Advertisement

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா?

சென்னை: அடுத்த முதல்வராகும் வாய்ப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கா அல்லது அவர் மகனும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலினுக்கா என்பதை, தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்து, பரபரப்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பைச் சேர்ந்த, வேலுார் மாவட்ட வழக்கறிஞர் திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளிலும், 5,176 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவில்லை என, 77.9 சதவீதம் பேரும், மது பிரச்னையைத் தீர்க்கவில்லை என, 70.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி நன்றாக இருந்ததாக, 32.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என, 39 சதவீதம் பேரும், வாய்ப்புள்ளது என, 25.9 சதவீதம் பேரும், நெருங்கி வருவது போல் உள்ளது என, 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை தவிர, அவற்றுக்கு ஈடாக எந்த மாற்றுக் கட்சியும் இல்லை என, 56.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகள் மீது, 15 சதவீத இளைஞர்கள், பெண்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர். பா.ம.க., தலைமையிலான ஆட்சிக்கு சாத்தியம் என, 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இலவச திட்டங்கள் தேவையில்லை என, 71 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்து, கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு அதிக அளவில் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.அடுத்த முதல்வராக தகுதி, திறமை மற்றும் வாய்ப்பு கருணாநிதிக்கு, 70.99 சதவீதமும், ஸ்டாலினுக்கு, 69.61 சதவீதமும், ஜெயலலிதாவுக்கு, 65.99 சதவீதமும் உள்ளது.

தி.மு.க.,வுக்கு, 35.6 சதவீதம், அ.தி.மு.க.,வுக்கு, 33.1 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. மூன்றாவது அணியால் ஓட்டுகள் சிதறி, அ.தி.மு.க.,வுக்கு வெற்றி சாதகமாகலாம். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின், 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பண்பாடுமக்கள் தொடர்பக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை லயோலா கல்லுாரி ஊடகத் துறையின் பேராசிரியராக இருந்த ராஜநாயகத்தின் வழிகாட்டுதலோடு, கருத்துக் கணிப்பு எடுத்ததாகக் கூறியுள்ளது குறித்து, ராஜநாயகத்திடம் கேட்டோம். அவர், ''இந்த கருத்துக் கணிப்புக்கும், எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

பின்னணியில் தி.மு.க.,?கருத்துக் கணிப்பு முடிவுகளை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், அந்த இயக்கத்தினர் வெளியிட்ட போது, அவர்களுடன் இருந்தவர்களில் பெரும்பான்மையினர், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதன் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்து, கேள்வி எழுந்துள்ளது.

'சம்பந்தமில்லை'லயோலா விளக்கம்: கருத்துக் கணிப்பு குறித்து சென்னை லயோலா கல்லுாரி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:பண்பாடு மக்கள் தொடர்பக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டதாகக் கூறியிருக்கும் கருத்துக் கணிப்புக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களோ அல்லது இந்நாள் மாணவர்களோ, கல்லுாரி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கருத்துக் கணிப்பு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு அந்த தரப்பில் கூறப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து (176)

  • SRIVEL - chennai,இந்தியா

    உங்களின் கொள்கைகள் சாரி கொள்கைகள், குடும்ப ஆட்சி, 2 G உழல், ரௌடீசம், உங்கள் குடும்ப ஆதிக்கம், மக்களின் சொத்துகளை சுரண்டல், போன்றவரை மக்கள் ம்றக்கவிலை,

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    தமிழ்நாடு இவர்களின் குடும்ப சொத்தா ஏலம் விடுவதற்கு? இரண்டு பெருமே இல்லை. இந்தியன் நண்டு கதைதான்.

  • SAMPATH - TIRUNELVELI,இந்தியா

    அடுத்து தி.மு.கதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது கருணாநிதிதான் முதல்வராவார். தான் அடுத்து வரமுடியுமா என்ற நப்பாசையில் ஸ்டாலின்தான் இத்தகைய மாற்றுக் கருத்துக்களை, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உலவவிடுகிறார்.

  • ARUNKUMAR - Chennai,இந்தியா

    ஏற்கனவே அழகிரியைவிட ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று பத்திரிக்கை ஒன்றில் ஒரு கருத்துக்கணிப்பு வரசெய்தவர் ஸ்டாலின். தன்னால் நேரடியாக முதல்வர் வேட்பாளராக வரமுடியாத நிலையில், தன்னுடைய தந்தையின் நிழலிலேயே அரசியல் செய்து பழக்கப்பட்டுவிட்ட ஸ்டாலின், இத்தகைய கருத்துக்கணிப்பை வரச்செய்துள்ளார் என்பதற்கான வலுவான சந்தேகங்கள் உள்ளன.

  • Baski - Chennai,இந்தியா

    ஸ்டாலின் தான்.. என்ன சந்தேகம்..

  • Rajesh - Chennai,இந்தியா

    திமுக / அதிமுக ரெண்டு பேருமே இல்லை

  • Bala - Chennai,இந்தியா

    கூட்டணிக்காக திருமண பத்திரிகை கொண்டு சென்றாகிவிட்டது, சாவு வீட்டில் இலவு காத்த கிளிபோல காத்திருந்து காத்திருந்து காலமும் போய்கொண்டு இருக்கிறது. எப்படியாவது இது போன்ற தனக்கு தானே நாமம் டீமை வைத்தாவது அதில் திருட்டில் முக்கிய கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று கதை அளந்து விட்டாலாவது கூட்டனிக்கு யாராவது வருவார்கள் என்ற ஏக்கம்தான் தவிர வேறு ஒன்றும் இல்லை.

  • Bala - Chennai,இந்தியா

    நமக்கு நாமே பிரமோஷன் டீமின் திள்ளலஅங்காடி வேலைதான் இது என்பது இந்த உலகம் நன்கு அறியும். ஏனென்றால் நாளை நடக்கபோகும் தனக்கு தானே நாமம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தெம்பாக இருக்க சின்ன தாத்தா போடும் நாடகம் தான் இது. தேர்தல் வரை இன்னும் எவ்வளவு நாடகம் அரங்கேற போகுதோ.

  • Swaminathan - atlanta,யூ.எஸ்.ஏ

    திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. இன்னும் எவள்ளவு சுருட்டனும்.

  • RSS - New Delhi,இந்தியா

    இப்படி கனவு கண்டாவது சந்தோஷ பட்டு கொள்ளட்டும்..... நிச்சயமாக 20050 வருடம் தி மு க வரும் என்று பட்சி சொல்லுது.

  • Jayaraman Ravichandra - CHENNAI,பஹ்ரைன்

    ஆமாம் இது தவறான கருத்துக் கணிப்புதான், திமுக தூண்டுதலின் பேரில்தான் நடந்து இருக்கிறது, சரி, அதிமுகாவால் ஏன் இப்படு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பட வில்லா, உண்மையான கரித்துக் கணிப்பு வந்தால் திமுக கூட்டணி 200 இடங்களை PIDIKKUM

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    இது உண்மை என்றால் கருணா ஏன் லெட்டெர் pad கட்சிகளிடம் கெஞ்சுகிறார்? தனியாக தேர்தலை சந்திக்கவேண்டியதுதானே/

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    இந்த கருத்துகணிப்பை ஏற்றுகொள்கிறோம். அதாகப்பட்டது, இந்த கருத்துகணிப்பு படி, திமுக தான் தமிழகத்திலேயே அதிக செல்வாக்குள்ள கட்சி. அதாவது 36 % செல்வாக்கு உள்ளது. அதிமுக செல்வாக்கு இல்லாத கட்சி. ஒத்து கொள்கிறோம். ஆனால் செல்வாக்கு கூடியுள்ள கட்சியான திமுக இனி நாக்கை தொங்க போட்டுகொண்டு, கூட்டணிக்கு அலைய கூடாது. திமுக தனித்து நின்று வெல்லட்டும். அதிமுகவும் தனித்தே நிற்கும். டீலா நோ டீலா?

  • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

    தமிழகத்திற்கு தான் எத்தனை முதல்வர்கள் கருணாநிதி ஒரு முதல்வர், ஸ்டாலின் இன்னொரு முதல்வர், கனிமொழி ஒரு முதல்வர், அழகிரி முதல்வர், ஜெயலலிதா முதல்வர்,அன்புமணி, வைக்கோ, எச் ராஜா,விஜயகாந்த், பிரேமலதா முதல்வர்கள். எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்ட வல்லரசாக்கமா விட மாட்டிங்க போல இருக்குது

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    கருத்துக் கணிப்ப்புகள் இன்னும் பலதும் வரவிருக்கின்றன. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற கணிப்புக்கு எதிர்க் கட்சி வாசகர்கள் "பொய்யானது, டுபாக்கூர்" என்றும் தி மு க ஆகுதி அமைக்கும் என்கிற கணிப்புக்கு அதன் எதிர்க்கட்சிகள் மேலே சொன்னதையும் பதிவு செய்வார்கள். டிஹெல்லாம் டைம் பாஸ் தானே சார். எப்படியும் எலக்ஷன் என்று வந்தால் நம்ம தமிழன் மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி ரெட்டை இலையைப் பாத்து வாக்களித்து விடுவான், அலட்டிக்கவே வேண்டாம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    காசு கொடுத்து கருத்துக் கணிப்பு எடுத்தால், தி மு க 90% என்று போட்டுக் கொள்ளலாமே. ஆனால் ஒன்று நிச்சயம் : மக்கள் அதிமுக அரசின் மீதான அதிருப்தியில் இருக்கிறார்கள். அதற்க்கு மாற்றுக் கட்சி தி மு க மட்டுமே. ஆனால், பிற கட்சிகள் தனித் தனியாகப் பிரிந்து நின்றால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே இந்தக் கருத்துக் கணிப்பை கேவலப்படுத்தி எழுதியிருப்பவர்கள், மீண்டும் ஜே ஜே ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் இல்லையா?>? மிக்க நல்லது.

  • Dev - Adelaide,ஆஸ்திரேலியா

    அடுத்த முதல்வர் சகாயம் தான். இந்தியாவக்கு ஒரு மோடி போல தமிழ்நாடுக்கு ஒரு சகாயம் தேவை. சரி இவரு வேண்டாம் என்றால் மூன்றாவது ஆளாக என்னை முதல்வராக வையுங்கள். எண்ணி 4 வருஷத்ல தமிழ்நாடு கடனையும், தமிழ்நாடுக்கு 24 மணிநேரமும் சுத்தமான மின்சாரம், தண்ணீர், சாலை வசதி, உலகத்தரம் வாய்ந்த கல்வி, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதி, Slums இல்லாத உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்கி காட்டுகிறேன்.

  • C.VENUGOPAL - erode,இந்தியா

    முதலில் இந்த கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும்... மக்களை வேண்டுமேன்றே சுத்த விடுகிறார்கள் ...இது ஒரு பித்தலாட்டம் ...நடுநிலையான தேர்தலுக்கு இந்த மாதிரி நடவடிக்கை களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது.../

  • krishna - cbe,இந்தியா

    அடுத்த முதல்வர் அம்மா வாக இருக்க வாய்ப்பு உள்ளதா

  • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

    தாத்தா ,மற்றும் தொளபதிக்கு திராணி இருந்தா திமுக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம் .

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    லண்டன்ல இருக்கிற திமுக சொம்பு ( இங்கே அறிவாலயத்தில்தான் இருப்பாக ) மிகவும் பிசி போல....சும்மா குத்தி தள்ளுதாறு.....

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    முன்பு தேர்தலுக்கு முன் லயோலா கல்லூரி சம்பந்தப்பட்டவர்கள் தேர்தல் கருத்து கணிப்பு என்று ஒரு அறிக்கை இவர்களுக்கு சாதகமாக கொடுப்பது வழக்கம். அதற்க்கு பதில் இப்போது புதிதாக "பண்பாடு மக்கள் தொடர்பகம்" என்ற அமைப்பை நிறுவி உள்ளனர் போலும். ஆக அடுத்த ஜால்ரா ரெடி

  • Arivaali - chennai,இந்தியா

    சமூக வலை தளங்களை ஒரு சுற்று வந்தாலே தெரியும் அதிமுகவுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    எனக்கென்னவோ அழிகிரி தான் அடுத்த முதல்வர் என்று பட்சி சொல்கிறது - ஜெய் ஹிந்த்

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    திமுக நண்பர்களே எழுதி வைத்துகொள்ளுங்கள் - 28 சீட்டுக்கு மேல் கிடைக்காது - நீங்கள் பணத்தையும் ரௌடிக்களையும் ஏவி இன்னும் 20 சீட்டுக்கள் வாங்குவீர்கள் - 48 சீட்டுக்கு மேல் கனவிலும் உங்களுக்கு கிடைக்காது - அதிமுக வெற்றி பெரும். ஆனால் - பாராளுமன்ற தேர்தல் போல் இருக்காது - 130-150 சீட்டுக்கள் கிடைக்கும் - இது யாரிடமும் லஞ்சம் வாங்காத - கழுத்தில் கத்தி பயமுறுத்தாமல் செய்த கருத்துகணிப்பு - ஜெய் ஹிந்த்

  • SINGA RAJA - MADURAI,இந்தியா

    முழுக்க முழுக்க இதுவொரு போலியான கருத்துக் கணிப்பு. தங்களுக்கும் இந்தக் கருத்துக் கணிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று, தற்போது ராஜநாயகம் தலைமையிலான குழு, நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை பொய்யென்று சொல்லி, அதன் முகத்திரையை கிழித்துக் காட்டியிருக்கிறது. ஒரு பொய்யைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே செல்வதால், அந்தப் பொய் மக்களிடம் சென்று உண்மையாகிவிடும் என்ற நம்பிக்கை, திமுகவின் தலைமைக்கு எப்போதும் உண்டு. எதையும், எப்படியும் தன்னால் கையாள முடியும் என நினைப்பவர், திமுக தலைவர். 2ஜி போன்ற நிகழ்வை மாற்றுக்கட்சியினர் எவரேனும் இந்நேரம் செய்திருந்தால், அதைவைத்துப் பெரிய பிரட்சினைகளைக் கிளறி, நிறைய பூதங்களை அவர் வெளிக்கொண்டு வந்திருப்பார். அவருக்கு அரசியல் செய்வதற்கு அது ஒன்று போதாதா? ஆனால் அதனைத் தாங்களே செய்திருப்பதால், அதுவொரு பெரிய விசயமே இல்லை என்று சொல்லவும், எல்லாம் சட்டப்படிதானே நடந்தது என்று வாதாடவும் அவர்களுக்கு எளிதில் முடிகிறது. தங்களால் ஈரைப் பேனாக்கவும் முடியும், பெரு மலையை கடுகாக்கிவிட முடியும் என்று செயல்படுபவர்கள் திமுகவினர். தற்போது, இணையத்தில், அவர்களது சேட்டை பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. உரத்து தங்களின் குரலை ஒலிக்க, ஓங்கிப் பேசிட, செயல்படுத்திட, அதை எடுத்துச் செல்ல அவர்களுக்கு மிகப் பெரிய சொந்தப் படையே, தற்போது அவர்களுக்கென செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இப்படிப்பட்ட அவர்களின் புளுகுமூட்டை செயல்பாடுகள் எல்லாம் எப்போதும் என்றுமே மக்களிடம் செல்லுபடியாவதில்லை. புதியவர்களுக்கு அது இப்போது புரியாது. ஆனால், இப்படி பேசி, செயல்பட்டு நாம் வெற்றியை ஒருபோதும் பெறமுடியாது என்பதையும், வெற்றியையும் தோல்வியையும் காலம்தான் தீர்மானிக்கும் என்பதையும் அவர்கள் உணரும்போது, அவர்களுக்கு எல்லாமே புரிந்துவிடும்.

  • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

    அப்பு இந்த கப்ப எங்க வாங்குன்நீங்க? காசியப்பன் பாத்திர கடைல.... சித்தப்பா உங்கள காசியப்பன் பாத்திர கடைல பாத்ததா சொன்னாங்களே? தட் மொமென்ட்...

  • natraj - namakkal,இந்தியா

    நம்ப முடியாத, நம்பிக்கை இல்லாத கருத்து க(தி)ணிப்பு... திமுகவிற்கு 35 % செல்வாக்கு இருப்பது உண்மை எனில் தனித்து போட்டி இடலாமே... ஏன் அறிவாலயம் வாசலை திறந்து வைத்து விட்டு வழி மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டும்... என்ன தான் பொய்யான கருத்து கணிப்பாக இருந்தாலும் அதிமுகவிற்கு 33 % செல்வாக்கு என்று அவர்க.ளே ஒப்பு கொண்டார்கள்... இன்றைய நிலையில் அதிமுகவின் செல்வாக்கு 38 % யை விட சற்று அதிகம்

  • ravibala - Rajapalayam,இந்தியா

    மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ..யாருக்கு ஆதரவு சென்னையில் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கீழ்ப்பாக்கத்தில் 44 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கருணாநிதி - 85 % ஸ்டாலின் - 125 % கனிமொழி -201 %

  • K.Sugavanam - Salem,இந்தியா

    ராஜநாயகத்தை எதுக்கு இந்த காமெடில இழுக்கிறாங்க?அப்போ இது தாத்தாவின் சாணக்கியங்களில் ஒன்றுதான் போல..

  • Shekar Raghavan - muscat,ஓமன்

    ரெண்டு பேரும் இல்லை கனிமொழி அல்லது அஞ்சாநெஞ்ஞான் வருவாங்க

  • K.Sugavanam - Salem,இந்தியா

    ஐயோ பாவம், கருணாநிதிக்கி சுடாலினை விட 1.38% ஓட்டுக்களே அதிகம் கிடைத்துள்ளன..புகை வரப் போகுது..ஆமா கனியக்கா முதல்வராகரத பத்தி இவிங்க கேள்வியே கேக்கலையா? என்ன ஒரு பார பட்சம்..பெண்ணினத்துக்கு எதிரானது..

  • sachin - madurai,இந்தியா

    அதனை பேரும் அலறுகிறார்கள் அது மட்டும் நன்றாக தெரிகிறது.....2016 இல் இது உண்மையாக கூட இருக்கலாம்...திமுக 35 % என்றும் அதிமுக 33 % என்பதும் சரி தான் என்று தோனுகிறது ...தவறான கணிப்பு என்றால் அதிமுக 20% என்று சொல்லி இருக்கலாம் அல்லவா...இந்தமுறை அதிமுக கிடையாது என்பது தான் உண்மை..அதிமுக 5 ஆண்டுகளில் ஒரு நல்ல எதிர்கால திட்டம் இல்லை, மக்கள் துயரம் தான், 1000 கோடி தியேட்டர் வாங்க சசி கும்பல் வியர்வை சிந்தி நிலத்தில் உழைத்து வாங்கியது மட்டும் தான் சாதனை...இது பற்றி ஜெயவே வாய் திறக்க மறுக்கிறார்...33 முறை யா அல்லது 13 முறையா மந்திரி சபை மாற்றம்....குனிந்து,கூன் யார் போடுகிறாரோ அவர் தான் அமைச்சருக்கு தகுதி...ஸ்டிக்கர் ஆட்சி என்கிற நாள் பேர்..நிர்வாக திறன் இல்லாமல் சென்னை வெள்ளம் தான் சாதனை,,,மக்கள் வாழ, போக வர, ரோடு இல்லாத நேரத்தில் தூங்கிய அரசு இயந்திரம்..1 மணி நேர பொதுக்குழுவுக்கு விழுந்து அடித்த செய்த வேலை அது தான் அரசின் சாதனை ...1 மாதம் தான் இருக்கிறது தேர்தல் தேதி வர அப்போ பாருங்கள் அரசின் முழு நிர்வாகமும் தேர்தல் ஆணையம் கைகளில் இருக்கும்,,,முடிந்தது ஜெயாவின் நிர்வாக திறன் இல்லாத ஆட்சி..2016 இல் அன்புமணி அல்லது வைக்கோ அல்லது யாரவது ஒருத்தர் புது முகம் வர வேண்டும் ..

  • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

    இந்த பத்திரிகைகள் தான் முந்திரி கொட்டை மாதிரி முந்தி கொண்டு திராவிட கட்சிகளுக்கு இடம் கொடுகின்றன. இவர்களால் தமிழக மக்களுக்கு ஒரு பயன்பாடும் நிகழ்ந்ததாக தெரியவில்லை - போட்டி போட்டு கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்தது தான் மிச்சம் .

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    சென்னையை தவிர மற்ற இடங்களில் தி.மு.க விற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை..

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    இப்படி போட்டாவது கூட்டணிக்கு அங்கேயா இங்கேயா எங்கே போவது என்று எண்ணுபவர்கள் வந்து சேருவார்கள் என்ற நப்பாசை தான்

  • Pachaiyappan Kuppachari - Bareilly,இந்தியா

    ஹல்லோ இதுல என்னங்க சந்தேகம் .........அடுத்த முதல்வர் அம்மா தான்............

  • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

    இப்படி ஒரு கருத்து திணிப்பை வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொள்வது சாட்சாத் திமுக தான் .

  • Jaya Chandran - chennai,இந்தியா

    3,370 பேரிடம் கருத்து கணிப்பு, ஊழல் கட்சிகள் - அ.தி.மு.க , தி.மு.க தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பே கிடையாது. திமுக, அதிமுக - ஓட்டுக்கு பணம், காசு, இலவசம், கருத்துக் கணிப்பு, மது விலக்கு, விதி 110-ன்கீழ் அறிக்கை, அறிவிப்பு இவைகள் இந்த முறை எடுபடாது. திமுக, அதிமுக - 234 தொகுதியில் படுதோல்வி இருக்கும் 3.தங்களை விட்டால் தமிழகத்துக்கு வேறு கதியில்லை என்று நினைஒக்கும் இரு கழகங்களுக்கும் சரியான பாடம் கற்பித்தால் தான், எதிர்காலத்தில் மக்களின் நன்மைக்கு பாடுபடும் கட்சி உருவாகும். இல்லையேல் தமிழகத்தின் தலைவிதியை மாற்ற முடியாது.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    திமுகவும், அதிமுகவும் சேர்ந்து வேறு யாரும் வந்துவிடாத வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள், ஆனால் பொதுமக்கள் இந்த இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளை வெறுக்கிறார்கள். கண்டிப்பாக இவர்கள் செய்யும் இந்த வேலைகளையெல்லாம் மக்கள் தெளிவாக பார்த்து கொண்டிருகிறார்கள், முடிவு தெளிவாக இருக்கும் புதிய ஆட்சி மலரும்.

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    கருத்துக் கணிப்பு முடிவுகளை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், அந்த இயக்கத்தினர் வெளியிட்ட போது, அவர்களுடன் இருந்தவர்களில் பெரும்பான்மையினர், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எந்த வழியும் பின் பற்றும் திருட்டு கூட்டம் திருந்தாது இப்படி ஒரு பொழைப்பா ?

  • Palay PS. Maniyan - chennai,இந்தியா

    திமுகா நிலைமை எவ்வளவு அபாய கட்டத்தில் இருக்கு என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதும்

  • sudhapriyan - riyadh,சவுதி அரேபியா

    அதெல்லாம் சரி. அங்க ஒழுங்கா இருக்கிற வைகோவ தபா அதிமுகவுக்கு இழுக்கிறார் அப்படின்னு செய்தி .. அந்தாளு எல்லாரையும் அடிமையாக்கிற ஏஜென்டா ?

  • Jagadeesan V - chennai,இந்தியா

    மிஸ்டர் தங்கை ராஜா அவர்களே, நீங்கள் கலைஞர் டிவி பாருங்கள். இந்த கருத்துகணிப்பு தான் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அற்ப சந்தோஷம்.

  • Vandhiyan - SanDiego,யூ.எஸ்.ஏ

    இது கபட வேடதாரி கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையை சொரிந்து கொண்டது போல தான். நல்ல தந்தை, அவருக்கு ஏத்த தனையன், இவர்கள் குடும்பம் திருந்தாது என்பதற்கு இது இன்னுமொரு சாட்சி அவ்ளோதான்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    நிச்சயமாக தகுந்த கூட்டணி இல்லாமல் திமுகாவால்20% அதிமுகாவை 30 % தனித்து வெல்ல முடியாது. பாஜக 8 % அதிமுக கூட்டணி அமைந்து விட்டால் எந்த திமுக கூட்டணியாலும் தேமுதிக 9 % காங்கிரஸ் 2 % அதிமுக கூட்டணியை வெல்ல முடியாது. பாமக 7 % தனித்து நின்றால் ஒன்றிரண்டு இடங்களை தவிர எங்கேயும் வெல்ல முடியாது. மநகூ 5 % மாறி மாறி கூட்டணி வைத்த கட்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை அதில் எதுவும் இல்லை என்பதால் வெல்வது கடினம். பாஜக:( மோடியின் நேர்மையான கடின உழைப்பு) + தேமுதிக: (இயன்றதை இல்லாதவர்க்கு செய்யும் குணம்)+ பாமக:( முன்பு செய்த கூட்டணிக்கு மனிப்பு கேட்டு மாற்றம் முன்னேற்றம் காண முனைவது),போன்ற தேசிய ஜனநாயக கட்சிகள் முன்பு போல் இணைந்து கூட்டணி வைத்தால் மாற்றத்தை எதிர் பார்க்கும் மக்கள் வோட்டளித்தால் முதலிடம் பெறலாம். இல்லையேல் இரண்டாம் இடம் வரலாம்.

  • - chennai,இந்தியா

    விஜயகாந்த் அடுத்த முதல்வர்

  • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

    கண்டிப்பாக இது ஸ்டாலின் ஆதரவால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பே

  • Manickam - Chennai,இந்தியா

    சேனல் 4 இயக்குனர் கெல்லம் மேக்ரே, ஸ்டாலின் , கருணாநிதிக்கு வாழ்த்து சொன்னார் என கதைவிட்டு, பிறகு கெல்லம் மேக்ரே தான் யாரையும் வாழ்த்தவில்லை என சொல்லி அசிங்கப்படுத்தினது நியாபகம் இருக்கா? காசு கொடுத்து ஆஸ்திரிய தபால் துரையின் ஸ்டாம்ப்பு அடித்து 'என் தமிழ் சேவையை பாராட்டி ஆஸ்திரிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது' என முரசொலியில் செய்தி வெளியிட்டுக்கொண்டது. போப் ஆண்டவரின் அலுவலக இணைய தளத்தில் ( SEARCH FOR HOW TO GET PAPAL BLESSING ) உலகெங்கும் உள்ள யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரையும், பிறந்த தேதியையும் பதிவு செய்தால் பிறந்தநாள் அன்று வாட்டிகனிலிருந்து வாழ்த்து செய்தி வரும். அப்படி பதிவு செய்து பெற்ற வாழ்த்து செய்தியை "போப்பாண்டவர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து" என கலைஞர் டிவியில் , முகநூளில் செய்தி போட்டுக்கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் பல முன்னணி பத்திரிக்கைகள் பலவும் அதனை ஆய்வு செய்யாமல் வெளியிட்டனர்.. அதுவும் சரி தான். அவர்கள் அதனை 5 முறை முதல்வர் பதவியை அளகரித்தவரிடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் ...அண்ணாவுக்கு மோதிரம் வாங்கி கொடுத்து அதை மேடையில் அனைவர் முன்பும் அவரை விட்டு அணிய சொன்னதும் அந்த வகை தான். பின்னர் அண்ணா மரணத்துக்கு பிறகு திமுக MLA ஆதரவை பெற உதவியது அல்லவா ??, ஹார்லிக்ஸ் திருட்டும் அந்த ராகமே .. இந்த வரிசையில் கருணாநிதி கும்பல் தமிழகம் முழுக்க 5176 பேரிடம் கருத்துக்கணிப்பு (???) நடத்தி திமுகதான் வெல்லும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என சொல்லியிருக்கிறது. பொய்,பித்தலாட்ட அரசியல் திமுகவுக்கு 1967 முதலே வாடிக்கை தான் ... அதையே அவரின் கைத்தடி "டைமண்"டுவும் சாகித்தய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளரிடம் தானே எழுதிய உரையை கையெழுத்து வாங்கி அவர் மரணத்துக்கு பின் "தன்னை பாராட்டி" எழுதியதாக வெளியிட்டு அவரது விளம்பர ஆசைக்கு தீனி போட்டு கொண்டார் .. இதை தான் விஞ்ஞான திருட்டு என்பார்கள் - ராம்

  • BABUVIJI - TRICHY,இந்தியா

    தினமலர் கருத்து பகுதிலயும் சபரீசன் க்ரூப் மிக தீவிரமா இருக்கு போல, எல்லோருக்கும் ஒன் ஸ்டார் அதிகமா விழுந்துருக்கு ,......சபரீசா இந்த தேர்தல் முடிவ கேட்டு உன் க்ரூப் அலற போகுது ........

  • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

    ஒ.. லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பா ? அப்போ அது தப்பாத்தான் இருக்கும்.

  • hello - kolkata,இந்தியா

    இதுல இந்த ஆசை வேற இருக்கா. முடுஞ்சி போன கட்சிய பத்தி ஏம்ப்பா பேசறிங்க. இனி பேச வேண்டியது என்ன னா கனிமொழி எப்ப திகார் போகும். கொள்ளை பணம் எப்படி காக்க வேண்டும் ஏனா வந்து எல்லாத்தையும் புடிங்கிட்டு போய்விடுவார்கள். அல்மைசர் பாட்டி போய் திகார்ல சக்களத்தி மகளுடன் கொஞ்சி விளையாடும். அல்சைமர் ஆம் ஆனால் நிறுவனத்தை நல்லா நடத்த முடியுமாம். என்ன கேலி கூத்து இது . போய் வேலைய பாருங்கப்பா நான் தான் வேலை இல்லன்னு இதை எழுதுறேன் நீங்களுமா. போய் உங்க வேலைய பாருங்கப்பா

  • Yesveeorr - chennai ,இந்தியா

    இந்த கருத்து கணிப்பு உண்மை என்றால் நீங்கள் கூட்டணிக்காக யாரிடமும் கைகட்டி நிற்க தேவையில்லை. தனியாகவே நிற்போம் என்று தைரியமாக அறிவியுங்கள். அப்படி இல்லாமல் மறுபடியும் கூட்டணிக்கு அறைகூவல் விடுத்தால் இந்த கருத்து கணிப்பு செப்டப் என்று உறுதியாகும்.

  • Chandramoulli - Mumbai,இந்தியா

    கூட்டணிக்காக கூவி கூவி அழைத்தும் ஒரு கட்சி கூட திரும்பி பார்க்கவில்லை. அதனால் இந்த கருத்து கணிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஏதாவது கட்சி வருமா என்று அறிவாலய கதவை திறந்து வைத்து இரவும், பகலாக காத்து கொண்டு திரிகின்றனர் பெரிய தாத்தாவும், சின்ன தாத்தாவும்.இவர்களுக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கும் போது ஏன் தனியாக நின்று வெற்றி பெற கூடாது >>>> விஜயகாந்த் க்கு 70 தொகுதி என்று முடிவு எடுக்கப்பட்டு , இப்போது எந்த எந்த தொகுதிகள் பற்றிய பேச்சு வார்த்தை நடக்கிறது. இவர்கள் பின் கதவு வழியாக கூட்டணி பேரம் பேசி முடித்து விட்டு, தேர்தல் அறிவிப்பிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.நடுவில் வந்து சு.சாமி 2 ஜி வழக்கின் தீர்ப்பு மஞ்ச துண்டின் குடும்பத்தை எப்படி காணமல் செய்ய போகிறது என்று விஜயகாந்த்க்கு மறைமுக எச்சரிக்கை கொடுத்து விட்டு சென்று உள்ளார். அதனால் குழப்பம். இந்த கணிப்பு விஜயகாந்த் க்காக என்று எடுத்து கொள்ளலாம். இதில் கூட தில்லு முல்லு செய்யும் இவர்களை மக்கள் இன்னமும் நம்ப தயார் இல்லை . மஞ்ச துண்டு இந்த வயதிலும் பதவி வெறி கொண்டு லோ லோ என்று அலைவதை ஆர்க்கும் போது மிக கேவலமாக உள்ளது . இந்த மாதிரி தீய சக்திகள் தமிழகதிர்ற்கு தேவையா >>>>

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    இந்த கருத்துகணிப்பு தி.மு.கவால் பணம் கொடுத்து செய்யப்பட்ட டுபாகூர் கருத்து கணிப்புகள்

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    தி.மு.கவல புனையப்பட்ட பாராட்டு கலந்த கருதுகணிப்புகளை யாரும் நம்ப மாட்டார்கள்

  • காவியன் புஷ்பராஜ் - Mannachanallur,இந்தியா

    நமக்கு நாமே கருத்து கணிப்பு நடத்தியது போல் நமக்கு நாமே தேர்தல் நடத்திக்கலாம்.. நமக்கு நாமே முதல்வர் ஆகலாம்...

  • SENTHIL - Coimbatore,இந்தியா

    அரசியல் களத்தில் திமுகவின் நிரந்தர செல்வாக்கு 25% மட்டுமே... அதிமுகவின் செல்வாக்கு 38%... இப்போது வெளியிடபட்டிருப்பது அறிவாலயத்தின் கருத்து திணிப்பு...

  • GOPI - Kongu Manilam,இந்தியா

    விஷத்துக்கு மற்றொரு விஷம் மருந்தாகாது ... ஆளும் பூதத்தை விரட்டலாம் என்றால் ஆண்ட பிசாசே கனவில் வருகிறது .. ஒரு நல்ல ஆளை அரியணையில் வைக்க முடியலையே ...தமிழ் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ ..?

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    இந்த ரெண்டு ஊழல்வாதிகளும் ( கருணாநிதி & ஸ்டாலின் ) வரவே முடியாது, இந்த கருதுகன்னிப்பு பலவித பிராடுகளை கொண்டது ஆகையால் நம்ப வேண்டாம்

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    இந்த இருவரில் யாருக்குமே இல்லை. உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பேபே கதைதான்.

  • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

    இந்த குப்பன் சுப்பன் தொல்ல தாங்க முடியல

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    முதலில் தோட்டம் நிலைக்கட்டும்... பிறகு யாருக்கு எது என்று பார்த்து கொள்ளலாம்..

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    கருணாநிதியின் தந்திரம் எப்படி கருத்து திணிப்பை விட்டு அனைவரையும் தமது கூட்டணிக்கு வரவழைத்து அதிமுகவையும் கூட்டணி அமைக்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டு 3 வது அணியை வளரவிடாமல் பார்த்து கொள்வார்கள்.அம்மாவிற்கு பிறகு அதிமுக கண்டிப்பாக இருக்காது.ஆனால் கருணாநிதிக்கு பின் பேரன் வடிவில் திமுக இருக்கும். 2016 நமக்கு முக்கியமில்லை என்று கூட எண்ணியிருக்கலாம்.3 வது கட்சியை வர விடாமல் தடுக்கும் சக்தி கருணாநிதிக்கு கொஞ்சம் இருக்கிறது.கண்டிப்பாக எதிர் கட்சி அந்தஸ்தை விஜயகாந்த் மூலம் சேர்ந்தோ அல்லது தனியோ பிடுத்துவிடுவார்.

  • M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா

    உங்கள் கருத்து கணிப்பை சாரி கருத்து திணிப்பை பார்த்து திமுக குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமானால் சந்தோசபட்டுக் கொள்ளலாமே ஒழிய தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் .ஏனென்றால் திமுகவால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை..நில அபகரிப்பு கொள்ளையை எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாத மாபெரும் குற்றம் அவர்கள் நிகழ்த்திகாட்டியது அதை சாதாரணமாக மறக்க முடியுமா? ..ரௌடிகளின் ராஜ்ஜியம் பறந்து விரிந்திருந்தது. திரையுலகம் திமுக குடும்பத்தின் பிடியில் இருந்தது..கேபிள் தொழில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் குடும்பத்தின் தலையீடு அதிகமாகவே இருந்தது.இப்பொழுது ஸ்டாலின் மருமகன் புது அவதாரம் எடுத்துவருகிறார். இனிமேல் திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் மருமகன் ஆட்சியில் தலையிடுவது அதிகமாக இருக்கும் சர்வாதிகார ஆட்சிபோல் இருக்கும்.முன்னர் செய்த படுபாதக செயல்களை விட மிக கடுமையாக இருக்கும்.ஸ்டாலினை ஓரம்கட்டிவிட்டு இவர்கள்தான் ஆட்சி செய்வார்கள் .இது தமிழ்நாட்டுக்கு தேவையா?/ஆகவே எக்காரணம் கொண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் மக்கள் நினைப்பார்களே தவிர இவர்கள் எடுத்த கருத்துகணிப்பு போல் இருக்க வாய்ப்பே இல்லை.

  • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

    கருத்துக்கணிப்பு என்ற பெயரில் காசு கொடுத்து புனையப்பட்ட கருத்துத்திணிப்பு எப்படியெல்லாம் மக்களை அடி முட்டாள் ஆக்கப்பாக்குரானுங்கோ

  • ragu - thombe,இலங்கை

    எப்படியோ அப்பனுக்கும் மகனுக்கும் சிண்டு முடிஞ்சிட்டானாக.. இதான் சொந்த செலவுல சூனியம் வச்சிகிறது மாதிரி .....

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    இலவச திட்டங்கள் தேவையில்லை என, 71 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்....இது ஒன்றுதான் இந்த கருத்து கணிப்பில் உண்மை....

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    கணிப்பு ஆதரவாக இருந்தால்...கனியாக இனிக்கும் அடிமைகளுக்கு எதிராக இருந்தால் என்னவென்பதே இன்றைய கருத்து பகுதி....கணிப்புகளை உடைத்து அம்மா வெல்வார் என்று கருத்தெழுதி மனதை தேற்றி கொள்ளுங்கள்...திமுக ..அதிமுகவிற்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று அடிமைகள் எழுதி தள்ளி விட்டனர்....நான் சொல்லி வருவது ஒன்றே தான்...திமுக தனித்து என்றால்...மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு சீட் கிடைக்கும்...திமுக தேமுதிக காங்கிரஸ் கூட்டனி அமைந்தால்...200 தொகுதிக்கு மேல் வெல்லும்...மக்கள் நல கூட்டனி உள்ள கம்யுனிஸ்ட்...வி.சி ...மதிமுக ...மற்றும் பாமக ...பாஜக....போன்ற கட்சிகள் சற்று வலுவாக உள்ள சில தொகுதிகள் ஓட்டை பிரித்து அம்மையாருக்கு சாதகமாக்கும்...அந்த வகையில் 20 முதல் 30 தொகுதிகளை அம்மையார் வெல்வார்.....அந்த தொகுதிகளோடு கொட நாட்டிற்கு ஓய்வெடுக்க சென்று விடுவார்...

  • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

    டுபாக்கூர் கருத்து திணிப்பு.....பின்னணியில் இருப்பது போலி மருந்து புகழ் மருமகன்தான்....ஒரே கட்சியில் இரு நபர்கள் முதல்வர் வாய்ப்பு என்பது தமிழகத்துக்கு பொருந்தாத ஒன்று......இவனுங்க அரிப்புக்கு சும்மா கருத்து கணிப்பு என்று மக்களை சொரிந்து விடுகிறார்கள்....

  • mindum vasantham - madurai,இந்தியா

    தினமலர் தி மு க நிறமாக மாரி வருகிறதோ ரைடிங் அப்டி தான் உள்ளது .............. நமக்கு நாமே எல்லாம் மற்றதை உண்டு பண்ணியது என்று கூறினால் என்ன சொல்ல

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    இந்த கருத்து கணிப்பை பார்த்து தினமலர் தொடங்கி அடிமைக்கட்சி அபிமானிகள் அனைவரும் தங்களுக்குள் எடுத்த உதறலோடு வேர்க்க விறுவிறுக்க மறுப்பு கருத்துக்களை கவலையோடு வெளியிட்டு வருவது ஒன்றே போதும் திமுக முன்னோக்கி பயணிக்கிறது என்பதை காட்ட. இதற்கு திணிப்பு சாயம் பூசுபவர்கள் கடந்த தேர்தல்களில் அவர்களாகவே கசியவிட்டு திணிப்பு புரட்டு செய்த ஞாபகத்தில் அவர்களைப்போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என நம்ப வைக்க பார்க்கிறார்கள். திமுக எந்த கருத்து கணிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்காத இயக்கம். இதை தலைவர் பலமுறை விளக்கி இருக்கிறார். இப்போதும் மக்களைத்தான் நம்புகிறார்களே தவிர கருத்து கணிப்பை அல்ல.

  • Pandiyan - Chennai,இந்தியா

    தன்னுடைய திருட்டு வேலைகளில் இருந்து தி மு க திருந்த வில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு ...திருட்டு முனேற்ற கழகம் திருந்துவதற்கு வாய்ப்பில்லை

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    நேற்று அம்மையார் தினமலர் மீது போட்ட அவதூரு வழக்கு பற்றிய செய்தி முன்னணி செய்தியாக எங்கேயேனும் தட்டுபடுகிறதா என்று பார்த்தால் எங்கும் இல்லை...அம்மையார் ஆட்சிக்கு வந்து இது வரை எத்தனை அவதூரு வழக்குகளை தினமலர் மீது போட்டுள்ளார் என்பது தினமலருக்கே வெளிச்சம்... இருப்பினும் அம்மையாருக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதை தினமலர் நிறுத்தவில்லை...அம்மையாருக்கு எதிரான இந்த கருத்துகணிப்பை பற்றி சந்தேகம் எழுப்பி உள்ளது.....வரும் தேர்தலில் திமுக வென்று தினமலர்....ஹிந்து...டைம்ஸ் ஆப் இந்தியா..விகடன் குழுமம்....நக்கீரன் ...தினகரன் ....REDIFF என்ற இணையதளம் ....விஜயகாந்த்...பிரேமலதா விஜயகாந்த் ...இளங்கோவன்...ஸ்டாலின்....கருணாநிதி உட்பட பலர் மீது போடப்பட்டுள்ள நூற்றுக்கனக்கான அவதூரு வழக்குகள் வாபஸ் பெறப்படும்...

  • www.tamilxp.com - Chennai,இந்தியா

    அடுத்த முதல்வர்...சகாயம்

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    இதை செய்தது தனியார் நிறுவனம். இதை கட்சியே ஏற்ப்பாடு செய்து இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது

  • Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ

    முதல்வராகனுமுன்னா அதுக்கு முன்னாடி ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கணுமே

  • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

    அடிமைகள் அரண்டு போய் உள்ளனர்....2014 நவம்பரில் வெளி வந்த கருத்து கணிப்பின்படி அதிமுக 43% திமுக 26%......2015 ஆகஸ்ட் வெளி வந்த கருத்து கணிப்புப்படி அதிமுக 34.1% திமுக 32.6%......தற்போது வெளி வந்த கருத்து கணிப்புப்படி ....அதிமுக 33.1% திமுக 35.6%......அதாவது 2014ல் வெளி வந்த கருத்து கணிப்பை ஆஹா ஓஹோ என்று கருத்து எழுதிய அடிமைகள்...அதுவே 2015ல் அதிமுக திமுக ஏறக்குறைய ஒரே நிலையை அடைய கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என்று கொட்டி தீர்த்தனர்... 2015 கருத்து கணிப்பை செய்தியாக வெளியிட்ட தினமலரின் இந்த லின்க்கை பார்த்தால் அடிமைகளின் அலம்பல் தெரியும் ://www.dinamalar.com/news_detail.asp?id=13300352676252 இந்த கருத்து கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவாக வந்தால் அதற்காக நான் குதிப்பதும் இல்லை...எதிராக வந்தால் புலம்புவதும் இல்லை....உண்மை என்னவென்று நன்கு தெரியும்...தேர்தல் முடிவு தான் ...அடிமைகளின் கருத்துகளுக்கு முடிவு கட்டும்

  • நிலா - மதுரை,இந்தியா

    சென்னை லயோலா கல்லுாரி ஊடகத் துறையின் பேராசிரியராக இருந்த ராஜநாயகத்தின் வழிகாட்டுதலோடு, கருத்துக் கணிப்பு எடுத்ததாகக் கூறியுள்ளது நியூஸ் 7 சேனல். லயோலா கல்லூரி கணிப்பு எப்போதும் முரண்பாடாகத்தான் இருக்கும்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    முதல்ல நீங்க ஓட்டை வாங்குங்க, அப்புறம் யாரு முதல்வர்னு முடிவு பண்ணுங்க....மூன்றாவது இடத்துக்கு வருவதற்கு யார் முதல்வர் வேட்பாளரா இருந்தா என்ன?

  • SENTHIL - Coimbatore,இந்தியா

    நம்ப முடியாத, நம்பிக்கை இல்லாத கருத்து க(தி)ணிப்பு... திமுகவிற்கு 35 % செல்வாக்கு இருப்பது உண்மை எனில் தனித்து போட்டி இடலாமே... ஏன் அறிவாலயம் வாசலை திறந்து வைத்து விட்டு வழி மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டும்... என்ன தான் பொய்யான கருத்து கணிப்பாக இருந்தாலும் அதிமுகவிற்கு 33 % செல்வாக்கு என்று அவர்களே ஒப்பு கொண்டார்கள்... இன்றைய நிலையில் அதிமுகவின் செல்வாக்கு 38 % யை விட சற்று அதிகம்...

  • Nakkeeran - Ipoh,மலேஷியா

    நான் அழகப்பா கல்லூரி பழைய மாணவன் நான் எடுத்த கருத்து கணிப்பு. அ தி மு க-210, மக்கள் நல கூட்டணி- 20 ப ம க -4 தி மு க-0

  • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

    இந்த கருத்து கணிப்பு ரெம்ப முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்டது போல தெரியுதே........ நான் ஒரு பொது வாக்காளர். இன்னும் யாருக்கு ஓட்டு என்று முடிவு செய்யவில்லை, அணி சேரட்டும் ,எதை வைத்து நம்மிடம் வருகிறார்கள் என்று பார்ப்போம். பின்பு முடிவு எடுப்போம் என்று காத்துக்கொண்டு இருக்கும் போது. இந்தம்மா மீது எந்தவிதமான அதிர்ப்தியும் கிடையாதே. கலைஞர் ஒன்றும் மக்களுக்காக எதையும் கழற்றி வைத்துவிட வில்லையே?? அப்புறம் எப்படி வருவாரு? 2 G , ஈழத்தமிழர் படுகொலை, இவருடைய உண்ணாநோன்பு எல்லாம் அப்படியே மனத்திரையில் ஓடுகிறதே ? நீரா ராடியா ,ராஜாத்தியம்மா தொலைபேசி உரையாடல், அழகிரி போட்ட ஆட்டம், ராமஜயம் கொலை, போட்டு சுரேஷ் கொலை எல்லாம் வருசையா காட்சிக்கு வருதே...... எப்படிப்பா???????? தப்பு தப்பா கணக்கு போடுகிறீர்கள்.........மறுபடி ஒன்று நல்லமுறையில் எடுங்கள்.....

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    இதற்கு இங்கேயே அதுவும் வாசகர்களிடமே இந்த சாட்டயடி... அப்புறம் என்ன... கருத்தாவது கணிப்பாவது...திருட்டு ரயில் மாதிரி இதுவும் ஒரு திருட்டு கணிப்பு...சுருக்கமாக சொன்னால் சொந்த ஆசை....அவ்வளவுதான்... நிச்சயம் ஒளரங்கசிப் மற்றும் ஷாஜகானுக்கு டிபாசிட்டே டுமீல்... அடிடா மேளம்...போடுடா தாளம்..கச்சேரி இனிமே ஆரம்பம்...அம்மா, நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற....நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக...அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு... நல்ல தீர்ப்பை மக்கள் வழங்கும் நாள் வரும்போது....கட்டுமரம் வீல் வீல் என்று அழும் என்று தெரியும் அப்போது...

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    மக்கள் எல்லாம் இப்போ இவிங்களுக்கு மட்டும் தான் ஓட்டு போட்டு அரியணையில ஏத்த போற மாதிரி இவ்வளவு கனவு கான்றாங்களே...

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    ஆளாளுக்கு கருத்து கணிப்பு நடத்த கெளம்பிட்டாங்க.......தேர்தல் முடியற வரைக்கும் இந்த பிசினஸ் நல்லா போவும்...

  • A R J U N - ,இந்தியா

    ..ரெண்டுமில்லை கேப்டன் தான்..அமைதி..அமைதி...நீங்கதான் ரெண்டுபேரும்'அடித்ததை'..கண்கூடாக 'வருஷ" கணக்காக பார்த்தீர்கள்..சும்மா கொள்ளை இல்லை..சூப்பர்..சுருட்டு,பொன சுருட்டு,அடிவரண்டல்..இதெல்லாம் பார்த்து விட்டோம்..கேப்டன் ஒரு சான்ஸ் ?..

  • karthikeyan - singapore,சிங்கப்பூர்

    இது திருட்டு குடும்பத்தின் வேலை ( மக்களை நம்ப வைக்கலாம் என்று ஒரு நரி தந்திரம் ). என்ன மந்திரம் ,தந்திரம் போட்டாலும் 2ஜீ திருட்டு முன்னேற்ற கழகம் எதிர் கட்சியை கூட பிடிக்க முடியாது . மீண்டும் மரண அடி கிடைக்கும் .

  • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

    முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் ...பிறகு யோசிப்போம் சித்தப்பாவா மாமாவா என்று ... பாவம் தாங்கள் செய்த பாவங்கள் தங்கள் பிள்ளைகளை துரத்துகிறது. உங்கள் மேல் தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்பு உங்கள் கட்சியை ஜன்மத்துக்கும் தலை எடுக்க விடாது உமக்கும் உம்முடன் இருக்கும் பலருக்கும் DNA பரிசோதனை செய்தால் அசிங்கம் வெளியே வரும் . எடுப்பது ஒருஜன்மம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்ளகிறேன் ...உன் போன்ற ஜன்மம் யாரும் ஜனனம் எடுத்து விடக்கூடாது . இன்னும் நீவீர் 50 வருடங்கள் இந்த பூமியில் இருந்து பண்ணிய பாவங்களுக்கு அனுபவிக்க வேண்டும் . நீவீர் படும் அவஸ்தையை பார்த்து மற்றவர்கள் பாவம் பண்ணுவதை கண்டு அஞ்சவேண்டும் . நீவீர் தினமும் தின்று போடும் கழிவுகளை அள்ளும் செவிலியர் அதன் கோரதன்ன்மை கண்டு உன்மேல் வாந்தி எடுக்கவேண்டும் . இவையெல்லாம் நீவீர் பாவம் செய்திருந்தால் கட்டாயம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்ளகிறேன் . அவ்வாறு இல்லை எனில் இறைவனே என்னை மன்னித்து விடுங்கள்.

  • karunchilai - vallam,இந்தியா

    கெட்டிக்காரனின் புளுகு 8 நாட்கள் என்பார்கள். இவர்கள் சாயம் எட்டே நிமிடத்தில் வெளுத்துவிட்டது.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    என்னது சட்டசபை தேர்தல் முடிந்து தி.மு.க வெற்றியா? முதலவர் பதவிக்கு போட்டி ...???

  • sugumaran - chennai,இந்தியா

    தே.மு.தி.க யையும் மற்ற உதிரி கட்சிகளை திமுக பக்கம் இழுக்க, பேரம் முடிய இது ஒரு உத்தி அவ்வளவு தான்.சில மாதங்களுக்கு முன் கருணாநிதியை விட ஸ்டாலினுக்கே ஆதரவு அதிகம் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துத்திணிப்பு மூலம் ஒரு தகவலை வெளிப்படுத்தி திமுகவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.இது தேர்தல் நேரம் இது மாத்ரி பல கருத்துத்திணிப்பு வரும்.

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    கருத்துகணிப்பு எந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டது? 234 தொகுதிகளுக்கு 5176 பேரிடம் கருத்து பெற பட்டதெனில், ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர்? ஆண் பெண் விழுக்காடு என்ன? நீதி மன்றத்தில் வழக்கறிஞர் 'இந்த கேள்வி கேட்டால் இந்தபதில் வரும் என்றமுறையில்' கேள்விகள் கேட்கபட்டதுபோல் தெரிகிறது. அது கருத்து கணிப்பிலும் சரி, ஆராய்ச்சியிலும் தவிர்க்கப்பட வேண்டிய முறை.நாம் எந்த முடிவை விரும்பிகின்றோமோ அந்த முடிவு வர, உட்கார்ந்த இடத்திலேயே 'கருத்துக்கணிப்பு' செய்யமுடியும்.மனதிற்கு இனிமையாக இருக்கலாம், மக்களை திசை திருப்ப முயற்சித்தாலும், மக்கள் 'கருத்துகணிப்பு' என்ன என்று கண்டுகொண்டு விட்டார்கள்.அவர்கள் 'கணிப்பு' ஆணித்தரமானது.

  • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

    சேனல் 4 இயக்குனர் கெல்லம் மேக்ரே ஸ்டாலின் , கருணாநிதிக்கு வாழ்த்து சொன்னார் என கதைவிட்டு பிறகு கெல்லம் மேக்ரே தான் யாரையும் வாழ்த்தவில்லை என சொல்லி அசிங்கப்படுத்தினது நியாபகம் இருக்கா? காசு கொடுத்து ஆஸ்திரிய தபால் துரையின் ஸ்டாம்ப்பு அடித்து 'என் தமிழ் சேவையை பாராட்டி ஆஸ்திரிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது' என முரசொலியில் செய்தி வெளியிட்டுக்கொண்டது. போப் ஆண்டவரின் அலுவலக இணைய தளத்தில் (SEARCH FOR HOW TO GET PAPAL BLESSING ) உலகெங்கும் உள்ள யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரையும், பிறந்த தேதியையும் பதிவு செய்தால் பிறந்தநாள் அன்று வாட்டிக்கனிலிருந்து வாழ்த்து செய்தி வரும். அப்படி பதிவு செய்து பெற்ற வாழ்த்து செய்தியை "போப்பாண்டவர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து" என கலைஞர் டிவியில் , முகநூளில் செய்தி போட்டுக்கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் பல முன்னணி பத்திரிக்கைகள் பலவும் அதனை ஆய்வு செய்யாமல் வெளியிட்டனர்.. அதுவும் சரி தான். அவர்கள் அதனை 5 முறை முதல்வர் பதவியை அளகரித்தவரிடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் ...அண்ணாவுக்கு மோதிரம் வாங்கி கொடுத்து அதை மேடையில் அனைவர் முன்பும் அவரை விட்டு அணிய சொன்னதும் அந்த வகை தான். பின்னர் அண்ணா மரணத்துக்கு பிறகு திமுக MLA ஆதரவை பெற உதவியது அல்லவா ??, ஹார்லிக்ஸ் திருட்டும் அந்த ராகமே .. இந்த வரிசையில் கருணாநிதி கும்பல் தமிழகம் முழுக்க 5176 பேரிடம் கருத்துக்கணிப்பு (???) நடத்தி திமுகதான் வெல்லும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என சொல்லியிருக்கிறது. பொய்,பித்தலாட்ட அரசியல் திமுகவுக்கு 1967 முதலே வாடிக்கை தான் ... அதையே அவரின் கைத்தடி "டைமண்"டுவும் சாகித்தய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளரிடம் தானே எழுதிய உரையை கையெழுத்து வாங்கி அவர் மரணத்துக்கு பின் "தன்னை பாராட்டி" எழுதியதாக வெளியிட்டு அவரது விளம்பர ஆசைக்கு தீனி போட்டு கொண்டார் .. இதை தான் விஞ்ஞான திருட்டு என்பார்கள்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஓபிஎஸ்...

  • suresh - omaha,யூ.எஸ்.ஏ

    அப்பாடி, அடுத்த முதல்வர் பதவி தி மு க கட்சிக்குத்தானே? அது போதும்.

  • Ambika. K - bangalore,இந்தியா

    eppadiyellam solli samalikka vendi irukku ennum vadivelu kan mun thonrinaal adharkku thaanai poruppalla

  • Manian - Chennai,இந்தியா

    தம்பி, மகாபாரதத்திலே (கற்பனைன்னு சொ்லி்க்கிட்டே அதுல சொன்னபடி செய்யலாமே) நானு கண் இருந்தும் இல்லாத திருட்டுராஸ்டிரன், நீயீ துரியோதனன்னு நெனைச்சுகிடுவோம். அப்பால நீ சொல்லுறதை நானே சொன்ன மாதிரி சொல்லிப்போடுவம். ஒங்கண்ணன் துச்சாதனன்,கவிதாயினி துச்சலான்னு 5 வருசம் நீதான் மொதல் மந்தி .எப்பூடி நம்ம ஐடியா

  • கைப்புள்ள - nj,இந்தியா

    சுடலை பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் கேக்கிற மாறி என்னென்னமோ பண்ணி பாக்கிறாரு, பெரியவரு விட்டு கொடுக்கவே மாட்டேங்கிறாரு. சும்மாவே இருந்திட்டு சோறு திங்காம போன மாறி கதை சுடலயோடது.

  • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

    காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி சுவைக்க வேண்டியதுதான் இந்த திமுக. இதனை படிப்பவர்களுக்கு சிரிப்பு உறுதிதான்..தமிழகத்தில் அப்பனும் பிள்ளையாண்டானும்தான் தகுதி படைத்தவர்கள் போலும்..பிறரெல்லாம் சும்மா மாடு மேய்க்கத்தான் என்கிற அளவிலே இவர்களே இவர்களை பாராட்டி பெருமை பீத்திகொள்வது போலுள்ளது. இதற்கு பின்னர் திமுகவின் வீழ்ச்சி பல மடங்கு கீழறங்கி இருக்கும். சம்பந்தப்பட்டவரே மறுத்துவிட்டனர்..இப்படியே பொய் மேல் பொய்யை திரும்ப திரும்ப சொல்லிவந்தாலே மக்கள் மத்தியில் இவர்கள் மீது ஓஹோ என்கிற அளவில் நம்பிக்கை பிறக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள். ஆஸ்ட்ரேலியாவில் தன்னை பாராட்டி ஸ்டாம்ப் வெளியிட்டார்கள் என்று கருணாவை குளிரவைத்து மயக்கிய கூட்டத்தை போன்றே இந்த கருத்து திணிப்பு..லாவகமான கருத்துகேள்விகள்..யார் தகுதி மிக்கவர்கள் திமுகவில் என்று நல்லவேளை அஞ்சா நெஞ்சனை ஒப்பீடு செய்யவில்லை..அப்படி செய்திருந்தால்..தினகரனில் வேலை பார்த்த மூன்று இளைஞர்களை போட்டு தள்ளியதை போன்று கோபாலபுரத்தில் அதே போன்று நடந்திருக்கும்..விவரமாக அதனை தவிர்த்து விட்டனர்..போலி வாக்காளர்களை போன்று போலி கருத்து திணிப்பு..இதனை செய்தவர்ர்ர் பதவிக்காக பித்து பிடித்து அலையோ அலை என்று அலையும் ஸ்டாலினும் அவரது போலி மருந்து புகழ் மருமகனுமே காரணம். போலி மருந்து, மற்றும் காலாவதி மருந்துகளின் தேதிகளை திருத்தி மார்கெட்டிங் செய்த கூட்டத்திற்கு இதெல்லாம் சகஜமப்பா..கருணாவுக்கு தலையில் கிரீடம் ஏறி அலங்கரித்திருக்கும்..இன்றைக்கு தூக்கம் தொலைந்து போயிருக்கும்..நாளையே கோட்டையை நோக்கி வண்டியை விடசொல்லி நச்சரிப்பார்..பழைய சோற்றுக்கே வக்கில்லாத பிச்சைக்காரனுக்கு பிரியாணி..அதிலும் லெக் பீசொடு பிரியாணிக்கு ஆசைப்படுவது போல..கூட்டணிக்கே வக்கில்லாத திமுக ஆட்சியதிகாரத்திற்கு ஆசைப்படுகின்றது..காகிதத்தில் சர்க்கரை..சுவைத்து மகிழ்கின்றது திமுக..இதற்கு மீறி எதுவுமே நடந்துவிடப்போவதில்லை..கனா அவர்களின் பிறப்புரிமை..கோமாளிகள்..

  • Baskar - Paris,பிரான்ஸ்

    இந்த கணிப்பு தி.மு.கவின் சொந்தகநிப்பு.ஸ்டாலின் மருமகன் சொல்ல சொன்னதை அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள்.இதில் ஒன்றும் உண்மை இல்லை.இவர்கள் தேர்தல்வரை இப்படி எதாவது கொளுத்தி போட்டு கொண்டு இருப்பார்கள்.யாரும் நம்ப வேண்டாம்.

  • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

    அய்யய்யோ இப்படி மாட்டிகிட்டோமே இன்னும் கொஞ்சம் பணத்த ஆள்ளிவீசி புதியதலைமுறையை விட்டு ஒரு கருத்து திணிப்பு வெளியிட்டுருந்தால் மக்கள் நம்புவார்கள் இப்படிதான் சபரீசன் புலம்புறாராம் அதுலயும் நேக்கா சென்றமுறை ஸ்டாலினை முதலில் வைத்ததால் கருணாநிதிக்கு கோபம் வந்தது என்று அதை சரிகட்ட இப்போ கருணாநிதியை நம்பர் 1 ஸ்டாலினை நம்பர் 2 என்று வைத்து கருத்து திணிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள் இத படிக்கும் பொழுது "மதுரையில் ஒரு கிழவி மறுபடியும் திரண்டு இருக்கா" என்ற கேலி வழக்கு மொழிதான் நினைவுக்கு வருகிறது

  • Panchu Mani - chennai,இந்தியா

    கருத்து கணிப்பு நடத்த பீஸ் ஒரு தேங்காய் மூடி, 1 செட் வெத்தலை பாக்கு, 2 வாழை பழம் வாங்கிருப்பாங்களா

  • Panchu Mani - chennai,இந்தியா

    போட்டோவை பாத்தாலே இந்த கருத்து திணிப்பை யாரு எழுதினாங்க...யாரு சொல்லி கொடுத்தாங்க ன்னு தெரியுமே.

  • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

    திமுக கார்பரேஷன் மூலம் பணத்தை கொடுத்து வெளியிட்ட பொய்யான கணிப்பு இது அதிமுக மேல் அதிருப்தி இருந்தாலும் அதிமுகவிற்கு மற்று என்று திமுகவை மக்கள் நினைக்கவில்லை திமுக விற்கு ஓட்டுபோடுவது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் ஆகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தேமுதிகவை வளைக்கவும், மக்களை திசைதிருப்ப திமுக தொடர்ந்து பொய்யான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருவது மக்கள் அறிந்த ரகசியமே

  • karunchilai - vallam,இந்தியா

    ஸ்டாலினின் மருமகன் 'நிழல்' முதல்வரா என ஏன் கேட்கவில்லை?

  • karunchilai - vallam,இந்தியா

    முக குடும்பத்திற்கு எவ்வளவு அமைச்சர் பதவிகள் என ஏன் கேட்கவில்லை?

  • karunchilai - vallam,இந்தியா

    கருத்துக் கணிப்பில் திமுக ஆட்ச்க்கு வந்தால் இணை முதல்வர்,துணை இணை முதல்வர் யார் யார் எனக் கேட்கவில்லையா?

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    இந்த கருத்து கணிப்ப பாத்தோன அ தி மு க அரசு ராஜினாமா செஞ்சுருக்கவேனாமா ? என்ன அரசு இது ?

  • karunchilai - vallam,இந்தியா

    எவர் வழிக் காட்டுதலோடு நடந்ததாக் கூறப்படுகிறதோ அவரும், எந்த களிவிருவனத்தின் மூலமாக நடந்ததாக் கூறப்படுகிறதோ அவரும் மறுத்துவிட்டார்கள். பத்த்ரிகை சங்கத்தில் வெளியிட்டபோது குழுமி இருந்தவைகள் திமுகவினர் - பெரும்பாலோர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். ஆகவே இதை cooked-up என சொல்லலாம்.

  • karunchilai - vallam,இந்தியா

    பெரும்பாலான கருத்து கணிப்புக்கள் அதனை ஏற்பாடு செய்பவர்களின் நிலைபாடு, விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகள் சரி செய்யப்படுகின்றன. நம்பத்தன்மை பெரும் கேள்விக் குறி.

  • karunchilai - vallam,இந்தியா

    கணிப்பல்ல கருத்துத் திணிப்பு.

  • jagan - Chennai,இந்தியா

    இசுடாலின் அல்லகைகள் கருத்து திணிப்பே இவ்ளோ தானா?...சுத்தம்...3ஆம் அணி வரும் , மீண்டும் ஜெயா தான் (சுப்ரீம் கோர்ட் செய்வதை பொருத்து) ...2001இல் தீ முகவும், மூக்கனாரும் சேர்ந்து எதோ ஜெயித்துவிட்ட மாதிரி கனவில் இருந்தபோது, இதே சு. சாமி தான் எல்லா உதிரி கட்சிகளையும் (மதிமுக , பாமக) அதிமுகவுடன் சேர்த்து ஜெயாவை கொண்டு வந்தார், இப்பவவும் அவர் கால்குலேஷன் படி தான் நடக்கும்....

  • Ootai Vaayan - Kovai,இந்தியா

    ஓரங்கசிப் தன் தந்தையை சிறையில் அடைத்து தான் ஆட்சியில் அமர்ந்தமாதிரி ஏதேனும் ஒரு சரித்திர நிகழ்வு நடந்தால் தான் உண்டு..

  • கைப்புள்ள - nj,இந்தியா

    பெரிய தானை இருக்கிறவரைக்கும் அவருதான் முதல்வர். இதுல என்ன சந்தேகம் இருக்கு. சின்ன தானைக்கு முதல்வர் வேட்ப்பாளர்ன்னு சொல்லிக்கணும்ன்னு ஆசை இருந்தா ஒரு ரெண்டு மாசம் தேர்தல் முடிகிற வரைக்கும் எதாச்சும் ஒரு லெட்டர் பேட் கட்சில ஜாயின் பண்ண சொல்லுங்க.

  • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

    கேள்வியே அடுத்த முதல்வர் கருணாநிதியா , ஸ்டாலினா என்று உடன்பிறப்புகளுக்கு நிரப்ப சொல்லி இருக்கிறார்கள் .. அதில் பாருங்கள் சில திமுகவினர் (33%) அதிமுகவுக்கு வாக்கு அளித்து உள்ளனர் ... அவர்களை கண்டு பிடித்து தக்க தண்டனையை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன் யுவர் ஆனர்..

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இப்படியெல்லாம் கருத்து கணிப்ப போட்டுதான் ஒரு மூணு பேரை கொளுத்தி விட்டாங்களே, நியாபகம் இல்லியா? பதவின்னு வரப்போ தானையோட வீட்ல ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்லப்பா. போட்டு கொளுத்து கொளுத்துன்னு கொளுத்தி விட்டுடுவாங்க. பாத்து சூதானமா இருந்துக்கோங்க.

  • raja - dharmapuri,இந்தியா

    ஸ்டாலினுக்கு தந்தை மீது என்ன கோபம் இருந்தாலும், தந்தைக்கு ஆற்றும் உதவியாக, அவர் இந்த தேர்தலில் போட்டி இடுவதை கின்னஸ் புததகத்தாற்கு வின்னபிக்குமாறு கேட்டுகொள்கிறேன், உலகிலேய 94 வயதில் ஒரு மாநில முதல் அமைச்சர் பதவிக்கும் போட்டியிடுபவர் என்கிற பெருமை உங்கள் தந்தைக்கு மட்டுமே சேரும், கண்டிப்பாக செய்யவும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    மூணு நாளுக்கு முன்னாடி கொடி கம்பம் நட்டின ஆள் கூட நான் முதல்வர் வேட்ப்பாளர்ன்னு சொல்லிட்டு கெத்தா வரான். ஹிஹிஹிஹி அறுபத்தேழு வருடமா கட்சி பணி ஆற்றிகிட்டே இருக்காரு ஆனா இது நாள் வரைக்கும் சும்மா மருந்துக்கு கூட முதல்வர் வேட்பாளர் நாந்தான்னு தப்பி தவறி கூட சொல்ல முடில சின்னதானையால. இலவு காத்த கிளி கேள்வி பட்டு இருக்கேன். இது 1000 இலவு காத்த கிளியா இருக்கு.... ஹையோ ஹையோ...

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    ஒரு வேலை அழகிரி இந்த சதியின் பின்னால் இருப்பாரோ? கருணாநிதிக்கு, ஸ்டாலினுக்கும் இடையே சண்டை மூட்டி விட இந்த ஏற்பாடா?

  • Dynamo - Den Haag,நெதர்லாந்து

    அப்போ 71+70 = 141% பேர் திமுக தான் வரும் என்கிறார்களா? இது "குமாரசாமி" கணக்கு...

  • Sivakumar - chennai,இந்தியா

    எல்லாம் அந்த டுபாகூர் திருட்டு முன்னற்ற கழகம் ஏற்ப்பாடு...திமுக அழிவது உறுதி ........முட்டல்பசங்க ...........

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    இதில் 100 சதவிகிதம் சுடலையின் பின்னணி உள்ளது. சுடலையன் சொல்லி தான் இந்த கருத்து திணிப்பே. இந்த கருத்து திணிப்பை பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது. அதிமுகவை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் திமுகவையும் சேர்த்து தான் எதிர்க்கிறார்கள். மழை வெள்ள கோபம் திமுக மீதும் தான் உள்ளது என்பது தான் உண்மை. மழை வெள்ளபாதிப்பால் மக்கள் நமக்கு தான் ஒட்டு போடுவாங்க என்று சுடலையும் கட்டுமரமும் நினைத்தால் அவர்களின் அறியாமை தான் அது காட்டுகிறது.

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    இந்த கருத்து கணிப்பை கருணாவே நம்ப மாட்டார். அதாவது 2011 ல் அணைத்து கருத்து கணிப்புகளும் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்று கூறின. headlines today பத்திரிக்கை neck டு neck fight என்று கூறின ஆனால் கடைசியில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் திமுக 15 தொகுதிகளும், அதிமுக 25 தொகுதிகளும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டார்கள் ஆனால் கடைசியில் என்ன ஆச்சு? திமுக வாத்து முட்டை வாங்கியது. மேலும் திமுக ஒரு 5 தொகுதிகள் கிடைத்திருந்தாலும் கவுரவமாக இருந்திருக்கும் ஆனால் மிக பெரிய முட்டை வாங்கியது. இதில் நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு தொகுதியில் கூட ஒரு சுற்றில் கூட திமுக லீடிங் இல்லை. லெட்டெர் பேட் கட்சி பாமக வே தருமபுரியில் வெற்றி பெற்றது, தமிழ்நாட்டில் லென்ஸ் வைத்து தேடினாலும் கிடைக்காத பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது, ஆனால் மிக பெரிய கட்சி, ஆறு முறை வென்று ஆட்சி அமைத்த கட்சி, பாராளுமன்ற தேர்தலில் 40/40 பெற்ற கட்சி, முட்டை வாங்கியது. அப்படி இருக்கையில் எப்படி திமுக 2016 ல் வெற்றி பெரும்? எனக்கு தெரிந்து இந்த கருத்து கணிப்பு எல்லாம் திமுக சொல்லி எடுக்கப்பட்ட கணிப்புகள். ஏன் தெரியுமா சொல்றேன், கூட்டணிக்கு யார் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்கிறார்கள், கூவி கூவி அழைத்தாலும் யாரும் சீண்ட மாட்டேன் என்கிறார்கள், அதனால் இப்படி ஒரு கருத்து கணிப்பு போட்டால் செங்கண்ணன் முதல் டவுசர் வரை கூட்டணிக்கு வருவார்கள் என்று தான் இந்த திணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹஹஹ திமுக வெற்றி பெறுமாம், கேட்கவே சிரிப்பு வரல? எல்லா ஊடகங்களில் திமுகவை கழுவி கழுவி ஊத்துகிரார்கள், இதுல திமுக தான் முன்னணி யாம். நக்கீரன் பத்திரிக்கையில் கூட இது போல தான் கருத்து கணிப்பை வெளியிடுவார்கள். 2011ல் வாக்கு எண்ணிக்கை நாளில் விவாத மேடையில் நக்கீரன் கோபால், எங்கள் கருத்து கணிப்பு பொய்க்காது, நிச்சயம் இன்று திமுக கூட்டணி தான் ஜெயிக்கும் என்றார், அவ்வாறு கூறிய அரை மணி நேரத்தில் அதிமுக கூட்டணி முன்னிலை என்று செய்தி வந்ததுமே ஆள் மறைந்துவிட்டார். பார்க்கவே காமடியாக இருந்தது. இந்த கருத்து கணிப்பு என்பது கூட்டணிக்கு ஆள் பிடிக்கவே வெளியிடப்பட்ட எடுக்காத கணிப்பை எடுத்ததாக திணித்துள்ளனர். திமுக வுக்கு 71 சதவிகிதமா? இதை கரு‌ணாவே நம்ப மாட்டார். இந்த online கருத்து கணிப்பை பாருங்கள். அதில் அதிமுக 34.73 சதவிகிதமும், திமுக 23.5 சதவிகிதமும், பாஜக 25.3 சதவிகிதமும் பெற்றுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement