Advertisement

எழுத்தால் மாற்றம் தந்த எளியவர்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட நாஞ்சில் நாட்டை, தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தமிழர்கள் ஒன்றுதிரண்டு போராடிக் கொண்டிருந்த நேரம்.
'ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, போராடுபவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் உருவாக்கப்பட்டது தினமலர் நாளிதழ்.
திருவனந்தபுரத்தில், 1951 செப்.,6ல் டி.வி.ராமசுப்பையரால் உருவானது, கூர் தீட்டிய போர்வாள் - தினமலர். மலையாள நாட்டில், ஒரு தமிழ் நாளிதழை துவக்க, நெஞ்சில் உரமும், நிலைத்த லட்சிய பிடிப்பும் இருக்க வேண்டும். அது அவரிடம் இருந்தது. இந்த இரண்டோடு, டி.வி.ஆருக்கு தமிழ்ப்பற்றும் இருந்தது.
அன்றைய நாஞ்சில் நாட்டில் தழுவிய மகாதேவர் கிராமத்தில், ராமலிங்க ஐயர் - பகவதி தம்பதிக்கு 1908 அக்.,2ல் பிறந்தவர் டி.வி.ஆர்., அழகு, சுறு
சுறுப்பு, புத்திசாலித்தனம், உதவும் மனப்பான்மை என எல்லாம் அமையப்பெற்ற டி.வி.ஆர்., வேங்கடபதி - ஆவுடையம்மாள் தம்பதி வேண்டி, விரும்பி நாடியதின் காரணமாக அவர்களின் சுவீகார மகனாகும் நிலையை பெற்றார். பின், 11 வயதில் கிருஷ்ணம்மாள் அம்மையாரை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
மக்கள் நலனே முக்கியம் எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர் பாகுபாடு இல்லாது அனைவரிடமும் பழகுவார். சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்.
தினமலர் நாளிதழ் ஆரம்பித்த பின், அதன் வாயிலாக மக்கள் நலத்திட்டங்களுக்காக போராடினார். குறிப்பாக, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயில் பாதையின் அவசியத்தை தொடர்ந்து
எழுதினார். ரயில் பாதை அமைப்பு தலைவர் பொறுப்பையும் வகித்தார். அவரது போராட்டத்தால் ரயில் பாதை சாத்தியமானது.திருவாங்கூர் சமஸ்தானத்தில் கட்டாய கல்வித்திட்டம் அமலான போது, கல்வி இயக்குனர் ஏ.என். தம்பியுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கல்வியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்கூறினார். அரசுப்பள்ளிகளை துவக்கவும் உதவினார். ஆதிதிராவிடர் மக்களை கரையேற்றும் தொண்டுப்பணியில் தொய்வில்லாது ஈடுபட்டதால், கிராம கமிட்டித் தலைவர் பொறுப்பு தேடி வந்தது. பணியகரம் என்ற நிலவரியால், விவசாயிகள் வரிகட்ட முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் மாநாட்டை கூட்டி, தேவையான தீர்மானங்களை நிறைவேற்றி,
விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.'நாஞ்சில் நாடு' கன்னியாகுமரி மாவட்டமாகி, தமிழகத்துடன் சேரும் விழா டி.வி.ஆர்., தலைமையில் நடந்தது. இது அவரது போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில்நாடு தமிழ்ப்பகுதியாகி விட்ட நிலையில், மலையாளம் பேசும் மண்ணில் தமிழ் நாளிதழை வைத்துக்கொண்டு,
தமிழுக்காக, தமிழகத்திற்காக உழைப்பது சரியான செயல் அல்ல என்று முடிவுக்கு வந்தார். இதனால் 1957 ஏப்.,15ல் நெல்லையை மையம் கொண்டது தினமலர். தமிழ் எழுத்தாளர் மாநாடு இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானும் கெடும்என்ற குறளுக்கு ஏற்ப, இடித்துரைத்து திருத்த வேண்டிய விஷயம் பல இருக்கிறது என டி.வி.ஆர்., கருதினார். குறிப்பாக, நாஞ்சில் நாட்டு மக்களை சொல்லலாம். மலையாள வாசனையுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களை, தமிழ் பாரம்பரியத்துக்கு அழைத்து வரவேண்டும்.

சமஸ்தான பற்றுடன் தமிழ்ப் பத்திரிகைகள் சில எழுதிக்கொண்டிருந்த அக்கால கட்டத்தில், அவற்றின் எழுத்தின் போக்கை தாய்த்தமிழை நோக்கி திருப்ப வேண்டும். இப்படி
எத்தனையோ பணிகள் டி.வி.ஆருக்கு இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை நேரில் அழைத்து வந்து, குமரிப்பகுதியை கூர்ந்து நோக்குமாறு செய்தால் என்ன
என்ற சிந்தனை டி.வி.ஆருக்கு ஏற்பட, அதுவரை சென்னையில் நடந்து வந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டை குமரிக்கு கொண்டு வந்தார். தமிழ் எழுத்தாளர்களின் 6வது மாநில மாநாட்டை, 1958 மே 31, ஜூன் 1ல், குமரி மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி காட்டினார்.
முயற்சிக்கு பெருமை நெல்லையில் சித்த மருத்துவக்கல்லுாரி அமைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து எழுதினார். அதன் பலனாக, அக்கல்லுாரி அமைந்து அவரின் பெருமையை இன்றும் பறைசாற்றி கொண்டிருக்கிறது.


'கோமா' நிலைக்கு சென்று கொண்டிருந்த துாத்துக்குடி துறைமுகம் குறித்து, மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து எழுத, அந்த துறைமுகம் விஸ்வரூபமாக வளர்ச்சி அடைந்து, இன்று அவரது முயற்சிக்கு பெருமை சேர்க்கிறது. திண்டுக்கல், கோவில்பட்டி குடிநீர் திட்டங்கள் பற்றி எழுதி சாதித்தார்.
மாவட்டங்கள் மிகப்பெரியதாக இருப்பதால், நிர்வாகம் செய்வதில் சிரமமாக இருக்கும் என அரசின் சுமையை சுட்டிக்காட்டினார். இதன் பலனாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
இப்படி எழுத்தால் சமூக மாற்றங்களை கொண்டு வந்த எளிய மனிதர் இவர்.போராடும் குணம் ஒருசமயம், நெல்லையில் மாணவர்கள் போராட்டத்தின்போது, போலீஸ் அடிக்கு பயந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் மாணவர் ஒருவர் குதித்தார். இதை
படங்களுடன் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட, போராட்டத்தின் வீரியத்தை மக்கள் உணர்ந்து விழித்தெழுந்தனர். போலீசாருக்கு எதிராக போராடினர்.
இதனால் ஆத்திரமுற்ற போலீசார் ஒன்றுகூடி, தினமலர் அலுவலகம் நோக்கி வந்தனர். அலுவலக ஊழியர்கள் இடையே அச்சம் பரவ, 'நீங்கள் எல்லோரும் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று
விடுங்கள்' என டி.வி.ஆர்., பணித்தார். பின், தனி மனிதராக, போலீசாரை எதிர்நோக்கி அஞ்சா நெஞ்சுரத்துடன் அலுவலகத்தில் நிற்க, போலீசார் பின்வாங்கினர்.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட, தினமலருக்கு வந்த மிரட்டல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்படி எத்தனையோ மிரட்டல்களை அவர் சந்தித்தார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நாட்டு நலனே முக்கியம் என்று எழுதியதால் தான், இன்று தினமலர் 'மக்களின் நாளிதழாக' இருக்கிறது.
அன்று டி.வி.ஆரால் கூர்தீட்டப்பட்ட போர்வாளான தினமலர் இன்றும், அதே கூர்மையுடன் மக்கள் நலனுக்காக, உயிர்துடிப்புடன் வெற்றிக்கொடி நாட்டி வருவது காலசரித்திரம்! தினமலர் வாசகர் என்பதில் நமக்கு பெருமை. உண்மையின் உரைகல்லாக தொடரட்டும் தினமலர்
நாளிதழின் மக்கள் பணி.- இரா. கல்யாணசுந்தரம்,எழுத்தாளர், மதுரை.93452 22470
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement