Advertisement

இனிமேல் இனியா இப்படித்தான்...

விண்மீன்களை விழுங்கிய விழிகள், கருமேகங்கள் எழுதிய கூந்தல் கவிதைகள், மல்லிகை மொட்டுக்களும் பொறாமைப்படும் வெண்ணிற புன்னகை, கேரளக் கரையில் மாடலிங் துறையில் மின்னிய பருவ நட்சத்திரம், மிஸ் திருவனந்தபுரம் விருது பெற்ற பிக்காசோ சித்திரம். தமிழ், மலையாள, கன்னட சினிமாக்களில் வெற்றி 'வாகை சூடி'ய வளம் வரும் மங்கை, நிலாவின் தங்கை இனியா தினமலர் வாசகர்களுக்காக பேசிய இனிப்பான தகவல்கள் இனி வருவது...
* வாகை சூடவா வாய்ப்பு எப்படி?
கேரளாவில் மாடலிங் செய்து கொண்டிருந்த போது தான் அழைப்பு வந்தது. வேறு ஒரு பாடல் சூட்டிங்கிற்கு சென்னை வந்த போது 'வாகை சூடவா' ஹீரோயின் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு ஆனேன். இப்படத்திற்கு தேர்வான ஜனவரி 22 என் பிறந்தநாள் இதை என்னால் மறக்கவே முடியாது. டைரக்டர் சற்குணம் மற்றும் துணை இயக்குநர்கள் நன்றாக உற்சாகமூட்டினர்.
* பாரதிராஜாவின் 'அன்னக் கொடி' படத்தில் ஏன் நடிக்கவில்லை?
முதலில் டைரக்டர் அமீர் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பின், அவர் நடிக்கவில்லை. அதனால் கதையில் மாற்றம் செய்தனர். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைந்ததாக உணர்ந்தேன். அதனால் தான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. மறுபடியும் நாம் ஒரு படம் பண்ணலாம் என பாரதிராஜா கூறியுள்ளார்.
* தங்கர்பச்சனின் 'அம்மாவின் கைப்பேசி' அனுபவம்?
'எக்ஸ்பிரஷன்' நன்றாக கொடுத்தால் போதும் எதுவும் சொல்ல மாட்டார். இல்லை என்றால் திட்டுவார். ஆனால், நான் ஒரு திட்டு கூட வாங்க வில்லை... அவர் கூறியது போல நடித்தேன்.
* எந்த ஹீரோயின் மாதிரி நடிக்கனும்னு ஆசை?
அருந்ததி படத்துல நடிச்ச அனுஷ்கா மாதிரி ஒரு படமாவது நடிக்கனும்.
* திடீர்னு ஒரு பாட்டுக்கு 'டான்ஸ்' ஆட வந்துட்டீங்களே?
ஏன் ஆடக்கூடாதா? 'பாலிவுட்'ல அதிக படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா 'சிங்கிள் சாங்' ஆடிட்டு தான் இருக்காங்க. எனக்கு அவங்க தான் 'இன்ஸ்பிரேஷன்'. 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்துல நடித்த விமல், 'குக்குரு குக்குரு' பாடல் பாடின லட்சுமி மேனன் நல்ல பிரண்ட்ஸ் அதனால் ஆடினேன். நான் 'இமேஜ்' பார்க்கமாட்டேன். இதெல்லாம் ஒரு 'கலர்புல் பெர்பாமன்ஸ்'ங்க.
* நீங்க எப்போது சொந்த குரலில் பாடப்போறீங்க?
குரலுக்கு ஏற்ற பாடல் கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன்.
* உங்க நடிப்பிற்கு விருது கிடைத்துள்ளதா?
'நாகபந்தம்' படத்தில் நடித்ததற்கு கேரளா மாநில விருது கிடைத்தது.
* அடுத்து என்ன படம்?
நான்கு மொழிகளில் தயாராகும் 'கரையோரம்', பின் 'ரோசாப்பூ காலம்', 'கேர்ள்ஸ்' மலையாளப் படங்களில் நடிக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கு படமும் நடிக்கும் திட்டமும் உள்ளது.
* வழக்கமான கேரக்டர்களில் தான் நடிப்பீர்களா?
இல்லை இனிமேல் இனியாவை வித்தியாசமான 'கெட்டப்'புகளில் பார்க்கலாம். 'வெயிட் அண்ட் சீ'
* மதுரையை பற்றி கூறுங்களேன்?
'வாகை சூடவா' படம் முழுக்க மதுரையை சுற்றி எடுத்தார்கள். அழகான ஊர். ஆனா, என்ன
கறிதோசை தான் சாப்பிட முடியாமல் போய்விட்டது.
* உங்கள் நடிப்பை பார்த்து பாராட்டிய பிரபலங்கள்...
'வாகை சூடவா' பார்த்துவிட்டு 'நீ அம்பிகா, ராதா மாதிரி வருவே'ன்னு பாரதிராஜா பாராட்டினார்.
அப்புறம், இயக்குனர் பார்த்திபன், சாருஹாசன், ரோகிணி இன்னும் நிறைய பேர் வாழ்த்தினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement