Advertisement

மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது

மூன்றாண்டுகளுக்கு பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்த்துள்ளது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி உள்ளது.சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன; மற்ற கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.இந்நிலையில் கூட்டணி அமைக்கும் விஷயத்திலும் கட்சிகள் மும்முரமாகி உள்ளன. இதன் துவக்கமாக காங்கிரசுடனான கூட்டணியை நேற்று, தி.மு.க., உறுதி செய்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பின் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இலங்கை தமிழர் பிரச்னையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., விலகியது; காங்கிரஸ் கூட்டணிக்கும் முழுக்கு போட்டது.இதன்பின் 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள், தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தது. இதனால் இரு
கட்சிகளுக்கும் இடையே நல்லுறவு துளிர்க்க ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மலர்ந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு அமைந்தது.

கருணாநிதியை சந்தித்த பின் ஆசாத் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., - காங்கிரஸ்இணைந்து சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும்; ஆட்சியும் அமைக்கும். தி.மு.க., ஆட்சியை உருவாக்குவதே இப்போதைய நோக்கம். இந்தக் கூட்டணியை யாரும் வெல்ல முடியாது.கருணாநிதியை சந்தித்த போது ஆட்சியில் பங்கு பற்றி கேட்கவில்லை. கூட்டணியில் தே.மு.தி.க., உள்ளிட்ட பிற கட்சிகள் பங்கேற்பது குறித்து தி.மு.க., தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
நல்ல முடிவெடுப்பார்: ஸ்டாலின்: கருணாநிதி - ஆசாத் சந்திப்பு குறித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''தி.மு.க., - காங்., கூட்டணி முடிவாகி உள்ளது; தொகுதி பங்கீடு குறித்து பிறகு பேசுவோம். தே.மு.தி.க.,வுக்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் நல்ல முடிவை எடுப்பார்,'' என்றார்.

50 'சீட்' கொடுங்க!



கருணாநிதி குலாம் நபி ஆசாத் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியிடம் இளங்கோவன் பேசுகையில் 'தமிழக காங்கிரஸ் பலமாக உள்ளது. அதனால்மாவட்டத்திற்கு இரண்டு இடங்களிலாவது போட்டியிட வேண்டும். 2011 சட்டசபை தேர்தலை போலவே 63, 'சீட்'களை எதிர்பார்க்கிறோம்' என்றார்.குலாம் நபி ஆசாத் பேசும் போது, 'நீங்கள் தான் தமிழகத்தின் மூத்த தலைவர். காங்கிரசுக்கு 50 'சீட்' எதிர்பார்க்கிறோம். கூட்டணி உறுதியான

விஷயத்தை சோனியா, ராகுலிடம் தெரிவித்து விடுகிறேன்' என்றார்.அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளிலும் குழு அமைத்து பேசலாம்' என்று தெரிவித்தார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கோஷ்டிகள் சந்திப்பு!கருணாநிதியை சந்திக்க செல்வதற்கு முன் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரை, இளங்கோவன், குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, வசந்தகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கோஷ்டி தலைவர்கள் கூறிய விவரம்: ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்; குறைந்தபட்சம், 50 சீட் வேண்டும். தி.மு.க., தரப்பில், 25 சீட் தருவதாக கூறப்படுவதால் குறைந்தபட்சம் 30 சீட் பெற வேண்டும். தே.மு.தி.க.,வையும் கூட்டணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தரப்பும் பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு கோஷ்டி தலைவர்கள் வலியுறுத்தினர்.

விஜயகாந்துக்கு அழைப்பு!தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து, பின்னர் பேசுவோம்; எங்கள் கூட்டணிக்கு வரும்படி விஜயகாந்தை அழைப்போம். இளங்கோவன் தலைவர் - தமிழக காங்கிரஸ்
Advertisement
 

வாசகர் கருத்து (196)

  • Makku - plymouth,யுனைடெட் கிங்டம்

    மதுரையில் இந்திராகாந்தி தாக்கப்பட்டபோது திருவாரூர்காரர் என்ன சொன்னார் என்பது சோனியாவிற்கும் ராகுலுக்கும் தெரியாதுபோல் இருக்கிறது. இந்த காங்கிரெஸ்காரர்களுக்கெல்லாம் மானம் சூடு சொரணை ஒன்றுமே கிடையாதா.

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

    எனக்கு தெரிந்து இந்த கூட்டணி பேச்சு திமுக பிஜேபியுடன் போகவிடாமல் தடுக்க காங்கிரஸ் செய்யும் முயற்சி .சீட்டு பேரம் ஒத்து வரவில்லை என்று இவர்களே திமுகவை கழுவி ஊத்துவார்கள் என்று நம்புகிறேன். வாடா இந்தியாவில் காங்கிரசின் செல்வாக்கு பல மடங்கு சரிந்தது இந்த திருட்டு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்ததுதான் .ராஜீவ் காந்தி ஆன்மா இவர்களை சும்மாவிடாது.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    (ஜனங்கள் ஓட்டுப்போட) கூடாநட்பு இது...

  • Balaji - Khaithan,குவைத்

    தேசத்தை பாழாக்கிய கட்சிகள் இரண்டும் ஒன்று சேர்ந்து மக்களின் வேலையை எளிமையாக்கிவிட்டனர்.... அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளில் சிறிதளவாவது திமுகவுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது.... அதை அவர்களே கெடுத்துக்கொண்டனர்....... தேர்தல் முடிவுக்கு பின்னால் இருவரும் "உன்னால நான் கேட்டேன், என்னால் நீ கேட்ட" என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள்........

  • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

    தேர்தல் என்றாலே கூட்டணிகள் மாறுவதும் இயற்கை தானே இன்றைய ஆட்சியின் அவலத்தை மாற்ற மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் தமிழ்நாட்டில் எந்த கட்சி கொள்கை பிடிப்புடன் செயல் படுகிறது யார் தான் கூட்டணி மாறவில்லை திரிசங்கு நிலையில் மதில்மேல் பூனையாக பூச்சாண்டி காட்டும் விஜயகாந்தின் துவக்க கூட்டணி யாரோடு பின்னர் நேற்றைய கூட்டணி யாரோடு இன்று என்ன நிலை என்பது அவருக்கே தெரியவில்லை நாளைக்கு எங்கு மதிப்பு ( அது என்ன மதிப்பு நு உங்கலேக்கே தெரியும் ) அதிகம் தருவார்களோ அங்கு செல்ல போகிறார்,

  • Palaniapoan chidambaram - Madurai

    இம்மென்றால் அவதூறு வழக்கு போடும் அதிமுக அரசு இளங்கோவனின் 25 துறை ஊழல் பட்டியலுக்கு பதில் மெளன சாமியாரம்மாவாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி விட்டு பிறகு 234 இடத்திலும் ஜெயித்துக்கொள்ளட்டும். அதிமுக ஆதரவாக மூச்சு விடாமல் கருத்து சொல்லும் வாசகர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்.

  • nizamudin - trichy,இந்தியா

    வெற்றி கூட்டணி விஜயகாந்த் வருவது உறுதி / 37 MPகள் அண்ணா திமு க வசம் உள்ளன அதை வைத்து அவர்கள் நல்லது செய்யட்டும்/ எல்லாமே ஒருவரிடம் வேண்டாம்/ கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தட்டும் / அது தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது

  • Palaniappan chidambaram - Madurai

    பா.ஜ ஊழலற்ற கட்சியல்ல என்று அருன்ஜெட்லி மனசாட்சி சொல்லட்டும். மோடிக்கு நம்பி வாக்களித்தவன் நான் என்கிற முறையில், மோடி என்ன சிறந்த ஆட்சியை கொடுத்தார் சத்தியமாக தெரியவில்லை. விலைவாசியை குறைக்கவில்லை என்று காங்.யை குறைசொன்ன மோடி, மாறாக விண்ணை முட்டிய விலைவாசி கொண்ட ஆட்சியை நடத்தி வருகிறார். சர்வதேச சந்தையில் குருடாயில் ரூ. 110 இருந்த போது பெட்ரோல் விலை.70 ஆக இப்போது குருடாயில் 30 பெட்ரோல் விலை 69, மோடி நினைத்தால் இதை சரிசெய்தால் விலைவாசி குறையும். ஆனால் மாறாக கலால் வரியை உயர்த்துகிறார். மீனவர் பிரச்சனை எந்த மாற்றமில்லாமல் தொடர்கிறது. இது காங்.குறை சொல்லும் இப்பகுதி நண்பர்கள் கவனத்திற்கு.

  • shidhu - ooty

    மக்களே சிந்தியுங்கள், பின்னர் ஓட்டளியுங்கள்.

  • தாமரை - பழநி,இந்தியா

    இப்போதும் சொல்கிறேன் 2G கொள்ளையில் காங்கிரசுக்கு கணிசமான பங்குண்டு. சண்டை போடுவது போல நடிப்பதெல்லாம் சும்மா சும்மா... காங்கிரசின் கையில் CBI இருந்தபோதே கனியும் ராஜாவும் திகாருக்குப் போனார்கள். ஆனால் அவரை ராஜிய சபாவுக்கு காங்கிரசின் ஆதரவுடன் தான் கலைஞர் அனுப்பினார். அப்புறம் இப்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு 1/2 சதவிகித ஓட்டுக்கூட இல்லை. அப்படி இருந்தும் கூட்டணி எப்படி சாத்தியம்? எல்லாம் இவர்களுக்குள் இருக்கும் பாரம்பரியமான உறவுதான். சண்டை, பிரிவு, எதிர்ப்பு இதெல்லாம் வெளியே நமக்காக நடத்தப்படும் நாடகம்தான். இப்போது புரிகிறதா? கூட்டணி ரகசியம்?

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    அஞ்சாநெஞ்சன் அழகிரி சொல்லிவிட்டார் தி.மு.க + காங்கிரஸ் கூட்டணி விளங்காது என்றும் மிகபெரிய தோல்விகளை சந்திக்கும் என்றும் சொல்லிவிட்டார் , அவர் சொன்னது போல் ஆகிவிடும் பாருங்கள்

  • Nisha Rathi - madurai,இந்தியா

    விவசாயத்தை அழித்த, கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்த, இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய உடந்தையாக இருந்தது குடும்ப சொத்து சேர்க்க கிரானைட் கொள்ளை 2 ஜி ஊழல், கலைஞர் டிவி கனிமொழி ஊழல். பி எஸ் என் எல் 900 கோடி ஊழல் 10 ) ஏர்செல் 1200 கோடி ஊழல் கணக்கில் அடங்கா நில அபகரிப்புகள் கருணா தோல்வி உறுதி, தமிழ்நாட்டில் எல்லா மாநகராட்சியும் செத்து போச்சி, வேலை நடக்கல்லே அம்மா தோல்வி தான், மக்கள் ஒவொருவரும் யோசித்து திமுக அதிமுக இல்லாத , ஜாதிக்கு அப்பாற்பட்டு, இலவச வாக்குறுதி தராத , வாக்கிற்காக பணம் தராத கட்சியை தேர்வு செய்ய வேண்டும், தேர்தல் வரை மக்கள் நல கூட்டனி இருக்குமா ? அப்படியே இருந்தாலும்...வெற்றி வாய்ப்பு இருக்குமா இந்த கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டால்....மக்கள் நல கூட்டனியை உடைக்காமல் அம்மையார் விட மாட்டார்...முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் உள்ள பிரச்னையை காரணம் காட்டி... திருமா.... கம்யுனிஸ்டுகள் விலக வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே வைகோ பெரிய அளவில் அனாதையாக நிற்பார் மதுரை மாநகராட்சி இருக்கா என்ற டவுட் எல்லாருக்கும் இருக்கு, மதுரை MP யாருன்னே யாருக்கும் தெரியல்லே so மக்களே ஆளே பார்த்து vote போடுங்கோ

  • Karthi Keyan - Karaikudi,இந்தியா

    உடைந்த கட்டு மரத்தில் ஏறிய காங்கிரஸ்...

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    தேமுதிகவை ஒழிச்சுக்கட்டவே நடக்குது சதி. நெஜம்மா விஜயகாந்த் மயங்கவே மாட்டாரு நம்புவோம். அப்பறம் அவர் தலை எழுத்து

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    காங்கிரசுடன் கூட்டணி முடிவு செய்ததை எதிர்த்து விமர்சிக்கிறவர்கள், திமுக தனியாகப் போட்டியிட்டிருந்தால் மட்டும், அதற்கு வாக்களித்திருக்கவா போகிறார்கள்? அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் ஒரே அணியில் சேகரித்தால் மட்டுமே அதிமுக அரசு மீண்டும் அமைவதை தடுக்கவியலும். இது தெரிந்தாலும், மக்கள் நல கூட்டணி, வி காந்த்-பி ஜே பி அது இது என்று எழுதுவபர்கள் நிஜ அரசியல் தெரியாதவர்கள் தாம். அதிமுக எதிர் வாக்குகள் சிதறினால் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிக எம் எல் ஏக்களை அதிமுக பெறுவதை தடுக்க முடியாது. தமிழக வாக்காளர்களின் மெண்டல் ப்ளாக் அவர்களை திமுக வுக்கு வாக்களிக்க விடப் போவதில்லை. மந்திரிச்சு விட்ட ஆடு கோழி மாதிரி மீண்டும் அதிமுக வுக்கே வாக்குகள் அதிகம் விழும்//வாசகர் பார்வைக்கும் வாதத்துக்கும்//

  • Pandiyan - Chennai,இந்தியா

    தி மு க ..காங்க்றேஸ் ..ஊழல் கூட்டணி மூலம் ..வைகோ வின் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு பெருக வாய்ப்பு இருக்கிறது

  • Ravi - Chennai,இந்தியா

    இந்த கூட்டனி தி.மு.க வின் தோல்வியை உறுதி செய்துள்ளது

  • Anand Rao.v - Chennai,இந்தியா

    "இனி ஓட்டும் இல்லை உறவும் இல்லை கூடாநட்பு கேடாய் முடியும்" வசனங்கள் சமாதி ஆயின . இனி வரும் பொன்மொழிகள் "மணிமேகலை , நாட்டின் தவப்புதல்வன் ராசீவின் அருமை மைந்தன் ராகுலுடன் தேர்தல் களம் காண்போம்". ஏய் பெரிசு மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா?

  • Krishnan - Chennai,இந்தியா

    2006 தேர்தல் வியூகம் போன்றே இந்த தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்ற கணக்கு, தே மு திக கூட்டணியில் இணையவிட்டாலும் அ தி மு க விற்கு செல்ல தே மு திக விரும்பாது மற்றும் தே மு திக தனித்து நின்றாலும் குறைந்த பட்சம் வாக்குகளாவது பிரிந்து விடும், ஏற்கனவே மக்கள் நல கூட்டணி, பா மா கா, பிஜேபி என்று கட்சிகள் பிரிந்து உள்ளன, எனவே இந்த பிரிந்த வாக்குகள் தி மு காவை குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைக்கும் என்ற மன கணக்கு , எனவே மக்கள் நல கூட்டணி, தே மு தி க , பிஜேபி , பா மா கா வின் கூட்டணி முடிவுகள் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். ஆனால் காங்கிரஸ் மற்றும் தி மு க கட்சிகளின் ஊழல் மற்றும் துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது, எனவே இந்த கூட்டணி வெற்றி பெருமா என்று உறுதியாக கூற இயலாது

  • பொள்ளாச்சி சுரேஷ் - பொள்ளாச்சி,இந்தியா

    மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து, நமக்கு நாமே என்று களப் பணியாற்றிய ஸ்டாலின் தான் முதல்வர் என்று (தில்லாக) அறிவித்து இருந்தால், தி.மு.க வுக்கு ஒட்டளிக்கலாம் என்றிருந்தேன். குஷ்பு கட்சியுடன் கூட்டணி என்றவுடன் எனது முடிவை மக்கள் நல கூட்டணி பக்கம் மாற்றி விட்டேன். செஞ்சோற்றுக்(2G) கடன் தீர்க்க சேராத இடம் (காங்.) சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ஸ்டாலின்... வஞ்சகன் உன் தகப்பனடா.....உமது தலைவிதியை மாற்ற யாரால் இயலும். ???

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    A compilation of amateur videos from the civil war was presented by Jon Snow as a 50-minute special titled Sri Lanka's ing Fields on Channel 4 on 14 June 2011. The special features films shot during the last stages of the war that appear to show the shelling of areas in the no-fire zone and the aftermath, utions of captured LTTE combatants and dead female Tamil fighters being loaded on to a truck. Videos used in the first half were shot by individuals in the no-fire zone while the latter half seemingly shows mobile phone footage shot by the Sri Lankan soldiers.[106][107][108] The same program was broad in Australia on ABC TV 4 Corners program on 4 July 2011 presenting allegations that up to 40,000 Tamil civilians were ed by shelling or utions after surrender in many cases after being sexually abused.[109]

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    முட்டாள் காங்கிரசே நீங்கள் கேட்பதே 30 என்றால் ,எத்தனை சீட்டில் ஜெயிக்கபோகிறீர்கள்.என்ன சாதிக்க போகிறீர்கள்?.பேசாமல் தமிழக காங்கிரசை கலைத்து விட்டு தி.மு.க வுடனே சேர்ந்து விடுங்களேன் .இதில் மக்களின் காதில் பூ சுற்ற அவ்வப்போது காமராஜர் ஆட்சி என்று புலம்பல்,புரட்டு வார்த்தைகள்.தமிழக மக்கள் இந்த முறை காங்கிரசிற்கு ஒரு பூஜ்யம் அளிப்பது நிச்சயம்.

  • Raj Pu - mumbai,இந்தியா

    காங்கிரசுக்கு சில இடங்கள் வெற்றி கிடைத்தாலும் திமுக வுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்காது என்றே கூறலாம், இதற்க்கு தனித்து போட்டியிடல்லாம்

  • Rajkumar - Singapore

    நமக்கு நாமே திட்டம் என்று கூறி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொண்டீர்கள் ,

  • Venkat Srinivasan - Mumbai,இந்தியா

    எங்கலுக்கு முன்னமே தெரியும். இப்பிடித்தான் நடக்கபோகுதுன்னு. எதோ 25 -30 செஅட் சிக்கிக வைப்பு இருந்தது. அதில்லயும் விழுத்தது ஆப்பு. இருந்தாலும் கனி மொழிக்கு இப்படி எண்ணம் வேண்டாம். ஸ்டாலின் முதல்வர் அக வேண்டாம்ன்ன தனித்து போட்டி போடா செஞ்சு இருக்கலாம். இப்ப அடியோடு தீ மூ க வை அழிக்கப் திட்டம் போட்டுடுடங்கல்கே விதி யாரை விட்டது. ஸ்ரீ ஸ்ரீ சந்திப்புக்கு பிறகும் ஸ்டாலின் இப்பிடி ஒன்றில் சிக்கி இருக்க வேண்டாம். எல்லாம் அண்ட் கட்ட்மரதுக்கே வெளிச்சம்.

  • chinnan - chennai,இந்தியா

    Meum AMMA's AIADMK thaan vara vum. dmk matrum congress virattappada vum. Intha therthal thaan dmk party 💃 kku kadaisi therthal.

  • Jagadeesan V - chennai,இந்தியா

    காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் 0 மதிப்புதான். டி.எம்.கே க்கு யாரும் கூட்டணி poha மறுக்கிரார்ஹல். வேறு வழி இல்லை.காலத்தின் கட்டாயம். இ.வீ.கே. இளங்கோவனுக்கு ஒரு கேள்வி. சினமாவிலிருந்து வந்தவர்ஹல் ஆட்சி செஇவடாஹ கூறும் இவர் இன்றும் சினிமாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கட்டுமரத்தை ஏன் கூட்டு சேர்கிறார்? ஜே.ஜே. அரசியல் வந்த பிறகு ஒருதடவைகூட சினிமா பக்கம் போனவர் அல்ல. இன்றும் மகனுடன் நடிக்கும் வி.காந்தை கூட்டுக்கு அழைகிறார். கேவலம் பதவிக்காஹா குரங்ககாட்டம் போடுஹிறார். ஜே.ஜே வை பற்றி பேசியதற்கெல்லாம் எலெக்ஷன் முடிவு பதில் அளிக்கும். இதே மழை தி.மு.கா ஆட்சியிலோ அல்லது காங்க்றேஸ் ஆட்சியிலோ வந்திருந்தால், சென்னையே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயிருக்கும். சொந்த மகனே தி.மு.கா படு தோல்வியை அடையும் என்று வெளிப்படையாஹவே பேட்டி அளிக்கிறார். இவ்வளவு குறைபாடுஹளையும் கொண்ட இரண்டு கட்சிஹளும் சேர்ந்தால் படு தோல்விதான். இதுதான் நடக்கும். காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2ஜி மற்றும் தொலைபேசி இணைப்புக்கு கூட்டு சேராமல் அப்ப்ரூவராரஹ மாறிவிடுவேன் என்று பயம் காட்டி இருப்பார்ஹல். மஞ்சள் துண்டு பாவம். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

  • sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ

    இன துரோகி குடும்ப கொள்ளையர் கூட்டமும் இன விரோதி காங்கிரஸ் என்ற நாட்டை குட்டிச்சுவராக்கிய குள்ள நரிக்கூட்டமும் மக்களை வேட்டையாட மீண்டும் வேசம் போட தயார் ஆகிவிட்டன. 2ஜி - யிலேயே லட்ச கோடிகளை அடித்த கேடிகள் அடுத்த சுரண்டலுக்கு தயாராகிவிட்டனர். ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் துளியும் வெட்கமில்லை? குள்ளநரிக்கு பிறந்தது குள்ள நரியாகத்தானே இருக்கும். எது எப்டியோ குஷ்பூ'வும் நக்மாவும் கட்டுமரத்தை கரை சேர்க்க முயற்ச்சித்தாலும் நரியின் சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆகிறது என்பதை இந்த ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் உணர்த்தவேண்டும் இந்த தேர்தலில். மக்களே உன்காலை மடையர்காக்க ஒரு இன துரோக கூட்டம் ஒன்றிணைந்து வருகிறது. ஜாக்கிரதையாக இருந்து நல்ல பாடம் புகட்டுங்கள். நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்ச்சிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திர்க்கே சவால் விடுவது, நீதிமன்றங்களை கேலி கூத்தாக்கிடும் இந்த கொள்ளை கூட்டம், குடும்பத்தோடு ஒழிய வேண்டும். போதும்டா நீங்க தமிழனுக்கு செஞ்ச துரோகம் .....உங்களை விரட்டியடித்தால் தான் நாட்டில் விஷ கிருமிகள் தொல்லை நீங்கும்.

  • siriyaar - avinashi,இந்தியா

    Improved the victory scope of aiadmk. Also improves scope of vaiko team. Karuna with out way choosen death route. Dmk will go to martuary along with karuna in may 2016. God bless tamilnadu

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    திமுக - காங் கூட்டணிக்கு பாதகமான விஷயங்கள் 1. இலங்கை தமிழர் பிரச்சினை - இரண்டு கட்சிகளுமே தமிழ் இனத்துக்கு துரோகம் செய்தது என்ற பிரச்சாரம் இனி தூக்கலாக இருக்கும்.. 2. மீதேன் வாயு க்கு சுடாலின், துணை முதல்வராக இருந்த பொது, மத்திய காங்கிரஸ் ஆதரவுடன் கையொப்பமிட்டது... பிரசாரத்தில் இது மிக தூக்கலாக இருக்கும்... மீதேன் வாயு கொண்டு வந்த சுடாலின், சோனியா தேவையா என்ற ரீதியில் பிரச்சாரம் இருக்கும்... 3. அலைகற்றை வழக்கு, மன்மோகன் மீது ராசா சமீபத்தில் குற்றம் சாட்டினார்...ஆக திமுக, காங் இரு கட்சிகளுக்கும் இதுல தொடர்பு உள்ளது ..அதனை மறைக்க தான் கூட்டணி என்ற பிரச்சாரம் அதிமுக சார்பில் எடுத்துரைக்கப்படும்... 4. வயல்வெளிகளில் இயற்கை எரிவாயு பதிக்க கடந்த திமுக அரசு தான் ஒத்துகொண்டது... அதிமுக அரசு எதிர்த்து போராடி, விவசாயிகள் உரிமையை காக்கிறது...ஆக மீதேன், மற்றும் இயற்கை எரிவாயு - ஆகிய இரண்டு பிரச்சினைகள் போதும், டெல்ட்டா மாவட்டங்களிலும், கொங்கு மாவட்டங்களிலும் காங் - திமுக கூட்டணி மண்ணை கவ்வ... [ இந்த விஷயத்தில் காங் விரித்த வலையில் திமுக சிக்கியுள்ளது ] 5. இதுபோக திமுகவின் நிலம் அபகரிப்புகள்.... இவ்வளவும் பிராதனமாக இருக்கும் பிரசாரங்களில்...இதில் இருந்து இந்த கூட்டணி மீளவே முடியாது.... மெத்தேன் எரிவாயுக்கு சுடாலின் போட்ட அந்த கையெழுத்து ஒன்றே பொது, அவரை தோற்கடிக்க ..[ விஜயகாந்தூ புத்திசாலியா இருந்தா, நிச்சயம் இந்த கூட்டணியில் இணைய மாட்டார் ]

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    திரு. கருணாநிதி, தமக்கு தாமே கேள்வி கேட்டு பதில் எழுதும் பகுதியில் இப்படியும் எழுதுவாரோ ?? அவரது கேள்வி : அன்னிக்கு காங்கிரஸ் கூட இனிமே கூட்டணி இல்லன்னு சொன்னீங்களே ?? - அவரது பதில் : அன்னிக்கு சொன்னது வேற வாய், இன்னிக்கு சொன்னது நாற வாய்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    பல வாசகர்கள் தி. மு.க , எங்கே பா. ஜ அல்லது கப்டனுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடுவார்களோ என்று பயந்து இருந்தார்கள். இப்போ நிம்மதியாக பெரு மூச்சு விடுவார்கள். இந்த இரண்டு கட்சிகளும் தங்கள் தோல்வியை உறுதி செய்தன.

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    கூட நட்பு கேட முடியும் என்று சொன்னது எல்லாம் அரசியலில் சகஜம் தானே

  • Nagendran Nadar - madurai,இந்தியா

    அம்மா வெற்றி உறுதியாகிவிட்டது. 234 தொகுதியும் எங்களுக்கே. நன்றி

  • Manithan - Tamilnadu,இந்தியா

    அதிமுக எதிர்ப்பால் பழைய வரலாற்றின்படி ஒன்று மாற்றி மற்றொன்று என்று தி.மு.க விற்கு விழ இருந்த ஓட்டுகளும் அவுட் ... கன்பா..ர்ம்ங்க்னா..

  • SELVAM - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கூடா நடப்பு இப்போது நல்ல நடப்பு ஆனது

  • Aaa - Bangalore,இந்தியா

    better vote to nota ... Again and Again why we two robber parties ....

  • farook - salmiya,குவைத்

    நிச்சயம் வெற்றிபெறும் .வாழ்த்துக்கள் .

  • Chandramoulli - Mumbai,இந்தியா

    மஞ்ச துண்டு தமிழகத்திற்கு செய்த துரோகங்கள் 1 ) சர்க்காரியா கமிஷன் தீர்ப்பின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஹேமாவதி ஆணை கட்டி கொள்ள கர்நாடாகவிற்கு அனுமதி . 2 ) காவேரி நீர் பங்கை கேட்க மாட்டோம் என்ற உத்திரவாதம் 3 ) முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 130 அடிக்கு கொண்டு வந்தது . விவசாயத்தை அழித்த மகா பாவி 4 ) கச்ச தீவை தாரம் வார்த்து கொடுத்தது 5 ) இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய உடந்தையாக இருந்தது 6 ) குடும்ப சொத்து சேர்க்க கிரானைட் கொள்ளை , 7 ) 2 ஜி ஊழல் , 8 ) கலைஞர் டிவி கனிமொழி ஊழல் . 9 ) பி எஸ் என் எல் 900 கோடி ஊழல் 10 ) ஏர்செல் 1200 கோடி ஊழல் 11 ) கணக்கில் அடங்கா நில அபகரிப்புகள் , 12 ) வோல்டாஸ் 300 கோடி நிலம் ராஜாதி அம்மாள் கார் டிரைவர் வசம் 12 ) சுடாலின் செய்த மறைமுக கொலைகள் ஏராளம் . இது ஒரு பகுதி தான் . தமிழக மக்களுக்கு தெரியும். இது எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு . இரண்டும் திருட்டு கொள்ளை கார கும்பல்களின் இருப்பிடம் . வரும் தேர்தலில் மக்கள் இந்த இரண்டு கேடு கெட்ட அவலம் கெட்ட கட்சிகளை தோல்வி அடைய செய்ய வேண்டும் . இவர்களை காட்டிலும் ஜெயலலிதா அவர்கள் எவ்வளவோ மேல் .

  • t.v.nathan - nagapattinam,இந்தியா

    மக்கள் நல கூட்டணியில் கேப்டன் சேர்ந்து கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். விஜயகாந்துக்கு முதல்வர் பதவி என முதலில் அறிவிக்கப்பட வேண்டும். மக்கள் நல கூட்டணிக்கு 25% ஒட்டு கிட்டைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் ஒட்டு குறைந்தது 15% கிடைக்கும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி , திமுக கூட்டணிக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக அமையும். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அதிகமான விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடும். தமிழர்கள் வாக்கு திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது. எதிர்கட்சி தலைவராக இருந்தவர், நால்வர் கூட்டணியில் இணைந்து முதல்வர் ஆனார் என்று வரலாறு படைக்கும் சாத்தியம் உண்டு. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் வைக்கோவிற்கு கிடைத்த மரியாதைதான் கிடைக்கும். முதல்வர் ஆசையை விட்டுவிட வேண்டும். எனவே கேப்டன் அவர்களுக்கு தலைமை பொறுப்பு வேண்டுமா ? வேண்டாமா ? பொருத்து முதலில் முடிவு செய்த பின்னர் எந்த கூட்டணி என்பதை அறிவிக்க வேண்டும். அதுவே தேமுதிகவுக்கு நல்லது.

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

    வெற்றிக் கூட்டணி முடிவெடுத்தாச்சு..... ஆட்சி மாற்றம் தொடங்கப்பட்ட நாள் இந்நாள் நன்னாளாக இனி அமையட்டும். எதிரணியினர் மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    தேசிய ஊழலும் , மாநில ஊழலும் கை கோர்த்துள்ளன...மக்களே உஷார்.... விஜயகாந்தே , மானம் ரோஷம் இருந்தால், மக்கள் நல கூட்டணியில் இணைந்துகொள்... இல்லைஎன்றால், ஊழலுக்கு துணைபோன பாவத்தை செய்வதாகிவிடும்... மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இருந்தால், எதிர் கட்சி தலைவானாவது ஆகலாம்...ஆனால், திமுக கூட்டணியில் சேர்ந்தால் திமுக தான் எதிர் கட்சி தலைவன் பதவியை பிடிக்கும்... விஜயகாந்த் WASH OUT ஆவ போவது உறுதி....

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    பழைய மொந்தையில் அதே " உவ்வே " பழைய கள்... இது தான் காங் - திமுக கூட்டணி... ஏதோ புது கூட்டணி போல பில்ட் அப் செய்கிறார்கள்... இலங்கையில் லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும்போது மவுனியாக இருந்த கட்சி திமுக....துணை போன கட்சி காங்... மறைமுகமாக துணை போன கட்சி திமுக....காங் கை இந்த விஷயத்தில் குற்றம் சொல்லி பிரயோசனம் இல்லை... ஏனென்றால் காங் தேசிய கட்சி...ஆனால் தமிழன தலைவர் என்று ஊரை ஏமாற்றும் கருணா , இன்று தமிழன படுகொலைகளுக்கு காங் தான் காரணம் என்று அன்று சுட்டிக்காட்டி, கூட்டணியை விலக்கிய கருணா, இன்று அதே ஊழல் காங் குடன் கை பிடித்துள்ளது வெட்க கேடானது..... இந்த ஊழல் கூட்டணி படுதோல்வி அடையும்...

  • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியோடு சேரவேண்டும், மக்களும் மக்கள் நல கூட்டணியை ஆதரிக்க வேண்டும். செம்மறி ஆடுகள் போல் அதிமுக திமுக இரண்டுக்குமே மாறி மாறி ஓட்டு போடக்கூடாது.

  • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

    DMK க்கு இருந்த கொஞ்ச நஞ்ச பேரும் இத்தோட காலி. இந்தமுறை வைகோ கூடாரத்துக்கு வாய்ப்பு அதிகம்.

  • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழன் இளிச்ச வாயன் எல்லாவற்றையும் மறந்து விடுவான் என்கிற தைரியம் இவர்களுக்கு. இவர்கள் இருவரும் எத்தனை ஆண்டு காலம் கழித்து தேர்தலில் நின்றாலும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்.

  • nellai muthuvel - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    கருணாநிதி ஜியும், ராகுல் ஜியும் ஒண்ணா சேர்ந்தா என்னாகும் 2ஜி ஆகும், மக்கள் ஜி சிந்திச்சா வாக்களிச்சா சரிதான்...

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இவர்களுக்கு தைரியம் அதிகம் மீண்டும் மக்களிடம் வந்து பேசுவார்கள் better choose NOTA

  • Deepak - Paramakudi,இந்தியா

    Rather to choose the least worse party among DMK & ADMK, its best to support any new party & go for a change. We are lacking of Quality & Honest leader & also a party with noble principles, to lead the tamil front. We need to get out of e & Religious barrier, for the betterment of our life. For the moment, we don't have a good option. I hope one day, we will find a way.. .

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒன்னால நான்கெட்டேன் என்னால நீ கெட்ட, பிரிக்க முடியாதுபா........(அந்த போட்டால பின்னணி ஒன்னே போதும், இவிங்க தோல்வி உறுதின்னு இப்பமே சொல்ல)

  • badhrudeen - Madurai,இந்தியா

    தோல்வி நிச்சியம் இது தமிழ் மக்களின் நூறு சதவித கருத்துகணிப்பின் முடிவு. இவர்களை பற்றி நினைத்து கவலைப் பட வேண்டாம்

  • sudhapriyan - riyadh,சவுதி அரேபியா

    இதெல்லாம் பாக்கனும்ம்னு நம்ம தலை எழுத்து

  • ragu - thombe,இலங்கை

    2G சோனியாG கூட்டு நாடு நல்லா வெளங்கிடும்.

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    என்றைக்கு, தமிழர்கள் சுய சிந்தனை இல்லாமல் செம்மறி ஆடுகள் மாதிரி சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளை கலைஞர், புரட்சிதலைவி, கேப்டன் என்று அளவுக்கு மீறி துதி பாடுவதை நிறுத்துகிறார்களோ அன்றைக்கு தான் தமிழ்நாடு உருப்படும்.

  • குண்டலகேசி - chennai,இந்தியா

    கூடா நட்பு கூடியது. கறை படிந்த கரங்கள் கை கோர்த்தன. பூனை குட்டி வெளியே வந்து விட்டது...கட்டுமரம் கரை தட்டி விட்டது....மத்தியில் கோட்டை விட்டதும், மாநிலத்தில் கோட்டை விட்டதும் கூடி கோட்டையை பிடிக்க கனவு காண்கின்றன...

  • Appu - Madurai,இந்தியா

    கோவிந்தா கோவிந்தா. நாட்டின் மாபெரும் இரு ஊழல் கும்பல் ஒன்று சேர்ந்து விட்டது. விஜயகாந்த் இவர்கள் வலையில் சிக்கி விட கூடாது என்பது எனது எண்ணம். மக்கள் நல கூட்டணி அல்லது தனித்து நிற்க வேண்டும் விஜயகாந். திமுக,அதிமுக,காங்கிரஸ்,பாஜகவுடன் கூட்டு அவருக்கு(விஜயகாந்திற்கு) ஆப்பு...

  • suresh - omaha,யூ.எஸ்.ஏ

    இது போதாது. தி மு க மெகா கூட்டணி அமைத்து ஊழல் காரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்.

  • 911Tamil - Somerset,சிங்கப்பூர்

    தமிழின துரோகிகள், ஊழல் பெருச்சாளிகள், நாட்டை அழிக்கவந்த இரண்டு பெரும் குடும்பகட்சிகள் மற்றும் அதன் அடி மட்ட தொண்டர்கள் எல்லோரும் மக்களை நோக்கி வருகிறார்கள் - அவர்களை உள்ளே வரவிட்டால் ஆழ வழிவிட்டால் தமிழ் நாட்டு மக்கள் கொல்லப்படுவார்கள் தமிழ்நாடு கச்சதீவு மாதிரி இலங்கைக்கு விற்கப்படும் - இன்னும் ஹிமாலய ஊழல்கள் செய்வார்கள் - தமிழக குடும்ப கட்சி ஆட்சிக்கு வந்தால் - ரௌடித்தனம் இன்னும் அதிகமாகும் - மக்களின் நிம்மதி போகும் - அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்படும் - மக்களின் இயல்பு வாழ்க்கை கெட்டுவிடும் - பெண்கள் பாதுகாப்பு பாதிக்கும் - தமிழ்நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடும் - மக்களே சுயநினைவோடு நல்ல கட்சிக்கு அதரவு அளிக்கணும் - இவர்களை 3016 இல் பார்த்துக்கொள்ளலாம் - ஜெய் ஹிந்த்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மு க விற்கு மனசில் இருந்த பாரம் எல்லாம் இறங்கியது போல் இருந்து இருக்கும்...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நேற்று மு க நன்றாக தூங்கி இருப்பார்...

  • K.Sugavanam - Salem,இந்தியா

    கும்தலக்கா கும்மா..நாங்க புதுசா கட்டிகிட்ட சோடிதானுங்கோ..குத்தாட்டம் எகிறப்போகுது..

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    இலங்கையில் தமிழனை கொத்து கொத்தாக கொல்ல இலங்கை கொடூரனுக்கு ஆதரவாக விமானங்களும் கப்பல்களும், ராடார்களும் ஆலோசனைகளும் கொடுத்தது மட்டுமின்றி தமிழர்களுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அவர்களை ஓரிடத்தில் குவிய செய்து அந்த இடத்தில் மருத்துவமனை என்றும், கோவில் என்றும் பார்க்காமல் கொத்து கொத்தாக கொன்று தமிழன் மீதான தன் வஞ்சனையை தீர்த்து கொண்ட இத்தாலி ஏஜென்ட் ன் கான் கிராஸ் கட்சிக்கும் அதற்க்கு உறுதுணையாக இருந்த வஞ்சக நரி தி மு காவிற்கும் பொருந்தும் காதல்.விண்ணையும்,(2 G ) மண்ணையும்,(நிலக்கரி) நீரையும் (வீராணம்) கொள்ளையடித்த கூட்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட விடாதீர்கள். ஐந்தாண்டுகளுக்கு அடிமையாக வைத்து கொள்ள , அவர்களை பார்க்கும் அனைவரையும் விலைக்கு வாங்கி வாங்கிவிடுவார்கள். கவனம் தமிழர்களே.

  • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

    கப்பலோட்டிய தமிழன் திரு வஉசி; கப்பல் லௌட்டிய தமிழன் திரு டுஜி.

  • நிலா - மதுரை,இந்தியா

    நீயும் நானும் ஜோடி சேர்ந்து அடித்தோம் கோடி இன்னும் பங்கு பிரிக்கபடவில்லையோ? அதுதான் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஜோடியா.? அதிமுகவுக்கு ஜெ - ஜெ 2016 அதிமுகதான், ஆட்சியை பிடிக்கிறது

  • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

    ஈழத்தமிழர்களின் கடைசி கால அவலமும், மரண ஓலமும் இந்த திமுக ,காங்கிரஸ் கண்ணில் தென்படும் வரை கண்ணை விட்டு மறையாது, தமிழர்களை கண்ணை கட்டி தலையில் துப்பாக்கியால் சுட்டது, நிர்வாண நிலையில் ஈழ பெண்களின் உடல்கள் முள்வேலிக்குள் இருக்கும் குழந்தைகளின் பிஞ்சு கைகளில் இலங்கை ராணுவ வீரர்கள் சிகெரெட்டால் சுடுவது என்றும் நினைவில் இருந்து மாறாது, இந்த கருணாநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்ககூட தகுதி அற்றவர்.

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    எதிர்பார்த்த கூட்டணி அமைந்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் எடுத்த நிலையை இப்போது பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்து திமுகவுக்கு கொடுத்த நெருக்கடியால் தான் அக்கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. கூட்டாளி மனம் வருந்தி, திருந்தி திரும்ப வரும்போது ஏற்றுக் கொள்வது தான் நல்ல நண்பனுக்கு அழகு. அது இருகை ஓசையாக தொடங்கி ஒத்த ஓசையுள்ள இன்னும் பல கரங்கள் இணைந்து தமிழகம் தன்னேற்றம் பெற பூரிப்புடன் ஒலிக்கும்.

  • Pandiyan - Chennai,இந்தியா

    கூட்டு திருடர்கள் வசமா 2016 தேர்தலுக்கு மட்டிருகாங்கோ வாங்க..வாங்க ..ஆப்பு வைக்க மக்கள் ரெடியா இருக்காங்கோ

  • Govindaraj - Brunei

    திமுக -காங்கிரஸ் கூட்டணியோடு காணாமல் போக போகுது.

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து போயிருக்கிறார்கள். அதுவே பெரிய விஷயம். பிறகென்ன கோஷ்டி தலைவர்கள்.

  • saravana kumar - chennai,இந்தியா

    தமிழகத்தில் திமுக அதிமுக வையும் தவிர்த்து மக்கள் மாற்று கட்சிக்கு வோட்டளிக்க வேண்டும் . காங்கிரஸ் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவிட்டு இன்று கூட்டணி அமைபதிளிருந்து இவர்களின் விஸ்வருபம் தெரிகிறது இவர்கள் அதிமுகவை வென்றாலும் இவர்களின் வாக்குறுதியை நிறை வேற்றமாற்றர்கள் குறிப்பாக இவர்கள் ஆளும் கட்சியை குறை சொல்லும் டாஸ்மாக் மூடமாடர்கள். மக்கள் ஒவொருவரும் யோசித்து திமுக அதிமுக இல்லாத , ஜாதிக்கு அப்பாற்பட்டு, இலவச வாக்குறுதி தராத , வாக்கிற்காக பணம் தராத கட்சியை தேர்வு செய்ய வேண்டும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ஆனால் இந்த அரசியல் திருடர்கள் திருந்த மாட்டார்கள் மக்களின் மூலம் தான் மாற்றம் கொண்டு வர முடியும் டெல்லி நிலைமை தமிழகத்துக்கும் வர வேண்டும் மாற்று கட்சி வேண்டும் . பால் விலையேற்றம், மின்சார விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, ரியல் எஸ்டேட் கொள்ளை இவை எல்லாம் இரண்டு கட்சியும் வந்தாலும் வரும் .

  • Pannadai Pandian - wuxi,சீனா

    எப்படியாவது ரொம்ப கஷ்டபாடு இன்னொரு தீய சக்தி தேமுதிகவை உள்ளே கொண்டாந்துரனும். அப்புறம் கதவ சாத்தி போடு போடுன்னு போட்டுத்தள்ளிரனும். இனி மேல் இந்த மூன்று மக்கள் விரோத சக்திகளும் எழுந்திருக்க கூடாது. இதுவே இவர்களின் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்.

  • arun.subramaniyam - LA, Cali,இந்தியா

    ஈழ பிரச்சனைக்காக காங்கிரஸ் ஐ விட்டு பிரிந்த திமுக, இன்று சேர்ந்து விட்டது. ஈழ பிரச்சனை என்ன ஆனது ?? இப்போ, ஈழத்தில் மக்கள் இருந்தா தான ? தமிழ் இனத்தின் துரோகிகள் ஓட ஓட விரட்ட பட வேண்டும்

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    இந்த கூடா நட்பில் விஜயகாந்த் இணைந்தால் , பேமென்ட் ஹெவியாக இருக்கும்..ஆனால், மக்கள் மன்றத்தில், மனதில் இருந்து அவரும் அகற்றப்படுவார்.....

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    கூட்டுக் களவாணிகள் ஒன்னு சேர்ந்துள்ளனர்....தமிழனுக்கு நல்ல வாய்ப்பு...ஒரே கல்லில் இரண்டு கட்சிகளை துடைத்தெரிய வாய்ப்பு....

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    திமுக காங்கிரஸ் கூட்டனியில் அனைத்து சிறுபான்மையினர் கட்சிகளும் இணைத்து விடும்...அதில் தேமுதிகவும் இணைத்தால்...அம்மையார் நிச்சயம் கூட்டனி இல்லாமல் தேர்தலை சந்திக்க மாட்டார்...இது 100% உண்மை...அப்படியானால்....எஞ்சி இருப்பது ....பாஜக மற்றும் மக்கள் நல கூட்டனி தான் ....அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனித்தே தேர்தலை சந்திப்போம் என்ற பிரச்சாரத்தோடு பாமக நீண்ட தூரம் பயணித்து விட்ட நிலையில் அம்மையாரோடு இணைய சாத்திய கூறுகள் மிக மிக குறைவே...பாஜகவோடு அம்மையார் கூட்டனி அமைத்தால்...தொகுதிக்கு 5,000 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைக்கும்....ஆனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் ஒட்டுக்கள் பறி போகும்....கூட்டி கழித்து பார்த்தால்...பாஜகவால் கிடைத்த ஓட்டுக்களை விட இழந்த ஓட்டுக்கள் தான் அதிகம் இருக்கும் ....வழக்கிற்காக வேண்டும் என்றால்...கூட்டனி அமைக்கலாம்....ஆட்சிக்காக ஒரு துளியும் பாஜகவால் பயன் இல்லை...அடுத்து யார் உள்ளனர் ?? வேறு யார் மக்கள் நல கூட்டனி தான்.....அம்மையார் HUNTING STARTS NOW.....மக்கள் நல கூட்டனியை வேட்டையாடாமல் விட மாட்டார்....அதற்க்கு அறிகுறியாக....தேர்தல் நெருங்க நெருங்க....மக்கள் நல கூட்டனியில் கருத்து வேறுபாடுகள்...சலசலப்புகள் தோன்ற துவங்கும்...இறுதியில் வெளியேறுகிறோம் என முதல் பிரஸ் மீட்....பின்பு தாயுள்ளம் கொண்ட அம்மா அவர்கள் எங்களை அரவணைத்து கொண்டார் என இரண்டாவது பிரஸ் மீட்.....மூன்றாவது வேறு என்ன .....தோட்டத்தில் அம்மையாரோடு மீட் தான்

  • Rajavel - Singapore,சிங்கப்பூர்

    கூடா நட்பை (ஜெ-சசி ) தமிழக அரசியலில் இருந்து விரட்டியடிக்க திமுக -காங்கிரஸ் கூட்டணியை வரவேற்ப்போம்.

  • Rajavel - Singapore,சிங்கப்பூர்

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த திமுக - காங்கிரஸ் வெற்றி கூட்டணியை வரவேற்ப்போம்.

  • Rajavel - Singapore,சிங்கப்பூர்

    45% கமிசன் அடிக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க திமுக - காங்கிரஸ் கூட்டணியை வரவேற்ப்போம்.

  • Rajavel - Singapore,சிங்கப்பூர்

    ஸ்டிக்கர் ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக - காங்கிரஸ் மாபெரும் வெற்றி கூட்டணிக்கு வாக்களிப்போம்.

  • Sriram - Chennai,இந்தியா

    கைபுள்ள உங்களுடைய கருத்தை தட்டி விடுங்கோ ......

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    இந்த கூட்டனி அறிவிப்பு அடிமைகளை கதி கலங்க செய்து இருக்கும்...பதற்றத்தில் கருத்தை (?) எழுதி தள்ளுவார்கள்.... ஹ ஹ ஹ ஹ....இன்னும் 3 மாதத்தில் அடிமைகளின் ஆட்டம் க்ளோஸ் ......அதிமுக வென்றால்...என் முகவரியை மாற்றி கொள்கிறேன் என மீண்டும் ஓர் முறை சவால் விடுக்கிறேன்... இது வரை என் சவாலை ஏற்காத அடிமைகளுக்கு மீண்டும் இது ஓர் வாய்ப்பு....அதிமுக வெல்லும் என கருத்தெழுதும் அடிமைகள் பல இன்னும் பென்டிங் உள்ளது ...அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன்...

  • Rajavel - Singapore,சிங்கப்பூர்

    இது மாபெரும் வெற்றி கூட்டணி. தற்போது 200 மேற்பட்ட இடங்களை பிடிக்கும். விஜயகாந்தும் வந்தால் 230 க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும். 1996 வரலாறு திரும்பலாம். அம்மாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அது கட்சி தோல்வி அல்ல (அது உறுதி செய்யப்பட்டு விட்டது). இது தன்னோட தொகுதியின் தோல்வி.

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    ஜூப்பர்.....எதிர் பார்த்தது தான்....ஆட்சியில் பங்கு என்பது போங்கு என்பது நிரூபணம்....எல்லாம் சொல்வது தான்.... தேர்தல் நேரத்தில் அனைத்தும் அணைந்து விடும்....எப்போது இளங்கோவன் தமிழக காங்கிரெஸ் தலைவராக நியமிக்கபட்டாரோ...அப்போதே திமுக காங்கிரஸ் கூட்டனி ஏற குறைய உறுதியாகிவிட்டது....தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது....இந்த கூட்டனி முடிவு வாசனுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் ...காங்கிரெஸ்சை விட நாங்களே வலிமையானவர்கள் என்பதை நிருபிக்க ...திமுக காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதியை விட தமாக அதிமுகவில் இணைந்தால்....காங்கிரஸ் பெற்ற தொகுதியை விட அதிகம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்....100% நிச்சயம் காங்கிரஸ் பெரும் தொகுதியை விட அதிமுகவில் வாசன் பெற முடியாது.....மக்கள் நல கூட்டனியில் பெறலாம்...ஆனால் தேர்தல் வரை மக்கள் நல கூட்டனி இருக்குமா ? அப்படியே இருந்தாலும்...வெற்றி வாய்ப்பு இருக்குமா என்ற விடை இல்லா கேள்விகளுக்கு ...வாசன் பதில் அளிக்க முடியுமா ? இந்த கூட்டனியில் தேமுதிக இணைத்து விட்டால்....மக்கள் நல கூட்டனியை உடைக்காமல் அம்மையார் விட மாட்டார்...முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் உள்ள பிரச்னையை காரணம் காட்டி...திருமா....கம்யுனிஸ்டுகள் விலக வாய்ப்பு அதிகம் உண்டு. ..கூட்டனி ஆட்சி ...மாற்று சக்தி என்பது தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் இல்லை என்பதை நிருபிக்க....காவு கொடுக்கப்பட போவது..."மக்கள் நல கூட்டனி" தான்

  • maanasthan - madras,இந்தியா

    அழுக்கு மூட்டையுடன் மண்ணாய் போன congress விளங்கிரும்

  • maanasthan - madras,இந்தியா

    காதலர் தினத்தில் மலர்ந்த கள்ள காதல் கலந்கோவிற்கும், மஞ்சள் துண்டு மைனரும் இனி இரண்டு மார்க்கெட் இழந்த நடிகைகள் (நக்மா & குசுபு) போடும் குத்தாட்டத்தை இலவசமாக பார்க்கலாம்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    இது எதிர்பார்த்தது தானே? இதுதான் இயற்கையான திருட்டு கூட்டணி....தமிழர்களை காப்பாற்ற தவறிய திருக்குவளையார் தலைமையில் ஆனா திருட்டு முன்னேற்ற கூட்டணி எவனும் ஓட்டு போட மாட்டன் என்பதை உணர்ந்து காங்கிரசை கழற்றி விட காரணம் தேடியது....நன்றாக பத்து வருடம் அட்டை பூச்சி போல ஒட்டி கொண்டு திருடி சுவைத்து அனுபவித்த திமுக , தமிழர்களை கொன்று புதைத்த காங்கிரசுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று உறவை துண்டித்து கொண்டு தேர்தலில் பங்கேற்றது... கட்டுமரத்தின் தந்திரத்தை புரிந்து கொண்ட தமிழர்கள் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி விட்டனர்... தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத திமுக பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட கிடைக்காமல் முட்டை வாங்கியது.....இந்த ஒன்றரை வருடத்தில் காங்கிரஸ் தமிழர்களுக்கு வேண்டப்பட்ட கட்சி ஆகி விடுமா இல்லை இலங்கை தமிழர்களை கொன்று புதைக்க துணை போன கட்சிகளான காங்கிரசும் திமுகவும் இப்போது பரிசுத்த கட்சிகளாகி விடுமா? அதிமுக சரியான ஆட்சி கொடுக்கவில்லை தான் அதற்காக ஒரு திருடனுக்கு இன்னொரு திருடன் மாற்று ஆகி விடுவானா? தேமுதிக இவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை...வைத்தால் அந்த கட்சிக்கு சில எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள்...ஆனால் வாக்கு சதவீதம் தேய்ந்து கம்முநிஸ்ட் கட்சிக்கு உள்ள மரியாதை தான் அடுத்த வருடம் முதல் அதற்கு கிடைக்கும்...அடுத்த சட்டசபை தேர்தலுக்கு 5 சீட்டுகள் தான் கொடுக்க முடியும் என்று திமுக பேரம் பேசும்...தனியாக நின்று திமுக சரி இல்லை அதிமுக சரி இல்லை என்று மக்களிடம் பேச முடியாது..காரி துப்பி விடுவார்கள் தேமுதிகவினர் முகத்தில்...திமுகவினர் திருடாமல் கொள்ளை அடிக்காமல் இருக்க முடியாது....தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழி உண்டு....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழர் விரோத கட்சியும் தேச விரோத கட்சியும் சேர்ந்து தமிழகத்தை ஆள கனவு காண்கிறார்கள்...

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    E .V.K.S. இளங்கோவனிடம் கேட்க வேண்டும். இது கள்ள உறவு இல்லையா என்று ??

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இளங்கோவன் ரெண்டு கையாள சாப்பிடுற ஆள்ன்னு நல்லாவே ப்ரூவ் ஆகிடிச்சு

  • கைப்புள்ள - nj,இந்தியா

    மிகவும் நன்று. தமிழக மக்களுக்கு மறதி நோய் இருக்கா இல்லையான்னு இந்த முறை தெரிஞ்சிடும்.

  • Thangaraj - Santacruz,இந்தியா

    ஒரு படத்தில் சத்தியராஜ் வடிவேல், கோவை சரளா நடித்த காட்சி ஒன்றில், வடிவேல் சொல்லுவார், சிம்ரன், என் குடும்பத்தை பற்றி அவன் தரக்குறைவா பேசுவான். அவன் குடும்பத்தை பற்றி நான் தரக்குறைவா பேசுவேன். இதை நாங்க ரெண்டு பெரும் சீரியசாவே எடுத்துக்க மாட்டோம் என்று சொல்லுவார். காங்கிரஸ் - தி மு க கூட்டணி சென்ற தேர்தலில் முறிந்தவுடன் கருணா பேசிய பேச்சுக்களை இந்த ரீதியில் இரண்டு கட்சியினரும் எடுத்து கொள்ளவேண்டும். மக்களாகிய நாம் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று கவுண்ட மணி சொல்லுவாரே, அது போல் இதை எடுத்து கொள்ளவேண்டும்.

  • Thangaraj - Santacruz,இந்தியா

    திமுக கட்சியே கிடையாது அது கார்ப்பரேட் கம்பெனி. 36 டீவி சேனல். சிமண்ட்கம்பெனி.மது ஆலைகள். பத்திரிகைகள். சினிமாதுறையில் பல கம்பெனி. என பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் கம்பெனி. அந்த கம்பெனி முதலாளிகளே தேர்தலில் ஓட்டு கேட்டு கொள்ளையடிக்க வருகிறார்கள் .அப்படினா ஈழப்படுகொலையில் இருவரும் கூட்டாளிகள் என்பதை ஒப்புக்கொண்டுட்டாங்கே தமிழர்களை கேனப்பயலுகன்னு நெனச்சுட்டியா கட்டுமரம் இதத்தானே எதிர்பார்த்தோம்,வரும் தேர்தலோட திமுக வுக்கு சமாதிதான்

  • Thangaraj - Santacruz,இந்தியா

    குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்துவிட்டது என்ற கருணாநிதி எங்கே இதன் மூலம் இனப்படுகொலையிலும் மற்றும் 2ஜி முறைக்கேட்டிலும் நாங்கள் இருவரும் கூட்டு களவாணிகள்தான் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் திருடர்கள் முன்னேற்ற கழகமும், காங்கிரசும், இந்த கூட்டணியை தமிழர்கள் எந்நாளும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள், உண்மையான தமிழர்கள் யாரும் இவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

  • Thangaraj - Santacruz,இந்தியா

    கலைஞர் காங்கிரஸ் கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் இன்று மறுபடியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது திமுக. . கலைஞர் நம்பகதன்மையை இழந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல குடியை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்து தமிழ் நாட்டு குடிமக்களை குடிமகன்களாக மாற்றிய சிறப்பு பெற்றவர் கலைஞர்.தமிழ் சமூகத்தை குடிகாரர்களாக்கி அவர்கள் குடியை கெடுத்தவர் இப்போது பதவிக்கு வருவதற்காக மது விலக்கு கொண்டு வருவோம் என்கிறார். கலைஞர் சொன்னால் சொன்னபடி செய்யக்கூடியவர் என்று ஸ்டாலின் டயலாக் விடுகிறார்.காங்கிரஸ் கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அடித்து சத்தியம் செய்த கலைஞர் இப்போது தன்னுடைய. கூற்றுக்கு உண்மையில்லாதவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இதையேதான் மது விலக்கு விடயத்திலும் கடைபிடிப்பார்.இன்னும் ஒரு விடயம் காங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்காக ஈழதமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இலங்கைக்கு காங். அரசுதான்ஆயுதம் கொடுத்து ஈழ தமிழர்களையும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த விடுதலை புலிகளையும் அழிப்பதற்கு காரணமாயிருந்தது காங. அரசு.அந்த. சமயத்தில் காங் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் பங்கு பெற்றிருந்த. திமுக வும் ஈழ. தமிழர்கள் அழிவுக்கு கூட்டு குற்றவாளிகள்தான் கடைசிவரை திமுக. பதவியை கட்டியாக பிடித்துக்கொண்டு ஈழதமிழர்களை அழித்து முடியும் வரை வேடிக்கை பார்த்தது திமுக.தமிழர்களை அழித்து முடித்த பின் காங்.கூட்டணியை விட்டு வெளியேறுவதாக சொல்லி வெளியே வந்தார்கள்.தமிழர்களை அழித்ததில் காங் க.ட்சிக்கும் திமுக வுக்கும் சம பங்கு இருந்தது என்பது தமிழர்கள் நெஞ்சில் நீங்காத. வடுவாக என்றும் இருக்கும்.தமிழர்களின் துரோகிககள் இருவரும் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.இந்தகூட்டணி ஒருபோதும் வெல்லாது. திருடனுக்குததிருடன் துணைபோவது இரு இயக்கங்களுக்கும் கை வந்த கலை.கூடிக்கொள்ளையடிக்கும் கும்பல்தானே திமுகவும்,காங்கிரசும்.நாட்டுமக்களைப்பற்றிய கவலையில்லாத இயக்கங்கள்.

  • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

    சொல்லின் செல்வர் EVK சம்பத் மகனுக்கு - இப்போது திமுகவுக்கு கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலை ... அவருக்கு ஏற்ற வேலைதான் ..

  • Panchu Mani - chennai,இந்தியா

    வெறும் 25 சீட்டுக்கு பேரம் பேச எல்லாம் எதுக்கு குலாம் நபி ஆசாத் அங்கிருந்து இங்க வரணும். 15 நாள் நாராயணசாமி போதாதா .எப்படியோ மஞ்ச தண்ணி போட்டு குளிப்பாட்டி ஆசாத்துக்கும் மஞ்ச துண்டு போட்டு ஆடு ரெடி பண்ணியாச்சு. ஆசாத்துக்கு போண்டாவும் , வடையும் கொடுத்தா போதும் 10 சீட் க்கு கூட ஓகே சொல்லுவார். தோத்ததுக்கான காரணம் இப்பவே ரெடி. கழுதை கெட்டா குட்டி சுவர்.

  • Govind - Delhi,இந்தியா

    என்னை பொருத்தவரை தி மு க இது மாதிரியான முடிவெடுப்பதற்கு ஒரே காரணம் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ ஓட்டுகள் சிதரமால் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தானே அன்றி வேறதுவும் இல்லை. தமிழர்களின் பிணத்தின் மீது அரசியல் நடத்துவதில் கில்லாடி மு க. இவர் வடித்த நீலி கண்ணீரை பல முறை தமிழக மக்கள் பார்த்து இருக்கிறார்கள். மக்கள் அ தி மு க ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கும் வேளையில் தி மு க ஒரு இமாலய தவரை செய்து அ தி மு க வேய் தேவலை என்கிற ஒரு நிலையை உருவாக்கி விட்டது. விஜயகாந்த் தி மு க வை ஒரு புதை குழி என்று சொல்லிவிட்டு அவரும் அந்த புதை குழியில் விழுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    கூடா நட்பு கூட்டனியில் முடியும் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை சீண்டுவார்கள் யாரும் கிடையாது.உங்களுடன் கூட்டனி வைக்க யாருமே வராத போது காங்கிரஸ் காரனுக்கும் வழி இல்லை என்பதால் தான் இந்த கூட்டனி.இரண்டு திருடர்களும் ஒன்று சேர்ந்து இருக்கிறிர்கள் அந்த குடிகார போதை காந்தும் வந்து சேர்ந்து விட்டால் தமிழகம் மீண்டும் அதல பாதாளத்திற்கு சென்று விடும்..அப்படியே நீங்கள் தேர்தலில் ஜெயித்தால் 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும்.உங்கள் மகனோ அல்லது போதை காந்தோ தான் இந்த கலைப்புக்கு காரணமாவார்கள்.

  • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

    இந்த கூட்டணி தமிழகத்தின் அவமானம்..அசிங்கம்..சென்ற பாராளுமன்ற தேர்தலில் கழற்றிவிடப்பட்ட காங்கிரசுக்கு இந்த முறை கூட்டணி கதவு திறந்துவைக்கப்பட்டு காத்திருக்க் காரணம் 2 G யின் இறுதி விசாரணையே ..பா ஜ க வோடு சேரத்துடித்தார் கருணா அவர்கள்..தமிழிசையும் ஆசைப்பட்டார்..பா ஜ க வோடு சேருகின்ற சூழலை கண்டுதான் சோனியாவை சந்தித்து இருபுறமும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நிலையை கண்டோம்.. இப்போதைய ஸ்டைலே திருமண பத்திரிக்கை தூதுதானே..அதே போலவே கருணாவை சந்தித்தார் தமிழிசை..ஸ்டாலின் மருமகனோடு பேச்சு வார்த்தையும் நடந்துகொண்டிருந்தது..2 G வழக்கில் திமுகவை எப்படியும் கவிழ்க்க துடித்த காங்கிரசை நேரிலே சென்று கனிமொழி கெஞ்சியதால் இந்த கூட்டணிக்கு அச்சாரமிட்டது..இனி டெசோ அமைப்பில் இந்த சு ப வீ, வீரமணி போன்ற சூராதி சூரர்களின் பேச்சுகள் முடிவுக்கு வந்தன. ஈழ மக்களின் நிரந்தர எதிரி கருணா என்று ( இது ஈழத்தில் உள்ள கருணாவை குறிப்பன அல்ல ) நிரூபித்துவிட்ட கூட்டணி..அடித்த கொள்ளையில் பங்குபோட்டு குதூகலித்த அந்த 2011 க்கு முன்னுள்ள நிலையை இன்றும் அனுபவிக்க பிறந்த கூட்டணி இது. ஊழலும் ஊழலும் ஒன்று சேர்வது ஒன்றும் புதிதல்ல.. அப்புறம் ஏன் இந்த பதிவு என்கிறீர்களா..கூடா நட்பு கூட்டணியால் பதவியை இழந்தோம் என்று சொன்ன கருணா அவர்களும்..நட்பு இனி இல்லை..இனி கூட்டணியில் பங்குதான் என்று இளங்கோவனின் அசுரத்தனமான அலறலும்..காங்கிரஸ் இன்றி இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று நேற்று முளைத்த நவீன மணியம்மை என்று போற்றப்பட்ட குஷ்புவின் சபதமும் எங்கே போயிற்றோ என்று கேட்கவும் அதனை ஆதரித்த ங்கே கூட்டத்திற்கு நினைவூட்டவுமே இந்த பதிவு..இனி ஒவ்வோர் தமிழனும் உறுதியாக மனதிலே நிறுத்தி இவர்களை எந்த தொகுதியிலும் டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தோற்கடிக்கனும்..அதுதான் இந்த நாட்டுக்கு நாம் செய்திடும் தியாகத்தை போன்றது ஆகும்..நமது வருங்கால சந்ததியினர் நிம்மதியாக வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த காங்கிரஸ் திமுக கூட்டணியை அரசியலில் இருந்தே விரட்டியாகனும்..டெல்லியில் இவர்கள் ஆட்சியில் அடித்த ஊழல் பணம் மட்டும் இருந்திருந்தால் இந்த நாட்டில் ஏழ்மையே இல்லாமல் செய்திட்டிருக்கலாம் என்பதை மட்டுமே நினைவில் வைத்துகொண்டிருந்தால்..இவர்களின் கூட்டணியை எளிதாக வீழ்த்திடலாம்..இன்னோர் நல்லதருணம் இவர்களை விரட்ட..

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    கூட்டணி அமைஞ்ச கையோட கவர்னர பாத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். எப்படியும் இவங்க தான் ஜெயிக்க போறாங்க. அப்புறம் என்ன...

  • Nakkeeran - Ipoh,மலேஷியா

    மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம் முருங்கை மரத்தில்(2016 தேர்தலில்)ஏறுச்சாம். கு-தெறிக்க விழுந்துச்சாம்.( தோல்வி )

  • Vandhiyan - SanDiego,யூ.எஸ்.ஏ

    இந்த மானங்கெட்ட கட்சிகள் என்றைக்கு பிரிந்தன இன்று தங்களுக்குள் கூட்டணி என்று தழுவிக்கொள்ள? அன்று மக்களை ஏமாற்ற பிரிந்ததுபோன்று நாடகத்தை நடத்தினார்கள், இன்றும் அப்படியே மக்களை ஏமாற்ற கூடியது போல நடிக்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா இதை நம்ப? என்ன இந்த கயவர்களின் இந்த அறிவிப்பு, ரணமாகியிருந்த தமிழர்கள் நெஞ்சங்களில் மீண்டும் அந்த இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை தான் நினைவுக்கு கொண்டுவந்து மேலும் குத்துவதுதான் கொடுமை. பாவம் அந்த மக்கள், எத்தனை கொடுமை? எத்தினை வதை?இதோ இப்பொழுது இந்த இரு கட்சிகளும் முக்காட்டை விலக்கி மீண்டும் கூட்டணி என்று வந்துவிட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் மனதும் சிந்தித்து இந்த தமிழின அழிப்பு விரோதிகளுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை திடமாக இந்த தீயசக்திளுக்கு பதிலளிக்க வேண்டும்.

  • Suresh - Nagercoil,இந்தியா

    இளங்கோவன் வந்திருக்கிறார் குஸ்புவை காணவில்லையே...

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    அதாவது இந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்ததில் போயஸ் கார்டன் வட்டாரம் அதிமுகவின் வெற்றி உறுதி என்ற மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் வெற்றியை நேற்று தலீவர் கலைஞர் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது போயஸ் கார்டன் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் அமோக வெற்றிக்கு இந்த கூட்டணி தலைவர்கள் அயராது உழைக்க போகிறார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்று தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவாரே, இப்போது கூடா நட்பு கூடிவிட்டது, அது கேடாய் முடிந்த பின் புலம்பல்கள் அதிகமாகும். இளங்கோவன், குலாம் பாய் உங்களால் தான் நாங்கள் தோற்றோம் என்று கூறுவார், கட்டுமரம் கூடா நட்பின் காரணமாக திமுக தோல்வி அடைந்தது என்று கூறுவார், இந்த கூட்டணியில் செங்கண்ணன் சேர்ந்தால், இந்த இரண்டு கட்சிகளால் தான் நாங்கள் தோற்றோம் என்று செங்கண்ணன் கூறுவார். அதாவது தேமுதிக நிற்கும் தொகுதியில் தேமுதிக தொண்டர்கள் தேமுதிக தொண்டர்கள் வாக்களிப்பார்கள், அதே திமுக நின்றால் தேமுதிக தொண்டர்கள் ஒட்டு போடமாட்டார்கள். தேமுதிக ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்கவில்லை அதனால் திமுக தோற்றது என்று தலைவர் கலைஞர் கண்ணீர் மல்க அறிக்கை வெளியிடுவார் தேர்தலுக்கு பிறகு. என்ன தான் நக்கல் பேசினாலும் பாமக ஒரு 4 சதவிகித வாக்குகள் வைத்துள்ளது, அது என்று மாறாது. கடந்த தேர்தலில் பாமக ஒட்டு கிடைத்தும் திமுக தோல்வி அடைந்தது அப்படி இருக்கையில் இன்று பாமக ஓட்டும் இல்லை, கடந்த தேர்தலில் பதிவான வன்னியர்கள் ஒட்டு கணிசமாக பிரியும், போதாதைக்கு சீமான் இன்று கூட்டம் நடத்தி மாஸ் காண்பிதுள்ளார், அவரும் கணிசமான ஓட்டுக்களை பிரிப்பார், அப்புறம் மக்கள் நல கூட்டணியும் கணிசமான ஓட்டுக்கள் பிரிக்கும், அதிமுக அமோக வெற்றி பெரும். தலைவர் கலைஞர் கூடா நட்பு கேடாய் முடிந்துவிட்டதே என்று தேர்தலுக்கு பின் வருந்துவார். இன்று சென்னையில் 20 லிட்டர் தண்ணீர் இலவசம் என்கிற அறிவ்ப்பே மக்களிடையே பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது, அப்புறம் முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொண்டுவந்தால் சென்னையில் மழை வெல்ல பாதிப்பை மக்கள் மறந்தே விடுவார்கள். 2011 போல அதிமுக தேர்தல் அறிக்கை மட்டுமே வெளியிடும் ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடையே கச்சிதமாக திமுகவே பிரபல படுத்துவார்கள். சுடலையனே அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பிரசாரத்தில் விமர்சித்து விமர்சித்தே பிரபலபடுத்தி விடுவார். எது எப்படியோ 2016 ல் மீண்டும் ஆட்சி அமைக்க போகும் அதிமுகவிற்கு அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்.

  • C Suresh - Charlotte,இந்தியா

    காங்கிரஸ் 2ஜி black mail தொடர்கிறது.ஸ்டாலின் நிலைமையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.வோட்டு போட யாரும் இல்லாமல் 50, 63 என்று பேசுவது வேடிக்கை.

  • Govind - Delhi,இந்தியா

    ஆட்டம் தொடங்கிவிட்டது. நண்பர்களே இனிமேல் நடக்க போகும் நாடகத்திற்கு தயாராகுங்கள். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சென்னைக்கு வருவார்கள். கூட்டத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது தாங்கள் எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.ராகுல் காந்தி தான் திருமணம் செய்து கொண்டால் ஒரு தமிழ் பெண்ணை அதுவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் பெண்ணை செய்து கொள்ள போகிறேன் என்று சூளுரை ஏற்பார். இல்லை இல்லை இதற்கெல்லாம் அந்த தலைப்பாகை கட்டிய மனமோஹனம் தான் காரணம். இவர்கள் இருவருக்கும் இலங்கையில் அந்த மாதிரி ஒரு சம்பவம் நடை பெற்றதே தெரியாது என்று இளங்கோவன் அழுது புரள்வார் .. இதை எல்லாம் பார்த்து கழக உடன் பிறப்புகள் உணர்ச்சி பெருக்கெடுத்து "கண்கள் பனித்தன உறவுகள் பூத்தன" என்று புளகாங்கிதம் அடைய, மு க உடனே தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னித்து விட்டார்கள் இனிமேல் பிரச்சனையே இல்லை என்று அறிவலாயத்தின் உச்சியில் சென்று உரக்க சொல்லுவார். நாடகம் அரங்கேறட்டும். இளங்கோவன் எங்கே தனது முகத்தை வைத்து கொள்வார் ? மானம் வெட்கம் என்று ஏதாவது இருந்தால் இளங்கோவன் திராவிட கட்ச்சிகளை பற்றி பேசுவதையாவது நிறுத்தி கொள்ளட்டும். தி மு க தமிழ் மக்களை மடையர்கள் என்று நினைத்து செயல்படுவது அவர்களுடைய முதிர்ச்சியை காட்டுகிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து ரசித்துவிட்டு எவ்வளோ ஏமாத்தினாலும் இந்த (முட்டாள்) தமிழர்கள் நம்மை ஏற்று கொள்கிறார்கள் . "இவங்க ரொம்ப நல்லவங்கடா " என்று தாயும் மகனும் ஆனந்த கண்ணீர் விடுவார்கள் அவர்கோளோடு சேர்ந்து நாமும் இதை ரசிக்கலாம்

  • Silver Star Shilpa Kumar - London,யுனைடெட் கிங்டம்

    வேலில போற ஓனான் வேட்டிக்குள்ள போயாச்சு

  • jagan - Chennai,இந்தியா

    அவ்ளோ தான் வாசன், விஜி, டவுசர் இங்கு வர முடியாது.... மூணாவது அணி நிச்சயம்...அப்போ அம்மா தான் மறுபடியும்.... கருணாநிதியின் மீண்டும் ஒரு blunder .....இதெல்லாம் சாணக்கியனாம்...

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    இப்படியே கூட்டணி சேர்ந்துதான் முன்பு நாட்டின் செல்வங்களைஎலாம் கொள்ளை அடித்தீர்கள். மறுபடியும் அதே கூட்டணி. மக்களிடம் ஒரு வித பயம் தென்படுகிறது.முடிவில் தேர்தல்களில் தோல்விகளை சந்திக்கும் கூடாத கூட்டனியாக மாறிவிடும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    கை கோர்ப்பு போல தோன்றவில்லையே ... நடுவிரல மட்டும்தானே கொடுக்கின்றார் ?

  • Pachaiyappan Kuppachari - Bareilly,இந்தியா

    கூடா நட்பு.......கேடாய் விளைந்தது..............பின்னர் கூடும் நட்பாகி போனது ஏன் ஏன் ? ஒரு வேளை கேடுகெட்ட நட்பாக உருமாறவோ???? பொங்கல் பரிசு புஸ்ஸுன்னு பொங்கிவிட்டதா???? வாழ்நாள் பரிசு வாழாவெட்டி ஆகி போனதா??? ஏன் ஏன் ஏன் ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ன ஒரு பொலம்பல் என்னிடம்??? ஒரு விஷயம் மட்டும் புரியுது, ஒன்னு எங்க தல மாதிரி சானக்யனா இருக்கணும், இல்ல ஒன்னும் அரசியல் தெரியாத மண்ணு மூட்டையா இருக்கணும்..... ரெண்டுங்கெட்டானா இருந்தா இப்டி தான் பொலம்பனும்..... அடேய் தமிழா கவனம் வேண்டுமடா உனக்கு..... உன் காதுகளை தேடி படை எடுக்கபோகின்றன பல கைகள், மொழ நீள பூச்சரத்துடன்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement