Advertisement

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: சட்ட.சபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.


சென்னை ராயப்பேட்டையில் தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும் கூட்டணிக்கு அழைத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொளகிறேன். தேமுதிக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்த எவ்வித குழப்பமும் இலலை, தெளிவாகவே தேமுதிக உள்ளது. கட்சியை நடத்தி செல்வது குறித்த பாடம் கற்பிக்க வேண்டாம் எனவும் பேசினார்.

இந்த அறிவி்பபின் மூலம் தேமுதிக குறித்து நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. கூட்டணி குறித்த பரபபரப்பும் கொஞ்சம் அடங்கியுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (276)

 • sambathkumar - kumbakonam,இந்தியா

  என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பல பொதுமக்களுடைய பொதுவான தினமலர் வாசகர்களின் விருப்பத்தை கேப்டன் அவர்கள் தெளிவாக வெளி படுத்தி உள்ளார்....... விஜயகாந்தை தேவையற்று வசை பாடிய அவதூறு பேசி கேவலமாக பேசி பெட்டி வாங்குபவர் குடிகாரன் முடிவு எடுக்க தெரியாதவன் என்று இகழ்ந்த வாசகர்களும் தினமலரும் மன்னிப்பு கருத்தை வெளியிடுவார்களா? நான் அடித்து சொல்கிறேன், மக்கள் நல கூட்டணி விஜயகாந்துடன் வந்து இணையும்..இந்த கருத்தை முத்தரசனும் விஜயகாந்தும் வெளிபடுத்தி உள்ளனர்....வாசனை அதிமுக கண்டு கொள்ள இனி வாய்ப்பு இல்லை...எனவே அவருக்கும் வேறு வழி இல்லை... அவர் கேப்டனை தேடி வருவார்...சுப்ரீம் கோர்ட்டின் பிடி இருக்கும்போது கேப்டனின் தைரியத்திற்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு வரும்.... அதனை ஒரு கோடி இளைஞ்சர்கள் நிருபிப்பார்கள்.......

 • nagaraj - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் கேப்டன்... நடுநிலையாளர்களும் , மதுவை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுகின்றவர்களும் உங்களுக்கு முழுமையான ஆதரவை தருவார்கள்... வெற்றியோ தோல்வியோ ... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா (எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் )... நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்... உங்கள் துணிவுக்கும் நேர்மைக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

 • john - Chennai,இந்தியா

  கலைஞர் reaction - - - பழம் போச்சே...........

 • அஞ்சாசிங்கம் மருதுபாண்டி - இராமநாதபுரம்,இந்தியா

  கடந்த சட்டசபை தேர்தலில் வடிவேலுவை விட்டு விஜயகாந்த்தை கண்டபடி நாறடித்து பேச வைத்து அதனை தங்கள் டிவிக்களில் மீண்டும் மீண்டும் காண்பித்தார்கள். அப்போது அந்த டிவிக்களில், ஸ்டாலின் பிரச்சாரம் கூட இரண்டாம் இடம் பிடித்தது. வடிவேலு விஜயகாந்த்தை மகா மட்டமாக விமர்சித்தது தான் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்ப பட்டது . அந்த விடயத்தை விஜயகாந்த் மறக்கக்கூடாது . இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜயகாந்த்தின் மதிப்பும் , மரியாதையும் படு பாதாளத்திற்கு போய் விடும் .

 • janakiraman - chennai

  good decision

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  தேர்தலுக்குப்பிறகு இவரை தேடவேண்டிவரும், தேறுதல் சொல்ல.

 • Anu Mon - vellore

  success👊

 • kalyan - CHENNAI,இந்தியா

  ஏம்ப்பா..இங்கே கருத்து எழுதற யாருக்குமே ஒரு கலியாணப் பத்திரிக்கை கூட வரலியோ? அதான் எங்கேயும் போக வேலை இல்லாம மோட்டு வளையைப் பாத்துகிட்டு ஒக்காந்து உருப்படாக் கருத்து எழுதிக் குவிக்கறாங்க.. கொஞ்ச நாள் பேசாம இருங்கப்பா ... கன்னா பின்னான்னு டெவலப் ஆகப்போவுது காட்சிகள்.. அப்போ நீங்கல்லாம் மூஞ்சியை எங்கே கொண்டு வைப்பீங்க? போங்கப்பா.. போயி அக்கம் பக்கத்துக் கலியாணத்துக்கு மொய் எழுதிட்டு சாப்பிடுங்க.. வயிறாவது ரொம்பும்..

 • twodotzero - Singapore,சிங்கப்பூர்

  எதிர் பார்த்த ஒன்றுதான்.. அவர் ரொம்ப நாளாவே "கிங்" தானே சொல்லிக்கிட்டு இருக்காறு..... "கிங் மேக்கர்" ன்னு சொல்லலியே... இந்த மீடியாக்கள் தானே மக்களை ஒரு பரபரப்பாவே வச்சிருந்தது....இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா.....

 • Rajunadar Rangaraj - Erode,இந்தியா

  சரியான முடிவு கேப்டன்ஸ்டாலின் முதல்வராக கருணாநிதியை முன்னிறுத்தி பின்னர் ஆட்சியை கொடுத்து விடலாம் என்ற "பால் கனவு" பலிக்கவில்லை''''காவடி சுமந்தால் பத்து எம்,எல்,ஏ க்கள் கிடைக்கலா, ஜெயா அம்மையாராவது மோதல் வந்தபிறகு கட்சியை உடைத்து ஏழு சட்ட மன்ற உறுப்பினர்களை கபளீகரம் செய்தார் ஆனால் சாணக்யர் கருணாநிதி தேர்தல் முடிந்த கையேடு பேரம் பேசி எல்லா தேமுதிமு எம் எல்.ஏக்களையும் கபளீகரம் செய்து பின்னர் ஒரு எளிய அறிக்கையை துரைமுருகன் வாயிலாக வெளியிடலாம் நடிகர் கட்சி கரைந்ததற்கு நாங்கள் காரணமல்ல மனைவியும் மச்சானும் செங்கோல் ஆட்சி புரிவதால் அவர்கள் வெளியே வந்ததாக சொன்னார்கள் என்பார் ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்க உங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்த வாயால் இனி வசை பாடப்போகும் காட்சி வரபோகிறதுவிளம்பரம் மூலம் ஆட்சியை பிடிக்க கனவு கண்டார்கள்அதை தவிடு பொடியாக்கிய பெருமை விஜ்யகாந்த் -பிரேமலதா வுக்கு உண்டு இனி திமுக எங்களுக்கு நாங்களே திட்டம் தொடங்கலாம்

 • Bhaskaran - Thiruvallur

  நல்ல செய்தி. நன்றி

 • UDAYA - CHENNAI

  மக்களை மீண்டும் மங்குனி ஆக்கிவிட்டார். இது 2009 நாடளுமன்ற தேர்தல் பார்முளா,காங்கிரஸ்,திமுக விடம் கோடான கோடிகள் பெற்று தனியாக நின்று ஓட்டுகளை பிறிப்பது. நினைத்து பாருங்க மக்கா 2009ல் அஇஅதிமுக 11 நாடாளுமன்றம் இடங்களை வென்றது, மற்ற இடங்களில் 3000-9000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.2009-2014 2ஜி ஊழலுக்கு உதவியது விசயகாந்தின் தேமுதிக.

 • suresu - kallagam

  2016 தேர்தலில் மீண்டும் எதிர்கட்சிதலைவர் ஆகிறார். கட்டுமரம் காலாவதியாகிரார்.

 • Ragavendra - chennai,இந்தியா

  இந்த விஸ்கி காந்த இவ்ளோ நாள் மக்களை முட்டாள் ஆக்கி கடைசியாக அதுவும் முட்டாள் ஆகிவிட்டது மக்களே, இந்த( DMDK )குடும்ப அரசியலுக்கும் பழைய( DMK ) குடும்ப அரசியலுக்கும் முடிவு கட்டி வீட்டுல ஒக்கார வையுங்க நன்றி

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  மீண்டும் அம்மாவின் அராஜக ஆட்சிக்கு வழிசெய்துவிட்டார். எதையுமே தலைமை ஏற்று நடத்த தகுதியற்ற கேப்டன். கோபாலபுர அய்யாவிற்கு அடிசறுக்கி இருக்கும், ம.ந .கூ நிலைமை இன்னும் படும் மோசம். கடைசியில்கப்பலை கரை சேர்க்காமல் கவிழ்த்துவிட்டார் கேப்டன்.

 • Kanal - Chennai,இந்தியா

  மிக்க மகிழ்ச்சி...எங்கே இந்த சுமையை திமுக தூக்கிச் சுமக்க நேர்ந்துவிடுமோ என்று அஞ்சியவர்களுக்கு ஓர் ஆறுதல் அளிக்கும் செய்தி. திமுக காங்கிரஸ் முஸ்லீம் லீக் கூட்டணியே போதுமானது. வெற்றி இலக்கை எளிதில் அடையலாம். நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகின்றேன். நடிகருடன் கூட்டணி சேர்ந்தால் மெகா கூட்டணி என்ற இமேஜ் கிடைக்கமே ஒழிய அவர் கட்சியால் கூட்டணிக்கு பெரிதாக இலாபம் ஏதுமில்லை. அவர் கட்சிதான் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவார்கள். எனவே விஜயகாந்த் மீண்டும் தன் சொல்லில் மாறிவிடாமல் இருக்க வேண்டும். திமுகவினர் மற்றும் அதன் தலைவர்களுக்கு எனது வேண்டுகோள், கலைஞர் மற்றும் ஸ்டாலின் இருவரையும் முன்னிலப்படுத்தி பிரச்சாரத்தை வேகப்படுத்துங்கள். வெற்றி திமுக கூட்டணிக்கே

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  ஒருநாள் கூத்துக்கு மீசைய வெச்சான் மேடையிலே...Finally, just a bottle did everything ...

 • praj - Melbourn,ஆஸ்திரேலியா

  வாழ்த்துக்கள் விஜயகாந்த் அவர்களே..தமிழகத்தை சீரழித்த திமுக ,அதிமுக வை வீட்டுக்கு அனுப்ப நல்ல தருணத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார் .

 • mohan ramachandran - chennai,இந்தியா

  .இந்த முடிவால் பெரிதும் பாதிக்க போவது தி மு க .அது உறுதி .

 • sankar - trichy,இந்தியா

  ஒரு பெண் சிங்கம் தட்டு நிறைய வடையை தாயாரித்து கொண்டிருந்ததாம். அந்த வடையை எடுக்க நினைத்த நரி, ஒரு காக்கையை துணைக்கு கூபிட்டதாம்.வடையை எடுத்து நரியிடம் பங்கு போடுவதா எல்லா வேறு சில காக்கைகளின் துணயோடு வடை சாபிடுவதா.காட்டுக்கே ராசாவான மத்திய சிங்கத்துடன் பங்கு போடுவதா என்று எல்லோருடனும் தனி தனியாக பேச்சு நடத்தியதாம். இதற்கிடையே நரி நீ என்னுடன் சேர்ந்து வடை சாப்பிட வந்தால் உனக்கு ஒரு க்ளாஸ் பால் மற்றும் பழம் மற்றும் சில முந்திரி காடுகளும் தருகிறேன் என்றதாம். மத்திய சிங்கத்துடன் போனால் எதுவும் கிடைக்காது என்று நரி சொல்லியதாம். காக்கை இல்லாவிட்டால் தனக்கு வடை கிடைக்காது என்று நினைத்த நரி காக்கையின் முன் கதறி நடிததாம். மத்திய காட்டின் முன்னால் தீய சிங்கத்தையும் நரி தன்னுடன் சேர்த்து கொண்டது. அப்படியும் மசியாத காக்கை நானே தலைவன் என் தலைமையை ஏற்கும் மிருகங்குளுடன் சேர்ந்து வடை தின்பேன் என்றதாம். அசிங்க patta நரி மனமொடிந்து போனதாம். பெண் சிங்கம் கடை நடத்த தடை வராதா என்று நரியும் காககமும் காத்திருகிரதாம்

 • Tamilan - Tamil Nadu

  Good luck to DMK.

 • VOICE - CHENNAI,இந்தியா

  இந்த முடிவு எடுக்க இவளோ நாள் எதற்கு ? முதல் நாள் அறிவித்து இருந்தால் பாராட்டலாம். தே மு தி க கட்சியினர் தான் பாவம். தி மு க வோடு கூட்டணி என்றால் இவளோ நாள் கட்சிக்கு செலவு செய்த தொகை சம்பாதிக்கலாம் என்று நினைபவர்கள் வாயில் மண்ணு விழுந்தது. ஒரு பெரிய தொகை தனியாக வாங்கி அனுபவிக்கலாம் என்று நினைத்தாரோ இல்லை எந்த கட்சிக்கும் மெஜோரிட்டி இல்லை என்றல் அப்போதும் பேரம் பேசலாம் என்று நினைக்கலாம். அனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவருக்கு ஒட்டு போடுவதும் ஒன்றுதான் நோட்ட போடுவதும் ஒன்றுதான் நமக்கு ஒன்றும் ஆக போவது இல்லை. அவர் கட்சியில் இருபவர்கலே அவருக்கு ஒட்டு போடுவர்கள என்று தேர்தல் முடிவு வந்தால் தெரியும். AIADMK அல்லது dmk முழு மஜொரிட்யொடு வந்தால் இவர் கட்சி அதோ கதி தான் வரும் காலங்களில்.

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  தேமுதிக இல்லா திமுக கூட்டனி உருவாக வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறியது ....2014 பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என சொல்லி....பின்னர் பாஜக கூட்டனியில் இணைந்தது போல் ...தற்போதைய தேமுதிகவின் நிலை மாற கூடாது ....உடனடியாக திமுக தன் தேர்தல் பணிகளை துவங்க வேண்டும்....கூட்டனியே பலம் என்ற மாயையை உடைக்க திமுகவிற்கு சரியான தருணம் இது....நான் முன்னரே சொன்னது போல்....வரும் தேர்தலில் திமுக வென்று....அம்மையாரால் சமாதியாக்கப்பட்ட தேமுதிகவை ....தடம் இல்லாமல் தமிழக அரசியல் வரலாற்றில் இருந்து அகற்ற வேண்டும்....

 • sankar - trichy,இந்தியா

  எந்தவொரு தகுதியும் இல்லாத விஜகாந்த் கூட்டணி அமைக்கிறேன் என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு இன்று பிரபலமாகி விட்டார். திமுக நமக்கு நாமே என்று ஆப்பை சொருகி கொண்டு விட்டது .

 • saas - Hartford CT

  நல்ல முடிவு கேப்டன்

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  சபாஷ் சரியான முடிவு. அழைத்தவர் அனைவருக்கும் நன்றி

 • Dhanapal - Ariylur,இந்தியா

  இந்த முடிவு தே மு தி க தற்கொலை க்கு சமம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பழம் விழாத ஏக்கத்தில் பைங்கிளியே, பாலும் புளித்ததடி ...... தேனும் கசந்ததடி .... ( கோல்மால்புரத்தில் இருந்து ஒரு சோக கீதம் ) .....

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  குடிகாரன் பேச்ச நம்பலாமா............?

 • Gnanasekar Nagu - தமிழ் நாடு,இந்தியா

  விஜயகாந்திற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஒன்று மக்கள் நல கூட்டனி, மற்றோன்று தனித்து நிற்பது, பரவாயில்லை பத்தோடு பதினொன்று என்றில்லாமல் தனித்து நிற்பது, இவரின் அரசியல் முதிர்ச்சியை தெளிவுபடுத்துகிறது. நிச்சியம் இவருக்கு 30 முதல் 35 சீட்டுகள் கிடைக்கும். சரியான திட்டமிடலுடன் பிரச்சாரம் செய்தால் இந்த எண்ணிக்கை நிச்சியமாக கூடும். மக்கள் அனைவரும் அதிமுக, திமுக அனுதாபிகள் தவிர்த்து மீதம் உள்ள அனைவரும் ஒரு மாற்று அரசியலைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த விதத்தில் பார்க்கும் போது, நடு நிலையாளர்களின் ஓட்டுக்கள் விஜயகாந்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வாக்குகள் வெற்றி பெற உதவவில்லை என்றாலும் கட்சியின் வாக்கு சதவீதத்தை நிச்சயம் உயர்த்தும் என்றே நம்புகிறேன்...பிரசார கூட்டங்களில் முடிந்தவரை குறைவாக பேசி, பிரேமலதாவை பேச வைக்கலாம், ஒரு பெண் என்கிற வகையில் ஜெயலலிதாவுக்கு மாற்றாகவும் மக்கள் சிந்திக்க கூடும்... முடிந்தவரை தனிமனித தாக்குதலை தவிர்த்து மின் வாரிய ஊழல், மதுவிலக்கு, புதிய தொழிற்சாலை இல்லாமை, அரசு இயந்திரம் செயல்படாமை போன்றவற்றை ஆதாரத்தின் அடிப்படையில் பேசலாம், தேமுதிக கூடுதல் கவணத்தை அதிமுகவின் வைக்க வேண்டும், திமுகவிற்கு குறைந்த பட்ச கவணம் கொடுத்தால் போதும் மக்கள் இன்னும் அந்தளவிற்கு அதிருபதியில் தான் இருக்கின்றனர். எப்படியும் திமுக, அதிமுக பெரும்பாண்மை பெற போவதில்லை தேதர்தல் முடிவுக்கு பின் கூட்டனிக்கான வாய்ப்பு இருக்கிறது, விஜயகாந்திற்கு நேரம் கூடி வந்திருக்கு, கொஞ்சம் கடினமான முடிவாக தெரிந்தாலும் அதிமுக, திமுக விற்கு மாற்றுகட்சி என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.... வாழ்த்துகள் விஜயகாந்த்

 • John Samuel - Tuticorin,இந்தியா

  அரசாங்கம் 23,40,000 சம்பாதிக்கும். அனைத்து தேதிமுக வேட்பாளர்களும் டெபொசிட் இழப்பார்கள்.

 • Baski - Chennai,இந்தியா

  ஓட்டுகள் சிதறும்... யார் குறைவான வெறுப்பை பெற்றுள்ளார்களோ அவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள். கேப்டன் ஜாக் ஸ்பெரா காணாமல் போவார்.

 • Muthusamypillai Dhandapani - DINDIGUL ,இந்தியா

  தே மு தி க கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மார்ஜினல் வோட் எனப்படும் 25000 முதல் 30000 ஓட்டுகளே உள்ளன. ஆனால், 120 முதல் 130 தொகுதிகளின் வெற்றி தோல்வி வோட் வித்தியாசமானது இந்த 25000 முதல் 30000 வோட் வித்தியசத்தில்தான் இருக்கிறது. எனவே, பலமான வோட் வங்கியை கொண்ட அ தி மு க மற்றும் தி மு க ஆகிய கட்சிகள் எதாவது ஒன்றோடு கூட்டணி அமைக்கும் பொழுது இந்த மார்ஜினல் வோட் வங்கியே இந்த 120 முதல் 130 தொகுதிகளின் வெற்றியை தீர்மானித்து விடுகிறது. தனித்து நின்றால் எந்த பயனும் இல்லை. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா வேண்டுமானால் தங்களுக்குள்ள ஸ்டார் அந்தஸ்து கொண்டு ஜெயிக்கலாம். இந்த உண்மை தெரிவதால் தே மு தி க வேட்பாளர்கள் செலவு செய்வதில் தயக்கம் கட்டுவார்கள். புதிய இளைய வாக்காளர்கள் மத்தியில் அ தி மு க தலைவி தனது கட்சிகாரர்கள் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தாலும் தவறு செய்தால் உடன் தண்டிப்பது ஓர் சூப்பர் ஹீரோயின் அந்தஸ்தை உருவாக்கி உள்ளதை பரவலாக அறிய முடிகிறது. எனவே, அ தி மு க வெற்றி திண்ணம். மீண்டும் திமுக எதிர் கட்சி அந்தஸ்தை பிடிக்கும்.

 • Sooriya Narayana Moorthy Thiyagarajan - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  தனிப்பட்ட முறையில் இது ஒரு நல்ல முடிவு. தி. மு.க. வுடன் சேர்ந்தால் முதலுக்கே மோசம். மக்கள் நல கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக + பூஜ்யம் = தேமுதிக. பாஜகவோ கடந்த 2 வருடங்களாக கண்டுகொள்ளாமல் திடீர் ஞானோதயத்துடன் கூட்டணிக்கு முயற்சி. அதனால் தனித்தன்மை இழக்கும் அபாயம். ஆக மொத்தம் இது சரியான முடிவாகவே பார்க்கிறேன். விளைவுகள்.... அதிமுக மீண்டும் பதவியை பிடிக்கலாம் ( வழக்கு சாதகமாக வந்தால் ). திமுக 30-40 இடங்கள் பெற்று 2ம் இடம் பெறலாம். கட்டு மரம் மீண்டும் ஒரு முறை தரம் கெட்ட தமிழன், இனமானம் காக்க தவறிய காட்டுமிராண்டி என திட்டிவிட்டு இது தான் தன் ஜாதகம் என ஒருமுறை சோகம் கொட்டி தீர்க்கலாம்.தேமுதிக 8-10 இடம் பெற்று 3 ம் இடம் பிடிக்கலாம். பாஜக இனி அடுத்தவர் தோளில் சவாரி செய்ய முடியாது என்று உணர்ந்து முனைப்பு காட்டி 4-5 இடங்கள் பெறலாம். மக்கள் நல கூட்டணி நன்றாக ஊர் சுற்றி பார்க்கலாம். நாம் தமிழர் கட்சி அவர்களை விட ஓரிரு வாக்குகள் அதிகம் பெற்றதாக கூறி "வீர" முழக்கம் இடலாம். வாசன் கட்சி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு செய்து காங்கிரஸ்சில் இணையலாம். மக்கள் இன்னும் ஒரு 5 வருடங்கள் ஸ்டிக்கர், கிரைண்டர் மிக்சி என காலம் ஓட்டலாம். காலம் மீண்டும் ஒரு முறை அடிப்படை கட்டுமான வசதி இல்லாத தமிழகத்தை கண்டு மீண்டும் ஒரு முறை தன் சுயரூபத்தை காட்டலாம். திராவிட கட்சிகளின் மாய பேச்சில் மதியிழந்து காமராஜரையும், பக்தவத்சலத்தையும் நிராகரித்த தமிழகம் தன் தவறை உணர்ந்து மற்றொரு 5 வருடம் தண்டனை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை.இனி எல்லாம் சுகமே.

 • Jay - Bhavani,இந்தியா

  Not a bad decision good for DMDK in the long run. திமுக தற்போது தோற்பது உறுதி. திமுகாவுடன் கூட்டணி என்றால் திமுக வெற்றி பெற்றாலும் திமுக + காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். விஜயகாந்துக்கு பெரிய பலன் இருக்காது. திமுக தோற்றால் கட்சி அழியும் நிலைக்கு போகும். தேமுதிக இரண்டாவதாக வரலாம். அம்மா சிறை செல்லும் வாய்ப்பு மற்றும் அவர் உடல் நிலை கருத்தில் கொண்டு, அவர் முதலாவதாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

 • Gopalakrishnan Ra - Madurai,இந்தியா

  உண்மையில் துணிச்சலான கட்சிகள் தமிழகத்தில் இரெண்டே இரண்டு. ஒன்று அம்மா.அடுத்து ராமதாஸ் அன்புமணி.இவர்கள் இருவரும் தனித்து நிற்க தயார்.மற்றவர்கள் அப்படியல்ல. நாம் எல்லோரும் வெகு கவனமாக இந்த கூட்டணி கூத்துகளை கவனித்து வருகிறோம். விஜயகாந்த் எல்லா கட்சிகளுடனும் பேரம் பேசினார். ஏகப்பட்ட கோரிக்கைகைகளை முன்வைத்தார்.தி மு க வேறு வழியில்லாமல் தான் கேட்ட எல்லா கோரிக்கைகளையும் ஏற்கும் என்று நினைத்தார்.அது நடக்கவில்லை.அதனால் தனித்து போட்டி என்கிறார். என்னை பொருத்தமட்டில் இதுவும்கூட பேரத்தின் யுக்தியே.இன்னும் பேரம் முடியவில்லை. தொடரும். தி மு கவுக்கு தண்ணீர் காட்டுகிறார். பொறுத்திருந்து பாருங்கள்.

 • உண்மை நண்பா - riyadh,சவுதி அரேபியா

  நிச்சயம் அதிமுக விடம் பணம் வாங்கி கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறது தேமுதிக.................. குறைந்த பட்சம் மக்கள் நல கூட்டநியுடனாவது கூட்டணி அமைத்திருக்கலாம் இப்படி எல்லோரும் தனி தனியாக நிற்பதால் ஜே வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

 • Dharani Vasan B S - Mel arasampattu,Vellore-Dt,இந்தியா

  தி மு க எந்த நடிகரையும் நம்பி இல்லை மக்களை நம்பி தான் சேவை செய்து வருகிறது தி மு க தலைமையில் ஆட்சி உறுதி.

 • Pandiyan - Salem ,இந்தியா

  My respect towards Mr Vijaykanth has increased.I will proudly vote him because of his bold attitude and clean in politics 👏👍

 • ராமச்சந்திரன் குருசாமிபான்டியன் - chennai,இந்தியா

  என்னம்மா நீங்க இப்படி பண்ணிடிங்கலேமா

 • jagan - Chennai,இந்தியா

  பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது...

 • g t mani - Manama,பஹ்ரைன்

  தி மு காவின் வெற்றி உறுதி. நன்றி விஜய காந்த் அவர்களே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உளவு துறைக்கு கிடைத்த வெற்றி

 • g t mani - Manama,பஹ்ரைன்

  தி மு கவிற்கு நல்ல காலம். அதனால்தான் விஜய காந்த் இந்த முடிவு எடுத்து இருக்கார். தி மு காவின் வெற்றி நிச்சயம்

 • jagan - Chennai,இந்தியா

  சூப்பர் ....தி மு க விற்கு சங்கு தான்.....ஜெயாவிற்கு எந்த கூட்டணியும் தேவையில்லை...

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  ஆப்பரேஷன் சக்சஸு.. ஆனா பேஷண்டு டைய்டு.,

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  இவரு ஆப்பு வச்சாரா இல்லே, டீப்பா வச்சிக்கிட்டாரான்னு தெரியல்லை.. போன முறை தேர்தலுக்கு பிறகு தான் கட்சி தாவினார்கள். இப்போ தேர்தலுக்கு முன்பே தாவப் போகிறாரக்ள்..

 • கொங்குநாடு - பொள்ளாச்சி,இந்தியா

  பணம் செலவு செய்து தோற்கும் கட்சி காரர்களை நினைத்து பாருங்கள் கட்சி உடையும் பாதி பேர் அங்கியும் இங்கையும் சென்று விடுவார்கள்

 • pothujanam - abudhabi

  திமுக-உூழல் , அதிமுக ஆட்சி வெறுப்பு ஆகியவற்றால் மாற்று வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகிறது. இந்த தருணத்தில் முதலாவதாக வரமுடியாவிட்டாலும் இரண்டாவது பெரிய கட்சியாக மாற மற்ற கட்சிகள் முடிவெடுத்து இருப்பதாக தோன்றுகிறது. ஆகவே வி காந்தும் இரண்டாவது இடத்தை பிடிக்க தனது தலைமையில் மற்ற கட்சிகளை சேர்க்க முடிவெடுத்திருக்கிறார். இதை தொலை நோக்கு முடிவாக கருதுகிறேன். ம.ந.கூ மற்றும் பாஜக அவரை ஆதரித்து தலைமை பொறுப்பை கொடுத்தால் அவர்கள் சேர வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் தனித்தே போட்டியிடுவார்.

 • இளமுருகு - கோவை

  மிகத் துணிச்சலான முடிவு. கருணாவுடன் சேர்ந்தால், தி்முகவுக்குத்தான் லாபம். சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா உள்ளே சென்றால், முரசு ஒலிக்கும்...

 • Anand Banu - Dammam,சவுதி அரேபியா

  சபாஷ்சரியானமுடிவுதமிழகத்திற்குமீண்டும்ம்மாவாள்நல்லகாலம்பிறக்கபோகிறது

 • இரா. கண.ணன் - madurai

  கேப்டன் Super முடிவு உங்களுக்கு தழிழ் மக்களின் மேல் அக்கரை இருக்கு

 • Indiya Tamilan - Madurai,இந்தியா

  வரவேற்க வேண்டிய இந்த முடிவு தேமுதிகவின் எதிர்காலத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும். இந்த தேர்தலில் ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த் திமுகவுடன் சேர்ந்திருந்தால் நிச்சயம் வீழ்த்தி இருக்கலாம் ஆனால் விஜயகாந்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டு தேமுதிகவின் எதிர்காலம் கேள்வி குறி ஆகி இருக்கும்.அவர் தனது கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு சரிதான். என்ன ஜெயலலிதா ஜெயிப்பதற்கு/கருணாநிதி தோற்ப்பதற்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

 • adalarasan - chennai,இந்தியா

  இவருடிய பேச்சு. பிறகு, இவருடைய மனைவியின் பேச்சை, வூடகங்களில், கான்பிததிளிருந்து, தெளிவாக புரிவது என்னவென்றால்= 1]தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. 2]அ.தி.மு.கா.வுடன் கிடையாது என்று முன்பே அறிவி‌த்தாகிவிட்டது . 3] வேறு எந்த கட்சிகலாவது இவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டால்,[கிங்காக], அவர்களை வரவேற்போம்? இப்பொழுது, பா.ஜ.க., மற்ற,ம,து,தி.மு.க.,விடுதலைக்கட்சி என்ன செய்கிறது என்ர்று பொருத்துபார்க்கவேண்டும்?

 • selva - chennai,இந்தியா

  சூப்பர் தலைவ , அன்னுடாய ஓட்டு உனக்குதான்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இது வாங்கிபுட்டு எடுத்தமுடிவு . நல்ல தொகை போயஸ் தோட்டம் கொடுத்து அடிக்கிறது மாதிரி அடித்து பணத்தால் அரவணைதுள்ளார். பாவம் தொண்டர்கள் பால் சோம்பு இல்லாமல் வருத்தபடுவார்கள்

 • sabapathi57 - Chennai,இந்தியா

  I don't understand why Vijaykanth preferred People's Welfare Front. Now chances are bright for AIADMK

 • V.ANNADURAI B.A.B.L., - SALEM,இந்தியா

  it is not decision by the party party of dmdk.. it is pure decision of mrs.pramalatha.. she think for her future and take the dicision..fine .. all the best to her.. so, dmdk, pmk are dont focus this election.. they plan for their next opportunity.. who know wat happened in future.. my feel and hope is the fight between dmk and admk starts.. this election they only stand.. let us wait for more political drama..

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பழம் நழுவி யாருக்கும் உபயோக படாமல் மண்ணில் விழுந்து விட்டது. தே மு தி க வின் கதி 2016 தேர்தல் முடிவிற்கு பிறகு அதோகதி தான் .

 • Ramaswamy - tirupur

  வரவேற்கிறோம் வருங்கால தமிழகமே

 • K.Sugavanam - Salem,இந்தியா

  எங்க போயிட்டீங்கோ சாமி..ஆளையே காங்கலையே..

 • Raman - Lemuria,இந்தியா

  ஜே ஜே சிறைக்கு அனுப்பபடுவார் என்று நீதித்துறையை நம்பி பெட்டு கட்டுகிறார்

 • V.ANNADURAI B.A.B.L., - SALEM,இந்தியா

  it is not decision by the party party of dmdk.. it is pure decision of mrs.pramalatha.. she think for her future and take the dicision..fine .. all the best to her.. so, dmdk, pmk are dont focus this election.. they plan for their next opportunity.. who know wat happened in future.. my feel and hope is the fight between dmk and admk starts.. this election they only stand.. let us wait for more political drama..

 • Manikandan - Chennai

  Super....

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  இசுடாலினும் குசுப்புவும் போதும். இருவரும், 234 தொகுதிகளிலும் இனைந்து அர்த நாரீஸ்வரர் மாதிரி பிரசாரம் செய்தால்,234 இலும் வெற்றி உறுதி . பற்றாக்குறைக்கு உளருவாயரையும் நக்குமாவையும் அழைத்து கொண்டு போனால் , ஒருவருக்கும் டெபாசிட் கிடைக்காது . கூட்டு கொல்லைக்கும் குறைவு இருக்காது .

 • Dhivakar V - ERODE,இந்தியா

  ஒரு சிறந்த தலைவன் என்பதை விஜயகாந்த் அவர்கள் நிருபித்து விட்டார். தமிழன் என்பதற்கு பெருமையாக உள்ளது. பணத்திற்காக விலை போய் விட்டார் என்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் சவுக்கடி கொடுத்துள்ளார் என்பதே உண்மை. இனியும் தி மு க மற்றும் அ தி மு க என்று இல்லாமல் மாற்று அரசியல் தமிழகத்துக்கு தேவை. 234 தொகுதிகளில் வெற்றி பெறா விட்டாலும் பரவாயில்லை. தனது கட்சிக்காக தைரியமான முடிவை எடுத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி...

 • Manikandan - Chennai

  அம்மாவின் வெற்றி உறுதி செய்யபட்டு விட்டது நன்றி கேப்டன்.....

 • kannamma - Coimbatore,இந்தியா

  விஜய் காந்த் எதோ துணிச்சலாக முடிவு எடுத்தது போல் பேசுகிறீர்கள் 8 சத வீதம் ஒட்டு மட்டும் வைத்துக் கொண்டு நானே முதல் மந்திரியாக இருப்பேன் என்று முட்டாள் தனமாக சொல்லி வந்தார் துணை முதல்வர் பதவி : 4 அல்லது 5 மேயர்கள் என்றெல்லாம் பேரம் பேசி முடியாததால் ,... வேறு வழி இல்லாமல் தனித்து போட்டி என்று முடிவு எடுத்துள்ளார். இது ஒன்றும் துநிக்காளின் பேரில் எடுத்தது அல்ல : எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை: உனக்கு (தி.மு.க) இரண்டு கண்ணும் போகட்டும் என்று தி.மு.க தலைமையின் பேரில் கொண்ட கோபத்தில் , தன் பேரம் படியவில்லையே என்ற ஆத்திரத்தில் எடுத்த முடிவு 2 மாதமாக பல் வேறு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுதானே இருந்தார்? மக்கள் நலக் கூட்டனியிடம் இருந்து விலகி எதற்காக தி.மு.க விடம் கூட்டனி பேசினார்? எல்லாம் பேரம் படியத்தானே?? இரண்டு பேருக்கும் பொது எதிரி ஜெயலலிதாவை வீழ்த்த ,' தி.முக படிந்து வரட்டுமே கேட்ட பேரத்தை தரட்டுமே" என்று விஜயகாந்தும் .. " அவருக்கும் ஜெயலலிதா எதிரிதானே ? அவர்தான் பேரத்தை குறைத்துக் கொண்டு வரட்டுமே ? " என்று கருணாநிதி யும் நினைத்ததின் விளைவு தான் இந்த கூட்டணி பேச்சு முறிவுக்கு காரணம் இது எல்லாமே நம் பார்வையில் படுமாறு நமக்கு தெள்ளத் தெளிவாக புரியுமாறு நடந்த விஷயம் தானே இதில் என்னவோ விஜய் காந்த் என்னவோ மானஸ்தன் மாதிரியும் .. தனித்து நிற்கும் தைரியம் உள்ளவர் மாதிரியும் , வீராதி வீரர் சூராதி சூரர் என்றும் கருத்து வருகிறதே?? தான் டிபாசிட் இழந்தாலும் பரவாயில்லை தி.மு.க ஜெயிக்கக் கூடாது. என்பது மட்டுமே அவர் தனித்து நிற்கக் காரணம் . இனி என்ன? ஜெயாவுக்கும் அவரின் அடிமை மந்திரி கூட்டத்திற்கும் அடித்தது யோகம்

 • aravind - chennai,இந்தியா

  யார் கிங் ஆகா போறாங்க, அம்மா, கலைஞர், ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி, பிஜேபி கட்சி, மக்கள் நல கூட்டணி, எனக்கு தெரிஞ்சு பிரணாப் முகர்ஜிதான் ஆகபோகிறார், குடியரசு ஆட்சிதான். யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் அசிங்க படபோகிரார்கள். அதையும் பார்க்கலாம்.... ஹாஹாஹா

 • Ramesh Kumar - Chennai,இந்தியா

  நல்ல முடிவு ..வரவேற்ப்போம்

 • Krish - Madurai,இந்தியா

  இவர் தனக்கு கிடைத்த எதிர்கட்சி தலைவர் பதவியை சரியாக பயன்படுத்த வில்லை. பிறகு எப்படி மக்கள் இவரை நம்புவார்கள்.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  நல்ல துணிச்சலான முடிவு. ஜெயிக்க முடியா விட்டாலும் வாக்கு வங்கி பழைய படி 8% க்கு எகிற வாய்ப்பு உண்டு. பல விதமான அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் தனித்து போட்டி என்று அறிவித்திருப்பதில் இருந்து அரசியலில் தாக்கு பிடிக்கும் சக்தி உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார். மெல்ல மெல்ல திமுக இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. திமுகவை ஒழித்து கட்டியதில் மகிழ்ச்சி.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  சந்தோசம் தாங்கலையே கலைஞர் நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு பால் பழம் என கதை விட்டார் இப்போது கேப்டன் ரெண்டையும் சாக்கடையில் ஊற்றிவிட்டார்

 • mindum vasantham - madurai,இந்தியா

  எனது வோட்டு வீரமிகு விஜய்கந்திர்க்கே , இனி ஒரு பய மாட்டு தரகர் போல் செயல் படுகிறார் என்று சொல்ல முடியாது , விஜயகாந்தின் பேச்சு சரியில்லை என்று கூறுகின்றனர் , காமராஜர் கூட தான் சரளமாக பேச மாட்டார் , ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து பிரேமலதா பேசுகிறாரே , ஒரே மேடையில் பிரேமலதா , stalin , jayalalitha மூவரையும் pesavittaal theriyum ......... மக்கள் நல கூட்டணி என்று சொல்லி அழகிரியை vaiko சந்திப்பது எதற்கு என்ன மக்கள் நலம் இருக்கு சந்திப்பில் , போன முறையே விஜயகாந்த் அழகிரியை சந்திக்கவில்லை , பிஜேபி யின் வானதி சீனிவாசன் ஒருமுறை சொன்னபடி விஜயகாந்த் கூட்டணியில் உறுதியாக இருந்தார் மற்றவர்கள் தான் தடுமாறினார் லோக்சபா தேர்தலில் காணொளியை youtube இல் பாருங்கள், எல்லோருக்கும் உழைத்து விஜயகாந்த் avarkale ................. விஜயகாந்த் பல திட்டங்களையும் தமிழகதிற்கு அறிவுறுத்தியுள்ளார் , நட்டு பற்றும் உள்ளவர் , அவரது எண்ணம் போல் உயர வாழ்த்துக்கள் . மாட்டு தரகர் ஆக யார் செயல்பட்டார்கள் என்ற உண்மையை மக்களிடம் கூறலாம், வீரன் டா, அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்று குழப்புபவர் அல்ல .

 • bairava - madurai,இந்தியா

  இப்போதுள்ள மக்களின் நிலைமை வைத்து புரிந்து செயல்பட்டிருக்கிறார் கிங்க்பிஷர் விஜயராஜ் வாழ்த்துக்கள் கடந்த நாடாளுமன்றத்தில் குறைந்த வாக்கு சதவீதம் மீண்டும் கூடும் 5-10 சீட்டுகள் கிடைக்கும் என்பது உறுதி நன்றி தி மு க அழிவு உறுதி செய்யப்பட்டது மு க செய்த தவறு மீண்டும் துரோகத்தின் உச்சம் காங்கிரஸ் கூட்டணியே ஆகவே கேப்டன் சேரவில்லை என்பது உண்மை

 • abu lukmaan - trichy,இந்தியா

  ஒன்லி recall - அரசியல் கனிந்தது பழம் பாலில் விழும் தே.மு.தி.க., குறித்து கருணாநிதி பதில்... விஜயகாந்தை கும்மனும் என்று தான் எல்லா கச்சிகளும் கூட்டனிக்கு கூப்பிடுகின்றன . விஜயகாந்த் தனித்து போட்டி இடுவார். எல்லோரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் . 09-மார்-2016 14:23:30 ஈஸ்ட்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எனக்கு இப்பவே கருணா க்ரூப்பு தோத்த மாறி செம சந்தோஷம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எனக்கு சந்தோசத்தில கை கால் புரியல. சரியான சாணி அடி. தி.மு.க காரனுக எல்லாம் முக்காடு போட்டுட்டு ஓடனும் அசிங்கத்தில.

 • chezhinarmy - Palani,இந்தியா

  சரியான தருணத்தில், சரியான முடிவு கேப்டன், 18 முதல் 30 வயதுள்ள அனைவரின் வாக்குகளும் உங்களுக்கே. வெற்றி நிச்சயம்,

 • thangapani - srivilliputhur,இந்தியா

  நல்ல முடிவு ஆனால் admk தான் ஜெயிக்கும்

 • RGK - Dharapuram,இந்தியா

  இது ஒரு தைரியமான முடிவு. தி மு கா விற்கு சங்குதான் . 234 தொகுதிகளில் போட்டியிடாமல் தேர்ந்து எடுத்து நறுக்குன்னு 100 தொகுதிகளில் போட்டியிட்டு கடுமையாக உழைத்தால் நிச்சயம் 30-40 சீட் நிச்சயம்

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  பாஜக, பாமக, தமாகா, சரத், மற்றும் சில சிறிய கட்சிகள் கூட்டணி.......அன்புமணி தலைமை....

 • RGK - Dharapuram,இந்தியா

  இது ஒரு தைரியமான முடிவு. தி மு கா விற்கு சங்குதான்

 • sundaram - Kuwait,குவைத்

  ஏனுஙக, நாளைக்கு காலைல பேப்பர்ல, யாரு சொன்னா, நான் சொல்லவேயில்லையே, அப்படீன்னு மறுப்பு அறிக்கை விடமாட்டீங்களே.

 • thiyagu - tirupur

  பணத்துக்காக மற்றும் பிழைப்புக்காக திமுக வுடண் சேராமல் தணித்து போட்டி...........திமுக இணி தேராது.....5 ம் இடம் கிடைக்கும்.....வாழ்த்துககள் கேப்டண்...நல்ல முடிவு.....Captan kappal ku tha thevai karunavuku alla ......ha ha ha

 • sundaram - Kuwait,குவைத்

  பாமக பாஜகவுடன் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்

 • Pandian - Boston,யூ.எஸ்.ஏ

  விஜயகாந்த் அவர்களே உங்களை போன்ற தைரியமான ஆண்மகனை நீண்ட நாட்கள் கழித்து இந்த தமிழகம் காண்கிறது. உங்கள் வீரம் துணிச்சலுக்கு மக்கள் நல்ல பரிசு தருவார்கள் இந்த தேர்தலில் , தமிழக அரசியல் வரலாற்றில் உங்களுக்கு என்றும் ஒரு இடம் உண்டு . உங்கள் துணிச்சல் நினைத்து தமிழ் மக்கள் பெருமை கொள்வர் .

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  நிஜமாகவே இது ஒரு துணிச்சலான முடிவு. பாராட்டுக்கள். கட்டாயம் இந்த முடிவிலிருந்து மாறாமல் இருந்தால் மக்கள் ஆதரவு பெருக வாய்ப்புகள் அதிகம்.

 • Ashok Jayaraman - Pondicherry,இந்தியா

  நண்பர்களே கேப்டன் எடுத்த முடிவு மிகவும் சரியானது. தி மூ க மற்றும் ஆ தி மூ க வுடன் கூட்டணி வைத்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. சென்ற தேர்தலில் ஆ தி மூ க வுடன் கூட்டணி வைத்ததால் தனது தவறை நன்றாக அறிந்துகொண்டார். இது நமக்கு ஒரு நல முடிவு. சூப்பர் கேப்டன் நிச்சயம் தே மூ தி க வெற்றி அடையும் மக்களுக்கோ நல்லதே.. ஜெய் ஹிந்த்

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  தீய மு.க ஒழிய போகிறது. உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஸ்டிக்கர் அம்மாவுக்கு எதிராக போக போகிறது. அம்மா தி.மு.க இரண்டாக உடைய போகிறது. ரெண்டு திருட்டு கட்சியும் தமிழகத்தில் சாக போகிறது, தமிழன் தன்மானத்தோடு ஒரு பச்சை தமிழனை ஜெயிக்க ஒட்டு போட வேண்டும். தமிழன் இலவசத்துக்கு இனிமேல் ஆசை படமாட்டான். ரெண்டு கழக ஆட்சியையும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற புறப்படு தமிழா. வெற்றி உன் பக்கமே

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வெறும் 6% வாக்குகளை வைத்துக் கொண்டு 5 சீட் கூட ஜெயிக்கப் போவதில்லை என்பது உறுதி. எதிர்க் கட்சித் தலைவர் என்கிற பொன்னான வாய்ப்பை செல்லாக் காசாக்கி விட்டவர். அதிமுக எதிர்ப்பு வாக்குகளில் சில இவருக்கு விழலாம் இவர் தனித்துப் போட்டி என்பதால் அதிக இடங்களில் இவரது ஆட்கள் நிற்கலாம், ஒரு 10-12 பேர் ஜெயிக்கலாம் ஜெயிச்சதும் அதிமுக வில் ஐக்கியமாகப் போகிறார்கள்.

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  தேர்தல் இன்னும் நடக்கவில்லை ஆனால் தி மு க வின் தோல்வி ஊறுதியாகிவிட்டது போல் தோன்றுகிறது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அதிமுக வின் வெற்றி உறுதியாகிவிட்டது

 • PRADEEP - madurai

  super thaliva

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  செம சூப்பர்...........என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பல பொதுமக்களுடைய பொதுவான தினமலர் வாசகர்களின் விருப்பத்தை கேப்டன் அவர்கள் தெளிவாக வெளி படுத்தி உள்ளார்.......திரு.விஜயகாந்தை தேவையற்று வசை பாடிய அவதூறு பேசி கேவலமாக பேசி பெட்டி வாங்குபவர் குடிகாரன் முடிவு எடுக்க தெரியாதவன் என்று இகழ்ந்த வாசகர்களும் தினமலரும் மன்னிப்பு கருத்தை வெளியிடுவார்களா? நான் அடித்து சொல்கிறேன், மக்கள் நல கூட்டணி விஜயகாந்துடன் வந்து இணையும்..இந்த கருத்தை திரு முதரசனும் விஜயகாந்தும் வெளிபடுத்தி உள்ளனர்....வாசனை அதிமுக கண்டு கொள்ள இனி வாய்ப்பு இல்லை...எனவே அவருக்கும் வேறு வழி இல்லை...அவர் கேப்டனை தேடி வருவார்...சுப்ரீம் கோர்ட்டின் பிடி இருக்கும்போது கேப்டனின் தைரியத்திற்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு வரும்.... அதனை ஒரு கோடி இளைஞ்சர்கள் நிருபிப்பார்கள்.......

 • Sridhar - Chennai,இந்தியா

  So finally nobody is going to get majority.. Votes will split which is good for the state at least... But we still need a strong leader other than all these corrupted parties to lead TN forward..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இந்த செய்தி உண்மையாக நடந்தால், நம்ம சாமி சின்னத்தம்பிக்கு [ தினமலர் வலைதளத்தின் ஒப்பற்ற காந்து ரசிகர் ] சின்னதா ஒரு வாழ்த்து.... தமிழ் செல்வனுக்கு பெருசா ஒரு அனுதாபம்...

 • Kamal - Kumbakonam,இந்தியா

  இது ஒரு நாடகமே. திமுகவும் தேதிமுகவும் சேர்ந்து நடத்தும் நாடகம். இவர்கள் கடைசி நிமிடத்தில் கை கோத்து கொள்வார்கள். இது உறுதி.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  நல்ல முடிவுதான் ஆனால் 2 சிட்டுக்களுக்கு மேல் கிடைக்காது

 • zooying - madurai,இந்தியா

  சுத்தம், பலாப் பழம் கனிந்து நழுவி நடு மண்டையில் விழுந்தது.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  விஜயகாந்த் உண்மையிலேயே தனித்து போட்டியிடுவார் என்றால் அவருக்கு வாழ்த்துக்கள்... அதிமுக ஒட்டு பிரிந்து அதிமுக வெற்றி பெரும் என்று உண்மையிலேயே இதனை நான் எழுதவில்லை.. திமுகவுடன் சேர்ந்தாலும் தேமுதிக தோற்கடிக்கபட்டிருக்கும்.. 7 தமிழர் பிரச்சினையை மிக பெரிதாக ஊதி, அதிமுக ஒட்டு வாங்கியிருக்கும்... வெற்றியும் பெற்றிருக்கும்...கருணாநிதி செய்த முதல் தப்பு, காங்கிரசை முதலில் கூட்டணியில் இழுத்தது..கருணாநிதி போட்ட சாணக்கிய திட்டம் என்னவென்றால், தனி ஆட்சிக்கு சில தொகுதிகள் குறைவாக இருப்பின் காங்கிரசை உள்ளே இழுத்து போட்டுகொள்ளலாம்.. தேமுதிகவை கழற்றி விடலாம் என்பது தான்.. அதற்க்கு அதிமுக போட்ட அஸ்திரம் தான் 7 தமிழர் பிரச்சினை... இந்த பிரச்சினை பெரிதாகும் என்று விஜயகாந்துக்கு தெரியும்... ஆதலால் தான் இப்போதே கழண்டு கொண்டார்.. விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்... இப்போது வைகோ, கம்யுனிஸ்ட்கள் அல்லது பாஜக, திருமா ஆகியோர் விஜகாந்திடம் கூட்டணிக்காக செல்லட்டும்..விஜயகாந்த் எடுத்த முடிவு அலாதியானது.. இவர் மநகூ க்கு செல்லாமல் மநகூ வை பிரித்து, யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியது தான் இன்றைய ஹை லைட்..

 • boogie - pattur

  நாட்டை ஆள்பவர்களுக்கு இருக்கா வேண்டிய எந்த தகுதியும் இவருக்கு இல்லை இளஞர்களின் அரசியல் கோமாளியகவே இருக்கிறார்

 • Bala - Chennai,இந்தியா

  இவருக்கு நஷ்டம் என்பது இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது, பலம் நழுவி பாலில் விழும் என எதிர்ப்பார்த்தவருக்கு பெருத்த நஷ்டம் ஆகிவிட்டது.

 • muthu Rajendran - chennai,இந்தியா

  ஒரு வழியாக பல வதந்திகளுக்கு முற்றுபுள்ளி என்று கருதலாம் . வதந்திகளுக்கு மட்டுமல்ல வருகிற தேர்தல் பல கட்சிகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் தனித்தனி நிற்பதன் மூலம் அவர்கள் பலத்தை அறிந்து மூடு விழா செய்து கொள்வார்கள். பொதுவாகவே தமிழ் நாட்டில் இவ்வளவு கட்சிகள் தேவை தானா ?

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  அதிமுக தனித்து நிற்கும் இத்தேர்தலில், திமுக காங்கிரஸ், மக்கள் நல கூட்டணி, பாமக, விஜயகாந்த் (இவரை நாடி சென்று பாஜக ஆதரவு தெரிவிக்கிறோம் தங்களுக்கு சீட் ஒதுக்குங்கள் என்று கூறி) அவர் ஒரு அணி என பல அணி மோதும் இத்தேர்தல் விருவிருபிற்கு பஞ்சமிருக்காது.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  நான் நேற்று எழுதிய கருத்து ..இது..கொஞ்சமா நனவானது போல உள்ளது...அதனால் மீண்டும் ஒரு முறை அந்த கருத்தை பதிவிடுகிறேன்.....[ அம்மன் கோயில் கிழக்காலே, கரிமேட்டு கருவாயன் ஒருவர் உட்கார்ந்திருந்தாராம்... அப்போது அங்குவந்த பெரியண்ணா, " சொக்க தங்கமே வருக, காவிய தலைவனே வருக,...தென்னவனே வருக...செந்தூர பூவே வருக " என்று வாழ்த்தி கோஷமிட்டாராம்...இத பார்த்த மச்சான் ரமணா , "நீரு, வல்லரசு ஆகணும்ம்னா , எங்கள் அண்ணா ராஜ நடை போடணும்ன்னு" சொன்னாராம்... அதுக்கு அந்த பெரியண்ணா, நானே பெரிய தெற்கத்திய கள்ளன், எனக்கு ஷத்ரியனை ஜெயிக்க தெரியாதா ன்னு மனசுக்குள் நினைசிகிட்டு, " நான் என்ன?, நானே ராஜா நானே மந்திரி ன்னா சொன்னேன்.....சட்டம் ஒரு இருட்டறை....நாமெல்லாம் தூரத்து இடிமுழக்கம் என்று தானே சொல்லறேன்னு" குழப்ப, புரியாத, மச்சான் நூலறுந்த பட்டம் போல காற்றடிக்கும் திசையில் அலைபாய, , பயந்துபோன பெரியண்ணா,..." பருவ நிலா அருகில் வர, பழம் நழுவி பாலில் விழ," என சம்மந்தம் இல்லாமல் ஒரு பாடலை பாடி, வைதேகி காத்திருந்தாள் போல தானும் காத்திருக்கிறார்..]

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  பழம் (பழம் கனிந்து விட்டது பாலில் விழப்போகுது என்று) கிடைக்கும் என்று காத்து இருந்த நரி, என்னடா இது என்றிருக்க, எங்கள் கூட்டணியில் வருவார் என்று மக்கள் நலக்கூட்டணி நம்பியிருக்க, முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்கிறோம் என்று இருந்த பாஜக தற்போது விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்து தங்களுக்கு சீட் ஒதுக்குமாறு கேட்டாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை.

 • Senthil mohan - Bangalore,இந்தியா

  Good decision

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  உரிய நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்கும் துணிச்சல், ஒரு கட்சியின் தலைவருக்குரிய திறமை மிக்க குணம்தான். விஜயகாந்த், கூட்டணி விசயத்தில், பேரத்திற்கு செல்லாமலும், தனது கட்சியின் பலத்தை, மற்ற கட்சிகளிடையே உணர்த்தவும், இந்தத் தேர்தலில் மிகச்சரியாகவே முடிவெடுத்திருக்கிறார்.

 • gmohan - chennai,இந்தியா

  வெற்றியோ தோல்வியோ, தேதிமுக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய கவனத்தை வைத்துள்ளது. தேதிமுக இந்தமுறை திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் எதிர்கட்சியாகிவிடும். அந்த வாய்ப்பை திரு விஜயகாந்த் நல்லமுறையில் பயன்படித்திக்கொண்டார் எனில், தமிழகத்துக்கும் நல்லது, அவருக்கு முதலமைச்சர் ஆவதற்கான பிரகாசமான வாய்ப்பு, அடுத்த 5 ஆண்டுகளில் கிடைக்கலாம். மேலும், மீண்டும் தன்னை ஒரு தைரியமான மக்கள் தலைவன் என்று காட்டிக்கொண்டுள்ளார். பத்தாண்டுகளாக தன்னை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் திரு விஜயகாந்துக்கு இருக்கும் மன உறுதியும், மக்கள் மீது கொண்ட நம்பிக்கையும், 50 ஆண்டுகளுக்கு மேலாக, மேலும் அண்ணாதுரை, கருணாநிதி போன்ற பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்டதும், 5 முறை ஆட்சியில் இருந்தும் கூட தி மு க தனியாக நிற்க அஞ்சுவதன் காராணம் என்ன? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே. அம்மா மீண்டும் முதலமைச்சர், திரு விஜயகாந்த் 2016-இன் எதிர்கட்சிதலைவர், திமுக முற்றிலும் டெபொசிட் இழக்கவேண்டும்

 • vedha sekaran - madurai,இந்தியா

  good decision .........

 • Rajaram Ramkumar - CHENNAI,இந்தியா

  கூட்டணி வரும் என்ற நம்பிக்கையில் அண்ணா அறிவாலயத்தில் செம கூட்டமாம், கேப்டன் கூட்டணி இல்லை என்றதும் ஒரு ஈ காக்கா கூட இல்லையாம் என்னடா இது இந்த கழகத்திற்கு வந்த சோதனை,கருணாநிதியிடம் கோடிகள் கொட்டி கிடக்கு ...கிரிமினல் மூளையும் இருக்கு... மமக வில் ஒரு அன்சாரி , மதிமுகவில் ஒரு ஜோயல் போல தேமுதிக , பாமாக, தமாக , அரசு ஊழியர் சங்கம் என பலருக்கு பொட்டியை திறந்து காட்டி வலையில் வீழ வைப்பார் ..ஆனா ஓட்டு தான் விழாது ..மிக நல்ல முடிவு .... பழம் விழும்னு பார்த்த கட்டுமரம் மண்டையில் தேங்காய் தான் விழுந்தது

 • thiru - Chennai,இந்தியா

  மாப்பு, வச்சிடாண்ட ஆப்பு...

 • Rajkumar - Trichy,இந்தியா

  நீங்க நல்லவர் என்பதை நிருபித்து விட்டீர்கள் கேப்டன்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  நாளைக்கு காந்து& கோ வ திமுக வின் பெரிய புள்ளிங்க கன்னாபின்னாவென்று திட்டினால், திமுக -தேமுதிக கூட்டணி பணால் என்று அர்த்தம்... இல்லைஎன்றால், காந்து கடைசி வரை வருவார் என்று கருணாநிதி காத்திருப்பார்... நான் நேற்று எழுதிய வைதேகி காத்திருந்தாள் கத கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது...

 • Balaji - Khaithan,குவைத்

  காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவானாலும் மிகவும் நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கிறார்........ இம்முடிவு இவருக்கு எந்தளவுக்கு வெற்றிக்கு உதவும் என்பதை சொல்ல முடியாது..... ஆனால் இந்த முடிவால் அவரின் இமேஜ் உயரும் என்பதில் சந்தேகமில்லை...... இது இப்போது இல்லையென்றாலும் அடுத்த therthalil அவரின் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது....... இனி இவர் மக்களுடன் தான் கூட்டனி என்ற பிரட்சாரத்தை மீண்டும் முழங்குவார்.... அதிர்ப்தியில் உள்ள வாக்குகளையும் எளிதாக கவர முடியும்......

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  அய்யா தலீவரே,...பால்ல உரையை ஊத்தி வையும்,...தயிராவது மிஞ்சும்....கெட்டுபோயிட போவுது.... மிஞ்சுற தயிர தமிழ் செல்வன் போன்ற உண்மையான விசுவாசிகளுக்கு கொடுத்தால், நலம்....

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  பரவாயில்லை நல்ல முடிவு வாழ்த்துக்கள்.

 • MUDIVAI MANI - Johannesburg,தென் ஆப்ரிக்கா

  யாரு பைசா குடுத்திருப்பா ? இருந்தாலும் பாராட்டுக்கள்

 • DHINESH M - Cuddalore,இந்தியா

  சூப்பர் கேப்டன் என்னுடைய ஓட்டு உங்களுக்கே .. ...

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  சபாஷ் சரியான முடிவு திரு விஜயகாந்த் அவர்களே கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக உங்களின் இந்த முடிவு லட்சோபலட்சம் ஹிந்துக்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது .ஹிந்து துவேசம் என் சுவாசம் என்று வாழ்ந்தவர் - ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்களை இது வரை சொல்லாதவர் .ஆனால் தேர்தல் என்று வந்தால் திருடன்களிடம் கூட வாக்கு கேட்பவர் (ஹிந்து என்றால் திருடன் என்றவர் இந்தியாவில் இவர் மட்டுமே ). ஹிந்து தெய்வங்களை மட்டும் இழிவாக பேசுபவர்.அயோத்தி ராமன் எந்த டுடோரியல் காலேஜ் சென்று படித்தான் என ஒருமையில் ஏசியவர் கலாம் என்றால் கலகம் என்றல்லாம் பொருள் சொன்னவர்.கர்ம வீரர் பாரத ரத்னா காமராஜரை எருமை தோலன்,பனையேறி என்றல்லாம் இழிவு செய்தவர். தனது கட்சிக்கார MLA நெற்றியில் விபூதி குங்குமம் வைத்திருந்தார் என கூறி அவரை சட்டமன்ற கூட்ட தொடரில் இருந்து suspend செய்தவர்.தனது நிலையை எண்ணி பார்க்கட்டும் .திரு விஜயகாந்த் அவர்களே போன சட்டமன்ற தேர்தலில் ஒரு சினிமா நகைசுவை நடிகரை - உங்களை தரங்கெட்ட தனமாக ,தமிழக மெங்கும் பேச வைத்து அதனை குடும்பத்தோடு வயிறு குலுங்க சிரித்து ரசித்த குடும்பங்கள் இன்று மீண்டும் வேறு ஒருவரை வைத்து உங்களை காய படுத்த முயல்வார்கள் .மகாத்மா காந்தியையும் ,நேரு ,MGR மற்றும் இந்திரா காந்தியையும் கொச்சை படுத்தியவருக்கு நீங்கள் எம்மாத்திரம் ஆயினும் நீங்கள் வழிபடும் தெய்வங்களும் மற்றும் உங்கள் கட்சி தொண்டர்களின் வாழ்த்துக்களும் உங்களை கவசமென காக்கட்டும் .போராடடா போர் வாள் ஏநதடா என்ற உங்கள் 1984 சிம்ம நாதம் இந்த சட்ட மன்ற தேர்தல் களத்தில் ஒலிக்கட்டும்

 • vedha sekaran - madurai,இந்தியா

  good and brave decision ........its good

 • aravind - chennai,இந்தியா

  யாருக்கு சந்தோஷமோ இல்லையோ,,, திமுகவுக்கு மிக மிக வருத்தம் & அசிங்கம்.

 • Yesveeorr - chennai ,இந்தியா

  இந்த செய்தி உண்மையானால் விஜயகாந்துக்கு ஒரு சபாஷ். அவரது எட்டு சதவீத ஓட்டுகள் தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும் தனியாக நிற்பேன் என்று கூறும் அவர் மன உறுதியை பாராட்டியே ஆக வேண்டும். இந்த அவரது செய்கை மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

 • winman - Madurai,இந்தியா

  மிக பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைவர்களை விட துணிச்சலானா, சவாலான முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளது மிகபெரிய ஆச்சிர்யம். வாழ்த்துக்கள். ஒரு நல்ல தலைவனுக்கு இந்த துணிச்சல் மிக அவசியம். கிரேட்.

 • suresh kumar - singapore,சிங்கப்பூர்

  இனி என்ன நடக்கும்....எப்படியாவது எங்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று பிஜேபியினர் பிச்சை எடுப்பார்கள் இவரிடம்....

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  பழம் அழுகி சாக்கடையில் விழும் என்று நினைத்தேன், பரவாயில்லை தரையில் விழுந்துடுச்சி. மொத்தத்தில் பழம் வேஸ்ட்.

 • krishna - Chennai

  Great decision by Captain...Great future for Vijayakanth ..and DMDK

 • suresh kumar - singapore,சிங்கப்பூர்

  அப்போ....இவருடைய அரசியல் சபதம்......யாரையோ ஆட்சிக்கு மறுபடியும் வரவிட மாட்டேன் என்று சொன்னாரே...

 • Krishnan - Chennai,இந்தியா

  சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, 2G வழக்கின் தீர்ப்பு இரண்டும் இவருக்கு சாதகமானால், இந்த தேர்தலில் இவர் ஆட்சியை பிடிப்பது உறுதி

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நல்லதொரு முடிவு. இது முடிவல்ல ஆரம்பம். முரசொலி கேட்டு ஊழல் தலை தெறிக்க ஓடட்டும்..வாழ்த்துக்கள் கேப்டன்..

 • H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா

  எது எப்படியோ பழம் பழுத்தால் தானே நழுவி பாலிலோ இல்லை மோரிலோ விழுவதற்கு பழுக்கமலே காயாகவே காய்ந்து சருகாகப் போகிறது

 • Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா

  good

 • suresh kumar - singapore,சிங்கப்பூர்

  அப்பாடா....இனி என்ன....சங்குதான்.....

 • vincent - sivakasi

  ஒரு சீட்டு வாங்குதானு பார்ப்போமெ

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  திமுகவுக்கு பெருத்த அடி.....கடைசியில் பாலில் பல்லிதான் விழுந்துள்ளது.....

 • Pulikutty - Mumbai,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜெ-க்கு பாதகமாக வரும் என்று இவர் நினைத்து இருப்பார். அதான் தனியாக நின்றால் சில தொகுதியை கை பற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

 • SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்

  அதிமுக, திமுக, பாமக, தேமுதிமுக, மக்கள் நல கூட்டணி, நாம் தமிழர், பாஜக . 7 முனை போட்டி . சபாஸ் சரியான போட்டி.

 • pu.ma.ko - Chennai,இந்தியா

  தே மு தி க விற்கு வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது, தற்போதய சூழ்நிலையில், தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு கூடியிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும், வெற்றிபெற இதுமட்டுமே போதாது. விஜயகாந்த் ம ந கூ வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். இது வெற்றிபெற உதவும். ஒரே நேரத்தில் தி மு க விற்கும், அ தி மு க விற்கும், பி ஜே பி கும் ஆப்பு அடித்திருக்கிறார். வெற்றிபெற வாழ்த்துக்கள் விஜயகாந்த்.

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  என்னுடைய விமர்சனத்தில் தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் என்று சொன்னதை திரும்ப பெற்று கொள்கிறேன். விஜயகாந்தின் முடிவு மிக அருமை. ஒருத்தனும் பணத்துக்கும் விலை போனார் என்று இனிமேல் சொல்ல மாட்டான். திருடர்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலுடன் அஸ்தமனமாகி விடும். செல்வியின் தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில் சிறை தண்டனை கொடுக்கபட்டால் அனைத்து திருடர்கள் முன்னேற்ற கழகமும் இந்த தேர்தலில் அஸ்தமனமாகி விடும். இரண்டு திருட்டு கழகமும் தமிழகத்தை பிடித்த சனி. ஒழியட்டும் கழக ஆட்சிகள். மலரட்டும் புதிய அரசியல்.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  யாரோ வருவார் யாரோ செல்வார் அல்லது மறைவார், வருவதும் செல்வதும், மறைவதும், சிலருக்கு தெரியாது, ஆனால் பலருக்கும் தெரியும். விஜயகாந்த் அப்படி வந்த, சென்ற, மறைத்த பலரின் ஒருவராகத்தான் இருப்பார். அவர் வருவதிலும், செல்வதிலும் நமக்கு லாபமும் இல்லை நழ்டமும் இல்லை.நடுநிலைமையில் இருந்து பார்த்தால் அவரின் பலம் என்ன, பலவீனம் என்ன என அவர் தெரிந்துகொண்டு, மேலும் தன் பலத்தை பெருக்கி பலவீனத்தை தவிர்க்க தனியே போட்டியிடுவது தான் சரியான முடிவு. பலதடவை போரில் தோல்வி அடைந்து பின் வெற்றிபெற்றவர் வரலாறு சரித்திரம். வெற்றி மகிழ்ச்சியை தருவதுபோல் தோல்வி பாடம் புகட்டும். கட்டுண்டோம், காத்திருப்போம், காலம் கனியாமலா போய் விடும்.விடாமுயற்சி பலனை தராமல் விட்டதாக வரலாறு இல்லை.

 • pu.ma.ko - Chennai,இந்தியா

  தே மு தி க விற்கு வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது, தற்போதய சூழ்நிலையில், தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு கூடியிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும், வெற்றிபெற இதுமட்டுமே போதாது. விஜயகாந்த் ம ந கூ வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். இது வெற்றிபெற உதவும். ஒரே நேரத்தில் தி மு க விற்கும், அ தி மு க விற்கும், பி ஜே பி கும் ஆப்பு அடித்திருக்கிறார். வெற்றிபெற வாழ்த்துக்கள் விஜயகாந்த்.

 • ANANTHAMUTHU.M. - மாங்காடு.சென்னை.

  விஜயகாந்த் அதிரடியாக ஒரு நல்ல முடிவினை அறிவித்து விட்டார். அவர் வெற்றி தோல்வி என்று பார்க்காமல் தன்மானத்தோடு எந்த ஒரு அரசியல் கட்சி பேரத்திற்க்கும் அடி பணியாமல் தைரியமாக ஒரு முடிவினை சொல்லி விட்டார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தினையும் அதிரடி மாற்றத்தினையும் நிச்சயம் ஏற்படுத்தும். வாழ்க கேப்டன் புகழ்.வளர்க தேமுதிக இயக்கம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அம்மாஜிக்கு சந்தோசமாக இருக்கும்... வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை...

 • ஜானகிராமந் - chennai

  ஜெயலலிதா வை தூக்கி எறிவேன் என்று பேசி வந்ததுக்கு அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிட்டது இந்த முடிவு

 • MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்

  Super thalaivaa. Vetri namathae...

 • Tamilan - Chennai,இந்தியா

  It's a very good decision:)

 • Raja - Doha-Qatar,இந்தியா

  ஓபி எஸ் ஐ ஜீரோ என்று சொன்னான் விஷ்கிகாந்த் ...வரும்தேர்தலில் உனக்கும் ஜீரோதாண் ........எழுதி வச்சுக்கோ

 • Bala Subramaniam - coimbatore ,இந்தியா

  நல்ல முடிவு வாழ்த்துக்கள் ,வைகோ கட்சி கற்று தந்த நல்ல பாடம் இது

 • mohan - kumbakonam,இந்தியா

  இது இறுதி முடிவா என்று சந்தேகம் தான் .முடிவு மாறினாலும் மாறலாம்

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  இதெல்லாம் டுபாகூர் வார்த்தைகள் யாரும் நம்பவேண்டாம் , திடிரென்று பேட்டிகள் வந்தால் கூட்டணிக்கு செல்வார் விஜயகாந்த்

 • Ramkumar - Trichy,இந்தியா

  ரொம்ப சந்தோசம். கலைஞர் தப்பித்தார்

 • Vijayaramachandran Ramabadhran - Chennai,இந்தியா

  வரவேற்கின்றோம் . இந்த கூட்டணி பெற அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த திரு விஜய காந்தின் இந்த அறிவிப்பிற்கு . இதன் மூலம் , அவர் சொன்ன மாதிரி , சுய நலத்திற்காக தன் தொண்டர்களை அடகு வைக்க மாட்டேன் என்று சொன்னதை நிரூபித்துள்ளார் . அவரது முயற்சி வெற்றி பெற உளமார வாழ்த்துகிறோம் .

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  எலி வலையானாலும் தனி வலை சிறந்தது....

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  வடை போச்சே.....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அப்பாடா இப்போத்தான் எனக்கு உசிரே வந்துச்சு. கருணா வராது. கருணா அரசியல் அனாதை ஆகிடிச்சு.

 • sairam - muscat,ஓமன்

  .. ஐயோ பழம் நழுவி மண்ணுல விழுந்திட்டே தலிவா ..

 • Nellai Vendhan - Tirunelveli,இந்தியா

  இவரின் இந்த அறிவிப்பு அவருடைய கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது.அதே போன்று அவரின் நடவடிக்கைகளையும் பெரிதும் மாற்றினால் நல்லதொரு மாற்றாக வர வாய்ப்புள்ளது.

 • siriyaar - avinashi,இந்தியா

  Karunavidku sangoothi vittaare vijayakanth.

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  தமிழ்நாட்டின் தலைவலி தீர்ந்தது ....

 • prabhu - bangalore

  vote Will split...

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  விஜயகாந்தின் இந்த முடிவு ஒரு விதத்தில் அக்கட்சியின் பலத்தை மீண்டும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.....எது எப்படியோ அவரின் இந்த தில்லிற்கு வாழ்த்துக்கள்...

 • bejar payyan - doha,கத்தார்

  கருணாநிதி : வட போச்சே.....

 • Nஜெயதங்கதுரை - வேலூர்

  அருமை சூப்பர்

 • prabanchan - Chennai,இந்தியா

  This decision will go in history People will applaud for not shaking hands with the obvious. மற்றபடி இது கொள்கையா இல்லை கொழக்கட்டையானு தெரில. ஆனா கட்சியோட எதிர்காலத்துக்கு நல்லது...

 • Chandrasekaran Chandrasekaran - Chennai,இந்தியா

  தனித்து போட்டியிட திராணி உள்ளது என மறைமுகமாக கூறிஉள்ளார் அதிமுக அதனுடைய திராணியை காண்பிக்குமா?

 • Jayaram - Tiruppur

  மிக நல்ல முடிவு என் ஓட்டு உங்களுக்கே

 • இளங்கோ - chennai,இந்தியா

  2011 தேர்தலிலேயே இந்த முடிவு எடுத்திருந்தால் இன்று ஒரு மாற்று சக்தியாக உருவாகியிருக்கலாம்.பிறகு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவராக இருந்தும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வில்லை... தேர்தல் நெருங்கும் போது பிற கட்ட்சிகளுடன் தொகுதி பங்கீடு என்று சமாளிக்க வேண்டி வரும். இப்போது ஒரே வாய்ப்பு இரு கழகங்களும் எதிர் நோக்கும் நீதி மன்ற தீர்ப்பினால் அரசியல் சூழ் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  கனிந்த பழம் என்னாச்சு தலிவரே?

 • Suresh - Chennai,இந்தியா

  ஹாஹஹா... ஜெயலலிதா காட்டில் மழை.. வீடு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. வோட்டு சிதறினால் அம்முவுக்கு கொண்டாட்டம்.. அடுத்த ஆத்தா பிரேமலதா வந்தாச்சு.. விஜயகாந்த் அப்போ டம்மி தானா.. பொண்டாட்டி மாமன் மச்சான் அரசியல் தான் தேமுதிக..... தலைவர் சரக்கு பார்ட்டி.. வாழ்க தமிழ்நாடு..

 • siriyaar - avinashi,இந்தியா

  Now every one has to think of karunanithi safety since only weapon left for dmk is sympathy wave they may him

 • Guna Ravichandran - Namakkal,இந்தியா

  அப்படின்னா இம்முறை தொங்கு பாராளுமன்றம் உறுதி......

 • Rakesh Sridharan - Chennai,இந்தியா

  நாம் விஜயகாந்தை ஆயிரம் முறை வசை பாடினாலும் , இப்படி ஒரு துணிச்சலான முடிவை அவர் மட்டும் தான் எடுக்க முடியும். 234 தொகுதியில் Deposit போனா கூட பரவால கேப்டன் , நல்ல முடிவு இது. வருங்கலத்தில் எவனும் கேப்டன் பணம் வாங்கி கொண்டு கூட்டணி அமைத்தார் என்று வாயை திறக்க முடியாது . கட்சியின் எதிர்காலத்துக்கு மிக சிறந்த முடிவு. என்னை பொறுத்த வரையில், கேப்டன் -ku ஒரு வாய்ப்பு வழங்கலாம் . மாநாட்டில் வெளியிட்ட வரைவு தேர்தல் அறிக்கை நன்றாக தான் இருந்தது . வாழ்த்துகள்

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  தேமுதிக தனித்து போட்டியிட்டால் 15 தொகுதிகளில் வெற்றி பெரும் .

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  முன்றும் தனித்தனியே நின்றால் இரண்டு ஊழல் கட்சிகளும் கவிழும்.

 • KUNDRATTHU BAALAA - TPK., MARUTHA,இந்தியா

  Master stroke.... brave decision... now fit for the post of CM...

 • V Nath - PCMC,இந்தியா

  இந்த முடிவில் விஜயகாந்த் இறுதிவரை உறுதியாக இருப்பாரா?

 • S.SARAVANAN - RAMANATHAPURAM,இந்தியா

  SUPER

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  திராணியைக் காண்பிக்கின்றார். நாமளும் காண்பிப்பதுதான் சரி.

 • badhrudeen - Madurai,இந்தியா

  100% - வெற்றி உறுதி. இந்த தமிழனை பார்த்து தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்வார்கள். வெற்றி உறுதி.

 • pandidurai - thirunelveli

  சரியான முடிவு

 • pradheep rk - Chennai,இந்தியா

  நல்ல முடிவு...இந்த முடிவு தேவையற்ற அவ பெயர் ஏற்படுவதை தடுக்கும்.....

 • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

  பழம் கடைசியில் சாக்கடையில் விழுந்து விட்டது

 • நிலா - மதுரை,இந்தியா

  திமுக பாஜகவுக்கு விஜயகாந்த் ஆப்பு வைத்துவிட்டார்

 • நிலா - மதுரை,இந்தியா

  வெல்டன் கேப்டன் துணிவே துணை வெற்றி பெற வாழ்த்துகள்

 • தமிழன் - சென்னை,இந்தியா

  இது ரெண்டு நாள் நாடகம் எனவே தோன்றுகிறது.

 • காவியன் புஷ்பராஜ் - Mannachanallur,இந்தியா

  பழம் நழுவி போய்டுச்சே...... பால் கெட்டுப் போய்டுமே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement