இலவசமாக கொடுப்பேன் என்று ஏமாற்றி ஒட்டு அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது.

  • 911Tamil - Somerset,சிங்கப்பூர்

    இவர்கள் கொலை கொள்ளை நில அபகரிப்பு திருட்டு இணைப்பகம் இன துரோகம் தமிழினத்தை அழிப்பது தாது மணல் granite கொள்ளை - எல்லாவற்றுக்கும் மேல் அன்புமணி முதல்வரின் தேர்தல் அறிக்கையை மக்கள் கூட்டணி அதிமுக தேர்தல் அறிக்கையை திருடுவது போன்ற உயரிய வேலைகளை செய்ய இவர்களுக்கு அடியில் வேலை செய்ய கேவலமான தொண்டர்கள் - 2ஜீ புகழ் தாத்தாவை யார் நம்புவார்கள் - அதிமுக அன்புமணி தேமுதிக நாம்தமிழர் கட்சி - இவைகள் தான் தேர்தலில் பங்கு ஏற்கிறார்கள் - உங்களை 2014இல் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே - இன்னொரு சம்பவம் தேவையா - அதற்காக ரௌடி தனத்தை தலை விரித்து ஆடும்படி செய்துவிடாதீர்கள் - கட்சியை எடுப்பவன் கத்தியால் தான் சாவான் - ஜெய் ஹிந்த்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    மக்களை இலவசம் என்ற போர்வையில் சோம்பேறிகளாக ஆக்கிவிட்டு இருக்கும் மிச்ச, சொச்ச தமிழக வளங்களையும் கொள்ளை அடிப்பதுதானே உங்களின், தி.மு.க வின் கொள்கை?

  • V.Vinoth Kumar - Reading,யுனைடெட் கிங்டம்

    திராவிட கட்சிகளின் 50 ஆண்டு மொத்த சாதனை 2 லட்சம் கோடி கடன்.. இதை எப்படி அடைக்க போகிறிர்கள்.. ஒரு தடவையாவது தமிழகத்தை நேசிக்கும் தமிழர்க்கு ஓட்டளியுங்கள்

  • venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ

    ஒரு பக்கம் தாலி அறுக்கும் கூட்டத்துக்கும் ஆதரவு.தாலிக்கு தங்கம் கொடுப்போம்னு அறிக்கை வேற..இது என்ன மாதிரி டிசைன்...மக்களே ஏமாந்துடாதீங்க

  • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

    தொழிலே என்றாலும், 'மனிதனை மனிதன் அமர வைத்து இழுப்பது கொடுமை' என்று கைரிக்ஷாவை தமிழகத்திலிருந்து ஒழித்தது திமுக.. மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை தமிழகத்திலிருந்து நீக்கியது திமுக.. அந்த வரிசையில், ஆண்டான்-அடிமை என்ற நிலையை தமிழகத்தில் மீண்டும் புகுத்தி, தன் கட்சிகாரர்களையும், தொண்டர்களையும் 'காலில் விழும் அடிமைகளாக்கி' வைத்து, ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்கி கொண்டிருக்கும் 'மையப்படுத்தப்பட்ட ஊழலம்மாவை' ஆட்சியிலிருந்து மட்டுமில்லை, இத்துடன் அரசியலிலிருந்தும் நீக்கி, அதிமுக அடிமைகளையும் சேர்த்தே மீட்டெடுக்கும் கடமை திமுகவுக்கு இருக்கிறது.. அதற்கு இந்த தேர்தலில் வெல்ல வேண்டியது திமுகவுக்கு மட்டுமில்லை, தமிழகத்திற்கும் மிக மிக அவசியம்.. அதற்கு திமுகவின் கடுமையான உழைப்பும் போராட்டமும் வேண்டும்..

  • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கி சட்டம் இயற்றியது.... மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கியது.... அரசு பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்தியது....எண்ணற்ற அரசு-சாரா தொழில்களுக்கு நலவாரியங்கள் அமைத்து அத்தொழிலாளர்களை பாதுகாத்தது..... 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவந்தது.... முதல் தலைமுறை பட்டதாரிக்கு கல்வி கட்டண சலுகை வழங்கியது.... தமிழக பட்ஜட்டில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஆக அதிகமாக கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது.... விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது....  குடிசை பகுதி மாற்று வாரியம் ஏற்படுத்தியது.... சமத்துவபுரங்கள் ஏபடுத்தியது.... ஏழை எளிய தொழிலாளர்களை அவர்களின் ஆசையை தூண்டி, உழைப்பை சுரண்டும் குதிரை பந்தயத்தை தமிழகத்திலிருந்து ஒழித்தது..... கைரிக்ஷாவை ஒழித்தது.... மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை ஒழித்தது.... இப்படி எண்ணற்ற சமூக  நல திட்டங்களை கொண்டு வந்து சாதனை புரிந்து தமிழகத்தை ஏற்றம் பெற வைத்த திமுக, இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் நிறைவேற்றி அதன் பலனை மக்களிடம் சேர்க்கும் என்பது உறுதி..

  • Rama Subbu - thiruvarur,இந்தியா

    இலவச அறிவிப்பு இல்லை .....அதனால் வாழ்த்துக்கள் ...மற்றபடி எந்த கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் எனக்கு முழு ஈடுபாடு இல்லை ..இது ஒரு சடங்குதானே .

  • SIVA R. - KOVAI,இந்தியா

    அருமை இந்த முறை தமிழக மக்கள் அதனை பேரின் ஓட்டுக்களும் உங்களுக்குத்தான் ஐயா . வாழ்த்துக்கள்

  • காளை - Canberra,ஆஸ்திரேலியா

    இட்லி விற்க அரசாங்கம் தேவை இல்லை என்று சொன்னது திமுக. அப்போ இவர்கள் அறிக்கையில், அண்ணா உணவகத்தில், மெனுவில் இட்லி என்பதை நீக்கி, JetLi என்று பெயர் மாற்றம் செய்வார்களோ. அம்மா உணவகம் அண்ணா உணவகம் என்றால், இட்லி ஜெட்லி தானே

  • SSP - Ramnad,இந்தியா

    இதில சபாஷ் சொல்ரதுக்கு என்ன இருக்கு?

  • காளை - Canberra,ஆஸ்திரேலியா

    Nov 20 2014, அம்மா உணவகத்தை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்.200 உணவகம் திறந்தால் ஏழைகள் பசி தீருமா... இதை சொன்னவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்டாலின் மகாராஜர். இப்போ அவரே சொல்றார், அண்ணா உணவகம் கொண்டுவரப்படும். குறிப்பு : இந்த ஸ்ரீ ஸ்ரீ அவருக்கு இந்த 1.5 ஆண்டு gap யில் பிறந்த ஞானம் என்பதை குறிக்கிறது

  • காளை - Canberra,ஆஸ்திரேலியா

    இதெல்லாம் ஒரு அரசா என்று திமுக விசில் அடிச்சான் குஞ்சுகள் ADMK வ விமர்சிப்பார்கள். இப்போது செயல்பட்டு கொண்டு இருக்கும் பல திட்டங்களை காப்பி அடிச்சு ஒரு அறிக்கை, இந்த திமுக அறிக்கை. அடேங்கப்பா அதன் உடன் ரீல் இலவசங்கள். திமுக குடும்ப கஜானாவில் கை வைத்தால் இம்புட்டு தரலாம். தலிவர் கலப்பு திருமணம் 4 கிராம் தங்கம் என்கிறார், ஆதலும் அவர் குடும்பமே பயன் அடையும், ஏன்னா அம்புட்டு கலப்பு.

  • viji kumar - villupuram,இந்தியா

    கடந்த தேர்தல் வாக்குறுதி : எல்லோருக்கும் இரண்டு ஏக்கர் நிலம். விடுபட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கலாமே?

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    தமிழ் மாநிலத்துக்கு நல்லாட்சி தர தேவையான அடிப்படை திட்டங்களை தேர்தல் அறிக்கையாக தயாரிக்க திமுக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிரது. ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் ஒரு மூலை முடுக்கு கூட விடாமல் பயணம் செய்து தொழிலாதாரங்களை ஆராய்ந்து , மக்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கும் நம் மாநிலத்துக்கும் தேவையான விஷயங்களை தேர்ந்தெடுத்து கொடுக்க டி ஆர் பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை குழு முக்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ததோடு சாத்தியமுள்ள, செயல்படுத்த வாய்ப்புள்ள அறிக்கையை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். இந்த உழைப்பு பயனுக்கு வரவேண்டுமானால் தமிழக மக்கள் தங்கள் ஒட்டு மொத்த ஆதரவையும் தெரிவிக்க வேண்டும்.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    1.ஏற்கனவே அதிமுக அரசு செயல் படுத்தி வரும் திட்டங்கள் கொஞ்சம்., 2. பா ம க அறிவிப்பில் கொஞ்சம்., 3. சீமான் பேச்சுகளில் கொஞ்சம்., 4. வழக்கம் போல கச்சத்தீவு, - பிச்சி பிராய்ஞ்சி ஒரு தேர்தல் அறிக்கை.. இதுக்கு ஒரு குழு வேற..... இதுக்கு ஒரு மாசம் பில்டப் வேற.. இதுல கதாநாயகன் பட்டம் வேற..

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    டாஸ்மாக் கலைக்கப்படும். இதற்கு அர்த்தம் மதுவிலக்கு அல்ல. மது விற்பனை மீண்டும் தனியார் மயம் ஆக்கப்படும்.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    அதிமுகவை திட்டி ஃபேஸ் புக்குல எழுதுனா, 200 ரூபாய் என்ற அறிவிப்பு திமுக தேர்தல் அறிக்கையில் மிஸ்ஸிங்.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    திமுகவின் வெற்று தேர்தல் அறிக்கையும் நமது கேள்வியும். கச்சத்தீவை மீட்போம் கொடுத்தது யாரு..?? சல்லிக்கட்ட நடத்த முயற்சிப்போம் ‪‎நடத்தவிடாம‬ பண்ணினது யாரு..?? அண்ணா உணவகம் அமைப்போம் ‪‎அம்மா‬ உணவகத்தை ஏமாற்று வித்தை விகடன் ல சொன்னது யாரு..?? விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் ‪‎விவசாயிக்கு‬ காவிரியிலும், முல்லைப்பெரியாறு விலும் துரோகம் செய்தது யாரு..?? மீதேனில் கை எழுத்து போட்டதாரு..?? தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் ‪‎ஒன்பது‬ வருசமா மத்தியர்சில் இருந்து பொழுது ஒன்பது துவாரத்தையும் மூடி கிட்டு யிருந்தது யாரு..??

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    ஏரிகள் தூர்வாரப்படும் ‪ஏரியை‬ வளைச்சி வளைச்சி ஆட்டையைப் போட்டது யாரு..?? மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தம் ‪அதை‬ முதன் முதலில் அறிமுகப்படுத்திய அயோக்கியன் யாரு..?? மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் ‪‎அந்த‬ மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் ன்னு சொல்லி அசிங்கப்படுத்தியது யாரு..?? ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும் ‪‎உலகமகா‬ ஊழல் செய்த கொபசெவும், திருட்டு பிள்ளையும் யாருடையது..?? இன்னும் என்னென்ன காமிடி பண்ணப்போரானுங்களோ இந்த திருட்டு கும்பல் திமுக பாய்ஸ்.

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    கச்சத்தீவை மீட்ப்போம் - திமுக தேர்தல் அறிக்கை.கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்படும்போது ஆட்சியில் இருந்ததே திமுகதானே? 18 வருடங்கள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? கச்சத்தீவு தொடர்பாக தற்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அதிமுக கட்சி சார்பாக 2009ல் தொடுத்தபோது அந்த வழக்கை தமிழக அரசே (மைனாரிட்டி திமுக அரசு) ஏற்று நடத்தியிருக்கலாமே? வீராணம், கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு, மின் வெட்டு, நில அபகரிப்பு, மீத்தேன், வால்மார்ட் இதெல்லாம் திமுகவால் எப்போதுமே பேச முடியாத பிரச்சினைகள்.

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்... பயிர் கடன்கள் கொடுப்பது பெரும்பாலும் கூட்டுறவு அமைப்புகள், வேளாண் கடன் வங்கிகள்....இந்த அமைப்புகளை போண்டியோக்குவோம் என்று நேரடியாக தெரிவித்திருக்கலாம்....

  • Ambika. K - bangalore,இந்தியா

    கலைஞரையும் தி மு க வின் தேர்தல் அறிக்கையையும் துப்பி எழுதும் கருத்துக்களுக்கு அதிகமாக ஒரு ஸ்டார். ஒரு வேளை தனியாக ஒரு ஆபீஸ் தொடங்கி இந்த மாதிரி தில்லாலங்கடி வேலை செய்ய சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகம் எழும் வேளையில் இது உண்மை தான் என்னும் பகுத்தறிவு மூலம் புரிகிறது .

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.....தலைவரே, எந்த அரசில்?...தமிழக அரசிலா, இல்லை அலைக்கற்றை கொள்ளை பணத்தில் வாங்கி போட்டுள்ள தீவுகளில் நீங்க நடத்தும் அரசிலா?.....

  • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

    மொத்தமாக படித்தல் தேர்தல் அறிக்கை அருமை இதை நிறைவேற்றுவார்கள? சட்டியில் இருந்தால் தான் கரண்டியில் வரும் ... இவளவும் செய்வதற்கு பணம் ? 2 லட்சம் கோடி கடன் உள்ளது வருவாய்க்கு எது வழி, வருவாய் தரும் மதுவும் காலி ? 5 முறை முதல்வராக இருந்தவர் இதை எபோதே சித்து இருக்கலாமே கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம ?

  • jagan - Chennai,இந்தியா

    வைகோவால் சுடாலின் சான்ஸ் போகும் என்று 1992இல் துரத்தினார்கள், இப்போ அதே வைகோவின் மூன்றாவது மொக்கை அணி மூலம் சுடாலின் வாய்ப்பை கெடுத்துவிட்டார்.....ஹா ஹா ஹா ...சுடாலின் அப்பாகிட்ட போய் அழு...

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    திமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றிய திட்டங்கள் இருக்க கூடாது என்று எனது முந்தைய கருத்தில் சொல்லி இருந்தேன்...அதுவும் நிறைவேறியது...இந்த தேர்தல் அறிக்கை என்பது முழுக்கு முழுக்கு நமக்கு நாமே பயணத்தின் போது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது....நிச்சயமாக..உறுதியாக...திமுக இதனை நிறைவேற்றும்...அனைத்து துறைகளும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு இருந்தாலும்...தொழில்துறை...கட்டமைப்பு...போக்குவரத்துதுறைகளில் எடுத்து கொள்ளப்பட்ட கவனம் கவனிக்கத்தக்கது....திமுகவின் துறைவாரியான தெளிவான முழு தேர்தல் அறிக்கையை காண இந்த லிங்க் செல்லவும் s://www.docdroid.net/bvkYVQx/manifesto-tamil1.pdf.html வளர்ச்சி திட்டங்களை திமுக என்றுமே முன்னெடுக்கும் என்பது இந்த தேர்தல் அறிக்கை நிருபித்துள்ளது....100 திட்டங்களை சொல்லி அதில் 15 திட்டங்களை அம்மையார் நிறைவேற்றுவார்...அது போன்று திமுக 100 திட்டங்களை சொல்லி அதில் 95 திட்டங்களை நிறைவேற்றும்....100க்கு 5 மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவனை 85 மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவனோடு ஒப்பிடுவது எந்த அளவிற்கு முட்டாள்தனமோ...அது போன்று தான் சொல்வதை செய்வதில் திமுகவோடு அதிமுகவை ஒப்பிடுவதும் முட்டாள்தனமானது ....நன்கு கவனித்தால்...திமுக சொல்லி செய்ய தவறியது என 2 ஏக்கர் நிலம் என்ற ஒன்றை மட்டும் பல அடிமைகள் பல வருடங்களாக சொல்லி வருகின்றனர்...காரணம்...வேறு எதையும் சொல்லும்படி இல்லை என்பதால்.,.,கிடைத்த ஒன்றை பிடித்து தொங்குகின்றனர்...ஒன்றும் செய்யாத அம்மையாரின் திட்டங்கள் என்ற அலையன பாயும் தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவன் கிடைத்த சிறு பிடியை கொண்டு தன உயிருக்கு போராடுவது போன்று...இந்த 2 ஏக்கர் நிலம் கொண்டு தங்களை தற்காத்து கொண்டுள்ளனர் (2 ஏக்கர் நிலை ஏன் கொடுக்க முடியாமல் போனது என்ற விளக்கத்திற்கு அடிமைகள் பதில் இல்லை என்பது வேறு விஷயம்)...110 என்ற விதியை கிழி கிழியென்று உலகமே கிழிக்கும் இந்த வேளையில்...அதை பற்றி பேசாமல்...எருமை மாட்டின் மீது மாலை பொழிந்தார் போல் இருப்பது கேவலத்திலும் கேவலம்

  • suresh - omaha,யூ.எஸ்.ஏ

    அ தி மு க தேர்தல் அறிக்கை ஆறிய காஞ்சி பழங் கஞ்சியாகத்தான் இருக்கும். உப்பு சப்பில்லாமல்.

  • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

    இதில் இருப்பது அனைத்தும் செலவினங்களே, மேலும் ஒரு சாரருக்கு மட்டும் அதிக வெகுமதிகள்,,,, இதை செயல்படுத்த வேண்டிய நிதிக்கு, வரி என்ற சுமை நடுத்தர மக்களையே நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கும், அதனால் விலைவாசி பலமடங்கு உயரும், அதாவது ஒருபுறம் மேடு அமைத்தால் மறுபுறம் அதற்கு இனையான பள்ளம் உருவாகும்....

  • Pandianar - Singapore,சிங்கப்பூர்

    படித்து விட்டு, வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை தரப்படும், கடந்த ஆட்சியின் போதும் இது போல் வாக்குறுதி கொடுத்துவிட்டு நிறைவேற்ற வில்லை, கட்டுபரத்திர்க்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடிப்பது கைவந்த கலை, ஆட்சிக்கு வந்ததும் அனைத்து நிதிகளும் ஒன்று கூடி கும்மி அடித்து மக்களுக்கு பட்டை நாமம்தான்... நாம் பல முறை ஏமாந்து உள்ளோம், திராவிட ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்போம், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்

  • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

    நிலமில்லாத விவசாயிகளுக்கு ஏற்கனவே இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்ததில் ..இப்போது தமிழ்நாடு முழுக்க நிலமிலாத விவாசாயிகளே இல்லை என்ற நிலையை உருவாக்கிய திமுகவை மறக்க முடியுமா ஒவ்வொரு தேர்தலிலும் மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று சொல்லி ..அப்படியே திமுக ஆட்சியில் மதுவே இல்லாத தமிழகத்தை உருவாக்கினார்களே அதை மறக்க முடியுமா கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 தருவதாக சொல்லிவிட்டு ..பிழிதிறன் அது இதுவென்று சொல்லி ஏமாற்றி விவசாயிகளுக்கு நன்மை செய்தார்களே அதை மறக்க முடியுமா ? மீதேன் திட்டம் கொண்டுவந்ததற்காக வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு விவசாயிகள் வடை பாயசத்துடன் விருந்து வைக்க காத்திருக்கிறோம் வாருங்கள் வயறு புடைக்க சாப்பிடுங்கள்

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

    கலைஞர் கருணாநிதி அவர்களே கர்ம வீரர் காமராஜர் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் நிகழ்த்தியபோது,அதனை வீழ்த்த அவர்க்கு சுவிஸ் வங்கியில் 600 கோடி பணம் உள்ளது .அவருக்கு மனைவி ,துணைவி ,மற்றும் இணைவி உள்ளது என வசைபாடிய கருணாநிதி ,இத்தகைய தேர்தல் அறிக்கை என்ற மாய ஜாலங்கள் மூலம் 1971ல் தமிழக முதல்வர் ஆனார். கடந்த 5 முறை தமிழக முதல்வர் பதவியில் கருணாநிதி இருந்தும் , பாரத ரத்னா காமராஜர் 9 ஆண்டுகள் தமிழக முதல்வராக செய்த சாதனைகளில் 10% கூட கருணாநிதி சாதித்தது இல்லை.. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளும் ,அவர் ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடங்களும் ,அவர் ஆட்சி காலத்தில் தொடங்கிய தொழிற்சாலைகளும் இன்றும் சாட்சியாய் உள்ளன. ஆனால் இப்போது ஜெயலலிதா அவர்களை வீழ்த்த ஊழல் ராணி ,கோமளவல்லி என்றல்லாம் பேசும் திமுகவினர் அன்றும் காமராஜரை திட்டி தீர்த்து தமிழகத்தை ஊழல் ஆட்சி செய்து சீரழித்து விட்டார் என வாய் வார்த்தைகள் பேசி தான் காமராஜர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.ஆனால் இன்றைய தலை முறை தமிழக வாக்காள பெருமக்கள் இத்தகைய வெற்று தேர்தல் அறிக்கைகளுக்கு மயங்க மாட்டார்கள் .உண்மையிலே கருணாநிதி ஊழலுக்கு எதிரானவர் என்றால் அவர் கட்சியினர், மந்திரிகள் ,அவரின் சொந்த பந்தங்கள் ,மாவட்ட செயலாளர்கள் ,வட்ட ,நகர செயலாளர்கள் 1990ல் வைத்திருந்த சொத்துக்கள் எவ்வளவு - தற்போது 2016ல் அவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு? இந்த மதிப்பீட்டை மத்திய comptroller and auditor general அதிகாரிகள் மூலம் செய்து , அதனை தனது முரசொலி பத்திரிக்கையில் கருணாநிதி பிரசுரிக்க வேண்டும்.இதை செய்து காட்டிய பின்பு தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வருவது பற்றி திமுக யோசிக்கலாம்.ஹிந்துக்களை திருடன் என்று கருணாநிதி இழிவாக பேசியதையும் , 1971 திக மாநாட்டில் இராமர்,இலட்சுமணர் மற்றும் சீதை படங்களுக்கு செருப்பு மாலைகள் போட்டும் ,துடைப்பத்தால் அடித்தும் பின்பு அந்த படங்களை கொடும் பாவி கொளுத்தியதையும் ஒதுக்கி தான் இன்று வரை ஹிந்துக்கள் மத சகிப்பு தன்மையினால் கருணாநிதியை 5 முறை முதல்வர் பதவியில் உட்க்கார வைத்து (திமுகவில் உள்ள 90% ஹிந்துக்கள் ) அழகு பார்த்தனர். அதற்க்கு பிரதிபலனாக தான் இன்றுவரை கருணாநிதி ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது இல்லை .சிறுபான்மை மக்களின் பண்டிகைகளுக்கு முதலில் வாழ்த்துவது கருணாநிதி தான்.ஹிந்து துவேசம் எனது மூச்சு என்று கூறுபவரை ஹிந்துக்கள் ஆதரிப்பது தொடர்கதை ஆகி விட்டது தான் மிச்சம். தமிழகத்தின் சாபக்கேடு இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது

  • Siva Kumar - chennai,இந்தியா

    இலவச மின் இணைப்பு இலவசம் இல்லையா? ஏற்கனவே ஆவின் நஷ்டத்தில் நடமாடுகிறது இதில் லிட்டருக்கு ரூபாய் 7 குறைத்தால் ஆவின் நிலைமை என்ன ஆகும்? ஆவின் மூடு விழா கொண்டாடும் எண்ணமா? இதற்கு தனியார் பால் கம்பனிகளிடம் இருந்து கமிஷன் பேசி முடித்து விட்டனரா? மற்ற திட்ட செலவுகளுக்கு பணம் அச்சடிக்கும் எண்ணமா ? யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?

  • Chidam - Chennai,இந்தியா

    இத படிக்கும் போது சதுரங்க வேட்டை படம் ஞாபகம் வருது , முதலில் ஆசையை தூண்டனும் அத வச்சு மக்களை எமற்றணும். கலைஞர் ஐயா நல்ல பிளான் :)

  • Periyar K - chennai,இந்தியா

    பா.ம.க வரைவு நிதிநிலை அறிக்கை காப்பி...

  • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

    இலவசங்கள் இல்லை - கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ரிசல்ட் என்னமோ அதேதான். சிலவை குறைத்து பணம் மிச்சப்படுத்தலாமே தன் குடும்ப நலனுக்காக. அதுவும் இலவசங்கள் மக்கள் வரி பணத்திலிரிந்துதானே - அதுவும் ஒரு சேவிங் தானே. இதனால் மக்களின் சுமை குறையவா போகிறது.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    என்ன தலைவா, 2G யை வெற்றிகரமா முடிச்சிட்டு அடுத்து 3G/4G மேல கண்ணு வச்சுட்டியா? இந்த தடவை எத்தனை லட்சம் கோடி? புதிதாக வரும் ஒரு கோடி வாக்காளர்களை கவரும் ஒரே திட்டம் கல்வி கடனை தள்ளுபடி செய்ய பரிசீலிக்க படும்? ஹ்ம்ம் தேறுவது கஷ்டம் தான்............

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    பூரா பொய் ........இவரு கரும்பு டன்னுக்கு 3500 கொடுக்கரவர? வெறும் நூறு ரூபாய் ஏத்தி கேட்டு போராட்டம் நடத்தியதற்கு விவசாயிகளை போலிஸ் விட்டு அடித்தவர் இவர்..........அப்போ கரும்பு டன்னுக்கு வெறும் 1200 ரூபாய் தான்.......

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இந்தத்தேர்தலில் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி... அவர்களில் ஒரு சிலருக்கு வேலை என்றால் மீதிப்பேர் அண்டை மாநிலத்துக்கு செம்மரம் வெட்ட போகவேண்டுமா?

  • nanban - Chennai,இந்தியா

    அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை old pension scheme தேவை இல்லாதது , 6வது pay commisionuku முன் அவர்களுக்கு குறைந்த சம்பளம்,இப்போது அவர்கள் அதிக சம்பளம் பெறுபவர்கள் இவர்களுக்கு ஏன் இன்னும் சலுகைகள்? அவர்கள் வாங்கும் சம்பளத்தில் கொஞ்சம் சேமித்தாலே அவர்களுக்கான pension கிடைக்கும் , இன்னும் ஏன் சலுகைகள்?

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    பாராட்டுக்கள்....இலவச அறிவிப்பு இல்லாமல், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது வரவேற்க தக்கது... கொடுக்கும் வாக்குறுதிகளை கால கெடு என்ன?, வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் மக்களுக்கு உள்ள எதிர்வினையாற்றும் வாய்ப்புக்கள் என்ன? என்பதையும் கூறினால் அறிவிப்புகளின் நம்பகத்தன்மை கூடும்...

  • arun.subramaniyam - LA, Cali,இந்தியா

    ஒரு வரியில் திமுக தேர்தல் அறிக்கை : தமிழ் மக்கள் அனைவருக்கும் இலவசமாக காது குத்தி, மொட்டை அடித்து, தமிழ்நாட்டை விற்போம்

  • sivakumar - Dindigul,இந்தியா

    நல்லவர் வர்றார் சொம்பை எடுத்து உள்ளே வை

  • sha_newyork - new york,யூ.எஸ்.ஏ

    இதே தினமலர் ஏன் நாம் தமிழரின் அறிக்கை பற்றி ஒரு செய்தி கூட போடவில்லை. எனக்கு அந்த கட்சியின் மீது எந்த அபிமானமும் முன்பு இல்லை. ஆனால் அவர்கள் ஒரு மாற்று அரசு அமைய தகுதியானவர்கள் என்று தான் தோன்றுகிறது. சுமார் 300 பக்கங்கள் மேல் உள்ள அறிக்கை அது. அவரது கனவை நமது தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று நமது கனவை மிக அருமையாக சொல்லி இருக்கிறார். இதில் நமக்கு நாமே காமெடி புயல் ஸ்டாலின் போன்று எந்த பந்தாவும் இல்லாது மக்களின் எண்ணங்களை, ஆசைகளை அப்படியே அறிக்கையில் சொல்லி இருக்கிறார். ஆனால் இது பற்றி, நாம் தமிழர் பற்றி எந்த செய்தியும் இல்லை. தேமுதிகவின் தேர்தல் அறிக்கை கூட இதில் இருந்து பல சுட்டவை தான்.

  • sha_newyork - new york,யூ.எஸ்.ஏ

    இதில் என்ன சபாஷ் நிருபரே? பாதி நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் இருந்து சுட்டது. கொஞ்சம் பாமகவின் அறிக்கையில் இருந்து சுட்டது. கொஞ்சம் ஏற்கனவே தற்போதய அரசால் செயல் பட்டு கொண்டு வருகிறது. இதையே இவர்களது அறிக்கையில் சற்றே பெயர் மாற்றி சொல்லி இருக்கிறார்கள். சுமார் 6 மாதம்,300 கோடிக்கும் மேல் செலவு செய்து நமக்கு நாமே ஊர் சுற்றி பல ஆயிரம் மனுக்கள் பெற்று அதை அறிக்கையில் சொல்லுவோம் என்றார்கள். கடைசியில் 72 பக்கங்கள் தான். அப்போ அம்மையார் ஆட்சியில் பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு விட்டது என்று தானே அர்த்தம். சில திட்டங்களில் இவர்கள் 200 ருபாய், 1000 ருபாய் என்று கூட தருவது போல் அறிக்கையில் சேர்த்து இருகிறார்கள் அவ்ளோதான்.. இலவசம் இல்லாது இருப்பது வரவேற்கதக்கது. மற்றபடி உப்பு சப்பு இல்லாத தேர்தல் அறிக்கை.

  • Raj - Chennai,இந்தியா

    என்ன தான் திமுக வின் மீது கடந்த கால வெறுப்பு இருந்தாலும் உண்மையில் இது நல்ல தேர்தல் அறிக்கை முன்பை காட்டிலும், சொன்னதை செய்வார்கள் என்பதால் நம்பி வாக்களிக்கலாம்.

  • senthil - houston,இந்தியா

    திமுக ஆட்சிக்கு வந்து இதை செய்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்... சென்னை இல் இன்னும் அரசு பள்ளி கூடம் துவக்க பட வேண்டும்

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    கட்டுமரதிற்கு கோடானு கோடி நன்றிகள். இலவசங்களை அறிவிக்காமல் ஜெயா அம்மாவையும் இலவசத்தை அறிவிக்கும் நிலைக்கு தள்ளாமல் இருந்ததற்கு. நாளைக்கு அதிமுக தேர்தல் அறிக்கை வரும், அப்போது இந்த தேர்தல் அறிக்கை மொக்கையாகி போகும். நாளை அதிமுக தேர்தல் அறிக்கை வரும் வரை தான் இவர்களின் ஆட்டம்..... என்ன இருந்தாலும் ஜெயா அம்மாவை உங்களால் வீழ்த்தவே முடியாது. விஜயகாந்த் தனியாக நின்றால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து, பணம் கொடுத்து, சந்திரகுமாரை விலைக்கு வாங்கி, தேமுதிகவை உடைத்து, தனி கட்சி ஆரம்பிக்க வைத்து, நாளை சந்திரகுமாரை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி நாங்கள் தான் உண்மையான தேமுதிக என்று கூறவைத்து, இருவருக்கும் சண்டை மூட்டி, தேர்தல் கமிஷன் யாருக்கும் முரசு சின்னம் ஒதுக்காமல் முரசு சின்னத்தை முடக்குவதே கட்டுமரத்தின் தீய எண்ணம். கட்டுமரம் என்றைக்கும் திருந்தவே மாட்டார். நாளை ஆட்சிய பிடித்தார் என்றால், திரைப்பட துறை முதல் நாள் அன்றே கபளீகரம் செய்வார்கள். சன் பிக்க்ச்சர்ஸ் மறுபடியும் வரும், யாரும் படம் வெளியிட முடியாது சன் பிக்க்ச்சர்ஸ் தவிர, திரைப்பட துறையில் உதயநிதி கொடி கட்டி பறப்பார், அவர்கள் படங்கள் மட்டுமே திரைக்கு வரும், மறுபடியும் துறை முருகன், பொன்முடி,நேரு, வேலு, சுடாலின், காந்தி, பொங்கலூர் பழனிசாமி, TR பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆட்டம் ஆரம்பித்து விடும், பாராட்டு விழாக்களில் குத்தாட்டம் போட நடிகைகளுக்கு கிராக்கி ஏற்படும், சுடாலின் ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவார், மீத்தேன் திட்டம் மறுபடியும் கை எழுத்தாகும், சேது சமுத்திர திட்டம் மறுபடியும் கொண்டு வந்து பரம ஏழையான TR பாலு போன்றவர்கள் மூலம் கொள்ளை அடிக்க படும், மறுபடியும் நோயாளிகளை வெளியே தூக்கி எரித்துவிட்டு, மருத்துவமனை மறுபடியும் சட்டமன்றம் ஆக்கப்படும், அம்மா உணவகங்கள் அறிஞர் அண்ணா அல்லது கருணாநிதி உணவகம் என்ற பெயர் சூட்டப்படும், கலைஞர் குடிநீர், கலைஞர் சிமன்ட், கலைஞர் நாப்கின் போன்ற பெயர்கள் சூட்டப்படும், அடுத்தவர் நிலங்கள் அபகரிக்கப்படும், நில அபகரிப்பு சட்டம் ரத்து செய்யப்படும், தமிழ்நாட்டு நலன் கருதி திமுக முன்னால் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்குகள் வாபஸ் பெற படும். ஜெயா சொத்து குவிப்பு வழக்கு மட்டும் துரித படுத்தப்படும், துரைமுருகன், நேரு, பொன்முடி போன்ற பண பேய்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்கு உயர்த்தப்படும். இன்று உங்கள் சொத்து நாளை திமுக சொத்துக்களாகக படும். ஒருத்தரும் தொழில் செய்ய முடியாது. கடந்த திமுக ஆட்சியில் கனிமொழி வேலூர் VIT மற்றும் கோவை காருண்யா பல்கலை கழகத்தை அபகரிக்க மிரட்டல் விடுத்தார், ஆனால் இப்போது இந்த இரண்டு கல்லூரிகள் கனி மொழி பெயரில் மாற்ற படும். கட்டுமரம் குடும்பத்தை தவிர வேறு யாரும் தொழில் தொடங்க முடியாது. இந்த கல்வி கடன் தள்ளுபடி, வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் நிவாரணம். விவசாய கடன் தள்ளுபடி என்பது எல்லாம் திமுக வினர் மட்டுமே பயன் அடைவார்கள். அணைத்து தொழில்களும் கட்டுமரம் குடும்பத்தின் monopoly ஆக்கப்படும். இவைகள் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு நாளில் அரங்கேறும். அதற்கு தான் கட்டுமரம் மற்றும் சுடலையன் வெறி பிடித்து அலைகின்றனர். காஞ்ச மாடு அவிழ்த்து விட்டால் என்ற பழமொழி இவர்களுக்கு சால பொருந்தும்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    இலவசம் இல்லை என்று கருணாநிதி சொல்லி இருப்பதால் பொது மக்களின் ஓட்டுக்கள் கொஞ்சம் குறையும்.அதுவும் இல்லாமல் ஜெயலலிதா செய்த பல நல்ல திட்டங்களை இவர் செயல் படுத்த் வேண்டும்.ஜெயா செய்த திட்டங்களை வைத்து தான் இவர் ஜெயித்து வந்தால் நடத்தும் சூழ் நிலை உள்ளது.மின்சாரம் மாணவர்கள் பிரச்சனை இன்னும் எவ்வளவோ இருக்கிறது.ஆகா மொத்தத்தில் ஜெயாவின் ஆட்சியில் நடக்கும் நல்ல விழயங்களை வைத்து தான் இவர் ஆட்சி செய்ய வேண்டும்.

  • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

    இதே போன்றுதான் 2006 தேர்தல் அறிக்கையை பாராட்டினீர்களே.. நினைவிருக்கா? எதற்கு தெரியுமா? ஒவ்வோர் குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதை பாராட்டி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்று உணர்ச்சி பொங்க ஒரிஜினல் திமுகவினரை போன்று பாராட்டினீர்கள்..அதே போலவே இன்றும் பாராட்டியுள்ளீர்..ஒருவேளை இது கிண்டல் நக்கல் நய்யாண்டித்தனமாக இருக்ககூடும்..என்னாச்சு அந்த 2 ஏக்கர் நிலம்? நீங்களாவது வாங்கினீர்களா? அனைவரையும் ஏமாற்றி ஆட்சியை பிடித்து..ஊரில் ஒருத்தர் நிலத்தையும் விட்டுவைத்தார்களா? எங்கு பார்த்தாலும் நல்ல விளை நிலங்களையும்..பட்டா நிலங்களையு மிரட்டி அடித்து உதைத்து பிடுங்கிகொண்டார்கள் இந்த திமுகவினர். அதிலும் விலையை தாறுமாறாக உயர்த்தி..தொழில் செய்ய வந்த நிறுவனங்களுக்கு நூறு மடங்கு விலையேற்றி சாமான்யர்கள் வாங்கவே முடியாத அளவுக்கு செய்தார்கள் இந்த விஞ்ஞான திருடர்கள் திமுகவினர். இவை யாவும் அரங்கேறியது சாதாரண திமுக தொண்டன் முதல் வட்டம் மாவட்டம் என்று தொடர்ந்து இறுதியில் டாட்டா வீட்டு கட்டிடத்தை கூட மிரட்டி வாங்கினார்களே..மறந்து போனீர்களே? சபாஷ் போடும் முன்னர் யோசித்தீர்களா? பத்திரிக்கா தர்மம் என்று உண்டல்லவா? நீங்கள்தானே நான் இங்கே கூறியவற்றை மக்களுக்கு நினைவூட்டி இருக்கவேண்டும்? அதன செய்யாமல் சபாஷ் போடுகின்றீர்களே..வாசக நெஞ்சங்கள் உங்களை வசைபாடுமே என்று யோசித்து இதனை செய்தீர்களா? சரி கட்சிக்காரர்களின் புத்திதான் அப்படி போயிற்று என்று கூட விட்டுவிடுங்கள்..இந்த ஸ்டாலின் கூட பக்கத்து வீட்டு சேட்டு வீட்டை அபகரித்த சம்பவம் கூடவா உங்களுக்கு இந்த சபாஷ் போடும்முன்னர் நினைவுக்கு வரவில்லையா என்ன? ஒருவித அச்சம் தோன்றிவிட்டதா என்ன? சில ஆண்டுகளுக்கு முன்னர் தினமலர் அலுவலகத்தை தாக்கியதை எண்ணி..இப்போது அந்த அச்ச உணர்வில் எதுக்கு வம்பு என்று சபாஷ் போட்டுவிட்டீர்களா? மலைக்கொட்டையையாவது விட்டு வைத்தாயா நேரு என்று தலீவரே கேட்ட சம்பவங்களை தெரிந்தும் கூட இந்த மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு சபாஷ் போட்டுவிட்டீர்களே..நாளைய சமுதாயம் உங்களை நிந்திக்காதா? அதனால் சபாஷ் என்கிற தலைப்பை மாற்றி..உஷார் என்று தலைப்பை போடுங்கள்..மக்களுக்கு சற்றேனும் இவர்களின் அட்டூழியம் நினைவுக்கு வந்துபோகும்..ஏமாற்றும் வித்தையின் முதற்படி இதுவே..தேர்தல் நாளுக்கு முன்னர் ஒருவாரம் இருக்கும்போது இந்த குளிர்சாதன பெட்டி..மற்றும் வாஷிங் மிஷின் இலவசம் என்று அறிக்கை விடுவார்கள் பொறுத்திருங்கள்..இந்த அனைத்து திட்டங்களுமே அதிமுக அரசு தற்போது நிறைவேற்றி வந்துள்ளது..அதிமுகவின் செயல் திட்டங்களை எடிட் செய்து வெளியிட ஒரு குழுவாம்..அது ஆறுமாதமாக செயல்பட்டு இப்போது தயாரித்து வந்ததாம்..எடுபடாது இவர்களின் சொல் அம்பலம் ஏறாது..மாறாக அசிங்கப்படும்..மக்களிடையே என்பதுதான் நிஜம்..உஷார் மக்களே..

  • D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நம்புவதற்கு நாங்கள் தயார் இல்லை. உங்களை நம்பி நம்பி நாசமாய் போய்டோம். தமிழன் அடையாளம் இல்லாமல் பிச்சை காரர்கள் ஆனோம். போதும்

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வந்துருச்சா, ஓகே அதிமுக தேர்தல் அறிக்கை நாளைக்கே வந்துரும். அப்படியே ஈ அடிச்சான் அட்ட காப்பிதான் வேற என்ன ?

  • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

    உண்மையான அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென்றால்: குடும்பமோ இதுவரை ஆட்சியில் இருந்தவர்களோ அரசில் பங்கு பெறவோ, தலையிடவோ மாட்டார்கள். முழுக்க முழுக்க நேர்மையான படித்த புதுமுகங்களால் அரசு ஆட்சிக்கு வந்தால் நடத்தப்படும். அது இல்லாதவரை பழைய கள் புதிய குடுவை தான். இந்த அறிக்கை மக்களால் தீவிரமாக அலசப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும். முற்றிலும் கழக ஆட்சிகளுக்கு மாற்று அமைய வேண்டும்.

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    இந்த தேர்தல் அறிக்கையில் கட்டுமரத்தின் தோல்வி பயமே தெரிகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் எப்படியாவது மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் ஏன் அறிவிக்கவில்லை என்றால் மதுவிலக்கை கொண்டு வந்த பிறகு எப்படி இலவசத்தை கொடுக்க முடியும்??? கட்டுமரம் என்ன அவ்ளோ ஏமாளியா? அவ்வளவு பொது நலன் உடையவரா? அதனால் தான் மற்றபடி நாட்டு நலன் மீது அக்கறை கொண்டு இலவசத்தை அறிவிக்கவில்லை என்று இல்லை. மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை நிறைவேற்ற சாத்தியம் இல்லை. 1. மதுவிலக்கை கொண்டு வந்த பிறகு, மது விலக்கு சட்டத்தை கொண்டு வந்த பிறகு எப்படி அரசை நடத்துவார்? 2. வங்கிகள் கல்வி கடன் மற்றும் விவசாய கடன்களை அவர்கள் பணத்தில் கொடுப்பதில்லை. நாம் வைத்திருக்கும் வைப்பு தொகையை எடுத்து தான் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கிறார்கள், அதில் வைப்பு தொகை வைத்துள்ளவர்களுக்கு வங்கிகள் வட்டியும் கொடுக்கிறார்கள். கல்வி கடன் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால், அந்த பணத்தை வங்கிகள் எப்படி சரி கட்டும்? மதுவிலக்கை கொண்டு வந்த பிறகு, TASMAC வருமானம் இல்லாமல் கட்டுமரம் வங்கிகளுக்கு எப்படி அந்த தள்ளுபடி ஆன பணத்தை கொடுப்பார்? 3. 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு. இது இரண்டு ஏக்கர் நிலம் என்கிற இலவசம் போன்ற அறிவிப்பு. ஒரு வேலைக்கு 5 லட்சம் என்றால் 3.5 லட்சம் பேருக்கு எத்தனை ஆயிரம் கோடி அடிக்க ப்ளான் போடுகிறதோ கட்டுமரம்.... மேலும் TASMAC வருமானம் இல்லாமல் எப்படி புதியதாக 3.5 லட்சம் பேருக்கு சம்பளம் கொடுப்பார் கட்டுமரம்? அது வேறு இல்லாமல் tasmac ஊழியர்களுக்கு எப்படி வேறு வேலை கொடுத்து சம்பளம் கொடுப்பார்? இதை தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்திலும் விளக்கவில்லை 4. ஆவின் பால் 7 ரூபாய் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார், அப்படி என்றால் 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 23 ரூபாய்க்கு அதை சுத்தபடுத்தி, பதபடுத்தி, பாக்கட் செய்து, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து சில்லறை விலையில் 23 ரூபாய்க்கு விற்பனை செய்வாரா? இதன் மூலம் வரும் இழப்பீடை எப்படி சரி செய்வார்? 5. முதியோர்களுக்கு இலவச பேருந்து பயணம்.... போக்குவரத்து துறைக்கு வரும் நஷ்டத்தை எப்படி சரி செய்வார்? 6. tasmac மூலம் வருமானம் இல்லாமல் எப்படி படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் நிவாரண தொகை கொடுப்பார்? எங்கிருந்து பணம் வரும்? 7. ஜல்லிகட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், ஜல்லிகட்டை தடை செய்தது யார்? 8. கைபேசி வாங்க அரசு செலவில் கொடுக்கப்படும், டாஸ்மாக் மூடிய பிறகு எப்படி இந்த கைபேசி கொடுப்பார் கட்டுமரம்? 9. அம்மா உணவகம் ஆரம்பித்த போது விகடன்இல் ஏமாற்று வேலை என்று கட்டுரை வெளியிட்டார் கட்டுமரம், இப்போது அறிஞர் அண்ணா உணவகம் திறந்தால் அது ஏமாற்று வேலை ஆகாதா? இப்போது உள்ள உணவகத்தை விட அண்ணா உணவகம் திறக்க என்ன தேவை ஏற்பட்டுள்ளது? அம்மா உணவகம் என்பதை மூடுவேன் என்று சொல்லாமல் சொல்கிறாரா? 10. திருச்சி மதுரை கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும், இதற்கு நிதி ஆதாரம் எப்படி திரட்டப்படும் என்பதை கட்டுமரம் கமுக்கமாக சொல்ல மறுத்தது ஏன்? 11. கோவில் நிலங்களை பாதுக்காக்க திமுக குண்டர்களை சாரி தொண்டர்கள் மூலம் நிலவங்கி ஏற்படுத்தப்படும் என்று கூறுகிறாரா? ஒரு வழியாக கோவில் நிலங்கள் மீது ஒரு கண் விழுந்துவிட்டது. நமக்கு நாமே நாடகத்தில் கோவில் நிலங்களை தான் சர்வே எடுத்திருப்பாரோ சுடலையன்? 12. அணைத்து மாணவர்களுக்கும் 3G 4G இணையத்தளம் கொடுக்கப்படும் - நான் சொல்லல கட்டுமரதிற்கு 4G யில் ஒரு கண். 4G ஊழல் கன்பார்ம். 13. மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் நியாயமான விலையில்- அதாவது மணல் கொள்ளையில் ஈடுபடுவதே திமுக தொண்டர்கள் தான். இவர் எப்படி நியாயமான விலையில் கொடுப்பார்? மணல் வியாபாரத்தை கூட தலீவர் விட்டு வைக்கவில்லை.... 14. இன்னும் பலவற்றை கூறி இருக்கலாம், மது விலக்கை மட்டுமே கூறிய கட்டுமரம், லாவகமாக TR பாலு, ஜகத்ரட்சகன் ஆலைகள் மூடப்படும் என்று கூறவில்லை, அதாவது தமிழகத்தில் மது விலக்கு வந்தாலும், அவர்கள் ஆலைகளின் மூலம் வேறு மாநிலங்களுக்கு சப்பளை செய்து சம்பாதிப்போம் என்று கூறுகிறாரா கட்டுமரம்? 15 . நூறு நாள் திட்டத்தை ரத்து செய்யாமல் 150 நாட்கள் நீடித்து, விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயத்தை அழிப்போம் என்கிறாரா? 16. விவசாயிகளுக்கு எந்த வித சலுகையும் அறிவிக்கவில்லையே? 17. மதுவிலக்கு என்பது முதல் கை எழுத்திலா அல்லது இதுவும் படி படியாக தானா? முதல் கை எழுத்தே மது விலக்கு என்றால், இந்த அறிவித்த வெற்று திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார்? எப்படியும் ஆட்சிக்கு வர போவதில்லை, அதனால் அடுத்து வரும் அதிமுக அரசும் கஷ்டப்படட்டும் என்று ஏற்றி விடுகிறாரா? 1.76 லட்சம் கோடி ரூபாய் மூலம் நிறைவேற்றுவாரா? இதில் அறிவித்த திட்டங்களுடன் நிதி ஆதாரத்தை பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே ஏன்? வருடத்திற்கு 22 ஆயிரம் கோடி டாஸ்மாக் மூடுவதன் மூலம் இழந்த பிறகு எப்படி இந்த திட்டங்கள் தீட்ட நிதி ஆதாரம் வரும்? ஏற்கனவே ஜெயா 2 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வைத்துவிட்டார் என்று புலம்பி தீர்த்த கட்டுமரம், இந்த திட்டங்களை நிறைவேற்றி, அதன் பிறகு அந்த கடன்களை எப்படி அடைப்பார்? 18. மின் உற்பத்தி திட்டத்தை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை, அப்படி என்றால் ஜெயா மின் உற்பத்தி செய்து மின்வெட்டை நீக்கிவிட்டார் என்பதால் அறிவிக்கவில்லையோ? 19. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் - இது பாமக வை பார்த்து காப்பி அடித்த மாதிரி இருக்கே..... 20. இந்த கவர்ச்சி திட்டங்கள் எல்லாம் ஏட்டளவில் நன்றாக இருக்கும், எப்படியாவது மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கிவிட வேண்டும், பிறகு மற்றவர்களின் நிலங்களை அடித்து பிடுங்கும் வேலையை உடனே ஆரம்பித்து விடுவார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் திரைப்பட துறையில் கட்டுமர குடும்பத்தின் தலையீடு முற்றிலும் இருக்காது என்ற உறுதி மொழியே இல்லையே? லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும், அதாவது பாருங்க மக்களே, 1.76 லட்சம் கோடி + 214 கோடி கொள்ளையடித்தவர் கூறுகிறார் கேளுங்கள்...... லோக் ஆயுக்க்தா கொண்டுவந்தால் முதலில் உள்ள போவது கட்டுமரம், சுடலையன், மற்றும் கனி மொழி தான். டாஸ்மாக் வருமானம் இல்லாமலே ஆட்சி நடத்தமுடியும், இந்த அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை கட்டுமரதிற்கு வந்திருக்கும் என்றால், ஜெயா அரசு கஜானாவை நல்ல நிலையில் வைத்திருக்கிறார் என்று அர்த்தம் என்று எடுத்து கொள்ளலாமா? கடன் அவ்வளவு கிடையாது, இவர்கள் புளுகினார்கள் என்று எடுத்து கொள்ளலாமா? மக்களே இந்த கொள்ளை அறிக்கையை பார்த்து எமார்ந்துவிடாதீர்கள், அப்புறம் அடுத்த ஐந்து ஆண்டிற்கு உங்கள் நிலங்கள் உங்கள் மனைவிகளுடன் சேர்த்து அபகரிக்க படும், கொள்ளை அமோகமாக தொடரும். மது விலக்கு என்று கள்ள சாராயம் திமுக குண்டர்களால் காய்ச்சப்படும். ஐயா கட்டுமரம், நேற்று ஜெயா படி படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறியது ஏமாற்று வேலை என்று கூறினீர்களே, அப்படி என்றால் மது விலக்கை தளர்த்தி ஒரு தலைமுறையை மதுவிற்கு அடிமையாக்கிய நீங்கள் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறினால் அதை நாங்கள் ஏமாற்று வேலை என்று எடுத்து கொள்ளலாமா? அன்று நிதி நெருக்கடிக்காகவும், கள்ள சாரயத்தால் மக்கள் செத்தார்கள் என்பதற்காக கனத்த மனதுடன் விருப்பம் இல்லாமல் மது விலக்கை தளர்த்தினேன் என்று நேற்று ஜெயா கேள்விக்கு பதில் கொடுத்தீர்கள், ஆனால் இப்போதும் நிதி நெருக்கடி, கள்ள சாராயம் மக்கள் சாகிறார்கள் என்று மறுபடியும் மது விலக்கை தளர்த்த மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? உங்கள் கடந்த கால வரலாறு அப்படி

  • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

    தேர்தல் அறிக்கை இல்லை. தள்ளுபடிகள் மூலம் மறைமுக கையூட்டு ஓட்டுக்கு. இதில் இலவசம் இல்லையென சபாஷ் வேறு. கல்விகடன் தள்ளுபடி, தறி மின்சார இலவசம், வேலை இல்லாதோருக்கு உதவிப்பணம், தாலி இதெல்லாம் இலவசமாக தெரியவில்லையா நிருபருக்கு? மதுவிலக்கு சட்டம்-எத்தனை சட்டங்கள் இவர்களுக்கு வளைந்து கொடுத்துள்ளன தப்பிக்க விட்டிருக்கின்றன?லோக் ஆயுக்தா-எவனாவது எதிர் கேள்வி கேட்டுட்டு ஊனமுராமல் இருக்க முடியுமா?விவசாயிகளின் கடன் தள்ளுபடி-உண்மையில் யார் பயன் பெறுவார்கள்?பாவப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயியா இல்லை அடி பொடி வட்டங்களா?மின் விண்ணப்பம் அனுமதி-இதெல்லாம் ஒரு அறிக்கையா?அரசாங்கம் வேறு எதற்கு பின்?நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம்-புதுவித கொள்ளைக்கு புதுவித அடித்தளம் அதற்கு வரிப்பணம்200 தடுப்பணைகள்-கட்டப்போவது யாராம்?பாதிக்கப்பட்ட ஏழை களும், விவசாயிகளும் கட்டுமானத்தில் பங்கு பெறலாமா? இல்லை வழக்கம் போல கடலில் மண் அல்லும் கும்பல் தான் கட்டுமா?வெள்ள தடுப்பு மேலாண்மை குழு-ஆக்கிரமிப்புக்கு அனுமதி வழங்கிடவா?தொழிற்சாலைகள் நிறைந்த நெடுஞ்சாலை-அருவா, உருட்டுக்கட்டை, கட்டபஞ்சாயத்து, ஆக்கிரமிப்பு தொழிற்சாலைகளா?கோவில் நிலங்களை பாதுகாக்க-நிஜமாவேவா?அந்த வகில யாரு சைமணா இருக்க போறாங்க? தேரோடும் வீதில கான்க்ரீட்-ஆகா அருமை. ஆனா தேர்தான் ஓட முடியாது. ஏனா வாசகர்களுக்கே தெரியும் பேருந்துகளில், ஜி.பி.எஸ்.-சூரிய குழும/கலைஞர் ஜி.பி.எஸ் வைபை' வசதி-'நமக்கு நாமே' திட்டம்-ஆமாம் தி.மு. க. அவங்களுக்கு அவங்க குடும்பத்துக்கு மட்டுமேயான திட்டம். மொத்தத்தில் 19ஆம் நூற்றாண்டுக்கான உப்புச்சப்பில்லாத அறிக்கை. இன்னொரு 5 வருடங்களுக்கு தமிழகத்தை குத்தகைக்கு எடுக்கும் அறிக்கை.

  • S. Ruban - Al Khobar,சவுதி அரேபியா

    சபாஷ் தி.மு.க.விடம் மாற்றம் தெரிகிறது. வெற்றி பெற வாழ்த்துகள்.

  • rakalai - helsinki,பின்லாந்து

    கைபேசி தரப்படும்.. இது இலவசம் இல்லையா? சபாஷ்ன்னு தலைப்பு வேற குடுத்துடீங்க?

  • majbouth - kampalaa,உகான்டா

    அப்பாடா அண்டபுளுகினி ஆகாசபுளுகினி என்று சொல்லுவார்களே அதுதானா இது ....நான் கூட என்னோமொன்னு நினச்சேன் ...

  • Kumar - Chennai,இந்தியா

    இதுக்கெல்லாம் தேவைப்படும் பணத்தை எங்கேயிருந்து புரட்டுவார்களாம்? திட்டங்கள் பெரிதல்ல இப்போது. செயல்படுத்த ஆதாரம் எங்கிருந்து வரும் என்று சொல்லிவிடலாமே

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    அம்மா அவர்கள், தான் கடந்த முறை அறிவித்த அனைத்து அறிவிப்புக்களையும் 100 சதவீதம் நிறை வெற்றி விட்டேன் என்று கூறி விட்டார். இனி என்ன கிளம்ப வேண்டியது தானே. அவர் கூறியது சரியானால், மின்மிகு மாநிலம் மட்டுமா, கடனில் தத்தளித்த தமிழகத்தை மீட்டு ஒரு 10 லட்சம் கோடியை அதிகமாக சேர்த்து வைத்திருப்பார் அரசு கஜானாவில். இனி என்ன கலைஞர் வர வேண்டியதுதான் அள்ளி அள்ளித் தர வேண்டியதுதான். இனி இவர் பொன்மனச் செம்மலுக்கு பல படி மேலாக, வைரச் செம்மலாக ஜோளிக்கத்தான் போகிறார். நாம் அனைவரும் மகிழத்தான் போகிறோம்/// எ கைப்புள்ள தட்டி எழுப்பாத, நா தூங்கிக்கிட்டு இருக்க.

  • Murugadoss - Nevada,யூ.எஸ்.ஏ

    இவை அனைத்தையும் கனவில் நிறைவேற்றுவார்கள்...காசா பணமா சொல்லி வெப்போம்...வந்தா தானே

  • Loganathan - Madurai,இந்தியா

    இலவசத்திற்கு மாறாக சலுகைகள்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மிகவும் தெளிவாக சிந்தித்து அடிப்படை முதல் நவீன நுட்பம் வரை முக்கியத்துவம் தந்து தயாரிக்கப் பட்டிருக்கிறது. அவசரச் செய்தியாக முன்னர் தினமலர் தந்ததில் இவ்வளவு சிறப்புகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. நிறைவான அறிக்கையாக உள்ளது. செயல் படுத்தினால் தமிழகம் தலை நிமிரும். பொற்கால ஆட்சிக்கு வித்திட்டது போல் ஆகும். ஆனால் இது எப்படி செயல் படுத்துவது. நாலு லட்சம் கோடிக்கும் குறைவில்லாமல் நிதிச்சுமை உள்ளது என்று தலைவர் தானே கூறினார். நம்புவோம் எப்படியோ சமாளித்து விடுவார்கள் என்று. நல்ல அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள அருமையான அறிக்கை. இம்முறை இதுதான் ஹீரோயின்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    மீனவர்களை பழங்குடியினர் இனத்தில் சேர்த்து, அவர்களின் கோட்டாவை நாசமாக்குவது தவறு. லோக் ஆயுக்தா, மது விலக்கு, 200 தடுப்பணைகள், சேவை வாரியம் போன்றவை நிஜமாலுமே பாராட்டத்தக்க திட்டங்கள். உண்மையில், ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தால், திமுக நல்ல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிகிறது. மக்களை நேரடியாக சந்திப்பது இதற்கு தான் என்று தெரிகிறது. உண்மையில், பல நல்ல திட்டங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருப்பதால், திமுக மக்கள் நல கூட்டணிக்கு பலத்த போட்டியை கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில் அதிமுகவை சேர்க்க தேவை இல்லை. அதிமுகவை பொருத்தவரை, மது விற்பனை மற்றும் ஊழல் வேட்டையை அதிகரிப்பது, மேலும் ஓவ்வொரு ஊரிலும் உள்ள தியேட்டர்களை சசி குடும்பம் வாங்குவது போன்ற திட்டங்களே இருக்கும். அதனால், அதிமுகவை பற்றி தேர்தல் நேரத்தில் பேசவே தேவை இல்லை. இந்த முறை ஜெயாவின் தோல்வி பர்கூரின் தோல்வியை போன்று இருக்கும். மக்கள் நல கூட்டணிக்கு ஒட்டு போட வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உண்மையில் கவரும் வண்ணம் இருக்கிறது. திமுகவில் இப்போதைய ஒரே பிரச்சனை,ஒவ்வொரு ஊரிலும் உள்ள குறுநில மன்னர்கள் பொன்முடி, ஆற்காட்டார், திருச்சி நேரு, கருப்பசாமி, துறை முருகன், ராஜா, மாறன் போன்றோரின் கொட்டம் எப்போது அடக்கப்படும் என்று தெரியவில்லை. அது தான், திமுகவை எண்ணி பயப்பட வேண்டி உள்ளது.

  • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

    /// மிஷின், பிரிஜ் என, இலவசங்கள் இருக்கும் என, தகவல் பரவியதால், /// வதந்தியை பரவ விட்டதே இந்த தினமலர் தான்.. இப்போ மூக்குடைபட்டு ஆச்சரியமென்று வாயைப் பிளக்கிறது.

  • Mamallan - Chennai,இந்தியா

    வெகு காலத்திற்கு பிறகு ஒரு பாராட்ட படவேண்டிய அறிக்கை. நிதி மந்திரி அறிக்கை போல் உள்ளது. அனைத்தும் நிறைவேறக்கூடியவே

  • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

    விட்டுட்டாங்களா திமுக அவங்க தேர்தல் அறிக்கையை.. இப்போ பாரு, நம்ம 'மையப்படுத்தப்பட்ட ஊழலம்மாவோட' தேர்தல் அறிக்கையை.. சும்மா எறங்கி குத்த போறாங்க ஊழலம்மா.. டாஸ்மாக்-அம்மா.. டாஸ்மாக்-அம்மா.. ஒரு யோசனை.. பேசான திமுகவோட தேர்தல் அறிக்கையை அப்படியே நகலெடுத்து எல்லா அம்சங்களுக்கு பக்கத்துலயும் X 10 அதாவது 10 timesனு போட்டு அதிமுக தேர்தல் அறிக்கையா விட்டுடுங்க.. நேரம் மிச்சமாயிடும்.. ஓட்டுக்களையும் அள்ளிடலாம்..

  • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

    அய்யயோ 'டாஸ்மாக்-அம்மா'.. மோசம் போயிட்டோம்.. அவனுங்க எதோ கதாநாயகனை ஏறக்குவானுங்கனு பாத்தா, ஒரு சூப்பர் ஸ்டாரையே ஏறக்கிட்டானுங்கோ.... போச்சி..போச்சி.. உங்க ஆசையெல்லாம் வீணா போச்சி.. போங்க ஸ்டிக்கரம்மா... போய் சட்டுபுட்டுனு எதையாவது பண்ணுங்க..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement