Advertisement

ஓசூர் -அத்திப்பள்ளி பஸ்களில் சில்லரைகொள்ளையால் பயணிகள் கடும் அவதி

ஓசூர்:ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி செல்லும், சில அரசு டவுன் பஸ்களில், பயணிகளுக்கு வழங்க வேண்டிய சில்லரைகளை, கண்டக்டர்கள் திரும்ப வழங்காததால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ஓசூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கும், அங்கிருந்து ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கும், தமிழக அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஓசூர் வழியாக செல்லும் புறநகர் பஸ்களும், அத்திப்பள்ளியில் நின்று, பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றன.ஓசூரில் இருந்து அத்திப்பள்ளிக்கு, அரசு டவுன் பஸ்களில், எட்டு ரூபாயும், புறநகர் பஸ்களில், 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள், தினமும் காலை, மாலை வேளைகளில், அரசு டவுன் பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர்.
அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள், 10 ரூபாய் கொடுத்து பயணச் சீட்டு வாங்குகின்றனர். இதில் மீதமுள்ள, இரண்டு ரூபாயை கேட்கும்போது, "நீங்கள் சில்லரை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இறங்கும்போது சில்லரையை வாங்கிக் கொள்ளுங்கள்' என, பயணிகளிடம், கண்டக்டர்கள் சிலர் கூறிவிடுகின்றனர். ஆனால், இறங்கும் போதும், சில்லரை கொடுப்பதில்லை.
இதுபற்றி கேட்டால், தகாத வார்த்தையால் திட்டுகின்றனர் என்பது பயணிகளின் பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதை கேள்விப்படும், ஓசூர் போக்குவரத்து டிப்போ அதிகாரிகளும், கண்டக்டர்களை கண்டிக்க தவறி விடுவதால், அவர்களுக்கு, இது சாதகமாக மாறி விடுகிறது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அத்திப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், தினமும், பல ஆயிரம் பயணிகள், அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது, ஒரு பயணிக்கு, இரண்டு ரூபாய் வீதம், பல ஆயிரம் பயணிகளுக்கு சில்லரை வழங்கப்படாததால், தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை, கண்டக்டர்கள் சுருட்டி விடுகின்றனர். இதை தடுக்க, அரசு போக்குவரத்து அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement