Advertisement

அறிவியல் சிந்தனை பெருகவே! பிப்.28 - தேசிய அறிவியல் தினம்

மிழ்நாட்டைச் சேர்ந்தவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பான ஒளிச்சிதறல் குறித்த 'ராமன் விளைவை' (Raman Effect) பிப்ரவரி 28ம் தேதி உலகத்திற்கு அறிவித்தார். அந்த நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், இந்திய அரசு இந்த தினத்தைத் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறது.
அறிவியலை தகுந்த முறையில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதும், இதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்பதுமே, அறிவியல் அறிஞர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வது இந்த தினத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான குறிக்கோள் 'அறிவியல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி புதிய பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்போம்' (Make in India: S&T driven innovations) என்பதாகும்.
தேவை அறிவியல் சிந்தனை மேல் நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக சாத்தியப்படுகின்றன. இந்தியாவில் அது குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இதற்குக் காரணம் இருக்கிறது. நாம் காலையில் குளிக்கப் பயன்
படுத்தும் சோப்பு நுரையில் தொடங்கி, இரவில் துாங்க போகும்போது அணைக்கப்படும் மின்பல்பு வரை எல்லாவற்றிலும் அறிவியல் உள்ளது. ஆனால் வாழ்க்கையோடு இணைந்துள்ள இந்த அறிவியலை, மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் கல்விமுறையில் தான் கோளாறு உள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெற்றால் போதும்; நல்ல உயர்கல்விக்குச் சென்று விடலாம் என்று மதிப்பெண்களை
மட்டுமே குறிவைத்து மாணவர்கள்
கற்பிக்கப்படுகிறார்கள்; அறிவியலைப் புரிந்து படிப்பதற்கு இங்கு இரண்டாம் இடம்தான் தரப்படுகிறது; இதற்கான கல்வித்திட்டமும் தேர்வுத்திட்டமும் நம்மிடம் குறைவு.
உதாரணமாக, மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புராஜெக்ட்டுகள் கொடுப்பதுண்டு.இவற்றை மேற்கொள்ளும்போது பெற்றோர், குழந்தைகளின் அறிவாற்றலைத் துாண்டுவதற்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, நாளிதழில் வெளிவரும் அறிவியல் செய்திகளைப் படிக்கச்செய்வது (உதாரணத்துக்கு தினமலர் நாளிதழில் வெளிவரும் அறிவியல் மலர்) புதிதாக கற்கும் ஒவ்வொரு கருத்துக்கும் ஏன், எதற்கு, எப்படி எனும் கேள்விகளை எழுப்பி, அறிவார்த்தமாகப் புரிந்துகொள்ளும் சிந்தனையைத் துாண்டுவது போன்ற ஆக்கபூர்வமான வழிகளில் உதவ வேண்டும். மாறாக பெற்றோர்களே அந்த புராஜெக்ட்டுகளைச் செய்து கொடுத்துவிடக்கூடாது.
பொறியியல் கல்லுாரிகளில்... பொறியியல் கல்லுாரிகளில் புராஜெக்ட்டுக்கு என்றே ஒரு செமஸ்டர் இருக்கிறது. இந்த புராஜெக்ட்களை கடைப்பொருளாக வாங்கிக் கொடுத்து
விடுகிறார்கள் அல்லது விரிவுரையாளர்களே தேவைக்கு ஏற்ப தயாரித்து மாணவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். வளர்ந்துவிட்ட மேல்நாடுகளில் இந்த அவலம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுய சிந்தனை, சுய முயற்சி, சுய தயாரிப்புக்குத்தான் அங்கு மதிப்பும் மரியாதையும். இதன் பலனாக அவர்களின் அறிவியல், அறிவாற்றல், அரிய பல கண்டுபிடிப்புகளுக்கு ராஜபாட்டை போடுகிறது.
அறிவியல் ஆர்வத்தைப் புகுத்த மாணவப் பருவம்தான் சரியான தருணம். அறிவியல் புலமையைப் புகுத்த வேண்டிய விதத்தில் புகுத்தினால், இன்னும் பல சர்.சி.வி. ராமன்கள், தமிழகத்தில் உருவாக முடியும். ஆசிரியர்கள்தான் இதற்கு மனது வைக்க வேண்டும்.
அறிவியல் வகுப்புகளில் எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைச் சொல்லி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைக் கூட்டலாம். இதன் மூலம் புதிய அறிவியல் சிந்தனைகளைத் துாண்டலாம்.
்கலாமின் பள்ளி ஆசிரியர், அவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, பறவை எப்படி பறக்கிறது என்று கற்று தந்தது தான் அவரது அறிவியல் ஆர்வத்தை துாண்டியது. இதனை கலாம் பலமுறை, மாணவர்களிடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
மேக் இன் இந்தியா கோஷம் கடந்த ஓராண்டாக இந்த கோஷம் இந்தியாவில் பலம் பெற்றுவருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்துக்குச் சரியான உதாரணமாக, சமீபத்தில் ஐதராபாத்தில் இயங்கி வரும் 'பாரத் பயோடெக் இன்டெர்னேஷனல் லிமிடெட்' எனும் இந்திய மருந்து
நிறுவனம், ஜிகா வைரசுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதைக் குறிப்பிடலாம். இந்த மருந்தை விரைவிலேயே இந்தியாவில் விநியோகிக்க, மேல் நாடுகளில் உள்ளதைப்போல் ஒழுங்குமுறை ஒப்புதல் விவகாரத்தில் விதிமுறைகளைச் சீராக்கி உதவ வேண்டியது மத்திய அரசின் கடமை.
எனக்குத் தெரிந்த இன்னொரு உதாரணம் இது.சென்னையின் பிரபல இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செரியன், இதய வால்வுக் கோளாறுகளை சரி செய்யும் செயற்கை வால்வுகளை மிகவும் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதற்கு அரசிடமிருந்து இன்னமும் ஒப்பதல் கிடைக்காமல் தாமதம் ஆகிறது. இதுபோன்ற தடைகளால் அறிவியல் கண்டுபிடிப்புகளில், ஆர்வமுள்ள பலருக்கும் மனம் தளர்ச்சி அடையும்; புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிற
ஆர்வத்தைக் குறைக்கும். இந்த நிலைமை மாற வேண்டும்.
எனவே 'மேக் இன் இந்தியா' திட்டம் பேச்சளவில் இல்லாமல், செயலுக்கும் கொண்டுவரப்பட்டால், இந்தியா இன்னும் வளமுள்ள நாடாக வளரும் என்பது திண்ணம். குறிப்பாக, புதிய ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அதிக நிதியை ஒதுக்குவது, இந்திய தயாரிப்புகளுக்கு முதலிடம் தருவது, வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைப்பது, இந்திய விஞ்ஞானிகளுக்கு மேல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையான ஊதியம் கொடுப்பது, ஆராய்ச்சிகளுக்கான மானியங்களைப் பெறுவதில் விதிமுறைகளை எளிதாக்குவது, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை இந்தியாவில் பயன்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொழில்புரட்சியே உண்டாகும். அப்போது இந்தியா எல்லா துறைகளிலும் தன்னாற்றல் நிரம்பிய வல்லரசு நாடாக மாறும்.-டாக்டர் கு.கணேசன்(2015க்கான தேசிய அறிவியல் விருதைப் பெறுபவர்)ராஜபாளையம்.gganesan95gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    ஐயா கணேசன் உங்கள் கருத்துக்கள் நாட்டை முன்னேற்றும். உங்களுக்கும் வாழ்த்த்துக்கள். ஆனால் அறிவில் சிறந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கலாம் காலத்தஇல் இருந்த ஆசிரியர்கள் எங்கே மறைந்தார்கள்?அவர் ஐயர், ஆனால் கலாமை பட்டை தீட்டிய வைரம்,. சிந்தனை மிக்க ஆசிரியர்கள் இருந்தால், மக்களை முட்டாளாக்கி ஓட்டு வாங்கி பரம்பரை ஆட்சி செய்ய முடியாதே ஜாதி பேரைச் சொல்லி,அவர்களே பெரிய ரகசியக் கூட்டம் போட்டு ஜாதி வரிசைகளை, உட்பிரிவுகளை ஏற்படுத்தினா்கள் என்று பெரியார், திருகு வளை ஆழ்வார் ஏசி அவர்களை ஆசிரிய பதவியிலிருந்தே விரட்டி விடடார்கள். அப்போது எவன் வேண்டுமானாலும் தகுதி இல்லாமல் ஆசிரியாகலாம் என்ற நிலை வந்தது. பரம்பையாக ஆசிரியராக இருந்து, தான் ஏழையாக வாழ்ந்தாலும் தன் மாணவன் கல்வியி்ல் தேர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தது. ஆனால் இஉ வளையார் ராமநுஜரை அப்போது பார்கவில்லையே. அதன் பலன் இனிமேல் பழயகாலம் போல் இருந்த ஆசிரியர்கள் வரவே மாட்டா்கள்.குடிகாரன், காமுகன், கடை வைத்து பள்ளியில் கள்ளக் கை எழுத்து போடும் ஆசிரியர்களே, ஜாதி-மதம்-இட ஒதுக்கீடு, லஞ்சம் மூலம் நிறைந்து விட்டார்கள். பொதுவாக, இவர்களிடம் படிப்பவர்கள் புதிய கண்டு பிடிப்பகளை செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது சரியா? மக்கள் லஞ்சம் வாங்க-கொடுக்க தயாராக, ஆழ்ந்த படிப்பறிவு இல்லாமல்,சினிமா மாய வாழ்வை நம்பும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புரோஜெக்ட் செய்ய எப்படி உதவி செய்யமுடியும்?ஆசிரயர்களுக்கு புரோஜெக்ட் பற்றியே சிந்திக்கத் தெரியாதே அவர்களால் எப்படி மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முடியும்?ஆக மிஞ்சியவரகளே நகரவாசிகள். அவர்கள் தங்களுடைய மரபணுக் குறைகளை 80% மரபணு தங்களிடம் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ளது- அல்லது படிக்காத தங்கள் பரம்ரையிலிருந்தே வந்திருக்க முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளாமல் , மாய மந்திரம், கோவி்ல் போதல், தெய்வ குத்தம், ஹோமம்,யாகம் பொய் பக்தி.விவுதி, நாமம், குங்குமம்,தாயத்து. முடி எறக்கல், காவடி,தீ மிதி போன்ற காஆர-சுஆய வா்கை முறை மூலம் தங்களிடம் இல்லாத திறமைகளை தங்கள் பிள்ளைகளிடம் எதி்ர் பார்கிறார்கள். பிள்ளைகளை அன்கபுடன் வளர்காமமல், அர்த்தம் இல்லாத பழமொழிகள்அடியாத மாடு படியாது,ஆம்பளையை அடிச்சு வளர்கணும், கறிவேப்பிலையை ஒடிச்சு வளர்கணும் படிப்புக்கும் நல்ல ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்த சொல்லப்பட்ட உதாரணமே தவிர குழந்தைகளை கொல்வதிர்கில்லை. மனமுதிர்ச்சி இல்லாமல்,வாழ்க்கை இலக்கை தீர்மானிக்கும் முன்னே, இயற்கையின் உந்துதலால் பாலுணர்ச்சியை தீ்ர்க்க, எந்த முறையான செக்ஸ் கல்வி இல்லாமல், மணமாகி இரண்டாண்டுகளுக்கு பின் தம்பதிகளுக்கு நல்ல புரிதல் வும் என்று ஆராய்ச்சி கூறுவதை கற்காமல், ஆணுக்கு 27 வயான பிறகே நல்ல மரபணுக்கள் பெஉகும் என்றும் அதன் பின்னே அவர்களுக்கு பிறக்கும் குழந்தேகளுக்கு அந்த அறிவு செரிந்த மரபணுக்கள் கிடைக்கு்ம் என்றும் ஆராய்ச்சிகள் கூருகின்றன.அப்படி பிறந்த குழந்தைகளே தடுத்தற, மேல்தட்டில் வள்ர்ந்து விஞ்ஞானிகளாகிறார்கள். ஆகவே இந்த எல்லாவகை கட்டுப்பாடுகளை, ஜாதி-மத பேதமி்ல்லாமல் தகுதி மூலம் வளர்கும் நாள் வருமோ அன்றே நம்நாடும் கண்டு பிடிப்பின் தலைதகாகும், அதுவரை வெஉம் நண்டுபிடிப்பு நாடாகவே இருக்கும். இதை யாருடைய உள்ளத்தை புண்படுத்தவோ,அல்லது அறிஞர் கணேசனை அவமரியாதை செய்யவோ எழுதவில்லை.பிரச்சினை எளிதில் தீ்ர்க்க முடியாத ஒன்று,அதை செய்யும் சூழ் நிலையோ,தேச வழிகாட்டியோ, அரசியல் சூழ் நிலையோ இ்ல்லையே என்ற ஆழ்ந்த வருத்தமே காரணம். விரிவாக எழுதாவிட்டால் பலன் இ்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement