Advertisement

நான் மதுரைக்கார பொண்ணு : சொல்கிறார் 'அட்டக்கத்தி' நந்திதா

கன்னட திரையிலிருந்து தமிழ் திரைக்கு அழகான 'அட்டக்கத்தி'யாய் அறிமுகமாகி, 'எதிர்நீச்சல்' அடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். 'அய்யோ குமுதா அள்ளுது போ' என, 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் குறும்புத்தனமான நடிப்பில் அசத்தியவர். 'முண்டாசு பட்டி'யில் முத்திரை பதித்து, 'இடம் பொருள் ஏவல்' படத்தில் மலைகளின் இளவரசியாய் கொடைக்கானலை கொள்ளை கொண்ட அழகான புயல் நந்திதா. அவர் அளித்த பளீச் பேட்டி இதோ...
* புதுமுக ஹீரோயின்களின் மாரத்தானில் நீங்கள் முதல் இடம் பிடிப்பீர்களா ?
மற்ற ஹீரோயின்களுடன் போட்டியிடும் எண்ணம் இல்லை. நான் என்னோட நடிப்புல மட்டும் கவனம் செலுத்துறேன். இந்த மாரத்தான்ல யாருக்கு முதலிடம் கொடுக்கணும்னு ரசிகர்கள் தான் சொல்லணும்.
* உங்கள் பார்வையில் கிளாமர்
கிளாமர் சினிமாவுல மட்டும் இல்லேங்க, இன்னிக்கு ஒரு காலேஜ் கேர்ள் கூட கிளமரா தான் டிரஸ் பண்ணிக்குது. மரியான், கயல் மாதிரி கிளாமர் இல்லாத படங்களும் ஹிட் ஆகியிருக்கே. இப்போ வர தமிழ் சினிமாக்கள் கிளாமர பிரேக் பண்ணிருச்சுனு தான் சொல்வேன். நந்திதா இந்த கேரக்டர் தான் பண்ணும்னு ஒரு இமேஜ் ரசிகர்களுக்கு இருக்கும். ஆனா நானும் மாடர்ன் கேரக்டர்களில் நடிச்சுட்டு தான் இருக்கேன்.
* உங்கள் கனவு கேரக்டர் எது ?
அப்படி எதுவும் இல்லை, டைரக்டர் முடிவு செய்யும் கேரக்டரல தான் நான் நடிக்கிறேன். நமக்கு கனவு இருந்து அது நடக்காம போயிட்டா பீல் பண்ணுவோம். நன்றாக நடிச்சாலே போதும் நல்ல நடிகைன்னு பேர் வாங்கலாம்.
* டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்கீர்களே...
ஏன் தெலுங்கு படங்களில் இரண்டு மூணு ஹீரோயின்கள் இருக்காங்களே. எத்தனை ஹீரோயின் நடிக்குறாங்கனு நான் பார்க்கிறது இல்லை என் கேரக்டர் என்னன்னு தான் பார்ப்பேன்.
* சினிமா சென்டிமென்ட், கடவுள் நம்பிக்கை இருக்கா ?
கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பேன். முண்டாசுபட்டி ஹிட் ஆகணும்னு சாமிக்கிட்ட வேண்டிகிட்டேன். அதே மாதிரி படம் ஹிட் ஆனது.
* அழகின் ரகிசயம்
அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நான் நடிக்குற கேரக்டர் அழகா இருந்தா போதும். மத்தபடி அழகுக்காக நான் எதுவும் செய்றதில்லை. சந்தோஷமா இருந்தாலே அழகு தானா வரும்.
* இதுவரை நடித்ததில் சவாலான கேரக்டர்
டைரக்டர் சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்துல கொடைக்கானல் மலைஜாதி பொண்ணா நடிச்சிருக்கேன். டார்க் மேக்கப், வித்தியாசமான டயலாக்ஸ் என, எல்லாமே புதுசா இருக்கும்.
* மதுரை பிடிக்குமா ?
இது என்ன கேள்வி? மதுரையை பற்றி நிறைய சொல்லலாம். மதுரையில தான் நான் நல்லா தமிழ் பேச கத்துகிட்டேன்.நானும் மதுரைக்கார பொண்ணுதாங்க. எனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறதும் இங்க தான்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement