Advertisement

அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்:டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு

''வரும் சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விஜயகாந்த் கூட்டணிக்காக கடைசி வரை காத்திருக்கவும், அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பா.ஜ., சார்பில், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது குறித்து, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா, தேசிய செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

52லட்சம் பேர்:கருத்தரங்கில் முரளிதர் ராவ் பேசியதாவது:தமிழகத்தில், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் மொபைல் போன்
பயன்படுத்துகின்றனர். அதில், ஒரு கோடி பேர், சென்னையில் உள்ளனர். அவர்களில், 52 லட்சம் பேர், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, சமூக வலைதள பிரசாரம், பா.ஜ.,வுக்கு மிகவும் முக்கியம்.தமிழக நிகழ்வுகளில், பா.ஜ., தனிக்கவனம் செலுத்துகிறது. மீனவர்கள் கைது, அவர்களை சுட்டுக் கொல்வது
போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளை, நாடு தழுவிய அளவில் கொண்டாட வைத்துள்ளோம். இதை எல்லாம் இங்குள்ள திராவிட கட்சிகளால் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., பேச்சு நடத்துவதாக, எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். அப்படி எந்த பேச்சும் எங்கும் நடக்கவில்லை.

இது போன்ற வதந்திகளுக்கு இடம் அளிக்காதீர்கள். இதை உங்களுக்கு அறுதியிட்டு ஏன் சொல்கிறேன் என்றால், இந்த உறுதியை நீங்கள் தான் நம்ப வேண்டும். அதற்காகவே, உங்களிடம் இதை வலியுறுத்தி சொல்கிறேன்.தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கான ஒரே மாற்று, பா.ஜ.,வே. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பவும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், பா.ஜ.,வால் மட்டுமே முடியும்.

தலைவர் தெரியவில்லை:தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தால், ஏன் அரசியல் மாற்றம் வேண்டும் என்பது புரியும். தமிழகத்தை ஆளும் தலைவர் தெரியவில்லை; ஆனால், பொங்கல் இலவசங்கள் கிடைக்கின்றன.


ஆட்சியாளரை பார்க்க முடியவில்லை; ஆனால், 'ஸ்டிக்கரை' பார்க்க முடிகிறது. தமிழக வெள்ள பாதிப்பின் போது, இங்கே ஒரு அரசு இருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பிரதமர் மோடி, தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சந்தித்தார்; அதன் பின்பும் ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வரவில்லை. தமிழகத்தில், நிர்வாகம் நடக்கிறதா என தெரியவில்லை; தேடிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ., ஆட்சி அமைத்தால், இது போன்ற நிர்வாகம் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

முரளிதர் ராவ் பேச்சின் படி பார்த்தால், தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைக்காது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

பதில் இல்லை:
கூட்டத்தில் பேசிய முரளிதர் ராவ், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற விவரத்தை கடைசி வரை தெரிவிக்கவில்லை. ஆனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள், 'விஜயகாந்துடன் தான் கூட்டணியா?' என, கேள்வி எழுப்பிய போது, பதில் எதுவும் பேசாமல், சிரித்தபடி ஆமோதித்தார். இதிலிருந்தே, விஜயகாந்திற்காக, தேர்தல் நெருங்கும் வரை பா.ஜ., காத்திருக்க முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (167)

 • Alagappan Arumugam - Singapore,சிங்கப்பூர்

  தமிழகத்தில் பா ஜ க என்பது அ தி மு க வின் ஒரு கிளை கழகம்.. பாஜக, அதிமுக ஆகியவை ஒரே துருவத்தில் செயல்படுவதாக மக்கள் பாவிக்கிறார்கள். அதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் இழப்பு அதிமுக வுக்கல்ல , பேரிழப்பு பாஜகவுக்குத்தான். அதிமுக - பாஜக கூட்டணி நாட்டுக்கு நல்லது (?) அவர்களுக்கும் நல்லது . 2016 ல் நல்லகண்ணு ஆட்சி அமைப்பார். எதிர் கட்சி தலைவராக வைகோ.

 • thiyagu - tirupur

  அடுத்த ஆடசியும் அம்மா ஆட்சி தான்

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  அதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் இழப்பு அதிமுக வுக்கல்ல , பேரிழப்பு பாஜக வுக்குத்தான் .

 • bala salem - salem

  நானும் ரௌடிதான்

 • mindum vasantham - madurai,இந்தியா

  விஜயகாந்த் + தமிழ் மாநில காங்கிரஸ் + பா ஜ க மற்றும் சிறு கட்சிகள் என்று வலுவாக அமைக்கலாம் .......... பா ம க வில் இருந்து ரம்தாஸ் விலகி அன்புமணி தலைமை ஏற்றால் பா ம க வும் சேரலாம்

 • samy - singapore,சிங்கப்பூர்

  அதிமுக, திமுக இரண்டுமே தமிழக மக்களுக்கு விரோதமான கட்சி என்பதை உலகமே அறியும். நம் தமிழக மக்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும் இந்த இரு கட்சிகளைப்பற்றி, இருந்தும் இங்கே பலபேர் ஊழல் கட்சிகளுக்கு ஆதரவாகவே கருத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பது கேவலம். என்ன தகுதி இருக்கு இந்த இரு திருட்டு ஊழல் கட்சிகளுக்கு தமிழனை ஆளுவதற்கு?

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பா ஜ க வோடு விஜயகாந்த் கூட்டணி வைத்து கொள்வது, தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வதற்கு சமம். தமிழகத்தில் பா ஜ க என்பது அ தி மு க வின் ஒரு கிளை (அணி)கழகம் தான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இலவு காத்த கிளியாக ஆகிவிட போகிறீர்கள்... காத்திருக்க ஒரு எல்லை உண்டு அல்லவா

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக காலி , கட்டுமரத்துக்குப் பிறகு திமுக காலி , அதனால் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் இப்போதே கால் ஊன்ற நினைப்பதுதான் உசிதமான முடிவு . சரியான முடிவை எடுக்குமா பாஜக ?.

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  அதிமுக வுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக எதிர்க்கட்சித்தலைவர் ஆகலாம் பாஜக விலிருந்து ஒருவர் , கூட்டணி இல்லையென்றால் அது பாஜக விற்கு தற்கொலைக்கு சமம் .

 • Subbu - chennai,இந்தியா

  பிஜேபி மனம் கேட்டு அ.தி.மு.க. உடன் கூட்டு வைக்ககூடாது, அப்படி வைத்தால் இருக்கும் 5 சதம் ஓட்டுகளும் போய்விடும். விஜயகாந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாது, அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய செல்வாக்கோ, ஒட்டு பலமோ இல்லை என்பதே உண்மை. அவர் வந்தால் வரட்டும், வரா விட்டால் போகட்டும் என விடவேண்டும், தன் சொந்த பலத்தில் நிற்கவேண்டும், மானத்தை விட்டு மற்ற கட்சிகளிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. மாநில தலைவர்களை மதித்து அவர்கள் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். காங்கிரஸ் போல கோஷ்டி அரசியலை வளர்க கூடாது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் கூட, அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற முயற்சி செய்யலாம்.

 • unmai nanban - Chennai,இந்தியா

  இவ்வளவு பெரிய கட்டுரை ஒரே வரி அதிமுக தான் மீண்டும் ஜெயிக்கும்

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  பாஜாக பாமாகவும் கூட்டு சேர்ந்தால் நாட்டுக்கு நல்லது அவர்களுக்கும் நல்லது - ஜெய் ஹிந்த்

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  கூட்டணிக்காக அங்கே ஒருவர் இலவு காத்த கிளியாக காத்துகொண்டு இருக்கின்றார் அவரையும் சேர்த்து கொள்ளுங்கள். அதிமுக உடன் கூட்டணி என்று ஊடகங்கள் தான் எழுதி கொண்டு இருக்கின்றன ஆனால் அதிமுக அதை பற்றி எல்லாம் எண்ணுவது இல்லை, கூட்டணி சேர கட்சிகள் இல்லையே என்று ஒன்றும் கவலை அடையாதீர்கள் இப்பொழுது கூட நீங்கள் அழைத்தால் திருவாவூர் சுயநல கூட்டம் உங்களில் காலில் விழுந்து கும்பிட்டு வரவேற்பார்கள். அழைத்து பாருங்களே .

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  1 ) சு.சாமி ஆணையின்படி தமிழிசை , மோகன்ராவ் , இல.கணேசன் ஆட்டம் போடுகின்றனர் . இவர்களின் செயல் தேர்தல் அறிவிப்பு வரும் வரை தான் . 2 ) தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நிலைமை மாறும் . அதற்கு முன்பே தமிழிசை , மோகன்ராவ் இருவரும் மாற்றபடுவார் . மோடி அவர்கள் ஜெயலலிதா அவர்களுடன் தான் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவார் . 33 - 36 மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அடிப்படையில் தான் அமையும் . மேலும் ராஜ்ய சபாவில் மோடிக்கு ஆதரவு மிக மிக முக்கியம் . அதை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுப்பார் . 3 ) மஞ்ச துண்டின் குடும்ப வழக்கின் தீர்ப்புகள் மார்ச் மாதத்திற்குள் வந்து விடும் . அதன் விளைவு மூலம் மஞ்ச துண்டு நொந்து விடுவார் . எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். தனித்து தான் போட்டியிடுவார் . 4 ) மக்கள் நல கூட்டணியில் வைகோ தவிர எல்லோரும் பிரிந்து விடுவார்கள் .5 ) விஜயகாந்தை முதல்வர் பதவிக்கு அறிவிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடை பெறலாம் . விஜயகாந்த் , திருமா , கம்யூனிஸ்ட் கட்சிகள் , வாசன் , கொங்கு பேரவை . 6) காங்கிரஸ் கட்சியுடன் மருத்துவர் கூட்டணி வைத்து கொள்வார் . குடும்ப உறவின் வற்புறுத்தலின் படி நடக்கும் . 7 ) தமிழிசை , மோகன்ராவ் , இல கணேசன் மூவரும் தினமும் அறிக்கை விட தான் லாயக்கு . இன்றளவும் கிராமங்களில் பூத் கமிட்டி அமைக்க தொண்டர்கள் இல்லை . எங்கள் கிராமத்திலும் , சுற்றுபுரங்களில் உள்ள கிராமங்களில் வலை வீசி மைக்ரோ ஸ்கோப் வைத்து தேட வேண்டிய மிக மோசமான நிலையில் தான் உள்ளனர் இவர்களின் கட்சி வளர்ச்சி . தமிழகத்தில் கிராமபுறங்கள் தான் அதிகம் . இன்று ஜெயலலிதா அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் கிராமப்புற ஓட்டு வங்கி. இன்று வரை அது அப்படியே அவர்கள் வசம் உள்ளது . நகர்ப்புறங்களின் வாக்குகள் பிரிப்பதற்கு நிறைய கட்சிகள் உள்ளன . இந்த சூழ்நிலையில் வெற்றி பெற போவது ஜெயலலிதா அவர்கள் தான் .எதிர் கட்சி பி ஜே பி க்கு செல்லும் . தமிழிசை நிச்சயமாக உள்குத்து அரசியலில் தேர்தலில் தோல்வி அடைவார். இல கணேசன் ராஜ்ய சபா மூலம் மந்திரி பதவி அல்லது கவர்னர் பதவி அடைவார் .

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் வேண்டா விருந்தாளியாக பாஜகவில் சேர்ந்தால் இருக்கும் செல்வாக்கையும் இழக்க நேரிடும். அதிமுக mp உதவி தேவைப்படும் என்பதால் பாஜக திருட்டு காதல் ADMK உடன் வைத்திருக்கும். தேர்தலுக்கு பிறகு என்ன நடக்குமென்பதை கேப்டன் சிந்திப்பது நல்லது.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  எந்த கட்சி பா ஜ க வோடு கூட்டணி அமைத்தாலும், பா ஜ க போட்டி இடும் தொகுதிகளில் அக்கட்சியின் வாக்குகள் பா ஜ க விற்கும், பா ஜ க போட்டி இடாத தொகுதிகளில் அக்கட்சியின் வாக்குகள் கூட்டணி தர்மம் காக்காமல், கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ தி மு க விற்கும் விழும், ஆகையால் பா ஜ க வோடு கூட்டணி அமைப்பவர்கள் சற்று யோசித்தே கூட்டணி அமையுங்கள்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தேமுதிகவுடன் சேருவதற்கு பதில் பாமகவுடன் சேர்ந்தால் பாஜகவிற்கு பலன் உண்டு. இந்தியன் குமார்

 • GOPI - Kongu Manilam,இந்தியா

  ஒரு வேலை சொத்துகுவிப்பு 2 ஜி கேஸ் கலை விரைந்து முடித்தால் தமிழகத்துக்கு விடிவு பிறக்கலாம் ... இந்த இரண்டு கட்சிகளையும் கலஎது ஒரு புது மட்ட்ரத்தை கொண்டு வரலாம் .... செய்திகளை படிப்பதில் இருந்து இந்தியாவில் மிகபெரிய ஊளைகள் இங்கே இருந்து தான் துவங்கி இருக்கின்றன எனபது புலபடுகிறது .... நிலகரி ஊழலில் கூட பசி கு தொடர்பு இருக்கிறது , AIRCEL முறைகேடு , இப்படி பல முறைகேடுகள் இங்குள்ள அரசியல் வியாதிகள் ஆரம்பித்து வைத்ததுதான் ... தமிழக அரசியல்வாதிகள் பயமின்றி தங்கு தடையின்றி ஊழல் செய்துவருகின்றனர் ... நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புறம் ஒவ்வொருவருடைய கடமை இந்த முறை இந்த இரண்டு கட்சிகளையும் புரம்தல்லுவதே ....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  1. பாஜக விற்கான அதிமுக கதவுகள் சாத்தபட்டுவிட்டது. 2.கம்யுனிஸ்ட்கள், தமாகா, மனிதநேயம், போன்ற கட்சிகள் கூடவே கூட்டணி வைக்க அதிமுக விரும்புகிறது. [இதனை நான் பல மாதங்களுக்கு முன்னேரே எழுதியுள்ளேன். அது இன்று நிருபணமாகிறது.] 3.அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் வெற்றி பெற இயலாது. 4.ஆனால் பாஜக, திமுக, தேமுதிக கூட்டணி அமைந்தால் ஒருவேளை வெற்றிபெற கூடும். ஏனென்றால் பாஜக, திமுக ஆகியவை எதிர் துருவ கட்சிகளாக பாவிக்கபடுகின்றன. அதனால், திமுகவிற்கு விழும் சிறுபான்மை ஓட்டுக்களை அது பாதிக்காது. ஆனால் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்தால், அதிமுகவிற்கு விழும் சிறுபான்மை ஓட்டுக்களை அது பாதிக்கும். [ஏனென்றால், பாஜக, அதிமுக ஆகியவை ஒரே துருவத்தில் செயல்படுவதாக மக்கள் பாவிக்கிறார்கள்.] அதனால் தான் பாஜக வை விட்டு விலகி இருக்க அதிமுக விரும்புகிறது. 5.பாஜக அலை இருந்தால் தான் அதிமுக- பாஜக கூட்டணி எடுபடும். ஆனால் இப்போது பாஜக அலை இல்லை. 6.பாஜக, திமுக கூட்டணியில் இணையுமா என்பது சந்தேகம் தான். ஆனால், திமுக கூட்டணிக்காக நாலாபுறமும் கதவை திறந்து வைத்துள்ளது. 7.விஜயகாந்த் முன்னால் 2 ஆப்ஷன்ஸ் உள்ளது. ஓன்று பாஜகவை தலைமையை ஏற்பது. அல்லது தான் தலைமை தாங்குவது. மற்றொன்று, திமுகவை அண்டி பிழைப்பது. திமுகவுடன், பாஜக இல்லாமல் ஒரு கூட்டணி தேமுதிக அமைக்குமானால், கடிவாளம் திமுகவிடம் சென்றுவிடும். ஆனால், பாஜகவையும், ஒருவேளை, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு இழுத்து சென்றால், கடிவாளம், பாஜக, தேமுதிக கையில் வந்துவிடும். ஏனென்றால், பாஜக தேமுதிகவிற்கு 100 தொகுதி ஒதுக்கினால், தான் பாஜக, திமுக அருகில் வரும். திமுக அதற்கும் தயார் தான். ஆனால் பாஜக அதற்க்கு திமுக கூட்டணிக்கு வருமா என்று சொல்ல முடியாது. 8.ஒருவேளை, தேமுதிக, திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், பொன். ராதா கிருஷ்ணனை முதல்வர் வேட்பாளராக பாஜக கரை இறக்கக்கூடும். ஆனால் பாமக இந்த கூட்டணியில் சேராது. அத்தகைய சூழ்நிலையில், அதிமுக, தாபா, தமாகா, மனிதநேயம், கூட்டணி, திமுக- தேமுதிக, காங்கிரஸ், விசி, கூட்டணி, வைகோ, பாமக, பாஜக என 5 முனை போட்டி நிலவக்கூடும். [வைகோ, பாஜக, அல்லது பாமக அல்லது அதிமுக கூட்டணயில் கூட சேரவும் வாய்ப்புள்ளது.] 9.இப்போதைக்கு பாஜகவிற்கு எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க தவறி விட்டது. பாமக, மதிமுக, தேமுதிகவை அரவணைத்து சென்றிருந்தால், இன்றைக்கு அந்த கட்சிகள், இணைந்து, ஆளுக்கு தலா 50 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்ததால், 3 வது அணியை நாடும் நமது இளைஞர்கள், நிச்சயம் இந்த கூட்டணியை தான் தேர்ந்து எடுப்பார்கள். இந்த கூட்டணி அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் மத்திய பாஜக வின் குழப்பத்தால், இந்த முயற்சி தவிடுபொடியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர்களை இந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. 10.ஆக 3 வது அணி சாத்தியமில்லை என கதவை மூடிவிட முடியாது. கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது. மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால், நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த அணி 100 தொகுதிகளை கண்டிப்பாக வெல்லும். விஜயகாந்த் 8 %, கம்யுனிஸ்ட்கள் 3 %, மதிமுக 4 % , விசி, 2 %, தமாகா, 4 % ஆக 21 % ஒட்டு மட்டும் அல்லாமல், புதிய வாக்காளார்கள் 60 லட்சம் பேரின் ஓட்டுக்களை இந்த கூட்டணி கவர்ந்திழுக்கும். ஆக 31- 33 % ஓட்டுக்களை பெறக்கூடும். மிக பெரிய மாற்றம் வரக்கூடும். [பாஜக, பாராளுமன்ற தேர்தலில் 19 % வாக்குக்களை பெற்றது. அப்போது தமிழகத்தில் அடித்த அம்மா அலையையும் மீறி 19 % வாக்குகளை பெற்றது வரலாற்று சாதனை. ஆனால், இன்று 3 வது அணியை தேடி தமிழக மக்கள் அலைகிறார்கள். தமிழத்தில் எந்த அலையும் வீச வில்லை. இதனை அறுவடை பண்ண பாஜக தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.]

 • s.ganesan - salem,இந்தியா

  விஜயகாந்தை நம்பி பா.ஜ, தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். அவரின் நடவடிக்கைகள் எந்த ஒரு தெளிவும் இல்லாமல் உள்ளது. விஜயகாந்தை ஒதுக்கிவிட்டு மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டிடுவது ஓரளவு பலன் கிடைக்கும். பாராளுமன்ற தேர்தல் போல காலம் தாழ்தாமல் உடனடியாக கூட்டணி முடிவுகளை எடுத்து தொகுதி பங்கிடுகளை முடித்துவிட்டு மக்களை சந்தித்து ஒட்டு சேகரிக்கும் பணிகளை ஈடுபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

 • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

  இப்படியே விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தால் கடைசியில் ஒற்றை கோமணத்துடன் ஓடப்போவது உறுதி ....இத்தனை நாட்கள் ஜெயலலிதா இவரை கோர்ட் கோர்டாக அலைக்களிததை மறந்து ....இன்னும் அதிகமாக பேசிகொண்டுள்ளார்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பி ஜே பி க்கு குறைந்த பட்சம் 34 எம் எல் ஏக்கள் வேண்டும், அப்போது தான் ராஜ்ய சபாவில் ஒரு எம் பி கிடைக்கும். அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். மக்களாவது நன்மையாவது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கலைஞர் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போது அவரை ஏசிய கூட்டம் இப்போது என்ன அரசியல் அலசல் செய்துகொண்டிருக்கிறது? அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து அதிமுக வை வெற்றி பெற செய்வதற்காக வை கோ, வாசன் மற்றும் ராமதாஸ் முனைவதை புரிந்து கொள்ளுங்கள். வலுவான எதிரணி அமையாவிட்டால் மிகச் சிறிய மார்ஜினில் அதிமுக மீண்டும் பெரும்பான்மை பெறும், கவனம் தேவை.

 • Indian Tamilan - Trichy,இந்தியா

  இந்த கட்சி தொண்டர்கள் அனைவரையும் ஒரு பஸ் யில் அடைத்து விடலாம்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஜனநாயக முறையில் தலைவர்கள் மாறும் பாரத மக்களுக்கான கொள்கை அடிப்படையில் செயல் படும் தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் உருவெடுப்பது மிக நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விஜயகாந்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? ஒரு முறை தனித்து விடுங்கள், புலி தானாக் புல்லை தின்ன வரும்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அதிமுக பிஜேபி யை எதிர்பார்த்ததாக தெரியவில்லையே..........?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  எப்படியும் வர இருப்பது திமுக+பாஜக+ தேமுதிக + கொங்கு நுங்கு+ முஸ்லீம் லீக் கூட்டணிதான். இல கணேசனாரின் திரை மறைவு காய் நகர்த்தலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. எப்படியும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஜல்லிக்கட்டுடன் சேர்த்து பாஜக திமுக கூட்டணி கொண்டாடி மகிழும். மக்கள் நல கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும். மனித நேய மக்கள் கட்சி, தமாக, சரத் குமார் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு. கிருஷ்ணசாமி திமுகவின் உ சூ வில் போட்டியிடுவார். பாஜக கூட்டணி வெற்றி பெறும், தளபதி நமக்கு நாமே முதல்வராக ஆவார். அந்த வெற்றிவிழாவிலும் பதவி ஏற்பு விழாவிலும் அனைத்து ஆலய வேத விற்பன்னர்களும் நால்வகை வேதங்களையும் ஓதி ஆசி கூறுவார்கள்.

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  பிஜேபியினர் காங்கரஸ் செய்த அதே தவறை தமிழகத்தில் செய்துகொண்டு இருக்கிறார்கள். காங்கரஸ் கட்சியில் தான், தமிழகத்தின் உள்ளூர் நிலவரங்களை அறிந்த தமிழக தலைவர்களை புறக்கணித்துவிட்டு டெல்லியில் இருந்து தலைவர்கள் நேரடியாக போயஸ் தோட்டத்திலோ அறிவாலயத்திலோ கால்கடுக்க தவம் இருந்து கூட்டணி அமைப்பார்கள். காங்கிரசை தமிழ் நாட்டில் வளர்கவோ ஆட்சியை பிடிகாவோ கொஞ்சம் கூட முயற்சி செய்ய மாட்டார்கள். முன்பு MGR இறந்த போது அதிமுக ஜானகி , ஜெயலலிதா என்று இரண்டாக பிளந்து இரட்டை இலையை இழந்து படுதோல்வியை சந்தித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதியை , 5 ஆண்டுகள் ஆள விட்டுருந்தால், அதிமுக முற்றிலும் அழிந்திருக்கும். ஜானகி, ஜெயலலிதா அணியினர், அன்றைய கால கட்டத்தில் காங்கரஸ் கட்சியில் இணைந்து இருப்பார்கள் . காங்கரஸ் ஆட்சியை அடுத்து வந்த தேர்தலில் சுலபமாக பிடித்து திராவிட கட்சிகளின் படியில் தங்கள் 1967 இல் கோட்டை விட்ட தமிழக ஆட்சியை மீட்டு எடுக்க அற்புதமான வாய்ப்பு கிட்டியிருந்ததை வீணடித்தது காங்கரஸ். அந்த நேரத்தில் ராஜீவ், மூப்பனார் சொல்லை கேட்கவில்லை. மாறாக , காங்கிரசை வளர்க்காமல், அழிந்து போன ஜெயலலிதாவை வளர்க்க, ஜானகி, ஆர் எம் வீரப்பன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களை ரெய்டு விடுவதாக மிரட்டி ஜெயலலிதா தலைமையை ஏற்க வைத்தார் ராஜீவ். அதுமட்டும் அல்ல, ஜெயலலிதாவுக்கு மீண்டும் ரெட்டை இலை யை பெற்றுத்தந்தார். வெறும் 1 1/2 ஆண்டுகளே ஆட்சி செய்த திமுக வை சந்திரசேகரை கொண்டு ஆட்சியை கலைத்து, தேர்தல் வர வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக , ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கி, அதிமுகவை வளர்த்து , காங்கிரசை தமிழ் நாட்டில் அழித்து ஒழித்தது காங்கிரசின் டெல்லி தலைமை. இதே போலத்தான் பாஜக டெல்லி தலைமையும் இப்போது இமாலயத்தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. பாஜகவை தமிழகத்தில் வளரவிடாமல் செய்துகொண்டுள்ளனர் அதன் டெல்லி தலைவர்கள். 2 G வழக்கினால், கருணாநிதியின் வாரிசு அரசியல் மற்றும், சினிமா பிரவேசன்களால், திமுக அமைச்சர்கள செய்த அட்டகாசங்களால், மக்களின் வெறுப்புக்கு ஆளாகி , திமுக வும் பலகீனமாக இருந்து வருகிறது. எனவே மக்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்று தேடினாலும், மாற்று இல்லாத சூழல் இருகிறது. அந்த மாற்று இடத்தை காங்கரஸ், விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகிய நால்வரும் பிடிக்கமுடியாமல் தங்களை தாங்களே அவர்களும் அழித்துக்கொண்டிருந்தார்கள் . எல்லா கட்சிகளும் பலகீனைத்தை அடைந்திருந்த நேரம் அது. அந்த அருமையான சமயம் பிஜேபியை தமிழ நாட்டில் வளர்க கிடைத்த பொன்னான வாய்ப்பு. பிஜேபி, காங்கிரசின் டெல்லி தலைமைகள் தங்களின் தமிழக தலைமையிடம், காங்கிரசையும், பிஜேபியையும் எப்போது சுதந்திரமாக கள நிலவரங்களுக்கு ஏற்ப அரசியல் முடிவுகளை எடுக்க முழு அதிகாரத்தை அளிக்கிறதோ, அப்போது தான் இங்கு இரண்டு தேசிய கட்சிகளும் வளரும்.

 • kailawsh - Pollachi,இந்தியா

  முரளிதர் ராவ் பேச்சு ,பேட்டி எல்லாம் விஜயகாந்தை மடக்க எழுப்பப்படும் புகை மண்டலம்.ஆனால். மத்திய அரசுக்கு அ தி மு க முழு ஆதரவு அளிக்க வேண்டும், தமிழகத்தைப்பொருத்த வரையில் அ தி மு க விருப்பப்படி பா ஜ க நடந்து கொள்ளும் என்பதுதான். ஜெயா தரப்பில் மக்களவையில் மோடி அரசுக்கு அ தி மு க முழு ஆதரவு அளித்து வருவதோடு மட்டுமல்லாமல் எந்த பிரச்னையிலும் ஜெயலலிதா மோடியை தாக்கி பேசுவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை, தி மு க வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்காமல் தனிமைப்படுத்தப்பட பா ஜ க உதவ வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பம். அது நடந்தால் ஜெயலலிதாவுக்கு நல்லது, மோடிக்கு எந்த நஷ்டமும் இல்லை. மாறாக ,பா ஜ க வின் முயற்சி வீணாகி விஜயகாந்த் தி மு க வுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அ தி மு க வும் பா ஜ க வும் கூட்டு சேரும். அதற்காகத்தான் அ தி மு க தனித்து போட்டியிடும் என பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவிக்கவில்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த செய்தி நிஜம் என்றால், அதிமுக வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றே அர்த்தம். தே மு தி க வும் பி ஜே பி யும் ஒரு 15-20% வாக்குகளை பிரிக்கும். வை கோ கும்பல் ஒரு 5%, ராமதாஸ் கும்பல் ஒரு 5% காங்கிரஸ் ஒரு 5% மீதி 65% வாக்குகளில் ஈசியாக அதிமுக பெரும்பான்மை பெற்றுவிடும்.

 • RRavichandran - Doha,கத்தார்

  இந்த முறை இரண்டு கட்சிகளும் (தி.மு.க., அ.தி.மு.க) தோற்க போவது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். இதுல எதுக்கு நான் நீ என்று கூட்டம், உங்கள் முயற்சி திருவினை ஆக்கும் என்பது மிகவும் கஷ்டம். ஒரு புதிய கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  அழுகி போன திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகம் ஒரு புதியகட்சியை எதிர்பார்கிறது ...அது ஏன் ப.ஜ.க வாக இருக்க கூடாது .தமிழகத்தில் பிஜேபி யின் மதவாதம் கொஞ்சம் கட்டுக்குள் இருக்க வேண்டும்..அதாவது தமிழகத்தில் ராமன் ,கிருஷ்ணன், ஹனுமான் ..களுக்கு வட மாநிலம் போல் வர வேர்ப்பு இருக்காது...தமிழர்களின் கடவுள் முருகன், அந்தஅந்த இடத்தின் கடவுள் முனீஸ்வரன், மாரி அம்மன், ..இப்டி தமிழக வழிபாட்டுகள் வட மாநிலங்களிலிருந்து வேறு படுகிறது...இதை பிஜேபி அறிந்து செயல் பட வேண்டும். அதை விட்டு ஆர்.எஸ்.எஸ் சின் காக்கி அரை டவுசர் போட்டு தமிழர்களை மிரட்டகூடாது...பிஜேபி யை தமிழர்கல் ஏற்று கொள்ள , இந்த மத கோட்பாடுகளில் பெரிய மாற்றம் வர வெண்டும். இதோடு இந்தியை திணிக்க கூடாது...இப்போ இந்திக்கு தமிழ் நாட்டில் பெரும் எதர்ப்பு இல்லை. அதனால் பாஜக இந்தியை பற்றி பேசாமல் நடந்தாலே போதும்..பிஜேபிக்கு பிராமின் கட்சி என்ற அடையாளம் இப்போ உள்ளது. இதிலும் மற்றம் வேண்டும். அதாவது பிஜேபியில் பிராண்மின் இல்லாதவர்கள் கட்சியில் அதிகாரம் உளவர்கலாகைருக வேண்டும்..இந்த ராவ்,சாஸ்திரி, .போன்றவர்களை விட தமிழர்கல் அதிகம் கட்சியில் செயல்பட வேண்டும்....தமிழகம் இப்போ அழுகி போன திராவிட கட்சிக்கு மாறுதல் தேடுகிறது......பிஜேபி இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்...செய்யுமா..காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

 • Kishmu Muhilai - Kanya Kumari,இந்தியா

  திமுக அதிமுக ரெண்டுமே மக்களை ஏமாத்திட்டு தான் இருக்காங்க. அம்மா ஆட்சிக்கு வந்து நாலேமுக்கால் வருசத்துல கன்னியா குமரிக்குனு எந்த ஒரு திட்டமும் இதுவர வரவும் இல்ல ஒரு சாலை கூட சரி செய்யப்படல. பிஜேபி வந்த 1 வருஷத்துல மொத்த தமிழகத்துக்கும் எத்தனையோ பாலங்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி, கன்யாகுமரி டு சென்னை கு கடல் வழி பாதை, கன்யாகுமரில ஏர்போர்ட் இப்டி நிறைய திட்டம் வந்துட்டே இருக்கு.

 • Sanjisanji - Chennai,இந்தியா

  இது பத்திரிகையின் யூகசெய்தி ...... இது உண்மைசெய்தியாக இருக்கும் பட்சத்தில் உடன்கலத்தில் இரங்கி ஒரு மாபெரும் மாநாட்டை மோடி தலைமையில் நடத்தனும் ...பாஜகவின் உண்மை பலத்தையும் காட்டணும்... வெட்டிப்பேச்சு 40 லட்சம் உறுப்பினர்களை சோர்வடைய செய்கிறது ... MP த்தேர்தலில் வாக்களித்த 27 லட்சம் வாக்காளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது ... ...

 • Raj Pu - mumbai,இந்தியா

  இது தான் வெறும் கையால் அப்பம் சுடுவது என்கிறார்களே, அதுவா?

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  இது உறுதியான முடிவு என்றால், மிகவும் நல்ல முடிவு. அது போல, பாஜகவிடம் இப்போது இருக்கும் வலிமையைக் கொண்டு இரு திராவிடக் கட்சிகளையும் ஒரே நேரத்தில், அதுவும் இந்த தேர்தலில் வெல்ல முடியாது. ஆகவே, ஒரு எதிரியை அடையாளம் கண்டு அவர்களை நோக்கி மட்டும் நமது முயற்சியை செலுத்துவோம்.

 • Pandiyan - Chennai,இந்தியா

  ஒரு கொள்கையும் இல்லாத ...எந்தவித நேர்மையான வெளிபடை தன்மையும் இல்லாத தே மு தி க தலைமை கண் அசைவுக்கு அரசியல் கட்சிகள் காத்து கிடப்பது கேலி கூத்தானது

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  நல்ல வரவேற்க தக்க முடிவு.சுய கெளரவம் காக்க படுவது நல்லது .சுப ராம காரைக்குடி

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  அதிமுகவுக்கு பாஜக வந்தால் ஒரு 5-6% வாக்கு வரும், அதே சமயத்தில் 3-4% போகும். மிச்சம் உள்ள 2-3% தான் லாபம். கொங்கு, திருமா, மமக இவர்கள் மூவரையும் சேர்த்துக்கொண்டால் 6% வரை வரும். பாஜகவுக்கு கொடுக்க வேண்டிய தொகுதிகளில் பாதி கொடுத்தாலே இந்த மூவரும் வந்து விடுவர். திமுக- தேமுதிக கூட்டணியை தவிர்த்தாலே அதிமுக வென்று விடும். இந்த கணக்கு எல்லோருக்கும் தெரியும்.

 • Indian - chennai,இந்தியா

  விஜயகாந்த் பாரதியஜனதாவுடன் சேர்ந்தாலும் சரி ,மக்களை ஏமாற்றும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி எந்த பயனும் இல்லை. பாரதீய ஜனதா திமுகவுடன் சேர்ந்தால் ஆசிரியபடுவதற்கு இல்லை. அப்படி பாரதியஜனதா திமுக வுடன் சேர்ந்து விஜயகாந்தும் சேர்ந்தால் அம்மாவுக்கும் ஆப்பு. மக்களை ஏமாற்றும் கூட்டணிக்கும் ஆப்புதேன். இதுதான் நடக்க போகிறது. இதுதான் நடக்கும். திமுக வின் நிலை இந்த தேர்தலில் வாழ்வா? சாவா? என்பது .கருணாநிதியின் அரசியல் தந்திரம் விரைவில் மதவாதத்தை விட்டு விட்டு இதைதான் செய்யும். பொறுமையுடன் இருங்கள். இன்னும் 2 வாரத்தில் ல.கணேசன் பழைய நண்பர் கருணாநிதியை சந்திப்பார். அந்த சந்திப்புடன் அணைத்து செய்தியும் வெளியாகும் ..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இதுகெல்லாம் கப்ரன் மசிய மாட்டாரு..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பா.ஜ.க காத்திருக்க தேவையே இல்லை..பா.ஜ.க செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான்...தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தான் என்று அறிவிக்க வேண்டும்...அவ்வளவு தான். ஆனால் பா.ஜ.க தனது பலத்தை அளவுக்கு அதிகமாக கற்பனை செய்து கொண்டு தனக்கு கீழ் தான் விஜயகாந்த் வர வேண்டும் என்று நினைக்கிறது....திமுக அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பா.ஜ.க தான் என்று தேவையில்லாமல் வாய் விடுகின்றது..இது தான் விஜயகாந்தை கேடுப்பேற்றுகிறது..அதனால் தான் அவர் வேண்டும் என்றே தமிழசை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை கோயம்பேடு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் காக்க வைத்தார்...அன்புமணி விஜயகாந்த் ஆகியோர் வேறு வழி இல்லாமல் பா.ஜ.க தலைமையை ஏற்று வருவார்கள் என்று இலவு காத்த கிளியாக நிற்கிறது...பா.ஜ.க ஆசை படலாம்..ஆனால் உண்மை நிலவரம் என்ன? கன்னியாகுமரி, கோயம்பத்தூர், செல்வாக்கு தவிர திருச்சியில் சிறிது செல்வாக்கு இருக்கிறது...இதை தவிர்த்து வேறு எந்த தொகுதியில் தனியாக நின்றாலும் 1000 ஓட்டு வாங்குவதற்கே கடினம்....எங்கள் ஊரில் எல்லாம் பா.ஜ.க வுக்கு பூத் ஏஜெண்டே கிடையாது...இதனை புரிந்து கொள்ளாமல் பா.ஜ.க ஓவராக ஆடுகிறது....பா.ஜ.க உருப்படியாக கேப்டனை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மற்ற சிறு கட்சிகளை இணைத்து களம் காண வேண்டும்...அன்புமணி கடைசி நேரத்தில் கூட்டணிக்கு உடன்படலாம்...முடிந்தால் மக்கள் நல கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி பேசலாம்..இப்படி செய்யும் பட்சத்தில் திமுக அதிமுக தவிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு களம் காணலாம்..மக்கள் இந்த முறை திமுக அதிமுகவுக்கு ஓட்டு போடும் மன நிலையில் இல்லை...இந்த சந்தர்பத்தை பா.ஜ.,க புத்திசாலிதனமாக உபயோகித்து கேப்டனுடன் இணைந்து களம் காணும் பட்சத்தில் நிறைய எம்.எல் .ஏக்கள் பா.சவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..

 • samy - singapore,சிங்கப்பூர்

  தனியார் மின் நிறுவனங்களிடம் அதிக விலைகொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதால், அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை, கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தின் வருமானத்தைவிட அதிகம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பொதுத்துறை மின் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கான வருமானத்தையும் சேர்த்து, தனியார் மின்நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய அதானி நிறுவனத்திடம் அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டதால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்படுமென கூறப்படுகிறது. இதுபோன்று நிர்வாகத்திறமையின்மையாலும், புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமலும், மக்களை ஏமாற்றும் நோக்கில் மின்வெட்டை தற்காலிகமாக சரி செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தில் அதிக விலைகொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், இலவசம் என்ற பெயரில் மீண்டும் மக்களை ஏமாற்ற ஆயுத்தமாகி கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத அரசு.

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்வார்களே ...அதை தான் பாஜக கன கட்சிதமாக செய்து வருகிறது

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  அதிமுக கூட்டனி பற்றி இன்னும் அறிவிக்கவில்லை இவர்களாகவே கூட்டணி கிடையாது என சொல்லிவிட்டார்கள் இவர்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்பது மட்டும் நிஜம்

 • Rajan - chennai,இந்தியா

  அரசியல் அனாதைகள் இவர்கள்

 • நிலா - மதுரை,இந்தியா

  இந்த விஜயகாந்த் கட்சி என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை இதில் யார் கூட்டணி வைத்தால் என்ன??? வைக்க விட்டால் தான் என்ன?

 • SENTHIL - Coimbatore,இந்தியா

  திரு.விஜயகாந்த் அவர்களின் வாக்கு வங்கி சரிந்து விட்டாலும், அப்படி எதுவும் இல்லாத மாதிரி ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன அவருடன் கூட்டணி சேர துடிக்கும் கட்சிகள்... நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு சதவிகிதம், பிஜேபியை விட மிக குறைவு... தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற பிஜேபி படாத பாடு படுகிறது... இப்போது மீண்டும் கூட்டணி சேர்ந்தால் தேமுதிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும்... தேமுதிக என்ற கட்சி திமுக, அதிமுக விற்கு எதிரானது, மாற்றானது என்பது நிஜம் எனில்... திரு.விஜயகாந்த் வெற்றியோ தோல்வியோ, அதை பற்றி யோசிக்காமல் தனித்து போட்டி இட வேண்டும், அல்லது மக்கள் நல கூட்டணியுடன் இணையலாம்... அப்படி செய்தால் மட்டுமே தேமுதிகவிற்கு எதிர்காலம்... இல்லையெனில் பாமக, மதிமுக வரிசையில் (மாறி மாறி கூட்டணி வைத்த கட்சிகள்) தேமுதிகவும் இடம் பெற்று விடும்... திமுகவுடன் கூட்டணி என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை மறந்து விடுவதே நல்லது... ஏன் எனில், இன்று உங்களை அதிமுக எப்படி நடத்துகிறதோ, அதை விட மோசமாக திமுக நாளை உங்களை நடத்தும்... உங்களை (தேமுதிக) எக்காரணம் கொண்டும் அடகு வைத்து விடாதீர்கள்... இத்துடன் கொஞ்சம் சபை நாகரீகத்தை வளர்த்து கொள்ளுங்கள், சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்னால்..

 • Venkat - Chennai,இந்தியா

  தமிழகத்தில் அரசியல் அனாதையாக்கப்பட்டிருப்பது பி.ஜே.பி. அல்ல. தமிழகம் தான் மற்ற இந்திதிய மாநிலங்களில் இருந்து அனாதை ஆக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பி.ஜே.பிக்கு அதன் பலம் தெரியும். அவர்கள் தமிழகம் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் வேண்டும் என்றால் ஒரு தேசிய கட்சி ஆட்சி வர வேண்டும்.

 • Suresh - Nagercoil,இந்தியா

  அ தி மு க வை வெற்றி பெற செய்ய மறைமுக நடவடிக்கை...

 • BABUVIJI - TRICHY,இந்தியா

  இலவு காத்த கிளி ,இலவு காத்த கிளின்னு ஒண்ணு இருந்துச்சாம் .............

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  இது மக்களையும், மற்ற கட்சிகளையும் திசை திருப்பும் வேலை.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  என்னங்க மேலிடம் என ஒன்று உண்டு என்பதை மறந்து பேசுகிறார்களோ...வீர வசனங்கள் எல்லாம் அடுத்த கூட்டுறவு ஆண்டு தொடங்குவரை நிகழ்ந்து கொண்டிருக்கும் பிறகு........................

 • Yesveeorr - chennai ,இந்தியா

  அது சரி முரளி தர்ராவும் தமிழிசையும் தான் கூட்டணியை முடிவு பண்ணும் அதிகாரத்தில் இருக்கிறார்களா. மோடி என்ன நினைக்கிறார். ஜெயாவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்திலும் காலூன்றி மத்தியிலும் ஆதரவை உறுதிப்படுத்த நினைக்க மாட்டாரா.ஜெயாவும் மோடியும் ஒரே மேடையில் சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டால் எதிர்கட்சிகளால் தாக்கு பிடிக்க முடியுமா.

 • jagan - Chennai,இந்தியா

  பா ஜ மூன்றாவது மொக்கை அணி (இந்த சில்லறை கட்சிகள் வோட்டு தீ மு க பக்கம் போகாமல்) அமைத்து தீ மு க வராமல் தடுக்க வேண்டும்...இந்த முறை தோத்தால் தீ மு க அம்பேல்...அம்மாவை சுப்ரீம் கோர்ட் பார்த்து கொள்ளும்.... ரெண்டும் போன பின் பார்க்கலாம்.... பா ஜ தொலை நோக்குடன் செயல்பட வேண்டும்

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  நாஞ்சில் சம்பத் அவர்கள் பாஜகவில் இணைந்து, வருங்கால தமிழக முதல்வர் சு. சாமியாருக்காக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று என்னை போன்றவர்கள் எல்லாரும் "காத்திக்கிட்டு இருக்கோம்"

 • Yesveeorr - chennai ,இந்தியா

  அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக கூறுவது நகைப்புக்குரியது. ஏதோ அதிமுக இவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அலையாய் அலைவது போலவும் இவர்கள் வேண்டாம் என்பது போலவும் ஒரு நகைச்சுவை காட்சியை அரங்கேற்றி உள்ளார்கள். விஜயகாந்துக்காக கடைசி வரை காத்திருப்போம் என்பது தமிழ்நாட்டில் இவர்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதிமுக தவிர இவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் இவர்களுக்கு தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சும். அதுவும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்தால் இவர்களுக்கு தோல்வியோடு மட்டும் அல்லாமல் ஜெயாவின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். அதிமுகவின் ராஜ்ய சபாவின் 12 உறுப்பினரது ஆதரவையும் இழந்து எந்தவித மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் அவதிக்குள்ளாகப் போவதுதான் மிச்சம். அதனால் விஜயகாந்துடன் கூட்டணி என்ற முடிவை மறு பரிசீலனை செய்வது தான் பாஜகவுக்கு நல்லது.

 • Balasubramanian Periaswami - coimbatore,இந்தியா

  கனேசன நம்பி இத்துப்போன கட்டுமரத்தையும் , இசைய நம்பி ஷ்டீரிங்கே இல்லாத கப்பலையும் அண்டினீங்க , முட்டதான் கெத்தா தனியா நிக்கணும் மரியாதையை வளர்த்தெடுக்க அது ஒண்ணுதான் வழி

 • sha_newyork - new york,யூ.எஸ்.ஏ

  நல்ல வேலை. நான் கூட 2004 மாதிரி கூட்டணி அமைஞ்சு முட்டை வாங்குமோ என்று பயந்துட்டேன். நன்றி முரளி ராவ் அவர்களே. அதிமுக ஏனைய சின்ன கட்சிகளை கூட்டணி அமைத்து 200 கும் அதிகமான இடங்களில் வெற்றி பெரும். 2014 மாத்ரி பாஜகாவுக்கும் தேமுதிக்கவுக்கும் வாத்து முட்டை தான்.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  இப்படிச் செய்து கூட அதிமுகவை ஜெயிக்க வைக்கலாம்..

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  முரளிதர் ராவ் ஒரு கொமேடியன் , டுபாகூர் , விஜயகாந்தைப்போல்

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  அம்மா கண்ணசைவுக்காக ப.ஜ.க மேலிடம் காத்துக்கிடக்கிறது என்பதே உண்மை, ஒரு வார்த்தை சொன்னால் , அமித்ஷா அடுத்த நாள் காலை கூட்டணி பேச, போயஸ் கார்டன் வாசலில் நிற்பார். இந்தியாவே உச்சரிக்கும் ஒரு சொல் அம்மா ..

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  இங்க பாருய்யா காமெடியை.. இவங்க வேணான்னு சொல்றாங்களாம், கூப்பிட ஆள் இல்லை .. எல்லோர் வீடு வாசலிலும் கெஞ்சி கொண்டிருகிறார்கள்.. கூட்டணியில் இல்லை என்று , வோட்டு போட தெரியாதவர் சொன்ன போதும் , அவரை கெஞ்சிய கட்சியல்லவோ உங்கள் கட்சி...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ எதனாலே,... பெரியத் தலைவர்கள் சென்னை வரும்போது கேப்டனை சந்திக்க விரும்புவதில்லை ? டெல்லிக்கு வந்தாலும் அனுமதிப்பதில்லை..

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  தே.மு.தி.க தலைமையில் ப.ஜ.க என்பது தற்கொலைக்கு சமம். தேசிய கட்சியில் நிறைய தலைவர்கள் மறைந்துள்ளனர். அவர்களை விட ஒன்றும் இந்த புதுவரவு குடும்ப சீமான் சிறந்தவறல்ல. தேர்தலில் நிற்கவே தேவையில்லை. நிச்சயம் ஒட்டு வங்கிகள் ஆளும் கட்சிக்கு சாதகம். ஒட்டு வங்கி கணக்குகளை பாராளுமன்ற தேர்தல் தவிடுபொடியாக்கியது. முதலில் அன்டிப்பிழைப்பதை நிறுத்தி, தனிப்பெரும் தலைவரை மூலம் சாதாரண வேட்பாளர்களை நிறுத்தினால் கழக ஒட்டு வங்கி கணக்கு வீரர்களின் சவடாலை சாமளிக்கலாம். ஊழல், ஊழல், லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.கருப்பு பணம். தமிழகம் மீள வேண்டுமானால் வரும் தேர்தலில் புது சரித்திரம் படைக்க முடியும். இந்தமுறையும் ஜாதி இன மொழி கட்சி ஆட்சி அமைத்தால் தமிழகம் குப்பை மேடு தான்.

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணி பிரகாசமாக இருந்தாலும், நாடளுமன்டற தேர்தலில் நாங்கள் களத்தில் 8 மாத கால முன்பே இறங்கி வலை தளங்களில் பரப்புரை மேற்கொண்டோம், ஆனால் இப்போது தான் துவக்க பட்டுள்ளது, பணியை போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும் , அமித்ஷா ஜி நேரடி தலைமையில் சமூக வலைதளங்களுக்கு ஆட்கள் நியமிக்க பட வேண்டும்..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  என்னது பாட்டியைக் காணோமா ? விளம்பரம் குடுத்தீங்களா ? 2 பேனராவது வைங்க..

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  இப்படி பி.ஜே.பி அறிவித்தவுடன், அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் அனைத்து கட்சியினராலும் ஒதுக்கப்பட்ட கட்சிகளாகி விட்டது.. பி.ஜே.பி கூட்டணி , கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி...

 • K.V.Ravikumar. - Tiruchengode

  என்ன ஒரு தைரியம் .நல்ல முடிவு இழக்க என்ன இருக்கு? இதில் கவலைபட வேண்டிய வர்கள் இரண்டு கட்சி (திமுக & அதிமுக)தானே!

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  இந்த கூடத்தில் பங்கேற்று வெளி வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் புத்துணர்ச்சி பரவி சாதிக்க வேண்டும் என்ற வெறி பரவியது. மேலும் சமூக வலை தளங்களில் கொண்டு செல்ல , 1000 த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது...பி.ஜே.பி எதை செய்தாலும் அதில் சேவை மனப்பான்மை கண்டிப்பாக இருக்கும்...

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  முரளிதர் ராவ் பெசுகளை எல்லாம் தண்ணீரில்தான் எழுதவேண்டும் , யாரும் இவரை தமிழக மக்கள் நம்பவில்லை & மதிக்கவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement