Advertisement

"கனிந்த பழம் எப்போ விழும்?" - கருணாநிதி ஏக்கம்

சென்னை: ''சட்டசபை தேர்தலில் திமுக - தே.மு.தி.க., கூட்டணி ஏற்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை நம்பிக்கை உள்ளது. பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'' என திமுக தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறினார்.

திமுக தரப்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம், அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. இன்று நேர்காணல் நிறைவுபெற்றது. இது தொடர்பாக கருணாநிதி இன்று அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:

திமுக தரப்பில் 5 ஆயிரத்து 671 பேர் போட்டியிட விருப்ப விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். அனைத்து தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் 4 ஆயிரத்து 162 பேரிடம் நேர்காணல் நடந்தது. புதுச்சேரியில் 71 பேரிடம் நேர்காணல் நடந்தது. மொத்தம் ரூ. 12 கோடியே 36 லட்சம் 25 ஆயிரம் வருமானம் வந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும் வருமாறு :


* கேள்வி : தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது.


* பதில் : பழம் கனிந்து வருகிறது . பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.


* கேள்வி: தே.மு.தி.க ., கூட்டணி ஏற்படும் என இன்னும் நம்பிக்கை உள்ளதா ?


* பதில் : நிச்சயமாக இருக்கிறது,


* கேள்வி: தேமுதிக என்ன கோரிக்கை வைக்கின்றனர் ? ஏன் இன்னும் இழுபறி நீடிக்கிறது ?


* பதில் : ஒன்றும் சொல்வதற்கில்லை.


* கேள்வி: தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் ?


* பதில் : இன்னும் 2 , 3 நாட்களில் வெளியாகும்


* கேள்வி : இன்னும் வேறு ஏதும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்களா ?


* பதில் : இல்லை.


இவ்வாறு பேட்டி முடிந்தது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (242)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  கிழத்துக்கு பழத்தின் மேல் ஆசை,ஆனால் பழம் நிச்சயம் கிழத்திற்கு கிடைக்காது.இலவு காத்த கிளி போல கருணா காத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் .

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  பழம் பாலில் விழுவதற்குள் அழுகிப்போய்விடும் பாலும் திரிந்து போய்விடும்

 • நிலா - மதுரை,இந்தியா

  கருப்பு பணமா??? கருத்த பழமா??

 • அமரன் - நம்மூர்,இந்தியா

  அது சுட்ட பழமா அல்லது சுடாத பழமா என்று விழுந்த பின் தெரியும்....

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  விடியட்டும் முடியட்டும் முடிஞ்சு போயிருச்சு போல? அடுத்த ஆட்டத்தை அன்புமணி ஆரம்பிச்சு சத்திய பிரமாணமே எடுத்துட்டார்.

 • sureshbabu - ahmadi,குவைத்

  பழம் தின்னு கொட்டை போட்ட உங்களுக்கு விஜய் என்ன சொல்லுறாரு காயா? பழமா?. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையாது, மக்கள் பதில் அளிப்பார் தயங்காதே.

 • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாவம் அடிமைகள் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கின்றார்கள், கலைஞர் அவர்களுக்கு தெரியும், யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று, சில்லி வண்டுகளுக்கு அவரை பற்றி என்ன தெரியும், குனிவதும் கும்பிடுவதும் அரசியல் இல்லை , அதை மீறி மிக பெரிய அரசிய விளையாட்டு உண்டு, இவர் பார்க்காத விளையாட்டு களமா?? இப்பொழுது அடிக்கிற சூறை காற்றில் அடிமைகள் எல்லாம் காணாமல் போவது உறுதி .

 • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னுடைய இருபது ஆண்டு கால அரசியல் அவதானிப்பில் ஒரு சொல்லாடல் இவ்வளவு அரசியல் தாக்கங்களை உருவாக்கும் வல்லமை கொண்டதா? என்கிற வியப்பில் இருந்து இன்னும் விடுபட முடியாமல் திகைத்து நிற்கிறேன். வழக்கமாக பல இடங்களில் இந்தச் சொல்லாடலை நாம் பலர் பயன்படுத்திக் கேட்டிருக்கிறோம், நாமே சில இடங்களில் பயன்படுத்தி இருக்கிறோம். "பழம் நழுவிப் பாலில் விழும் நிலையில் இருக்கிறது". அரசியல் களம் முழுவதையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு கலைஞரின் இந்தச் சொல்லாடல் ஆளுமை செய்யும் என்று தோன்றுகிறது, ஊடகங்கள் தங்கள் விவாதங்களுக்குத் தலைப்பு வைக்காத குறை ஒன்றுதான், ஒவ்வொரு தலைவரும் இந்தச் சொல்லாடல் குறித்தே அறிக்கைகளும், உரையாடலும் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் தமிழக அரசியல் அரங்கில் இன்றைய சூப்பர் ஸ்டார் அந்தச் சொல்லாடல் தானே? நகைச்சுவை, தேர்ந்த முதிர்ந்த அரசியல் தலைவருக்கே உரிய நிதானம், எதிர்த்தரப்பையும் இளக்கி நெருங்கி வரவைக்கும் கனிவு, ஏனைய பார்ப்பனீயப் ப்ரோக்கர்களின் சில்லறைச் சொற்களை அடித்து நொறுக்கி ஆழிப் பேரலையின் ஆற்றலாய் உயரும் கம்பீரம், இறுதியில் தனது ராஜதந்திர நகர்வுகளில் வெற்றி. 93 வயதில் இவ்வளவு அரசியல் விழிப்புணர்வோடு இருக்கிற அவருடைய அந்த கம்பீரத்துக்கே குருட்டாம் போக்கில் அவருக்கு ஜால்ரா அடித்தாலும் ஒன்றும் கெட்டுப் போய் விடாது என்றே மனதுக்குத் தோன்றுகிறது.

 • Manian k - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

 • Irudayarab Rajan - madurai ,இந்தியா

  அண்ணா போன்றவர்கள் உருவாகிய திமுகவுக்கு இந்த நிலைமை ? ச்சீ............................

 • A shanmugam - VELLORE,இந்தியா

  கெட்டும் பட்டணம் போய் சேர் என்று அந்த காலத்தில் சொல்லுவார்கள். அதே போல் விஜயகாந்த் வேற வழியில்லாமல் மானம் சுயமரியாதை விட்டு, சற்று முன் பொது கூட்டத்தில் நீங்களும், உங்கள் மனைவிமாரும் dmk பற்றி விமர்சனம் பேசியதெல்லாம் மன்னிப்புகேட்டு, கழுதை கேட்ட குட்டிசெவரு என்பதுபோல்,dmk ல் சேருங்க இதில் என்ன வெரட்டு கௌவரும் வேண்டிகிடக்கு. இனிமேல் உங்களுக்கும்,உங்கள் மனைவிக்கும் DMK & AIDMK ஆட்சியின் "ஊழல்" பற்றி பேச அருகதை கிடையாது.ஊஉழல் கட்சியோடு கூட்டணி வைக்கபோகும் நீங்களும் ஊழல்வாதியே என்ன புலப்படும்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  இயற்கையாக காட்டில் விளையும் சந்தன கட்டைகளை கொள்ளையடித்து அவைகளை சட்டரீதியாக உயிரை பணயம் வைத்து காப்பற்ற முற்ப்பட்ட அரசாங்க வன அலுவலர்களையும் காட்டுமிராண்டிதனமாக கொலை செய்த வீரப்பனுக்கு அம்மாவின் சரியான நடவடிக்கைகளால் தமிழக அரசு நடு இரவில் அளித்த நீதி என்ன என்று எல்லோருக்கும் தெரியும்....அவனுக்கே அந்த கதி என்றால் அப்படிப்பட்டவனையும் ப்ளான் பண்ணி ஆட்களை அனுப்பி விடாமல் தேடிப்பிடித்து சானல்களில் பல பாட்டுகள் மெட்டுகள் பாடி ஹீரோவாக சித்தரித்து பின்னர் திட்டமிட்டு பல கோடிகளை கொள்ளையடித்த தீய சக்திக்கு என்ன கதி காத்திருக்குதோ?...எப்போதும் அசோகர்களுக்கும் நம்பியார்களுக்கும் கூட எதோ ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்...ஆனால் அது நிரந்தரமல்ல...

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  மிஸ்டர் விஜயகாந்த், உன்னோட கட்சிய கரை சேர்பதற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம். ஆட்சியில் பங்கு கேட்டு, தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி கொடு. அது தான் இந்த ஊழல் பேர்வழிகளிடம் இருந்து தமிழகத்தை காப்பதற்கான ஒரே வழி. மஞ்ச துண்டுக்கு உன்னோட சப்போர்ட் தேவை. உனக்கு அல்ல.

 • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தலைவர் எந்த வயதிலும் ஒற்று மொத்த அரசியலையும் தன்னை சுற்றியே நடக்கும்படி பார்த்து கொள்ளுகிறார் , அவர் எது பேசினாலும் இன்றைய அரசியலில் மெகா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதை யாரும் மறுக்க முடியாது, எங்கே கருது சொல்லும் அடிமைகள் இவரை பிடிக்க வில்லை என்றால் இவரை பற்றி பேசாமல் போகவேண்டியதுதானே , திமுக எது செய்தாலும் கலைஞர் எது பேசினாலும் குறை சொல்ல வேண்டும் என்பதே அடிமைகளின் நோக்கம், நீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் எப்பொழுதும் அரசியல் கலைஞரை சுற்றித்தான். எல்லோருக்கும் இப்பொழுது ஒரு பயம் திமுக தேமுதிமுக சேர்த்து கூட்டணி அம்மைத்து விட்டால் என்ன ஆவது என்று, செயல்படாத ஆட்சியை விட நல்லதிட்டங்களை செயல்படுத்தும் திமுக ஆட்சி வேண்டும் என்பது இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு , அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பு இதுவே, இங்கே கருது சொல்லு நபர்களில் 90 சதவிதம் ஒட்டு போடமாட்டார்கள், அதனால் இவர்கள் சொல்லும் கருத்து வருகின்ற தேர்தலில் எடுபடாது, திமுக ஆட்சி அமைப்பது உறுதி.

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  இந்த மாதிரி நாக்கு தொங்க காத்திருந்து தன் மனதை இழந்த தமிழன் வேறு எங்கும் இல்லை. பதவி சொகம் இப்பிடி பண்ண வைக்குது. 5 வருஷம் நடிகைகள் கூத்தாடிகள் டான்ஸ் பார்க்க வில்லை. பாரட்டு விழா, அரசு செலவில் பார்க்க வில்லை, பெரிய அதிகாரிகள்,போலீஸ் அதிகாரிகள் கை கட்டி நிற்க வில்லை. சிவப்பு விளக்கு வண்டி வீட்டில் காக வில்லை, புல்லைகல்கு இன்னும் சொத்து சுகம் சேர்த்து வைக்க வில்லை. இது தான் இந்த கிழவனை இப்பிடி பழம், பால் என்று பேச வைக்குது. நாட்டை விட்டு துரத்த வேண்டிய கட்சி மற்றும் தலிவன் இந்த ஆளு.

 • sairam - muscat,ஓமன்

  யார்ட்ட வோய் விடுகிரூறு ரீலு... நீங்க பாலு விஸ்கி காந்து பழமா.. உங்களுக்கு பால் ஊத்த தானே மகன் உங்க கூடவே இருக்காரு ..

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  யோவ் தல. கள்ளிப்பால் & எருக்கம் பால் இருக்கற பாத்திரத்துல வெச்சிகிட்டு பழம் விழலையேன்னு கவலைப்பட்டா வேலைக்கு ஆகாது.மொதல்ல பால் பாத்திரத்தை மாத்து.

 • Irudayarab Rajan - madurai ,இந்தியா

  நிச்சயம் இந்த கூட்டணி இந்த தேர்தலில் வெற்றிபெறாது: மேலும் இந்த கூட்டணியால் விஜயகாந்திற்குதான் நஷ்டம் ஏனெனில் அவர் எதிர் கட்சி அளவுக்கு கூட வெற்றிபெறாத நிலைக்கு திமுக நிச்சயமாக உள்குத்து வேலையை செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார் என்பதை மறந்துவிட்டார் போலும்: திமுக வுடன் சேர்த்தல் தேமுதிக இத்துடன் காலி என்பதை அவர் மறந்துவிட்டார்

 • Ravi . A - Chennai,இந்தியா

  திரிந்த பால், அழுகிய பழம் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன ....திரிந்த பாலிலாவது திரட்டுப்பால் செய்யலாம், அழுகிய பழம் எதற்கு உதவும் .....

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  ஆளுக்கொரு எலந்த பழத்தை ஊசியால் குத்தி கழுத்தில் மாட்டிக்கொண்டு கையில் சப்லாக்கட்டையை அடித்துக்கொண்டு குடும்பத்துடன் தெருத்தெருவாக எமக்கு நாமே என்று ராமானுஜ நாமம் சொல்லியபடி திகாரை நோக்கி நடை பயணம் வண்டி சகிதம் போக வேண்டியதுதான் பாக்கி...

 • skandh - chennai,இந்தியா

  இந்த கிழத்தியும் ஸ்டாலினையும் நம்பி கூட்டணி வைத்தால் ஒ பீ ராமன் கதைதான் விஜயகாந்த் கட்சிக்கும்.

 • sardar papparayudu - nasik,இந்தியா

  நான் பால் காரன் - கவுண்ட்ஸ் , நான் - தபால் காரன் செந்தில்

 • aravind - chennai,இந்தியா

  அது அழுகிப்போன பழம், இது திருஞ்சு போன பால். மக்களுக்கு இந்த இரண்டாலும் உபயோகமில்லை.

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  தலைவரே 5 தடவை முதலமைச்சரா இருந்து மக்களுக்கு எதாவது உருப்படியா செய்து இருந்தா, தமிழ் நாட்டை வளர்த்து இருந்தா இந்த வயசுல நீங்க தேர்தல் கூட்டணிக்கு பிச்சை எடுக்கவேண்டியது இல்லை ... நீங்க வளர்த்தது உங்க குடும்பத்தையும் உங்க பசங்களையும் தான் ... இவ்வளவு செய்த உங்க மூத்த மகன் கூட உங்க மேல நம்பிக்கை இல்ல, மக்கள் எப்படி உங்கள நம்புவாங்க... தமிழ் நாடு அரசியல ஒரு உண்மை என்ன என்றால் " நீங்க அதிகமா கல்யணம் பண்ணி அதிகமா குழந்தைகள பெத்து எடுத்து அதுதான் உங்கள் அழிவு ... MGR குழ்ந்தை பெத்துக்காம விட்டது அதுதான் அவரோட புகழுக்கு அழிவு...

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  அம்மா கனிமொழி , விஸ்கி காந்த் தம்பதிகளை மூன்று முறை சுற்றி வந்து நைசாக எடுத்து கொண்டு வந்து விடு

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  அதுதான் ஏற்கனவே பழம் ( கருப்பையா ) விழுந்து கிடக்கே. போதாதா? கவுண்டமணி மாதிரி இன்னொரு பழம் எங்கேன்னு கேட்டால் எப்படி ?

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  பால் திரிந்து, பழம் அழுகிய பின்னா?

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  கனிந்த பழம் எப்போது விழும் - சில சமயம் கனியாமல் மரத்திலேயே வதங்கி பிஞ்சு காயாக கூட விழும்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  பழம் நழுவி பாலில் விழாமல் அதையும் நழுவி கீழே தரையில் குப்பையில் விழுந்து விட்டால் - அள்ளவா முடியும். துரியோதனன் கர்ணன் கதை ஞாபகம் வருகிறது - அள்ளவா கோர்க்கவா - அது கூட முடியாதே இங்கே வீணாகிவிட்டதே.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  விதி வலியது யாரை விட்டது. அ தி மு க - தே மு தி க கூட்டணி - தனக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் செய்த காப்டனை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவாரா அரசியல் சாணக்கியர் சென்ற தேர்தலில். தனக்காக தெரியா விட்டாலும் மற்றவர்களின் அனுபவங்களால் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களே அடிபட்டு உணர்ந்துகொள்ள பல வருடங்கள் தேவை படும் - கால விரயம், தேவையா.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  கடந்த தேர்தல்களில் விஜயகாந்தை பற்றி மிக கேவலமாக கனிமொழி,குசுபு ,ஸ்டாலின் எல்லோரும் விமர்சித்தார்கள் .இப்ப விச பாலில் பழம் வந்து விழப் போகுதாம்.அப்படி விச பாலில் விழ கூடியது விஸ்கி மட்டும்தான் .

 • Ootai Vaayan - Kovai,இந்தியா

  பழம் நழுவி எப்போ பாலில் விழுவது.. அதிலிருந்து நழுவி எப்போ வாயில் விழுவது.. பசிக்குது தலீவா..

 • adalarasan - chennai,இந்தியா

  சம்பத், நெடுஞ்செழியன் போன்ற ஜாம்பவான்களை எல்லாம் முழுங்கின இவரிடம் போய் சேருகிறார் என்றால், வேறு ஏதோ பேரம் தான்? வி.காந்துக்கு பதவி ஒன்றும் கிடைக்காது என்று அறிந்து இருப்பார்?

 • sardar papparayudu - nasik,இந்தியா

  மரத்திலேயே கனியும், கனியும் உண்டு , ரூமில் வைத்து புகை போட்டு கனிய வைப்பதும் உண்டு . ஆனால் மரத்தில் கனியும் கனியே சுவையாக இருக்கும் ஆகவே பழுக்கும் வரையில் நாம் வெயிட் பண்ணவேண்டும் . அதுவரையில் பாலை பிரிட்ஜில் பிரீசரில் வைக்கலாம் .

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  விழுவதற்குள் ரொம்ப அழுகி அசிங்கமா போயிட போகுது

 • sardar papparayudu - nasik,இந்தியா

  தைலாபுரம் மாம்பழதினை மகாபலிபுரம் கல்யாண நிகழிச்சியில் வழிக்கு கொண்டுவந்திருந்தால் , இந்த பழம் பற்றியே பேச்சே வந்திருக்காது தலைவரே . கோட்டை விட்டுவிட்டோம் .

 • Lakshman - Bangalore,இந்தியா

  அன்று அண்ணாதுரை அவர்கள் சொன்ன வார்த்தை " இதயக்கனி " என்று M.G.R பார்த்து அது கட்சியை வளர்க்க ஆனால் இன்று "பழம் கனிந்து தி .மு.க. என்ற நஞ்சு கலந்த பாலில்" விழுந்து சவக்குழியை நோக்கி பயணிக்க அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அப்படியே சேர்ந்தாலும் மற்றும் ஒரு ம.தி.மு.க நிலைமை தான்

 • bhuva - cuddalore

  vaila irundhu pazham nazhvi poiudichu ah ah mr dmk karuna

 • theruvasagan - Chennai

  ஏற்கனவே திரிஞ்சுபோன பாலிலே ஒரு கரப்பான் பூச்சி வேற விழுந்து கெடக்கு. புழுத்துகிட்டுவரும், மன்னிக்கவும், பழுத்துக்கிட்டுவரும் பழமும் அதிலே விழந்தால் வெளங்கிடும்.மொத்தமா குப்பையிலே கொட்டவேண்டியதுதான் பாக்கி.

 • sardar papparayudu - nasik,இந்தியா

  விழும் ஆனா விழாது

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  கனி அழுகிக் கிடக்கிறது.. பால் பாலிடாலாக போகுது.. குடும்பத்தின் பிடி என்ற தீவினையில் இருந்து மீளாத வரை திமுகவுக்கு திரும்ப வரும் வாய்ப்பே இல்லை.

 • rajesh - sivagangai,இந்தியா

  பழம் நழுவிபாலில் விழுந்தால் தேமுதிகாவிற்கு விழும் ஓட்டுகூட விழுகாது

 • Sathyamoorthy - Trichy

  இது சாக்கடை

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  சூடு சுரணை மானம் வெக்கம் எல்லாத்தையும் காற்றில் விட்டு, இன்று பிச்சைக்காரன் போல் கையேந்தும் நிலைக்கு திமுக சென்றிவிட்ட்து.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வைகோ நல்ல பதிலடி கொடுத்துள்ளார் .....

 • Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா

  விழப்போவது பழமா ? பல்லியா ? கலைஞரே ஒரு ஞானபழம் . அவருக்கு இப்ப புளிச்ச கொட்டை உள்ள பிரப்பம்பழம் பழம் கூட இல்லாமல் தவிப்பது வேடிக்கை . காங்கிரெஸ் ஜோறத்துக்கு சாபிடிற ஆல்பகோடா பழம் . இழவு காத்த கிளி கதை தான் ..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அய்யய்யோ..அய்யய்யோ..நமக்குநாமே, நமக்கு நாமே என்று பீத்திக்கிட்ட நம்மளை தனக்குதானே, தனக்குத்தானே பேசும்படி செஞ்சுட்டாங்களே..

 • Rajan - chennai,இந்தியா

  பழம் பாலில் விழுந்தால் ம தி மு க மதரி சாப்டுவிடுவர்.

 • aravind - chennai,இந்தியா

  அந்த பழம் எந்த பாலில் விழுந்தாலும் உபயோகம் இல்லை

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சாலிக்ராமம் என்ன சான்ப்ரன்சிஸ்கோ பக்கத்திலா இருக்கிறது ஒரு ரைட் ஒரு லெப்ட் அப்பறம் ஸ்ட்ரைட், போய் ணங்..ணங்..ன்னு அவரு வீட்டு காலிங் பெல்லை அமுக்கலாமே..

 • Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்

  பழம் நழுவி பாலில் ? விழ கருணா???நிதி காத்திருக்கிறார் கிழம் நழுவி தான் பாழ்படுத்திய கிணற்றில் .... தமிழ்நாடு ஏங்கி தவிக்கிறது

 • Venkat - chennai,இந்தியா

  பழம் கனிவது இருக்கட்டும்.....கீழே உள்ள பால் திரிந்து கெட்டு துர் நாற்றம் வீசுது....அதில் விழுந்தால் பழம் பணால்.....பாலை சாக்கடையில் கொட்ட வேண்டும்....அதில் விழுந்தால் பாலோடு பழமும் சாக்கடையில் கொட்ட வேண்டியதுதான்...

 • Sathya - Chennai

  What type of leader this guy is. At this age too wants position and for that he is ready to do anything. This also show he doesn't have confidence on himself and his party. Feel pity for him.

 • Shanu - Mumbai,இந்தியா

  பழம் விழுந்தால் மீண்டும் எழும்ப முடியாது தேமுதிக விற்கு.

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  காத்திருந்து காத்திருந்து பால் திரிந்து விடும். அதுதான் உண்மை. விஜயகாந்த்தைப் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக கேலி பேசி நகைக்கிறார்கள். ஆனால், அவருக்காகத் தான் காத்திருக்கிறார்கள். இதில் யார் புத்திசாலி. ? கூட்டணி அமைத்துக் கொண்டு தீ மூ கா தோற்கும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதுடன், அவர்கள் வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் உள்குத்து செய்து, அவர்கள் வெற்றி பெறவிடாமல் தடுத்து, ஓட்டைப் பிரிப்பதற்கு மட்டுமே அவர்களை உபயோகப் படுத்துவீர்கள் என்பதை அந்த கட்சிக்காரர்கள் அவரிடம் தெளிவாக சொல்லி விட்டார்களே...............அது அவர்களுக்குத் தெரியாதா. இதே போன்று இன்னொன்று, எனது அண்டை வீட்டுக் காரர்களில் ஒருவருக்கு மகன் உண்டு. அவன் விழித்துக் கொண்டே கனவு காண்பவன். நான் தான் சயன்டிஸ்ட். நான்தான் சிறந்த பாடகர், நான்தான் சிறந்த நடிகர், நான்தான் சிறந்தமுறையில் பெரிய பெரிய பாம்புகளை பிடிப்பவன். என்று இதுபோன்று, டீ வீ யில் பார்பனவற்றை எல்லாம் கற்பனையாக பேசி நடந்து காட்டி நடப்பான். தந்தைக்குப் பொறுக்கவில்லை. அவரும் தன் மகன் திறமை சாலிதான் என்று கற்பனையில் திளைத்தார். 3 ம் வகுப்பு படிக்கும் அவன், கிளாஸ் லீடர் என்ற கோதாவில், சத்தம் போட்டு அலம்பல் செய்யும் பையன்களை வாத்தியாரிடம் காட்டிக் கொடுக்காமல் இருக்க, பென்சில் ரப்பர் போன்றவைகளை அன்பளிப்பாகப் பெற்று, வீட்டில் அதை மலைபோன்று குவித்து வைத்து சந்தோஷப் பட்டான். பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்து அவனை சஸ்பண்ட பண்ணி விட்டு மாறுதலாகி போய்விட்டார். புது தலைமை ஆசிரியரிடம் வித விதமாக கெஞ்சியும் காரியம் கை கூடவில்லை. மற்றவர்கள் இந்த சம்பவத்தை மறக்க, வீட்டுக்குள்ளேயே கலர் பலப் செட்டிங் செய்து மேடை அமைத்து, இருக்கின்ற சிறு ஹாலில் மூலைக்கு மூலை தனக்குத்தானே பேசிக்கொண்டே நடக்கும் படி செய்து துக்கத்தை மறக்கச் செய்தார். அடுத்தவர் என்ன நினைத்தால் என்ன..... ..... இதைவைத்து பள்ளியின் சம்பவத்தை மாற்றமுடியுமே என்று நினைக்கிறார். பாவம். அண்டை வீட்டுக்காரர்கள் பள்ளி நிகழ்ச்சியை மறக்கவில்லை. அதே நேரத்தில், ஓசியில் கிடைக்கும் தீனியுடன் இதையும் ரசித்து கைதட்டி உற்சாகப் படுத்துகிறார்கள். இதைவைத்து, அண்டை வீட்டார்கள் பள்ளி நிகழ்ச்சியை மறந்து விட்டார்கள். இனி புதிய தலைமை ஆசிரியர் நம்கைக்குள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். கற்பனைக்கு பஞ்சமா என்று தூரத்து வீட்டுக் காரர்களும் கேட்கிறார்கள்.

 • Tamilselvan - Chennai,இந்தியா

  கேப்டன் முதல்வர், மஞ்சள் துண்டு துணை முதல்வர், சுடலை இலாகா இல்லாத அமைச்சர். விஸ்கி காந்து கட்சிக்கு இரு நூறு இடம். மற்றவர்களுக்கு மீதம் உள்ள இடம். இதுக்கு சம்மதித்தால் பாலும் பழமும் விளையாட்டு விளையாடலாம். நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா ???

 • sardar papparayudu - nasik,இந்தியா

  திமுக தலைவர் : ராகம் பீம்ப்ளாஸ் எப்படி பாடினாரோ பாஜாகா மற்றும் மநகூ கட்சி அடியார் அப்படிபாட நான் ஆசைகொண்டேன் கப்டனே தமிழ் இசையும் , பொன்னாரும் , வைகோவும் ,திருமாவும் பொருளுணர்ந்து உன்னையே || முரளிதர ராவும் , இவீகே இளங்கோவும் அருமை கருப்பையாவும் வீரமணியும் கருணை கடல் பெருகி வாக்கு வங்கியினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் எப்படி பாடினாரோ அடியார் அப்படிபாட நான் ஆசைகொண்டேன் கப்டனே பொருளுணர்ந்து உன்னையே || கருணை கடல் பெருகி காதலினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் எப்படி பாடினரோ அப்படிபாட நான் ஆசைகொண்டேன் கப்டனே

 • Venkat - chennai,இந்தியா

  அய்யா பாத்துக்குங்க....பழம் ரொம்ப கனிஞ்சு அழுகிப் போகப் போகுது........

 • Tamilselvan - Chennai,இந்தியா

  விஸ்கி காந்தி பழம் என்கிறாரா? தாத்தா உண்மையில் அவர் பழம் தான் உங்கள் நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்று. பழத்தை பார்த்து வாயை பிளந்து கொண்டு இருக்கிறார். ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • samy - singapore,சிங்கப்பூர்

  வயசானாலும் இந்த குறும்பு விட்டுப்போகலையே...

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  விஜயகாந்த் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் ...அண்ணியும் கொஞ்சம் மனசு வைக்கணும் ...பாவம் தள்ளாத வயதில் இந்த அளவு கெஞ்சுகிறார் ..அவரை ரொம்பவும் சோதிக்காமல் உடனே அவரை போய் சந்தித்து கூட்டணியில் இணைந்து அவரின் கடைசி ஆசைய நிறைவு செய்து வையுங்கள் ...சும்மா ஒன்னும் செய்ய வேணாம் ...100 சீட் துணை முதல்வர் பதவி என்று நீங்கள் ஆசப்படுவதை கொடுப்பார் ...இதுக்கும் மேல் கெஞ்ச விடுவது உங்களுக்கே பாவமா தெரியலையா ?

 • kmish - trichy,இந்தியா

  நீங்க எங்க பழம் கனியிற வரைக்கும் விடுவிங்க , காயா இருக்குறப்பவே பறித்து சாப்பிட்டு விடுவிங்க

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  பழம் பாலில் அதுவாக விழாது. அதை எடுத்து யாராவது ஒருவர் பழத்தில் போட வேண்டும். எது எப்படியோ DMK வின் கனவு பலிக்க போவதில்லை. ஏனெனில் கேப்டன் கூட்டனி பற்றி மே 19 க்கு பிறகு முடிவேடுக்க போவதாக தற்போதைய செய்தி.

 • sardar papparayudu - nasik,இந்தியா

  காங்கிரஸ் மாதிரி டிமாண்ட் இல்லா பூவம் பழம்னா டக்குனு விழும், இது ஆளாளுக்கு ஆளா பறக்கிற காஸ்ட்லி பேயம் பழம், சிரமம் அதிகம் . ஆனா கிடைச்சா தோல உரிசிட்டு நாம மடக்குனு உள்ள தள்ளி ஜீரணிசிடலாம்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் முடிந்து விட்டது என்கிறார் .ஒரு வேளை விஜயகாந்துடன் கூட்டணி அமைந்தால் அவருக்கு கொடுக்கப்படும் தொகுதிகளுக்கு நேர்காணலில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களின் கதி என்ன? அவர்கள் அமைதியாக இருப்பார்களா? பழம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை. புளிப்பு ரகமாக இருந்து பாலில் விழுந்தால் பால் திரிந்துபோகும் என்பது முத்தமிழ் வித்தகருக்கு தெரியாதா?

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல என திமுக -தேமுதிக கூட்டணி குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளாரே

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  சட்டசபைக்கே போகாதவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  கருப்பு எம்ஜியார் வந்து உட்கார்ந்த பிறகு...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கனி கனிஞ்சி திகார்ல விழும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாட்டி இதுபோல ஒரு பேட்டி குடுத்தாங்களா ?

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பதவிக்காக இன்னும் என்ன வேணாலும் பேசுவார் அகப்பட்டு கொண்டால் அவ்வளவுதான் , அகப்படவில்லை என்றாலும் அவ்வளவுதான் கேப்டன் அவர்களே உஷார், உஷார்

 • Venky - Pune India - Chennai,இந்தியா

  பழம் அல்ல தல அது பல்லி...

 • Ps Narasimhan - Chennai,இந்தியா

  இலவு காத்த கிளி போல காத்திருக்கிறார்.

 • kmish - trichy,இந்தியா

  கனிந்த பழம், பால் இது மாதிரி இந்த வயசிலயும் சும்மா சூப்பரா உதாரணம் எல்லாம் சொல்றிங்க , நீங்க பேசாம சில விதமான படங்களுக்கு கதை திரை கதை வசனம் எல்லாம் எழுதிநிங்கனா படம் சூப்பரா ஓடும் , அத விட்டு இன்னும் அரசியல் இருந்து தானும் படுக்காம தள்ளியும் படுகாமா எல்லாத்துக்கும் சோதனை கொடுத்து கொண்டு இருக்கிங்க

 • Nellai Vendhan - Tirunelveli,இந்தியா

  ஒருவரை பதவி இந்த அளவுக்கு தாழ்ந்து போக செய்வதை காணும் பொழுது அருவருப்பாக இருக்கிறது. இதில் இவரை சாணக்கியன் என்று சொல்வது அந்த பெருமகானுக்குத் தான் இழுக்கு. தன் மகனுக்கு கூட முதல்வர் பதவியை விட்டுத்தர மறுக்கும் ஒரு பேராசை பிடித்த ஒரு மனிதரை நினைக்கும் போது குமட்டுகிறது. பதவிக்காக தான் பெற்ற மகளையே இல்லை என்று கூசாமல் கோர்ட் படி ஏறி சொன்ன இந்த மஞ்சள் துண்டார் தன் கடைசி காலத்திலும் பதவி பதவி என்று பித்து பிடித்து அலைவது வெட்கக் கேடு.

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  பழம் கணிந்துகொண்டிருக்கும் வேளையில் அணில் கடித்தலோ, பறவைகள் கடித்தாலோ வீணாகிவிடுமே அல்லது அழுகி விட்டால் யாருக்கும் உபயோகமில்லை.அப்போது என்ன செய்வார்களோ?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அட ஏம்பா .... தாத்துவை நோண்டிக்கிட்டு .... கனிஞ்ச பழமா பார்த்து லவட்டிக்கிட்டு வந்தாத்தான் பழச்சுவையின் அருமை புரியும் .....

 • prasad - Coimbatore

  பாலோ பழமோ ..,ஆனால் இந்த எலக்‌ஷன்ல திமுக வுக்கு பால் தான்

 • karunchilai - vallam,இந்தியா

  அழுகியக் கனிகளுக்குப் பஞ்சம் இல்லையாம்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நமக்கு நாமே திட்டத்தால் திமுக அசுர பலம் பெற்ற பின்னரும் தேமுதிக கூட்டணிக்காக காத்திருக்கும் நிலையில்தான் திமுக இருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்பனும் மவனும் கட்சியை வளர்த்த விதம் இதுதான்.

 • Vijay - Coimbatore,இந்தியா

  இதை கேட்டால், "இலவு காத்த கிளி" கதையை வடிவேலு சொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது.. வெடிக்க போறது பஞ்சு மட்டும் இல்ல,, தலீவரோட அஞ்சு விரல் சின்னமும்தான் ஹய்யோ ஹய்யோ ..

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  வி.யுடன் கூட்டணிக்காக கிழம் எத்தனை தடவை வேண்டுமானாலும் காலில் விழும்போல் இருக்கிறது. தெரியாமல் தான் கேட்கிறேன். வி.யும் ஊர் அறிந்த திருட்டுகூட்டமும் ஒன்றாக மக்களிடம் பொய் ஒட்டு கேட்டால், மக்கள் காலில் கிடப்பதை கழட்டி அடிக்க மாட்டார்கள்? நேத்து வரைக்கும் இவன் அவனை திருடன் என்று மேடைக்கு மேடை பேசினான்...அவனோ ச்டுண்டு நடிகர் அப்படி இப்படி என்று கீழ்த்தரமாக விஸ்கியை விமரிசித்தான்...

 • Raj - bangalore,இந்தியா

  வராவிட்டால் சி சி இந்த பழம் புளிக்கும் என்பார்கள்

 • sudalin and kanimoli - guntur

  நாசமா போச்சு

 • G.Rajmohan - CHENNAI,இந்தியா

  To Mr.Sun (Stalin) Forget everything and rise

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அழுகிய கனி ருசிக்காது....... நாறும்......

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இலவு காத்த கிள்ளை போல மகன் மட்டும் தான் காத்திருக்க வேண்டுமா?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பழம் பாலில் வீழ்ந்தாலும் , பால் பழத்தில் கவிழ்ந்தாலும் அதை பரிகிடுவோருக்கு ஆபத்துதான் பினாமிகள் வேறு மக்கள் நலம் பேரில் காவடி தூக்குறது . நல்லவர்கள் அரசியல் நுழைந்திட வழி இல்லாமல் ஒதுக்குகிறார்கள் . கூட்டணி என்ற பேரில் ஆண்டு அலை கழித்தவர்கள் அதிகர்ரம் பெற துடிகிரர்கள் . ஊர் முதல் உலகம் வரை கொள்ளை அடித்தவர்கள் , இன்னும் நேரமிருக்கு ஆள்வதற்கு என்று ஒட்டு வாங்க காத்திருகிறார்கள். பாவம் இந்த கூத்தில் , உண்மை ,நேர்மை ,தியாகம் எல்லாம் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கு . களோபாரம். தேர்தல் என்று ஒரு வேகம் , விவேகம் தடுத்து பணம் புகுந்து , கூட்டம் சேர்த்து கொள்ளை அடிக்க துடிக்கிறது. இதை பார்த்துகொண்டு பாமரன் வாக்குகளை வைத்துகொண்டு தகுந்த வேட்பாளர் கிடைக்காமல் தவிக்கிறான் . இதுல தேர்தல் அறிக்கை என்றொரு மாய மான் காட்டுவார்கள் . பாவம் ராமர்கள் சீதை துறப்பார்கள் இவர்கள் மினுக்கு கண்டு . நல்லோர் நல்லோருக்காக அறியணை ஏறும் காலம் வருமா இந்த கூட்டு கொள்ளை முறையில் . 5 ஆண்டுக்கு முன் ஆயோக்கியர்கள் என்று ஒதுக்கப்பட்டோர் , இன்று சேர்வார்கள் கூட்டு . எப்படி இவர்கள் நல்லவர்கள் ஆனார்கள் . எப்படி ஒரு தனிமனிதன் 234 தொகுதிக்கு கூட்டு பேசுவார் , இது கூட்டு பேரம் ? மகனுக்கு மந்திரி பதவி , மச்சானுக்கு அமைச்சர் பதவி , 600 கோடி என்று ஒரு தனி மனிதன் எப்படி அரசியல் தரகு பேச முடிகிறது .இவர்களை நம்பும் ,மாநாடு செல்லும் பாமர தமிழன் எப்போது காண்பான் வளர்ச்சி?

 • sardar papparayudu - nasik,இந்தியா

  பசும் பாலா

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  உலுக்குன உடனே விழும். சீக்கிரம் பால் கேட்டு விடுவதற்குள் செய்யவும். வாழ்த்துகள்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தேமுதிகவும் திமுகவும் தேர்தல் சமரசம் - தேமுதிகவுக்கு 150 திமுக, காங். உதிரிகளுக்கு மீதி சீட்டுகள். வெற்றிபெற்றால் காப்டன் முதல்வர் கருணா துணை முதல்வர் என்று செய்தி வந்தாலும் வரும்..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  தலைவர், மகனுக்கு இன்று [ நிறைஞ்ச அம்மாவாசை நாளில் ] நேர் காணல் எடுத்தாராமே.. நாலு கேள்வி நச்சுன்னு கேட்டாராமே... இவர்கள் கேட்ட கேள்வி பதில்கள் இப்படி இருந்திருக்குமோ?.. கேள்வி 1. ஊழலில் சிறந்தது எதுவோ?.. பதில் - 2G யும் தங்கச்சியும் .....2. கமிஷனில் சிறந்தது எதுவோ?.... சர்காரியாவும் ஜெயினும்..... 3. ஆப்பில் சிறந்தது எதுவோ?.. நான் உனக்கு வைக்க போகிற ஆப்பும், நீ எனக்கு வைக்க நினைக்கிற ஆப்பும்..... 4. கூட்டணியில் சிறந்தது எதுவோ?... தண்ணிவண்டியும் தள்ளுவண்டியும்.... [ தலீவர் மனதுக்குள் " ஆஹா அற்புதம்... என்னே என் மகனின் அறிவு?... நீ தாண்டா நிரந்தர துணை முதலமைச்சர்"... ]

 • abu lukmaan - trichy,இந்தியா

  பிரச்சினையே கருத்து கணிப்பு தான். தி.மு.க vs அ.தி.மு.க பலம் ஏறக்குறைய சமம். அதனால் தான் காந்துக்கு அடித்தது லக். காரியங்கள் விதி பிரகாரம் தான் நடக்கும். இதில் மனிதர்கள் செயற்கையான செயல் பங்கு என்ன என்பதற்கு தான் சுவர்க்கம் ,நரகம் கிடைக்க போகிறது.

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  கடைசியில் - "கிளிக்கு ரெக்கை முளச்சுருச்சு- ஆத்த விட்டு பறந்து போயிடுச்சுன்னு" - புலம்ப போகிறார்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இவ்வளவு பெரிய கட்சிக்கு இந்த நிலைமை தேவை இல்லை, இதைவிட தனித்து நின்று தோற்கலாம், அல்லது ஸ்டாலின் கையில் முழு பொறுப்பையும் தந்துவிட்டு ஒதுங்கலாம்,

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  பழம் பாலில் விழுந்த பிறகுதான் சொல்ல முடியும் என்று சொல்லாமல் விட்டு விட்டார்.

 • Nisha Rathi - madurai,இந்தியா

  பழம் கனியும் ஆனால் கொட்டை மட்டும் தான் கிடைக்கும்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது: பாஜக தலைவர் முரளிதர் ராவ்//இதுவும் கூட அதே அசிங்கம் தான், ஒன்னுக்கு ஒன்னு, ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாமே தொங்க போட்டு அலையும் வகைதான்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மனைவிக்கும் மச்சினனுக்கும் பதவிக்காக இப்போதே டெல்லி பறக்க ஆரம்பித்து விட்ட விஜயகாந்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  கையில் இருப்பது பாலா ?அல்லது கள்ளா?

 • karunchilai - vallam,இந்தியா

  கனியுமா அல்லது வெமபுமா? காலம் பதில் சொல்லும்.

 • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

  திரு.கருணாநிதி அவர்களே ,இப்படி பேசி கொண்டு இருப்பதை விட ,நீங்கள் பராசக்தி படத்தில் சங்கம் ஒன்று துவங்குவதற்கு வசனம் எழுதி இருந்தீர்கள் அல்லவா? பேசாமல் அந்த சங்கத்தை இப்போது ஆரம்பியுங்கள்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பளம் பழத்தை "கனிய" வைத்து விட்டது போல. .தொளபதியால் முடியாதது பழத்தால் முடிந்தது..தலீவர் கையில் ஏந்தியுள்ள பால் குவளையில் வந்து பழம் விழ வேண்டிதுந்தான்..அப்பால ஜீரணம் ஆயிடும்..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  (அடுத்த அறிக்கை அல்லது பேட்டி) ச்சே சீ இந்கப் பழம் புளிக்கும்? ( பின்குறிப்பு இந்த பேட்டியில் மட்டும் கேள்வியும்நானே பதிலும் நானே இல்லை )

 • Suthir Prabhu - Madurai,இந்தியா

  தி மு க வேண்டாம் ......

 • Saravanan - Doha,கத்தார்

  மிக மிக நன்று...இந்த கூட்டணி வெற்றி கூட்டணி....தமிழ்நாடு மக்கள் இந்த கூட்டணியை 100% ஆதரிப்பார்கள்...ஏனென்றால் அவர்களுக்கு மறதி கொஞ்சம் அதிகம்...:)

 • GG.RAJA - chennai,இந்தியா

  தி.மு.க. பால் அல்ல அது விஷம். அதில் விழுவது பழமானாலும் காயானாலும் விஷமாகத்தான் மாறும். மக்கள் அதை விட்டு விலகியே இருக்க வேண்டும்.

 • namaku nam Ram - chennai

  அட கடவுளே திமுக வோட நிலைமை இப்படியா ஆகனும்

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  // பழம் கனிந்து வருகிறது . பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை // ..இந்த கருணாநிதியின் பதிலில் ஏக்கம் என்ற சொல்லை சொருகி அடிமைகளுக்கு தினமலர் தீனி போட்டுள்ளது...உண்மையில் திமுக கூட்டனியில் தேமுதிக இணையுமா என அம்மையாரே கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கொண்டு திரிகிறார்

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  அழுகிய பழம்....

 • இராஜேந்திரன் - Dubai

  திமுகா தேமுதிகாவிற்கு காத்துகிடப்பதைவிட(பாலில் பழம் விழும் என்று காத்துகிடப்பதை விட ) சட்டென்று டேஸ்ல் விழுந்துவிட வேண்டியது தானே பதவி ஆசை இன்னும் விடவில்லை? கேவலமாக உள்ளது. இவர்களை நம்பி ஓட்டு போட்டால் பதவிக்காக இலங்கை தமிழனை கொத்து கொத்து கொள்ளளும் பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் இங்கும் தமிழனை கொன்று குவித்துவிடுவார்கள் நாங்கள் பட்டது போதும் இன்னும் நீங்கவில்லை அந்த நினைவுகள் இன்றும் கேட்டுகொண்டே இருக்கிறது முள்ளிவாய்கால் சம்பவம்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  பழம் நழுவி பாலில் விழும், ஆனால் யார் கையில் உள்ள பால் என்றுதான் தெரியவில்லை.

 • Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா

  பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல: கருணாநிதிக்கு வைகோ பதிலடி

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  பிஜேபி யில் விஜயகாந்தை இனி கெஞ்ச கூடாது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள்...ரோஷமுள்ளவர்கள்.

 • cheenu - Atlanta USA

  இதை விட திமுகவை அழித்துவிடுங்களேன்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பழம் நழுவியோ இல்லை வழுக்கியோ இல்லை தடுமாறியோ பால் சொம்பில் விழாதா என்று ஏங்குகிறார், விழுந்ததும் ஜீரண மண்டலத்தில் சென்று மறைந்துவிடுவோம் என்று பழத்துக்கு பழைய நினைவு வருகிறது..

 • Maddy - bangalore,இந்தியா

  பழம் கனிந்துவிட்டது ஆனால் பாலோ கெட்டுவிட்டது அதனால் தான் பழம் கீழே விழாமல் மேலேயே தொக்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது...

 • SEETHARAMAN - chennai,இந்தியா

  அது பழமல்ல , வெம்பிப்போன காய் உங்கள் கையிலிருப்பது திரிந்த பால் . உண்ணவே உதவாத இரண்டும் போகவேண்டிய இடத்திற்கு தேர்தலுக்குப் பின் போகும் .

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  எப்போ விழும்னு கனிக்கிட்ட கேளுங்க அச்சைன்மன்ட் குடுத்தது மறந்து போச்சா

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  பழம் விழப் போவது பாலிலா அல்லது தீயிலா?

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  க​லைஞர் அவர்கள் ஏக்கம் என்ற த​​லைப்​பே ஒரு முரண்பாடானது. திரு க​லைஞர் அவர்கள் பல அரசியல்க​ளம் பல கண்டவர் வாழ்க்​கையில் பல ஏற்ற இறக்கம் கண்டவர். அரசியலில் ​வெற்றி ​தோல்விக​ளை சரிசமமாக பார்ததவர். சட்டமன்றம் முதல் ​​பொது​மே​டைவ​ரை அரசியல் நாகரிகம் க​டைபிடித்தவர். எந்த கட்சித​லைவர்களும் எளிதாக அனுகக்கூடியவர். யா​​ரையும அவமதித்தில்​லை. நாகரிகம் கருதி அவர் சரியான வார்​தையி​னை பயன்படுத்தியுள்ளார். திமுகவுடன் இந்த ​தேர்தலில் களம் காண்பதுதான் ​தேமுதிக ​பொருத்தவ​ரை சாலசிறந்தாக இருக்கும். அதற்கான காரணங்கள் திரு விஜயகாந்த் அவர்கள் க​லைஞர் அவர்களுடன் தி​ரைத்து​றையில் இருக்கும் ​போது ​நெருக்கமாக இருந்தார் ஆனால் அரசியலில் ​​நெருக்கமாக பயணத்தில்​லை இந்த மு​றை அதற்கான சந்தர்ப்பம் கி​டைத்துள்ளது. இன்​றைக்கு தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலில் மூத்த அரசியல் த​லைவர் என்ற இடத்திலும் க​லைஞர்தான் இருக்கிறார். திரு விஜயகாந்த் அரசியல் பயணத்தில முதலில் தனித்தும் அதிமுக​வோடும் ​சென்றமு​றை பிற கூட்டணிக​ளோடும் பயணித்துள்ளார். மூன்றாவது மு​றையாக திமுக​வோடு பயணித்தால் நிச்சயம் நல்ல​தொரு அனுபவ​ம் கி​டைக்கும். வருங்கால அரசியலுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்​றைக்கு தமிழகத்தில உள்ள அ​னைத்து அரசியல் த​லைவர்களும் குறிப்பாக திரு ராமதாஸ், திரு திருமாவளவன், திரு ​வை​கோ, இடதுசாரித​லைவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக த​லைவர்கள் அ​னைவரும் க​லைஞ​​ரோடு அரசியல்களத்தில் பயணித்தவர்கள்தான். அதிமுகவின் இன்​றை த​​லை​​மையோடு பயணித்தவர்கள் யாரும் அரசியல் களத்தில முன்​​னேறியதாக சரித்திரம் இல்​லை அதற்கு பல உதாரணங்க​ளை ​சொல்லலாம். கடைசியாக ஒ​ரே ஒரு கருத்​தை முன்​வைக்கின்​றேன் ஆனால் திமுக த​லை​மை​யோடு பயணித்தவர்கள் ​எல்​லோரும் அவ​ரோடு ​நேருக்கு​நேர் விவாதம் ​செய்யும் அளவிற்கு முன்​னேற்றம் அ​டைந்துள்ளார்கள் என்ப​தே இதற்கு சரியான சான்று.

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  கனிந்து எப்போ விழும் என்று எளவு காத கிளியாக மஞ்ச துண்டு காத்திருகிறது. 94 வயது தாத்தா இன்னும் பதவி சுகத்திற்கு யெங்கிஉல்லது. இந்த ஆளை போன்று தில்லை லங்கடி ஊழல் பேர்வழியை நினைத்தால் சிரிப்பு வருது. 5 வருஷம் பதவி சுகம் கிடைக்காமல் நாக்கை தொங்க போட்டு கொண்டு திரியம் இந்த ஆளுக்கு நல்ல பாடம் கற்பிக்கா வேண்டும். சொந்த காலில் நிற்க தகுதி இல்லை. இப்போது நாக்கு துருத்தி இடம் தூது விட்டு காத்து இருக்கிறது. மிஸ்டர் விஜய் காந்த். இந்த கிழடு நரியுஇடம் ஏமாந்து போய் உன்னோட தலைய கொடுக்காதே. பிறகு வருத்த படாதே. பதவியில் துணை முதல் அமைச்சர் கொடுப்பதை உறுதி செய். உன்னோட ஆட்களை மஞ்ச துண்டு வலை விரித்து உன்னை கவில்பார். அதில் இந்த ஆளு கைதேர்ந்த ஆள். உன்னோட கை வைச்சு உன்னோட கண்ணை குத்துவான்.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  காக்காயிடமிருந்து வடை பறிக்க நரி செய்யும் தந்திரம். காக்காய் உஷார்.

 • Jayakumar Natarajan - Trichy,இந்தியா

  அய்யா கலைஞர் அவர்களின் அரசியல் அனுபவத்திற்கு , இன்று மிகவும் சாதாரண 10 சதவித ஒட்டு வைத்திருக்கும் தே மு தி க விற்காக காத்திருப்பது மிகவும் அவமானம் . எனவே தயவுசெய்து தே மு தி க வை தனியாக விடுங்கள் .தேர்தலுக்கு பிறகு பார்ப்போம் கட்சி இருக்குதா ....இல்லையா என்று பார்ப்போம் ....அவர் கிங்காவே இருக்கட்டும் .....

 • chails ahamad - doha,கத்தார்

  திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சாணக்கியர் , அவரது வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் , தேமுதிக திமுக வுடன் கூட்டணி என்ற நிலைப்பாடு எடுப்பதே தமிழக மக்களுக்கும் , தேமுதிக வுக்கும் நன்மைகள் பயக்கும் .

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  ஏற்கனவே விஜயகாந்தும் அண்ணியாரும் ரொம்ப ரொம்ப கனவில் இருக்காங்க ...இப்ப உங்க பரிதாப நிலைமை நல்ல புருஞ்சு போச்சு ...இறக்கப்பட்டு 100 சீட் துணை முதல்வர் பதவியோடு நிறுதிக்குவாங்க

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  விஜயகாந்திடம் கெஞ்சும் அளவுக்கு நிலைமை பரிதாபமா இருக்கும்னு நினைக்கல .....எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்

 • sundar - Hong Kong,சீனா

  அழகிரி பழம் அழுகிவிட்டதா? இல்லை பழுக்குமா?

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  பரிதாபம் பரிதாபம் .....வேற என்ன சொல்ல ......

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " தலீவரே ... அந்த பழம் கனிந்து பாலில் விழ பூவம் பழம் இல்ல தலீவரே... பலாபழம்... கனிந்து விழுந்திச்சு... அவ்வளவு தான்...... அதனால தம்மாதுண்டு கிண்ணத்துல பாலோடு நிக்காம, பெரிய கொப்பரையில பாலோடு நிற்கவும்...... "

 • ravi - chennai,இந்தியா

  இவர் சொல்லும் வசனங்கள் எல்லாமே இவருக்காகவே எழுதினா மாதிரி இருக்கு - இவருக்கு பிடிக்காதவுங்க யாராவது மணடபத்தில எழுதி கொடுத்து இவர் வந்து இங்கு படிக்கிறாரா என தோன்றுகிறது - இவரோ ஒரு வகையில் கனிந்த (அரசியல் ஆசை கனியாத) பழம் - இவரே எப்படி அவர் கட்சியை பால் என்பார் - அது தான் புளித்து தயிராகி - நாளாகி கீழே கொட்டும் நிலைக்கு உள்ளதே - மோர்குழம்பு கூட வைக்க முடியாது - என்ன இவர் எது பேசினாலும் எடக்கு மடக்காகிறது - தேமுதிக இவருடன் சேர்ந்தால் இரண்டு கட்சிகள் மூடு விழா தான் - தேமுதிக பாஜாகவுடனோ நால்வருடனோ சேர்ந்தால் மரியாதை ஓரளவு மிஞ்சும் - இல்லாவிட்டால் நாலும் உனக்கு இருக்கா என்பது நாளும் 70 நாட்கள் மக்கள் கேட்பார்கள் - ஜெய் ஹிந்த்

 • Indian - chennai,இந்தியா

  சரிதான்....மக்கள் நல கூட்டணி முதலில் அவர்களை நலத்துடன் பார்க்கட்டும். திமுக ,அதிமுக தீய கட்சிகள் என்றால் மக்கள் நல கூட்டணியில் இதுவரை இந்த தீய கட்சிகளுடன் கூட்டணி வைக்காத ஒரு கட்சியை சொல்லட்டும்.....? மக்களை ஏமாற்ற பல வழிகளில் கிளம்பிட்டாங்க சைகோ தலைமையில்........ மாற்றம் வேணும் என்பது உண்மைதான்....ஆனால் இதுவரை சகதியில் உருண்டவர்கள் மாற்றம் என்ற பெயரில் குளித்து , பவுடர் போட்டு வந்ததும் மறுபடியும் சகதியில் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.....? பாமக-ஏற்கனவே இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர்கள் மதிமுக-ஏற்கனவே இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர்கள் கம்முனிஸ்ட்-ஏற்கனவே இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் - திமுக வுடன் கூட்டணி வைத்தவர் நாம் தமிழர் சீமான் - ஆதிமுக வுடன் தேர்தல் பணி செய்தவர் யார் நல்லவர்கள்...? ஒருவனும் இல்லை. ஆகையால் மக்கள் கண்டிப்பாக இந்த இருகட்சிகளின் (திமுக,அதிமுக ) ஆட்சியை விரும்புவார்கள்.....மீதம் எல்லாரும் "எட்டப்பன்கள் " என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்

 • Sundar - Chennai,இந்தியா

  ரொம்ப கனிந்தா அழுகிவிடும்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  தலைவர் இப்போ கெஞ்சுற மாதிரி தான் தெரியும், ஆனால் தலைவரின் மைண்ட் வாய்ஸ். மவனே தேர்தல் முடியட்டும், அப்புறம் வச்சுக்குறேன் கச்சேரி. செங்கண்ணன் கொஞ்சம் சூதானமா இருங்க. கட்டுமரம் ரொம்ப ஆபத்தானவர். அதிக தொகுதிகளை கொடுக்கிறேன் என்று ஆசை காட்டி கூப்பிடுவாரு, துணை முதல்வர் கூட கொடுக்கிறேன் என்று கூப்பிடுவாரு (உங்களை ஜெயிக்க விட்டால் தானே) அப்புறம் உங்க ஓட்டு மட்டும் வாங்கிட்டு, நீங்க போட்டி போடுற தொகுதிகள் அனைத்திலும் உள்ளடி வேலை செஞ்சி தோற்கடித்து விடுவாரு, அப்படியும் இல்லை என்றால், எதற்கும் உதவும் என்று உங்களை ஜெயிக்க விட்டுட்டு, மைனாரிட்டி ஆவது ஜெயிச்சு வரணும் என்று நினைப்பரு, ஜெயிச்சு வந்ததுக்கு அப்புறம், திடீர்னு ஊடகங்களில் தேமுதிக அதிருப்தி MLA க்கள் என்று செய்தி வரும், உடனே என்னடா இப்போ தான் தேர்தல் முடிந்தது, அதற்குள் தேமுதிக கட்சியில் அதிருப்தி MLA க்களா என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்கும் போதே உங்கள் MLA க்கள் அனைவரும் தலீவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள், அப்புறம் சொல்லவே தேவை இல்லை, மைனாரிட்டி திமுக மஜாரிட்டி ஆகிவிடும், அந்த திறமை கட்டுமரத்திடம் நிறையவே உள்ளது. இப்படி ஒவ்வொரு கட்சியா உடைத்து, பல முன்னணி தலைவர்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து குடும்பத்தை இன்று பிரதானம் படுத்தும் திறமை எங்கள் தலீவர் கட்டுமரதிடம் மட்டுமே உள்ளது. ஜெயா உங்களுக்கு எதிர் கட்சி அந்தஸ்து கொடுத்தார், ஆனால் கட்டுமரம் கொடுக்க மாட்டார், உங்களை வைத்து கொண்டு நிம்மதியாக 5 வருடம் ஆட்சி செய்ய முடியாது என்று கட்டுமரதிற்கு தெரியும், அதனால் உங்கள் கட்சி வெற்றி பெரும் அணைத்து MLA க்களும் தேர்தல் முடிந்த கையோடு அதிருப்தி MLA க்கள் ஆக்கபடுவார்கள். அதனால் கட்டுமரதிடம் உஷாராக இருங்கள். முடிந்தால் பாண்ட் பத்திரத்தில் கை எழுத்து வாங்கி கொண்டு தேர்தல் கமிஷனில் ஒப்படையுங்கள். மற்றவர்களை கவிழ்ப்பதில், அழிப்பதில் கட்டுமரம் வல்லவர்.

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  அண்ணா துவக்கிய கட்சியை இந்த அளவுக்கு கீழே இறக்கி கேவலபடுத்தி விட்டார், இதுக்கு பேசாம இவரு காந்த் வீட்டுக்கு மொற வாசல் செய்ய போலாம்... 40 வருடம் 50 வருட பாரம்பரிய கட்சி என்று சொல்லி விட்டு இப்படி நேற்று முளைத்த கட்சிக்காக பிச்சை எடுக்காத குறையாக காலில் விழாவும் ரெடியா இருக்கும் இவரை அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும்...

 • Skumar - chennai,இந்தியா

  பகல் கனவு பலிக்காது தலிவா

 • Mr.Zero - Tirunelveli,இந்தியா

  என்ன செய்ய தேமுதிக கூப்பிட்ட உடனே வந்தா அம்மா சொன்ன மாதிரி என்னாலாதான் உனக்கு ஏற்றம்னு நாளைக்கு சொல்லிட்டா.அதான் கொஞ்சம் டீல்ல விடுதாங்க.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அடடா...எவ்வளவு கருத்துக்கள்...என்னே ஆழ்ந்த, அற்புதமான உயர்ந்த சிந்தனைகள்.....தங்க தகட்டில் அச்சிடப்பட்டு வைரத்தால் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் விநியோகிக்கபடவேண்டிய அதி உன்னத மென்மையான பேச்சு.....தீர்ந்தது மக்களின் சந்தேகம்...ஆணி அடித்து Frame போட்டு வீடு வீடாக,,, கடை கடையாக தெருத்தெருவாக கண்டிப்பாக மாட்டப்பட வேண்டும்...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  "கனிந்த பழம் எப்போ விழும்?" - மக்களும் மகன்களும் எதிர்பார்ப்பு..என்பதுதானே உண்மை..

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கருணாநிதி மைண்ட் வாய்ஸ் : "பொறி வச்சிருக்கோம், எப்போ வேண்டுமானுலும் எலி சிக்கலாம்".

 • kavithakannan - Nagerkoil,இந்தியா

  திமுக-தேமுதிக கூட்டணி அமைய கலைஞர் ஏக்கம் அதுவே அமைந்து விட்டால் பலருக்கு போகும் தூக்கம் அத அப்படியே அமைந்துவிட்டால் இவர்கள் வீட்டில் வரும் துக்கம் இதனால் தமிழக அரசியலில் ஏற்படும் பெரிய தாக்கம் இதன்மூலம் தமிழகத்தில் போக்கப்படும் மக்களின் துக்கம் அடிமைகளின் இதுவரை கரை புரண்ட ஊழல் வழக்குகளின் கணக்கு துவக்கம் உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்டவர்கள் இனி காணமுடியாமல் போகும் பேரியக்கம் திமுகவிடம் தஞ்சம் அடைய தேமுதிகவிற்கு ஏனோ தயக்கம் அது நடந்துமுடிந்தால் தேமுதிகவிற்கு பெருகும் பேரின்பம் திமுகவின் ஆட்சியில் இனியும் மக்கள் காணவேண்டாம் மீண்டும் ஒரு செம்பரபாக்கம் திமுகவின் ஆட்சியால் மக்களிடம் ஏற்படும் மகிழ்ச்சி தமிழகம் கொள்ளும் மலர்ச்சி ஊழலிற்கு வரும் தளர்ச்சி பொருளாதாரத்தில் வரும் வளர்ச்சி இளைஞரிடம் உண்டாகும் எழுச்சி மதுவிலிருந்து மீண்டு வருவாள் தமிழச்சி பொய் கூறி மக்களின் மீது தூக்கிவைக்கது இந்த கட்சி அதனால் தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களாட்சி இவை அனைத்தும் நடக்கும்.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  மு. கருணாநிதி என்ற காலாவதி ஆகி போன இவரிடம் பேட்டி என்று .. இதெல்லாம் தேர்தல் நேர டைம் பாஸ் ஏன் இந்த அச்சு, காணொளி ஊடகங்கள் மு. கருணாநிதியை இப்படி தாங்குகின்றன ?? தி இந்து பத்திரிகை, லயோலா, சற்குணம், இப்படி இத்தியாதிகள் ஏன் இப்படி என்று தமிழ் மக்களுக்கு புரியும் தெரியும் மாறன் சகோதரர்கள், ப. சிதம்பரம், காங்கிரஸ் கம்பெனி எல்லாம் இங்கே தானே சங்கமிகின்றன தெரியாதா இது புரியாத தமிழ் மக்களுக்கு தாங்கு தாங்கு என்று தாங்கும் இவர்கள் தமிழ் மக்கள் தரும் ஓங்கி தரும் அடியில் வீழ்ந்து தான்ழ்ந்து போகும் காலம் விரைவில். தமிழ் நாட்டை ஒரு பெண் முதல்வர், தாயை போலே, ஒரு மகளை போலே, ஒரு தலைவியாக அரசு துறைகள், தமிழ் நாடு மக்கள் உரிமை, சீர் செய்து, நலம் தரும் நல் அரசை நடத்தும் போது ஆட்சி மாற்றம் ஏன், வீண் பேச்சு ஏன் ஓன்று சேர்ந்து எதிர்த்தாலும் வெல்ல போவது செல்வி ஜே ஜே மட்டும் தான். விஜயகாந்த் தனியாக நிற்பது தான் சரி மு. கருணாநிதியின் கனிந்த பழம் பேச்சு விஜயகாந்தை பாழ்படுத்தும் பாதாள பேச்சு உஷார் விஜயகாந்த்

 • Soundararajan Ponnusami - chennai ,இந்தியா

  பாலில் விழுந்தவுடன் அப்படியே MDMK வை மொத்தமா கரைச்சு குடிசிடுவார் இந்த தாத்தா , விஜயகாந்த் கொஞ்சம் இல்ல , நீ ரொம்பவே ஜாக்கிரதையாய் இருக்கணும் இந்த மலை விழுங்கி கருணா கிட்ட .

 • Venkii - Chennai,இந்தியா

  தின்னு தீத்துருவான்கப்பா

 • badhrudeen - Madurai,இந்தியா

  பழம் பாலில் விழாது. விழுந்தால் நசுங்கி விடும் இது உறுதி.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  கோல்மால்புரதிற்கு வாங்க பழகலாம், வந்து பழகி பாருங்க என்று கட்டுமரம் ஆசையா கூப்பிடுறாரு, ஏங்க மிஸ்டர் செங்கண்ணன் பெரிய மனுஷன் எவ்ளோ அன்பா கூப்பிடுறாரு, கொஞ்சம் போய் பழகி தான் பாருங்களேன். போங்க செங்கண்ணன், போங்க, போய் பழகி பாருங்க, பிடிச்சா பாருங்க, இல்லை வேண்டாம்னு வந்துடுங்க செங்கண்ணன், பெரியவருக்கு மதிப்பு கொடுங்க. எனக்கு தெரிந்து தலீவர் கட்டுமரம் இது போல கெஞ்சி கூத்தாடி பார்த்ததே இல்லை. உங்களுக்கு அவரு கெஞ்சுரதுல உங்களுக்கு கிரேட் ஏறுது. அப்போவே நண்பர் சமையல்காரன் கைப்புள்ள சொன்னாரு, பாவக்கா சூப்பு கொடுத்துட்டு, தலைவா ரொம்ப கெஞ்சாதீங்க, கெஞ்ச கெஞ்ச ஏறுவாங்க அப்படின்னு, ஆனா தலைவரு நீ சொல்றது கரக்ட் டா கைபுள்ளைநு சொல்லிட்டு, பாவக்க சூப்பு குடிச்சதுக்கு அப்புறம், இல்லடா கைப்புள்ள சில விஷயங்கள் கெஞ்சாம கிடைக்காது, இப்போ கோட்டை விட்டுட்டா அப்புறம் எப்பவும் கிடைக்காதுடா, கெஞ்சி தான் ஆகணும், அப்படியும் மசியவில்லை என்றால் காலில் கூட விழ தயார் டா என்று கைப்புள்ள கிட்ட சொல்லிட்டு, இதுல நீ தலையிடாத டா. இந்தா டா க்ளாஸ் என்று பாவக்கா சூப்பு குடிச்சிட்டு கிளம்பிட்டாரு. இந்த விஷயம் எனக்கு எப்படி தெரிஞ்சது நா, நான் என் நண்பன் கைபுள்ளைய பார்க்குறதுக்கு கோல்மால் புரத்துக்கு போன போது அவங்க ரெண்டு பேரும் பேசுறத ஒட்டு கேட்டுட்டேன். அப்புறம் என் நண்பன் கைப்புள்ள அடுப்படிக்கு போய், இந்த மனுஷன் எவ்ளோ சொல்லியும் கேக்கமாட்டேன் என்கிறார், பட்டா தான் புத்தி வரும், நமக்கென்ன நாளைக்கு வெண்டைக்காய் கூட முருங்கை பூ சேர்த்து சூப்பு வச்சு கொடுத்து நம்ம வேலைய பாப்போம்நு புலம்பினே இருந்தார். நான் தான் போய் கைபுள்ளைய சமாதானம் படுத்தினேன். விடுடா கைப்புள்ள, தலைவர் ஒரு நாள் (மே 19) நீ சொன்னத புரிஞ்சிக்குவாரு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கனியிருப்பக் (காக்)காய் கவர்ந்தற்று . கனி களி தின்னும் நாளே நெருங்கும்போது பிரேமலதா எப்படி சேருவார் ? கனியிருக்கும்வரை திமுகவுக்கு சனிதான்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " வைதேகி காத்திருந்தாள் " - அன்று காந்தம் நடித்த வெற்றிப்படம்.... " கருணாநிதி காத்திருந்தார் " இன்று காந்தம் பார்த்துகொண்டிருக்கும் திகில் படம்...

 • மாதவன் க - திருவாரூர்

  பாலில் பல்லி வீழ்ந்து விடப் போகிறது

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  தலைவரே, எல்லா கடையிலும் தேடி பார்த்துட்டோம்.....இந்த பழம் இல்லையாம்.....ஞானப் பழம் கூட இருக்காம்....நீங்க கேட்கிற பழம் இல்லையாம்.....

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  சீ, சீ, இந்த பழம் புளிக்கும்.....என காப்டன் நினைக்கிறாரோ என்னவோ?....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  தேர்தலுக்கு முன் - " காந்தமே உன்னை கொஞ்சி கூப்பிடுகிறோம்...கெஞ்சி கூப்பிடுகிறோம்.... அஞ்சி கூப்பிடுகிறோம்... குனிந்து கூப்பிடுகிறோம்... பணிந்து கூப்பிடுகிறோம்... கும்பிட்டு கூப்பிடுகிறோம்... மண்டியிட்டு கூப்பிடுகிறோம்... இதுக்கு மேலே எப்படி கூப்பிடவேண்டும்? காந்தமே... காலில் விழுந்து கூப்பிடவும் தயார்.. " .... தேர்தலுக்கு பின் - " உன்னை வெத்திலை பாக்கு வைத்தா அழைத்தோம்?.. சுண்ணாம்பாய் தானே உன்னை நினைத்தோம்... ஆனால் இப்போது வெத்திலை வைக்கிற தங்க கும்பாவையே கேட்கிறாயே?... அழையா விருந்தாளியாக தானே உள்ளே புகுந்தாய்...? .. இப்போது அல்வா கொடுக்கிறோம் ..வேண்டாம் என்கிறாயே?.. .... போக்கிடம் இல்லாமல் தானே புகலிடம் கண்டாய்.. இப்போது கூடாரத்தையே எழுதி கேட்பது கேட்ககூடாத ஒன்றல்லவா?.. கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழங்கதை... குடிகாரன் நட்பு குடியை கெடுக்கும் என்பது தான் புதுக்கதை என்பதனை தமிழன் இன்று தான் புரிந்து கொண்டான் "

 • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

  எழுந்து நின்று எட்டி பறிக்க முடியாத குள்ளநரி...அப்படியே பழம் விழுந்தாலும் தின்று கொட்டை போட்டபின் புளிப்புன்னு தூக்கி எறிவாரு (கொட்டயதான்)...உசார் காப்டன்...உசாரு

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பால் கேட்டுப் போவதற்குள் கனிந்து பழம் விழவேண்டும்.உலுக்கினாள் பழம் உடனே விழுந்து விடப்போகிறது.

 • Sampath - Chennai

  பழம் விழுந்தவுடன் பால் திரிந்துவிடும் ஏனெனில் பால் கெட்டபால் பழமும் புளிப்பு சுவை கூடிவிட்டது திறிந்த பிறகு குப்பையில் எரியவேண்டியதுதான்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  தலீவர் கட்டுமரத்தை பொறுத்தவரை 1+1 = 2 என்று நினைத்து கொண்டு உள்ளார், ஆனால் அரசியலில் 1+1 = 1 அண்ட் 1x1 =1 தான் என்று தலீவர் கட்டுமரம் உணர மறுக்கிறார். ஐந்து முறை ஆட்சி ஆண்டு அரசியல் பாடத்தை கற்றும் கர்க்காததை போல இருக்கிறார். இந்த அரசியல் கணக்கு எப்படி தெரியுமா? கட்டுமரம் 24+ செங்கண்ணன் 5% = 29% என்று நினைத்து கொண்டு உள்ளார். 1+ என்பது, திமுகவுடன் செங்கண்ணன் சேர்ந்தாலும் கொஞ்சம் கூடுமே தவிர அப்படியே சேராது. சரி செங்கண்ணன் கட்டுமரத்திடம் கூட்டணி வைக்கிறார் என்றே வைத்து கொள்வோம், உளுந்தூர்பேட்டையில் ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்தி அதில் திமுக, அதிமுக இரண்டும் ஊழல் கட்சிகள், ஊழலில் ஊறிய கட்சிகள், குறிப்பாக சர்க்காரியா, 2G போன்ற ஊழலை அறிமுகபடுத்தியதே திமுக தான் என்று மேடையில் அண்ணி பிரேமலதா செங்கண்ணன், மற்றும் செங்கண்ணன் முழங்கிவிட்டு, அவர்களிடமே கூட்டணி வைத்தால் அண்ணி பிரேமலதா செங்கன்னனும், தலீவர் செங்கன்னனும் என்ன சொல்லி பிரசாரம் செய்வார்கள்? ஊழல் செய்யாத திமுகவுடன் கூட்டணி என்றா? இல்லை திமுகவில் உள்ள அனைவரும் புனிதமானவர்கள் ஆகிவிடுவார்களா? இரண்டு கட்சி தலைமை வேண்டுமானால் ஒன்று சேரலாம், ஆனால் தொண்டர்கள் ஒட்டுபோடுவார்களா என்றால் அது தான் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைத்தால் 5 சதவிகிதம் சுருங்கி 2 சதவிகிதம் ஆகிவிடும். ஏற்கனவே 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் ஆகிவிட்டது. மேலும் ஒரு பக்க தேமுதிக அனுதாபி கூறினார், எங்கள் தலைவர் செங்கண்ணன் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை, நான் வேட்பாளர் பட்டியலை பார்ப்பேன், எங்கள் தொகுதியில் தேமுதிக நின்றால் ஒட்டு தேமுதிகவிற்கு வாக்களிப்பேன், ஒருவேளை திமுக நின்றால் வாக்களிக்க மாட்டேன், மாறாக துரோகியாகிய திமுகவிற்கு வாக்களிப்பதை விட எதிரியாகிய ஜெயவுக்கே வாக்களிப்பது நன்று என்று கூறினார், அதே போல திமுகவின் கடைமட்ட தொண்டர்கள் தேமுதிகவுடன் கூட்டணியை விரும்பவில்லை. தலைவர் ஏன் செங்கண்ணன் காலில் போய் விழவேண்டும், அவனை தனியாக விடுவதே திமுகவிற்கு நல்லது என்று திமுகவினரே பேச கண்டேன். இதை எல்லாம் மீறி தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தால், இரு கட்சி தொண்டர்கள் பரஸ்பரம் வாக்களிக்கமாட்டர்கள். தேர்தல் எண்ணிக்கைக்கு பிறகு, இரு கட்சி தலைவர்களும் திமுக ஒட்டு கிடைக்கவில்லை அதனால் தேமுதிக தோற்றது என்று செங்கன்னனும், தேமுதிக ஓட்டு கிடைக்கவில்லை, அதனால் திமுக தோற்றது என்று கட்டுமரமும் புலம்பும் நிலை வரும். மேலும் இரண்டு கட்சி மீது அதிருப்தி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் தேமுதிக மீது மக்களிடம் மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், டவுசர் தாசு கவலையில் உள்ளார், என்னடா செங்கன்னனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாமகவை பற்றி யாரும் பேச மாட்டேன்றான்களே என்று. எதோ திமுகவுடன் தேமுதிக இணைந்துவிட்டது, இந்த செய்திக்கு என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் சாமி சின்னத்தம்பி அவர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

 • Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா

  குனிந்த கிழம் எப்போது விழும்? மக்கள் ஏக்கம்

 • P.Thanushkodi - srivilliputtur

  தேதிமுக ஆப்பு அசைத்த குரங்கு போல

 • Tamilnesan - Muscat,ஓமன்

  "மொத்தம் ரூ. 12 கோடியே 36 லட்சம் 25 ஆயிரம் வருமானம் வந்துள்ளது என தெரிவித்தார்". சாதாரண பொதுமக்கள் 12,000 ருபாய் கொண்டு போனால் வருமான வரி துறை, அமலாக்க துறை, மாநில காவல் துறை என்று பல துறைகள் பொது மக்களை துவைத்து போடும். ஆனால் அரசியல் வியாதி நாய்கள் பல ஆயிரம் கோடிகள் வசூல் செய்வதை இந்த துறைமார்கள் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்பார்கள். என்னே ஒரு நியாயம் இப்படி நீதித்துறை மாண்டு போன இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். ஜெய் ஹிந்த்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  தேர்தலுக்கு முன் - " பழம் நழுவி பாலில் விழுவது போல கூட்டணி அமைப்போம்..." ....தேர்தலுக்கு பின் - " பல்லி தெறிச்சு பாலில் விழுந்ததுவிட்டது என்று சொல்லி பல்லியோடு சேர்த்து பாலையும் கொட்டி விடுவோம் " .... " தம்பி காந்தமே நம்பி வாங்கே ...சந்தோஷமா போங்கே .."

 • udanpirappu - tirupur

  அவருக்கே கூட்டணி குறித்து தெரியாது சபரீசன் சொன்னவழிதான் தி மு க நடக்கிறது

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  அட பாவமே - உங்க பேஸ்மென்ட் இவ்வளவு வீக்கா - அரை சதம் போட்ட கட்சி - ஐந்து முறை முன்னாள் முதல்வர் - ஒரு கூட்டணி அமைப்பதில் ஒரு தண்ணி வண்டி தலைவனை? இழுக்க இவ்வளவு பிரயத்தனம் - விசயகாந்து அவர் பாணியில் அட தூ... என்று சொல்வார்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///"கனிந்த பழம் எப்போ விழும்?" - கருணாநிதி ஏக்கம்///நிலைமை இலவு காத்த கிளியாகிவிடுமோ என்ற கவலை தெரிகிறது பேச்சில்.

 • S MURALIDHARAN - delhi,இந்தியா

  எதை வீட வெக்ககேடு திமுக தேவையா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement