Advertisement

தி.மு.க., துவக்கிய விளம்பர பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்பு: சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., - பா.ம.க., பதிலடி

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., தரப்பு துவக்கிய விளம்பர பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த விளம்பரத்துக்கு எதிராக அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வுக்கும், ஆளுங்கட்சியாக துடிக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விளம்பர யுத்தம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவர பல்வேறு நுாதன பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் தி.மு.க., சார்பில் தமிழகத்தின் பிரதான பத்திரிகைகளில் '5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க; பேனர்ல பார்த்திருப்பீங்க; ஏன் 'டிவி'யில பார்த்திருப்பீங்க; நேர்ல பார்த்திருக்கீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' என கிண்டலாக விளம்பரம் செய்தனர்.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆளுங்கட்சியினரிடம் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. உடனடியாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி களத்தில் குதித்தது. மேலும் அ.தி.மு.க., ஆதரவாளர்களும் பதிலடி விளம்பரங்களை சமூக வலைதளங்களில் அள்ளி தெளித்து விட்டனர்.

'மீம்ஸ்' முறையிலும் கிண்டல்:ஒரு சில அ.தி.மு.க.,வினர் பெரிய பெரிய விளம்பர போஸ்டர்களை அவசர அவசரமாக தயார் செய்து சென்னையின் பல்வேறு இடங்களிலும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில் '5 வருஷத்துல, கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பார்த்திருப்பீங்க; நடிகருங்க கலை விழாவில பார்த்திருப்பீங்க; மானாட மயிலாடவுல பார்த்திருப்பீங்க; சட்டசபையில பார்த்திருக்கீங்களா? திருவாரூர் தொகுதியிலாவது பார்த்திருக்கீங்களா? என்னடா இப்படி பண்றீங்களேடா...?' என்ற காட்டமான விளம்பரங்களை பரப்பி வருகின்றனர்.கருணாநிதியை மட்டுமின்றி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை 'மீம்ஸ்' முறையில் கிண்டலடித்தும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

பா.ம.க.,வும் குதித்தது:இவர்களுக்கு போட்டியாக, பா.ம.க., சார்பில் 'பல வருஷமாக தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பார்த்திருப்பீங்க; அ.தி.மு.க., ஆட்சி பார்த்திருப்பீங்க; ஏன் காங்., ஆட்சி கூட பார்த்திருப்பீங்க; பா.ம.க., ஆட்சி பார்த்திருக்கீங்களா...?' என, சந்தடி சாக்கில் தங்களது ஆட்சி கனவை விளம்பரமாக பரப்பி வருகின்றனர்.
நொந்து போன மக்கள்: கட்சி சாராதவர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., விளம்பரங்களை இணைத்து கீழே மக்கள் என போட்டு 'எங்களை மாதிரி இளிச்சவாயன எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?' 'உண்மையை பேசுறவங்க தெய்வத்திற்கு சமம்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மையை பேசுறாங்க...' என பதிவிட்டு உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே விளம்பர யுத்தம் அதிகரித்துள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் இது எந்த அளவுக்கு போகுமோ என்ற அச்சம் நடுநிலையாளர்களிடம் ஏற்பட்டு உள்ளது.
- நமது நிருபர்-
Advertisement
 

வாசகர் கருத்து (197)

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  முதலில் மக்கள்தான் ஊழல் செய்கிறார்கள். இலவசம், ஓட்டுக்கு பணம் போன்றவைகளை வாங்கி அடிமையாகி பின்னால் புலம்புகிறார்கள். எனவே மக்களே விழியுங்கள். தவறு செய்தவர்களை சுட்டி காட்டி தண்டனையை புரிய வையுங்கள்

 • Srinivasan Dhakshnamoorthy - Kuala lumpur,மலேஷியா

  என்னதான் குட்டிகரணம் போட்டாலும் திமுக அதிமுகவை நடுநிலை வாக்காளர்கள் ஆதரிக்க போவதில்லை. மாற்றத்தை உருவாக்க பாமகவை ஆதரியுங்கள்

 • Prakash JP - Chennai,இந்தியா

  திமுகவையும் அதிமுகவையும் ஒப்புமைபடுத்தி பேசிவரும் சில அறிவாளிகளின் கவனத்துக்கு..... முந்தைய (2006-2011) திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது... இப்போதைய அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ‘மைனஸ்’ 3%... தமிழக வேளாண்மை வளர்ச்சி ‘மைனஸ்’ 12 சதவிகிதம்.... திமுக ஆட்சியில் தமிழக உற்பத்தி வளர்ச்சி 20.18% சதம்... அதிமுக ஆட்சியில் அது 1.61% சதமாக சரிவு... முந்தைய திமுக ஆட்சியின் இறுதியாண்டில் (2011) GDP எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தியானது 13.12% சதமாக இருந்தது, ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் GDP 4.14% சதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது..... இதே காலகட்டத்தில் மோடியின் குஜராத் மாநில GDP வெறும் 10% சதமாக இருந்தது...இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, "மிகவும் வளர்ந்த" குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில் இருந்தது.... திமுக ஆட்சியில் தேசிய வளர்ச்சி குறியீட்டில், பெரியமாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்தது... குஜராத், கர்நாடகா, ஆந்திரா வங்காளம், மற்றும் பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர்.. மற்றும் பிகார், உபி போன்ற எல்லாமாநிலங்களும் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு கீழே இருந்தன... திமுக ஆட்சியில் எல்லா அளவீடுகளிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்த தமிழகம், ஆனால், அதிமுக ஆட்சியில் கடைசி மூன்று இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.... முந்தைய திமுக ஆட்சியால் செயல்படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பற்றி சொல்லவே தேவையில்லை... அது திமுகவின் முத்திரை திட்டம்... அதேபோல எண்ணிலடங்கா மேம்பாலங்கள், தொழில்சாலைகள், ஒக்கனேக்கல் ராமாநாதபுரம் போன்ற பல்வேறு கூட்டுகுடிநீர் திட்டங்கள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டக்கள் குறித்தெல்லாம் தனியே சொல்லதேவையில்லை...... இப்போது தமிழகத்தில் கிடைக்கும் கூடுதல் மின்சாரம் எல்லாம், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தான்... எண்ணிலடங்கா திமுக ஆட்சியின் சாதனைகள் எங்கே... சீரழிந்த, செயல்படாத அதிமுக ஆட்சியின் வேதனைகள் எங்கே.... இரண்டையும் ஒப்பிடக்கூட முடியாது..... உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, எப்படி வெட்கம்மே இல்லாமல் திமுகவை செயல்படாத வெத்துவேட்டு அதிமுக அரசோடு ஒப்பிடுகிறார்கள்??? இவர்களுக்கு உண்மையிலேயே அரசியல் அறிவு என்பது சிறிதளவாவது உள்ளதே என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.. மேலும், மத்திய புள்ளிவிவர ஆய்வுகளின்படி, 1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் பொருளாதார சமூக வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது. 2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்வாக உள்ளது. 3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது. 4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், தலித் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோர் (entrepreneurs) மிக அதிகம் உள்ளனர். இந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திமுக ஆட்சிகாலங்களே முக்கிய காரணம்.... எனவே, எந்தவித அரசியல் அறிவும் இல்லாமல், திமுகவையும் அதிமுகவையும் ஒப்பிடவேண்டாம்...

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  எழுதிய - நடித்த டயலாக்கை பார்த்த நமக்கு இனி பஞ் டயலாக்கு தேர்தல் முடிவும் வரை பார்க்கலாம். செம ஜோர். இதன் மூலம் பல உண்மைகள் வெளிவரும். அவங்க கண்ணுக்கு நாம தெய்வமா தெரிவோம் ..செம ஜாலி.

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகள் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் கமிசன் கலாச்சாரம் வேரூன்ற ஆரம்பித்தது. குடி கெடுக்கும் குடி உருவாகி தமிழக குடும்பங்கள் சீரழிய ஆரம்பித்தன. திராவிட கட்சிகளின் வாக்குவங்கி அரசியலுக்காக தமிழகத்தில் சாதி வெறிக்கு கொம்பு சீவி விடப்பட்டு,சாதி தலைவர்களுக்கு சிலைகள்,தோரண வாயில்கள்,மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இன்று பள்ளிகளில் ஆரம்பித்து அரசு அலுவலகங்கள் வரை எங்கு நோக்கினும் சாதிவெறி தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் புற்றீசல் போல் சாதிக்கட்சிகள் பெருமளவில் உருவாகி, தமிழ் மக்கள் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு, தமிழன் என்ற பொது அடையாளத்தை இழந்து நிற்பது மிகப்பெரும் கொடுமை. தமிழகத்தில் சாதியின் பெயரால் வரிந்து கட்டி கொண்டு நிற்பவர்கள்தான் இலங்கை தமிழர்களை காப்போம் என வீர முழக்கமிடுகின்றனர். இன்றைய தமிழக கட்சிகளை எடுத்துக் கொண்டால் அனைத்தும் எரிகிற கொள்ளிகளே.இதில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என யாராலும் கூற இயலாது.

 • murali - Chennai,இந்தியா

  DMK donated jut 1 Crore for Chennai Flood now spent 40 crore for just one day advertisment. At last we the people are sufferer

 • kumar - chennai,இந்தியா

  கடந்த பல ஆண்டுகளாக அரசியலை கவனித்து வரும் ஒரு வாக்காளன் என்ற வகையால் சொல்லுகிறேன். இந்த DMK ,AIADMK போட்டி என்பது காட்டில் இரு மதம் கொண்ட யானைகள் பலமாக மோதுவது போன்றதாகும்.மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.இந்த முறை (2016-21) DMK. இதற்கு, 1971 மதுரை மாநாட்டில் MGR க்கும் கருணாநிதி க்கும் ஏற்பட்ட ஈகோ தான் முதல் காரணம்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  பதவி வெறி பிடித்து லோ லோ என்று அலையும் இந்த மாதிரி கட்சிகள் இருக்கும் வரை தமிழகத்தை முன்னேற விடுவார்களா என்று தெரியவில்லை . 18 வருடம் மத்திய ஆட்சியில் மந்திரி பதவியினை துச்ப்ரயோகம் செய்து அதன் மூலம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து, 5 வருடங்களில் பணத்தை சரியான முறையில் பதுக்கி வைத்து இருந்தனர். தேர்தல் என்றவுடன் பணத்தாசை பிடித்து அடுத்த கட்சியை பற்றி குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. மேலும் டெல்லி வழக்கின் தீர்ப்புகள் வந்தால் இவர்களின் மூஞ்சியை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வார்கள். நமது நீதி துறை முழுவதும் காங்கிரஸ், மஞ்ச துண்டின் ஊழல் கரங்கள் அதிகம் உள்ளனர். இன்று வரை எந்த தீர்ப்பும் வரமால் பார்த்து கொண்டனர். தேர்தலுக்கு காங்கிரஸ் வந்து ஒரே நாளில் கூட்டணியை முடிவு செய்து சென்று உள்ளனர். ஊழலில் அவர்களுக்கும் பங்கு உண்டு. விளம்பரம் சரி இல்லை. தி மு க அவர்கள் தலையில் மண்ணை வாரி போட்டு கொள்கின்றனர். கண்ணாடி மாளிகையில் அமர்ந்து கொண்டு கல் எறிகின்றனர்.அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது தெரியாமல் .. ...

 • kailawsh - Pollachi,இந்தியா

  அ தி மு க தரப்பில் தி மு க வின் விளம்பர கோஷங்களுக்கு மிக சரியான் எதுகை, மோனைகளோடு பதிலளிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடராஜன்தான். அவரை உடனடியாக போயஸ் கார்டனிலேயே தங்கவைத்து அவரின் சேவையை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 • kalyan - CHENNAI,இந்தியா

  நாங்க யாரையும் பார்க்கவேணாங்க... அதோ மெரினா கடற்கரையிலே இதுக்கெல்லாம் வித்திட்டுவிட்டு அமைதியா தூங்குறாரே அவரைத்தான் வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்குறோமுங்க.. இப்பிடி ஒரு கும்பலை வளத்து விட்டுவிட்டு உங்களால் எப்பிடிங்க தூங்க முடியுதுன்னு கேக்குறோம்.. ..

 • மகிழ்ச்சிமன்னன்.பா - Kanchipuram,இந்தியா

  திமுக செய்யும் விளம்பரம் கூட மரியாதையாக நாகரீகமாக இருக்கிறது ஆனால் ஆதிமுக வின் விளம்பரம் ????

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  திமுக ,ஆதிமுக வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறுகின்டன, மாற்றம் அவசியம். அது நல்ல மாற்றமாக இருக்க வேண்டும். மீண்டும் ஏமாற்றமாக இருக்க கூடாது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இரண்டு கழக கட்சிகளும் எதிர் எதிரே நின்று கொண்டு ஒருவர் மேல் ஒருவர் காரி உமிழ்ந்து கொண்டு இருவரும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

 • Selvaprakash S - Erode,இந்தியா

  மீதேன் திட்டம் .,Neutrino திட்டம் .,Gail திட்டம் .,Koodankulam திட்டம் .,ஜல்லிக்கட்டு தடை துணை போனது .,இலங்கை மக்கள் கொன்றதுக்கு துணை போனது .,தமிழகத்தை மின் தட்டுப்பாடு வர அளவுக்கு ஆட்சி.,ஆவின் நட்டம் .,போக்குவரத்துக்கு நட்டம் .,பேருந்து ஜப்தி .,எங்கும் rowdyism .,அணைத்து தொழிலையும் அடித்து பிடுங்குவது .,வெங்காய விலைய பெரியார் கிட்ட கேளுங்கறது .,ஹிந்து என்றால் திருடன் எனபது .,ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில்லாம சம்பளத்தை கொடுப்பது .,தமிழ்நாட்ல மட்டும் தான் 69% இட ஒதுக்கிடு .,தகுதி உள்ளவன் வேலை இல்ல .,இட ஒதுக்கீடு .,மதவாதம் (முஸ்லீம்ஸ் மட்டும் கடவுள் இருபாங்க இவர பொறுத்தவரை ) இதெல்லாம் விடவா ADMK ஆட்சி கொடுமையா இருக்கு ., இன்னுமா உங்கள நம்பனும் DMK .,எல்லாத்துக்கும் மேல பக்கத்துக்கு ஸ்டேட் கிட்ட நம்ம ஒவ்வொரு உரிமையும் பறி கொடுக்கறது ..முல்லை பெரியார் .,காவேரி நொய்யல் .,மக்களை எத்தன காலம் தான் ஏமாத்துவீங்க DMK ??

 • Appu - Madurai,இந்தியா

  அம்மாவ கோர்ட் போற வழியில பாத்திருப்பீங்க,,,ஹெலிகாப்டர்ல பறந்து பாத்ருப்பீங்க,,,கொடநாட்டுல ரெஸ்ட் எடுக்குரப்போ பாத்துருப்பீங்க,,சட்டசபைல விதி 110 கீழ் திட்டங்கள உரைக்கிறப்போ டி வி ல பாத்ருப்பீங்க,,,மக்களோட மக்களா பாத்துருக்கீங்களா? இதே அதிமுக எம் ஜி ஆர் ஆட்சி காலத்துல அந்த மாண்புமிகு மக்கள் மத்தில கடைசியா அதிமுக மக்கள் மத்தில ஆக்க பூர்வமா பாத்ததோட போச்சி..அதனால அம்மா திமுகவுக்கு ஒரு பாடம் கண்டிப்பா மக்கள் புகட்டனும்....மஞ்ச துண்ட வீல் சேர்ல பாத்துருப்பீங்க,,அறிக்கைல பாத்துருப்பீங்க,,,குடும்ப சண்டை பஞ்சாயத்துல பாத்துருப்பீங்க மக்களோட மக்களா பாத்துருக்கீங்களா?அவர் சார்பா அவரோட மவன் மக்களோட டீ குடிக்கிறத பாத்துருப்பீங்க,,சைக்கிள் ஒட்டி பாத்துருப்பீங்க,,,,ஆனா எதற்காவது தீர்வா மக்களோட சேர்ந்து போராடி பாத்திருக்கீங்களா?மஞ்ச திமுகவுக்கும் பாடம் புகட்டுங்க,,,,,ஒரே தீர்வு குடிகாரான இருந்தாலும் அட்லீஸ்ட் மக்கள் மத்தில பல தடவ தோன்றி தன்னோட எம் எல் ஏகளை என்ன பண்றீங்கன்னு கேட்கிற ஒரே ஜீவன் விசயகாந்த்....கழகங்களுக்கு மாற்று இவரு ஒருத்தர் தான் இப்போதைய சூழ்நிலைல...மக்கள் யோசிக்கோனும்...

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அரசியல் கட்சிகள் மக்களின் பணத்தை பறிச்சி பார்த்திருப்பீங்க.... நிலைத்த பறிச்சி பார்த்திருப்பீங்க ... ரத்தத்த உறிஞ்சி பார்த்திருக்கீங்கள் .....இனி பார்ப்பீங்க. இந்த தேர்தலில் அதிமுக திமுக இரண்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படும். இந்த தேர்தல் திமுக தேமுதிக வுக்கு வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் தேர்தல், தமிழக மக்கள் அறிவுள்ளவர்களா இல்லையா என்று நாடு தீர்மானிக்ககூடிய தேர்தல். செம்மறி ஆடுகள் போன்று முடிவெடுக்காமல் அடிமைகள் போன்று உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு திரியாமல் சரியான முடிவெடுக்க வேண்டும்.

 • Pandiyan - Chennai,இந்தியா

  ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லும் பத்திரிகைகள் பணம் வருகிறது என்பதற்காக இப்படிபட்ட அருவருக்க தக்க விளபரங்களை போடுவது சரியாய் என்று யோசித்து பார்க்க வேண்டும் ..இந்த திருட்டு கழகங்களின் தவறுகளை இந்த விளம்பரம் மூலம் மக்களின் மனதில் இருந்து விலக முயற்சி நடக்கிறது ..இதற்கு பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் துணை போவதுதான் வேதனைக்குரியது ..

 • Loganathan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன நாதாரித்தனம் செய்தாலும் இந்த உலகம் உடனே உங்களை உத்து பார்க்கனும் இதற்குத்தானே இந்த வெட்டி விளம்பரம்.

 • unmai nanban - Chennai,இந்தியா

  இன்றைய மீம்ஸ்: சூரியனோட ஆட்சியிலே காவிரி, முல்லைபெரியார், மின்சாரம் வரும், ஆனா வராது. ஆனா இரட்டை இல்லை ஆட்சியிலே வராததெல்லாம் வரும், மழை கூட. சிந்திப்பீர் சுயநல கூட்டம் யார் மக்கள் நலம் யாருக்கு?

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ரசிக்கத்தக்க விளம்பரம் திமுகவிடம் இருந்து துவங்கி அதற்கேற்ற பதிலடி அதிமுகவிடம் தொடர்கிறது. தேர்தல் நேரம் நன்கு பொழுது போகும் என்பதற்கு நல்ல முன்னோட்டம்.

 • நிலா - மதுரை,இந்தியா

  ஆயிரம் சபரீசன் ஸ்டாலினுக்கு உதவிகரமாக இருந்தாலும் திமுகவை நிலைநிறுத்தவே முடியாது. சமாதி கட்டி 5 வருடங்கன் ஆகிவிட்டது. திமுக காணும் கடைசி தேர்தல் இதுவே கேவலம் இணையதளத்தில் கள்ள தனமாக dis like போடத் தெரிந்த திமுகவுக்கு தேர்லில் கள்ள ஓட்டு போட தெரியாதா என்ன.??

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ஆணி அடிச்சி பாத்திருப்பீங்க, WELD வச்சுப் பாத்திருப்பீங்க, ரிவெட் அடிச்சு பாத்திருப்பீங்க, ஆனா பெரிய அகண்ட ஆப்பு வெச்சு பாத்திருக்கீங்களா?" 2011 & 2014 ல் பாத்தீங்க..... 2016 லயும் பாக்க போறீங்க. துளிர் விடட்டும் இலை, "அஸ்தமனமாகும் சூரியன்".......

 • murumaha - madurai,இந்தியா

  திமுக - முடியட்டும், விடியட்டும். அதிமுக - 2011 ல் முடிந்து விட்டது, விடிந்து விட்டது.........

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  சபரீசனுக்கும், உதயநிதிக்கும் அனுபவம் பத்தாது...இன்னும் ஒரு 5 வருட காலம் தாத்தாவிடம் TRAINING எடுத்துவிட்டு, வந்து மோதி பார்க்கட்டும்...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " சர்க்காரியா கமிஷன் பார்த்திருப்ப... ஜெயின் கமிஷன பார்த்திருப்ப.... விஞ்ஞான ஊழல்கள பார்த்திருப்ப,....ஏன் 2G 3G ய கூட பார்த்திருப்ப....ஆனா மக்கள் ஆப்பு அடிச்சத பார்த்திருக்கியா?...மே மாசம் பார்ப்படா..." ......என்னங்கடா இப்படி பண்ணுரீங்கலேடா " ....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  @ காளை & தமிழ் செல்வன் : "சுடலை" கமெண்ட் சூப்பர்..... அதுவும் அந்த "பெத்தாபுரம் பெத்தண்ணா" ரெம்ப நல்லாருக்கு......

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஒரு பொறுப்புள்ள கட்சியாக செயல்படாமல், சினிமாதனத்தில் கொள்ளையடிச்ச காசில் கோடிகணக்கில் செலவு செய்து விளம்பரம் தரும், திமுகவிற்கு இன்றைய தேர்தலில் மரண அடி விழபோகிறது....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  தன்னை பற்றியே கிண்டலடிக்க லட்சம் காரணங்கள் இருக்கும்போது, அதிமுகவை பற்றி கிண்டலடித்து, திமுக சேற்றை வாரி பூசியுள்ளது... பொதுமக்கள் திமுகவை கழுவி கழவி ஊத்துகின்ற்றனர்....சபரீசனுக்கு தெரியுமா, திமுகவின் கோல்மால்கள்.... மல்லாக்க படுத்து விட்டு உமிழும் திமுக இன்று அசிங்கபட்டுள்ளது...

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  தேர்தலில் ஜெயித்தால் இதை செய்வோம் என சொல்லி ஒட்டு கேட்கலாம். அதை விடுத்தது இப்படி செய்வது அவர்கள் மட்டும் ஊழல் செய்கிறார்கள் நாங்களும் செய்ய வேண்டாமா என்ற தோணியில் உள்ளது

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  ரெண்டு கட்சிகளும் இப்படி மாறி மாறி திட்டிகொள்வது சகஜம் தான். ஆனால் இதற்க்கு சினிமா வசனம் தான் தேவையா ??

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  கருணா கடைசியில் விளம்பரத்தையே சரியா முடிக்கவில்லையே, நான் ஓங்கி அடிச்சா 1760000 கோடிடா பாக்றியா..பாக்றியா..

 • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

  வாடா போடா என்ற திராவிஷ கட்சியின் மரியாதை சொல்லை அருவெறுப்பான திராவிஷ கட்சி வாங்கிக் கொண்டது போலும். தமிழக மக்களே இப்போதாவது உணர்கிறீர்களா எவ்வளவு மட்டமானவர்களை இதுவரை நாம் நம்மை ஆள அனுமதித்து இருக்கிறோம் என்று?

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  அதிமுக கடுப்பானதற்க்கு முக்கிய காரணம் என்னவென்றால்....திமுக விளம்பரங்கள் எல்லாம்...மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைகாட்சியில் ஒளிபரப்ப படுகிறது....அதாவது பொது மக்களிடம் சென்றடைகிறது...ஆனால் ஜெயா தொலைக்காட்சி 90% ஆளுங்கட்சியினரே பார்பவர்கள் என்பதால்...அதிமுகவின் விளம்பரத்தில் பயன் இல்லை....மேலும்...திமுக முன்னெடுக்கும் விளம்பரங்களில்...கற்பனையோ...மிகைபடுத்தப்பட்ட செய்தியோ அல்ல....மக்களை சந்திக்காத அம்மையார்....ஸ்டிக்கர் ஆட்சி....சீரழிந்த தொழில் வளர்ச்சி....மக்களை ஏமாற்றும் 110 விதி என அம்மையார் அரசை பற்றி மக்கள் அறிந்தவைகளையையே திமுக தன் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றது..... அதனை மறுத்து அதிமுக தங்கள் விளம்பரங்களில் பதில் அளிக்க முடியாமல்...வழக்கம் போல்....திமுகவை குறை சொல்கிறது...அதாவது கருணாநிதி சட்டமன்றத்திற்கு வரவில்லையாம்...அதனை அம்மையார் மக்களை சந்திக்காதததோடு ஒப்பீடு செய்கின்றனர்...LOl ......முதல்வர் மக்களை சந்திக்காததும் கருணாநிதி சட்டமன்றம் வராததும் ஒன்றா ?????????மக்களே முடிவுச் செய்யுங்கள்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இது செம்ம ஜாலியா சூப்பரா டைம் பாஸ் ஆவுது. உரைகள் எந்த கருத்தையும் நிறுத்தாமல் போடுங்க. ஒவ்வொரு வாசகரும் சும்மா அடிச்சு பின்னி எடுக்கிறாங்க. இனிமேல இப்புடி ஒரு விளம்பரம் கொடுக்க ரொம்ப யோசிக்கும் கட்டுமரம் க்ரூப். செரியான ஆப்பு.

 • Pandiyan - Chennai,இந்தியா

  சராசரியாக 2 திராவிட கட்சிகளும் இப்படி பட்ட பத்திரிகை விளம்பரத்திற்கு தினமும் 40 கோடி செலவு பண்ணுகிறார்கள் ..இது யாருடைய பணம் ..யாரிடம் இருந்து ஊழல் செய்து பெற்று கொண்ட பணம்.. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் ..

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இந்த ரெண்டு கழிசடை பீடைகளும் ஒழிஞ்சாத்தான் நம்ம ஊரு உருப்படும்

 • selvam.s - Chennai

  பா.ம.க தலமைல ஆட்சி இல்லனா தமிழகம் போச்சு

 • venkat Iyer - nagai,இந்தியா

  சிங்க்கப்பூர் சேகர் ரொம்ப ஜால்ரா அடிக்கின்றார்.போன தேர்தல்ல நானும் அம்மாவுக்கு ஒட்டு போட்டேன்.நான் இயற்கை விவசாயத்தில் விவசாயி என்று என்னை ஓரளவு சொல்லிக்க முடியும்.இப்ப இருக்கற ஒங்க நாட்டுக்கும் அந்த அரிசியினை ஏற்றுமதி அனுப்பி உள்ளேன்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு பொறம் போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டுள்ளது என்பதை ,நீங்கள் வந்து பார்த்த தான் தெரியும். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஏன், தண்ணிர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பாசனம் பெற முடியாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.கிராமங்களில் உள்ள இளைஞ்சர்கள் வேலை இல்லாமல் சாராயத்திற்கு அடிமையாகி பைக்கை வைத்திருந்தாள் பணக்காரன் என்ற தோரணையில் பலரிடம் மது போதையில் சண்டை போட்டுவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் அவர்களிடம் இருப்பதையும் கப்பம் கட்டி பஜ்சாயித்து கூட்டம் கூட்டமாக நடத்துகின்றார்கள்.இதில்,அந்த பகுதி சதுர செயலர் அரசியல் கட்சிகள் உட்புகுந்து ,இளைஞரின் குடும்ப பொருளாதாரத்தினை வீணடிக்கின்றன. பலதுறைகள் செயல்படவில்லை. ஏனென்றால் போதிய பணியாளர்கள் இல்லையாம்.

 • ragu - thombe,இலங்கை

  கட்டுமரத்தை திகார் வாசலில் பலர் பார்த்து இருக்காங்க.... மணிமேகலை முந்தானியை பிடித்து கொண்டு இருக்கும் போது பார்த்து இருக்காங்க.... சுடலினை வெளிநாட்டு பல வங்கிகளில் பார்த்து இருப்பாங்க.... சனிமொழியை திகாரில் பலர் பார்த்து இருக்காங்க ...

 • ragunathan - erode

  மாற்றம் ஒன்றே மாறாதது ஓட்டுக்கு பணம் வாங்காதவரை

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  இந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சிவ கார்த்திகேயனை திட்டினார் - என்னமா இப்படி பண்றீங்களே மா - என்று சொன்னதற்கு. இன்று திமுக அதையும் காப்பி செய்து, விளம்பரம் செய்து. காப்பி ரைட்ஸ் போடலையா மேடம்

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  மண் கொள்ளை என்றால் என்ன? தமிழை இவர்களே ஒழுங்காக பேசமுடியவில்லை. அவரு, தமிழின தலைவராம், "கலைஞர்" என்ற செல்ல பெயராம்

 • Pandiyan - Chennai,இந்தியா

  ஐயோ ஐயோ அருவருக்க தக்க முறையில் நடந்துகொள்ளும் இரண்டு திராவிட கட்சிகளும் ..ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவது ..2 கட்சிகள் நடத்திய அனைத்து வண்டவாளங்களும் எளிதாக மக்களை சென்று அடைகிறது மாற்று அரசியல் வேண்டி நிற்கும் மக்கள் நல கூட்டணிக்கு மேலும் வளர்ச்சிதான் .

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  திமுக 40 கோடி ருபாய் விளம்பரத்திற்கு கொடுத்து பார்த்திருப்ப, கேடி சகோதரர்கள் 600 கோடி கருணாநிதிக்கு கொடுத்து பார்திருப்ப, வெள்ள நிவாரணதிற்கு எவ்வளவு கொடுத்தங்கனு பார்த்தியா? ஜஸ்ட் 1 கோடி. முடியட்டும் பித்தலாட்டம்

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  என்றைக்கு கலிபாக்களின் ஆட்சி அதிகாரம் மாமனார்களிடம் இருந்து மருமகன்களிடம் சென்றதோ அன்றே இந்த கலிபாக்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான் வரலாறு???. ஆம் முடியட்டும் இந்த ஷாஜகான் ஔவுரங்கஷிப் ஆட்சி, மடியட்டும் இவர்களின் BARBARIAN DURBAR, மலரட்டும் மக்களாட்சி.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தலய முச்சந்தில கொண்டு நிறுத்தி புது புது ஐட்டமா வாங்கி கொடுக்கறதே தி.மு.க. வின் சில்லுண்டி அணியின் வேலையாபோச்சு.

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  ஆரம்பித்து வைத்தது தி மு க .....அப்படி இருக்க சும்மா இருக்க அண்ணா தி மு க என்ன மக்கள் ஆதரவு இல்லாத கட்சியா ?பதிலுக்கு பதிலடி கொடுப்பதில் தவறே இல்லை ......முதலில் இந்த டி வியில் விளம்பரம் கொடுப்பதை அனுமதிக்கவே கூடாது என்பது என் கருது ....வசதி உள்ள கட்சிகள் பணத்தை வாரி இறைத்து இப்படி செய்கின்றன ,,,பண வசதி இல்லாத கட்சிகள் இவர்களிடம் போட்டி போட முடியுமா ? இது சம நிலை இல்லை .தேர்தல் கமிசன் தலையிட வேண்டும் .ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சம உரிமை இருக்கணும் .பொய் புரட்டை இவர்கள் இஸ்டத்திற்கு பரப்புவார்கள் இதற்க்கு பதில் சொல்லவோ அதை மக்களிடம் எடுத்து செல்லவோ மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லாமல் பொய் விடுகிறது ...சொந்த டி வி இருப்பதால் இவர்களால் ஏதும் செய்ய முடிகிறது ,,,தேர்தல் கமிசன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் .....

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  ஸ்டாலின வாயால் ஹெலிகாப்டர் ஓட்டி பாத்திருப்ப, தெரு தெருவா சைக்கில் ஓட்டி பாத்திருப்ப, ஊரு ஊரா ஷூட்டிங் எடுத்து பார்த்திருப்ப, ஒவ்வொரு வீட கல்யாண பத்திரிகை கொடுத்து பார்த்திருப்ப, கொளத்தூர் தொகுதி போயி பார்த்திருக்கியா, அட சட்ட சபையில் 5 நிமிஷம் உக்காந்து பார்த்திருக்கியா. அடங்கட்டும் அட்ட்ராசிட்டி

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  கருணாநிதி ரம்பா கல்யாணத்துல பார்த்திருப்ப, ரம்யா கல்யாணத்துல பார்த்திருப்ப, அமலா பால் கல்யாணத்துல பார்த்திருப்ப, சட்ட சபையில் பார்த்திருக்கியா.. முடியட்டும் நடிப்பு

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி பார்த்திருப்ப, ரம்ஜான் வாழ்த்து சொல்லி பார்த்திருப்ப, ஹிந்து பண்டிகை வாழ்த்து சொல்லி பார்த்திருக்கியா? முடியட்டும் இந்த கொடுமை

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  இந்த தெலுங்கர் தமிழ்நாட்டிற்கு வராமல் மட்டும் இருந்து இருந்தால் ஆந்திராவிலே "பெத்தாபுரம் பெத்தண்ணா" ஆகி இருப்பார்???... என்ன செய்வது எங்க தலைஎழுத்து இப்ப தமிழ் நாட்டுக்கே "பெரியண்ணா" ஆக்கிவிட்டார்கள்???....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பதிலடி பல்லிளிக்கிரதைத்தான் பார்க்கிறோம் நாங்க. முதலமைச்சரா மக்களை நேரடியா சந்திக்க வேண்டியவுங்களை அஞ்சு வருஷமா காணோமே ...எங்கேன்னா கருணாநிதியை சட்டசபைல காணோமாம். இந்த அஞ்சு வருஷமாவே உலக மக்களுக்கே ஒரு சந்தேகம் தமிழ் நாட்டோட முதல் மந்திரி கருணாநிதியா ஜேயலலிதாவான்னு......?ஒரு ஆட்சித்தலைவரா இருக்கர ஒருத்தர் செயல்படலையென்னு சொன்னா ஏன் அவரு மட்டும் என்ன செஞ்சாருன்னு எகனைக்கு மொகனையா எதுவாச்சும் சொல்லி தப்பிக்க பார்க்கறது எப்படி பதிலடியாக இருக்க முடியும். அது சுத்த அக்மார்க் கையாலாகாத்தனம்.

 • காளை - Canberra,ஆஸ்திரேலியா

  மூடர் கூடம் கொடுக்கும் விளம்பரம் ஒரு வெட்டி வேலை. ஜெ வை பழிவாங்க, அவரது வீட்டிற்குள் புகுந்து சன் டிவி வைத்து அது ஆடம்பரம் இது ஆடம்பரம் என்றார்கள். மக்கள் திமுக வை அடுத்த தேர்தலில் சாணியால் அடித்தார்கள். அதே போன்ற முட்டாள்தனமாக செயல் தான் இது. ஸ்டாலின் வீட்டிற்குள் புகுந்து, உ.நிதி வீட்டிற்குள் புகுந்து பார்த்தால், அங்கு என்ன சாதாரண Concrete வீடு போலவா இருக்கும். பளிங்கு, தேக்கு, Modern Electrical Accessories யினால் பதிக்கப்பட்டு இருக்கும். ஸ்டாலின் தன் பேரன் பேத்தி யோடு இருக்கும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் உள்ளது.. அந்த ரூமை பார்த்தாலே அவர்களின் சொகுசு வாழ்க்கை நிருபணம் ஆகும்.

 • நிலா - மதுரை,இந்தியா

  அரசியல்வாதிகளை நாங்கள் காமெடி பீஸ் என்று கிண்டல் செய்வோம் அவர்களோ எங்களை ஏமாளி கோமாளி என்று நினைந்து விட்டார்கள் வைக்கிறோம் டா உங்களுக்கு வரும் தேர்தலில் ஆப்பு

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  தளர்ந்த கால்களோடு....சாயமுடியா முதுகோடு ....சாலை வழி பயணம் பொய்த்து போன நிலையில்....ஆகாய பயணம் கை கொடுக்கலாம்....கைமாறாக ஆட்சி கிட்டுமா ? சதம் அடித்த எடை...இலவசமாய் சர்க்கரையை தர....தரணியில் கால் பதிய முடியா நிலை .,....அந்தோ பரிதாபம் படுக்கையை தேடும் நிலையில் அரியாசனத்திற்காக அறியா சனம் தேடி அலையும் கோமளவல்லிக்கு கோ பூஜை செய்தாலும்...மக்களின் கோபம் மாறாது ....மன்னாதி மன்னன் இட்ட இலையை இயற்க்கைக்கு ஒவ்வா மன்னார்குடியிடம் அடகு வைத்து ....பொருள் ஈட்ட மதுவை கொண்டு...எம் மக்களை கொன்று குவிக்கும் கன்னடத்து சூர்ப்பனகையே....சூரியன் முன் நீ கருகி சருகாவாய்

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  வீராணம் ஊழல் பாத்திருப்பீங்க , ஸ்பெக்ட்ரம் ஊழல் பாத்திருப்பீங்க,பூச்சிமருந்து ஊழல் பாத்திருப்பீங்க, மஸ்டர் ரோல் பூச்சிமருந்து ஊழல் பாத்திருப்பீங்க, பாவிக்காக ரோடு ரோடாய் சுத்துறதை பாத்திருப்பீங்க, தேர்தல 234 தொகுதிகளிலும் திமுகவை தோற்கடிச்சு ..துண்டை காணும் ..துணியை கானும்னு தமிழா நாட்டு மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பதை பாக்குறீங்களா பாக்குறீங்களா

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  சொந்த செலவில் சூனியம் வைக்கிறது என்றது இதைத்தான்... பாவம் திமுக தரப்பு..வேறொன்றும் சொல்வதற்கில்லை.. வசனங்களை வார்ப்பதில் முன்னோடியானவர்கள் திமுகவினர்.. அவர்களின் வார்த்தை கோர்வைகளை மற்றவர்கள்தான் பின்பற்றும் அளவுக்கு அழகியல் இருக்கும்..ஆட்சியையே அதில்தான் பிடித்தார்கள் ஆனால் இப்போது திமுக தரப்பே மற்றவர்களின் சினிமா, டிவி வசனங்களை இரவல் வாங்கவேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது... நேற்றைய பேப்பர் விளம்பரங்களே இதற்கு அக்மார்க் சாட்சி. இன்றைய விளம்பரத்தை பார்த்தால், தலையே சுற்றுகிறது... ''மண் கொள்ளை..பால் கொள்ளை..மின்சாரக் கொள்ளை.. ஆனா 86 லட்சம் பேருக்கு வேலையே இல்லை'' ரைமிங்கெல்லாம் சரி..ஆனா உட்கருத்து? அப்படின்னா 86 லட்சம் பேருக்கு வேலை இருந்துட்டா கொள்ளையெல்லாம் நியாயமாயிடுமா? என்னப்பா சொல்ல வர்றீங்க...? அப்புறம் மண் கொள்ளைன்னு சொல்றீங்க.. மண்ணுக்கு மணலுக்கும் வித்தியாசம் தெரியலையோ? தமிழே தெரியாத ஏஜென்சிகாரங்களை நம்பி காமெடி செய்வதை விட்டுட்டு உங்கள் கட்சியிலேயே உள்ள திறமைசாலிகளை பயன்படுத்தப்பாருங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது..

 • ravi - coimbatore,இந்தியா

  நாகரிகம் தெரியாத ஆளும் கட்சி ....இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ... மக்கள் படம் புகட்ட வேண்டும் ....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "தானைத்தலைவர் கருணாநிதியை மகளுக்கு பதவி வாங்க சக்கர நாற்க்காலியுடன் டெல்லி வீதிகளில் அலைந்ததை பார்த்திருப்பீர்கள்" என்றும் சேர்த்து இருக்கலாம்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  நமக்கு தான் செம ஜாலியா டைம் பாஸ் ஆவுது..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்த கேவலமான ரெண்டு கட்சிகளும் கேவலமாக அடித்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை...ஏன்னா தலைமைகள் அப்படி........நான் ஏற்கனவே சுட்டி காட்டி இருக்கிறேன்...பல முறை டிவி விவாதங்களில் ரெண்டு கட்சியினரும் மாறி மாறி தங்களது ஊழல்களை வாக்குமூலமாக கொடுத்து இருக்கிறார்கள்...........அப்படியும் ஓட்டு போட்டு அவர்களை தேர்ந்தெடுப்பது மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வது....எல்லா மக்களையும் தேவையற்ற இலவசங்களை ஓட்டு வாங்குவதற்காக கொடுத்து பழக்கி இப்போ அவர்களை திருடர்கள் மாதிரி மாற்றி வைத்து இருக்கிறார்கள்...ஏதாவது ஊரில் ஒரு லாரி வேன் போனால் கூட ஏதாவது உள்ள இருக்கான்னு அதை மறிச்சி எட்டி பார்த்து உள்ள ஒன்னும் இல்லையா போய் தொலை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி வைத்துள்ளார்கள்....இப்போ எல்லாம் நீங்க நல திட்ட உதவி என்று கொடுக்கதேவையில்லை அங்க பொருட்களை எறக்கி வசிங்கன்னா அவனுங்களை ஓடி வந்து எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு எடுதுகுரானுங்க...இதெல்லாம் முன்னாடி நடக்காது...சரக்கு அடிச்சு கஞ்சா அடிச்சு ஹைபர் ஆனா ஆளுங்க மாதிரி மக்கள் ஆயிட்டாங்க....இதனோட தாக்கம் தான் இப்போ எங்க எல்லாம் அதிமுக காரனுங்க மிக்சி டப்பா அது இதுன்னு இந்த மிஞ்சி போன இலவச பொருட்களை எடுத்துட்டு வந்து தேர்தல் நேரத்துல கொடுத்து கவர் பண்ண பாக்கறாங்களோ அங்க எல்லாம் இந்த மக்கள் கொடுக்கரவை காத்து இருக்கறதே இல்லை....மந்திரியை கூட மல்லாக்க தள்ளிவிட்டுட்டு அந்த பொருட்களை எடுத்துட்டு போயிகிட்டே இருக்கான்.......சில இடங்களில் மட்டும் சில ஊர் மக்கள் இந்த இலவச பொருட்கள் எங்களுக்கு தேவையில்லை எடுத்துட்டு போ இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த என்று சூடாக பேசி துப்பி அனுப்பி விடுகின்றனர்./

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அஞ்சு வருசமா ஒரு பத்திரிக்கை ஜால்ரா அடிச்சு பார்த்து இருப்ப, டிசைன் டிசைனா கார்டூன் போட்டு காமெடி பண்ணி பார்த்து இருப்ப, கட்டம் கட்டமா செய்தி போட்டு கிண்டல் பண்ணி பார்த்து இருப்ப, தேர்தல் நேரத்துல ச்டிக்கரம்மா ஜெயிலுக்கு போற நேரத்துல இப்படி அதிரடியா உண்மை செய்திகளை போட்டு பார்த்து இருக்கியா? இனிமே பார்ப்ப............சிங்கம்டா..........

 • samy - singapore,சிங்கப்பூர்

  இரு கட்சிகளுமே தமிழக மக்களை முட்டாளாக தான் வைத்திருக்கிறார்கள். இங்கே திமுக, ஆதிமுக இரு கட்சிக்கும் ஆதரவாக கருத்து எழுதும் தமிழர்கள் வெட்க்கிதலைகுனிய வேண்டும்.

 • samy - singapore,சிங்கப்பூர்

  இருவருமே, மாறி மாறி தப்பை ஒத்துக்கொள்கின்றனர். ஆனாலும் தமிழக மக்கள் திருந்தப்போவதில்லை.

 • samy - singapore,சிங்கப்பூர்

  இப்படியொரு கீழ்த்தரமான செயல்பாடு இந்த ஆதிமுக, திமுகாவினால் மட்டுமே முடியும்.

 • samy - singapore,சிங்கப்பூர்

  மக்கள் எல்லோரும் எதிர்ப்பார்ப்பது திமுக, ஆதிமுக அல்லாத அரசை...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழுக்கு வரலாறு காணாத பொய்களை கேட்டுக்கேட்டு காது புளித்து விட்டது...

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  இது இறுதிகட்டம்..திமுகவுக்கு இந்த தேர்தலை விட்டுவிட்டால் இனி அவர்களுக்கு சம்பாதிக்க முடியாது..செய் அல்ல செத்து மடி என்றுதான் ஒட்டுமொத்த குடும்பமே களத்தில் இறங்கி பொய் பொய்யை பிரச்சாரம் செய்கின்றது. ஓர் நிமிட தொலைகாட்சியில் வருகின்ற விளம்பர பணம் எவ்வளவு லட்சம் என்று கணக்கிட்டு பாருங்கள் பத்திரிக்கைகளில் முழுபக்க விளம்பரத்தில் செய்த செலவு எவ்வளவு என்று கணக்கிடுங்கள்..இப்போதுதான் 2 G யில் கொள்ளையடித்த பணம் மெல்லெ மெல்ல பூனைக்குட்டி போல வெளியே வருகின்றது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக கொடுத்த தொகை வெறும் ஒரே ஒருகோடி ரூபாய்..அதற்கு 5 கோடி அளவுக்கு விளம்பரம் வேறு செய்து தம்பட்டம் அடித்ததே..இன்றைக்கு தங்களது பொய் விளம்பரத்திற்கு செய்த செலவு 40 கோடி. மக்கள்மீதான கரிசனம் எந்த அளவுக்கு உள்ளது பாருங்கள். இவர்களின் ஆட்சியில் எத்தனை புகார்கள். மத்தியில் மைனாரிட்டி ஆட்சிக்கு..இங்குள்ள திமுகவின் மைனாரிட்டி ஆட்சி முட்டுகொடுத்து சம்பாதிக்க இந்த துறைதான் வேண்டும்..என்று அலைந்த அலைச்சல் நாம் அறிவோம்..கோபம் கொண்டு பதவி ஏற்ப்பு விழாவை கூட புறக்கணித்து ஓடிவந்தவர் இந்த கருணா..பின்னர் நாம் அறிவோம் இந்த 2 G யில் சம்பாதித்ததை..தமிழகத்தை பொறுத்தவரையில் அணைத்து திமுக அமைச்சர்கள் மீது பல புகார்கள்..அடித்து பிடுங்கி அமோகமாக போலீசின் துணையோடு பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்..நிலங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி சாமான்ய மக்களுக்கு அதனை கனவாக மாற்றிவிட்டார்கள். ஈழத்தில் 1.5 லட்சம் மக்கள் சாவதற்கு துணை போனவர் இந்த கருணா என்பதை உலகே அறியும்..இவர்களை யாருமே மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்..முன்பு மேடையிலே முழங்கினார்கள்..பச்சை பச்சையாய் நாய் கூட குறுக்கே போகமுடியாத அளவுக்கு அசிங்கம் அசிங்கமாய் நரகல் நடையில் பேசினார்கள் இந்த திமுகவினர்..இப்போது ஏகப்பட்ட பணம் இருக்கின்றது நாசுக்காக பொய் பொய்யாய் புளுகி திரிகின்றார்கள்..பணத்தால் விளம்பரம் வேண்டுமானால் செய்யலாம்..பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டமே..ஆனால் பாசமுள்ள மக்கள் அம்மா மீதான அவரின் நிர்வாக திறமையின் மீதான நம்பிக்கை ஒருபோதும் மாறாது..சுமார் 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சியில் எவரையும் இந்த விளம்பரம் மாற்றிடாது..மாறாக கோபத்தை கொண்டுவந்து திமுக மீதான தங்களின் வெறுப்பினை மீம்ஸ் களாக ஊடகங்களில் தொடர்ந்து திமுக செய்த கொடுமையை மக்கள் நினைவுக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளனர்..இதுதான் திமுக செய்த மாபெரும் தவறாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் விமர்சனமாக கேட்ப்பீர்கள்..ஊழல் பணம் நாறுகின்றது..உண்மை தொண்டர்களின் பதிலடியால் திமுக கதிகலங்கி நிற்கின்றது..இதுதான் கண்ட பலன் இந்த திமுகவின் விளம்பரத்தால்..

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  திமுக , அதிமுக ...நாகரிகம் , அநாகரிகம்...அவுங்க என்னம்மா இப்படி பண்ணுரீங்கலேம்மா என்கிறார்கள் ...இவர்கள் என்னடா இப்படி பண்ணுரிங்கலேடா என்கிறாங்க...

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  ஒரு மணி நேர உண்ணா விரதம் இருந்து ஒன்றரை லட்சம் இலங்கை தமிழரை அழித்ததை பார்த்திருப்பாய். மீதேன் திட்டம், கெயில் திட்டம்ன்னு கொண்டுவந்து விவசாயிகளை அழித்ததை பார்த்திருப்பாய். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து சிறு விவசாயிகளை அழித்ததை பார்த்திருப்பாய். ஏன் உங்கள் நிலம், மனை, வீடுகளை அபகரித்து தமிழகத்தையே அழித்ததை பார்த்திருப்பாய். ஆனால் நான் யாரேனும் ஒரு தமிழனை வாழவைத்து பார்த்ததுண்டா? அதுதாண்டா கருணாநிதி திமுக ஒழியட்டும் தமிழன் வாழ்வு விடியட்டும்.

 • Panchu Mani - chennai,இந்தியா

  5 வருசத்துல தாத்தா கட்சி சட்ட சபை தேர்தல்ல முனகுனதை பாத்துருபீங்க.. லோக் சபா தேர்தல்ல முக்கினதை பாத்துருபீங்க.. நகராட்சி தேர்தல்ல நாறினதை பாத்துருபீங்க..ஏன் வார்டு தேர்தல்ல திக்கி திணறினதை பாத்துருபீங்க... நடு தெருல முக்கி திணறி நாறி திக்கி பெபெரபெபென்னு நிக்கிறதை பாத்துருக்கீங்களா...ஏலே வர்ற தேர்தலே பாப்பீங்களே.. முடியட்டும் பஞ்சாங்க தாத்தா டீம் அட்டகாசம் வரட்டும் சபரி டீம்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கஞ்சா கேசு போட்டு பாத்து இருப்ப, போர்ன்னு இருந்தா சாவத்தான் செய்வாங்கன்னு சொல்லி பாத்து இருப்ப, வாய்தா வாங்கி பாத்து இருப்ப, சாராயம் வித்து பாத்து இருப்ப, இதெல்லாம் மறுபடியும் பாத்து இருக்கியா? ஓட்டு போடு மறுபடியும் பாப்ப.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒரு டிஜிட்டல் பேனர் கம்பெனி வைத்தால் சீக்கிரம்மா கோடீஸ்வரன் ஆகிடலாம்

 • bejar payyan - doha,கத்தார்

  அஞ்சு வருஷத்துல தி.மு.க / ஆ. தி. மு.க மேடைக்கு மேடை சண்ட போடுறத பாத்திருப்பீங்க, டிவி சேனல் ல சண்ட போடுறத பாத்திருப்பீங்க , ஏன் ஊர்ல உள்ள ரோட்டோர சுவர்ல கலர் அடிக்குறத கூட பார்த்திருபீங்க ஆனா ஊழல் இல்லாத ஆட்சி செய்ற கட்சியா பார்திருகீங்களா கொலை கொள்ளை இல்லாத ஆட்சி செய்யுற கட்சியா பார்திருகீங்களா என்னங்க நீங்க இப்டி பன்னுரிங்கலேங்க முடியட்டும் தமிழக மக்களின் துயரம் , விடியட்டும் நல்லதொரு விடியலாக - பொதுநலம் கருதி கருத்தை பதிவு செய்வோர் தமிழக மக்கள் .

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கட்டியிருந்த வீட்டை புடுங்கி பாத்து இருப்ப, நடை பயிற்சில போட்டு தள்ளி பாத்து இருப்ப, கவுன்சிலர் பய்யன் பஸ்ஸை உடைச்சு நகரையே உலுக்கி பாத்து இருப்ப, பேராசை புடிச்ச மீனவனை போட்டுதான் தள்ளுவாங்கன்னு சொல்ல பாத்து இருப்ப, எங்கடா பொண்டாட்டி புள்ளைங்கள எல்லாம் பறி கொடுத்துட்டு அனாம்பத்தா போட்டு தள்ளிடுவாங்களோன்னு பயந்து பயந்து வாழ்றத பாத்து இருக்கியா? பாப்ப, நீ மறுபடியும் பாப்ப, எங்க தலிவருக்கு ஒட்டு போடு இதெல்லாம் மறுபடியும் நீ பாப்ப. விழட்டும் ஓட்டு, நாசமாகட்டும் நம்ம வாழ்க்கை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தலிவா தக்காளி சூஸ் பாத்து இருப்ப, பப்பாளி சூஸ் பாத்து இருப்ப, ஏன் பாவக்கா சூசு கூட பாத்து இருப்ப, வெண்டக்கா சூசு பாத்து இருக்கியா? இருக்கியா? இருக்கியா? இன்னிக்கு பாப்ப தலிவா. இந்தா வெண்டக்கா சூசு. தெம்பா குடிச்சிட்டு அறிக்கை உடு தலிவா.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  பேரன்புகொண்ட பெரியோர்களே தாய்மார்களே நீங்க வயிறு வலிக்க சிரிக்க வேணுமா Jayafails ஜெயாபெயில்ஸ் போயி பாருங்க இந்த ஆட்சிய சும்மா கிழி கிழீன்னு கிழிச்சு நார் நாரா தொங்க உட்டுருக்காங்க

 • Saravanan - Erode,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  good entertainment to us for next 2 months

 • Gnanasekar Nagu - தமிழ் நாடு,இந்தியா

  பொதுமக்கள் பன்ச்: ஸ்டிக்கர்ல பார்த்தோம், கொட நாட்டுல பார்த்தோம், 110 விதியில பார்த்தோம், கட்டுமரமாய் மிதப்பவரையும் பார்த்தோம், மானாட மயிலாடவுல ரசித்ததையும் பார்த்தோம் ஆனால் , தமிழகத்தை சிறப்பாய் ஆளத்தெரிந்த காமராசரை மட்டுமே இதுவரை தலைவராய் பார்த்திருக்கிறோம்...

 • Soma Sundaram - Philadelphia,யூ.எஸ்.ஏ

  பா ம க எப்பவுமே இப்படி தான் ...ஓரமா நின்னு வேடிக்கை பாருங்கையா..ஒரே காமெடி பண்ணிக்கிட்டு

 • Tamilan - JERSEY CITY,யூ.எஸ்.ஏ

  அப்போ எதுக்கு முதல் அமைச்சர் ஆக இருக்கீங்க ??? நாம திருந்தனும் ,அப்பறோம் தான் அட்வைஸ்

 • ???????????? - வந்தவாசி,இந்தியா

  உலகதமிழர்களின் தன்மான தலைவர் கலைஞரை பெயர் கொண்டு அடித்த பாமகவின் சுவரொட்டி கண்டிக்கத்தக்கது. எங்கள் தலைவரை மமதையுடன் பெயரிட்டு சுவரொட்டி அடித்த பாமக இந்த தேர்தலில் காணாமல் போவது உறுதி. சோனியா, கலைஞரின் கூட்டணி 232 முதல் 234 தொகுதிகளை அள்ளுவது திண்ணம். கலைஞர் தலைமையில் நல்லாட்சி அமைந்து இந்தியாவை ஆரிய காவி இருளில் இருந்து சூரிய ஒளிக்கு எடுத்து சென்று பசுமை பரப்புவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மக்கள் திமுக மற்றும் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும். ரெண்டும் அதிகளவு ஊழல் செய்யும் கட்சிகள். பிஜேபி, மக்கள் நலகூட்டணி, பாமக விற்கு ஓட்டளியுங்கள். மூன்று முறை, தொடர்ந்து மைனாரிட்டி ஆட்சியை கொண்டு வாருங்கள். பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் ஐந்தாண்டு ஆள கூடாது. தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தால், ஓட்டிற்கு பணம் கொடுக்க யாரும் முன் வரமாட்டார்கள். இருபது கோடியை விட்டு எறிந்தால், இருநூறு கோடி சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மண் விழ வேண்டும்.

 • Raj - Chennai,இந்தியா

  எல்லா இளைஞர்கள் ஆசை இவங்க ரெண்டு பெரும் இல்லாத ஒரு சகாயம், அப்துல் கலாம் மாதிரி ஒரு நல்லவங்க வந்தா நல்லது.. வரும் ..சீக்கிரம் வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement