Advertisement

காந்தாரி மிளகாய் விலையில் 'காரம்'மருத்துவ குணம் உள்ளதால் கிராக்கி

பந்தலுார்:பந்தலுாரில் விளையும் காந்தாரி மிளகாய்க்கு, கேரள மாநிலத்தில் கிராக்கி இருப்பதால், விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழில், 'சீனி' எனவும், மலையாளத்தில், 'காந்தாரி' எனவும் அழைக்கப்படும் மிளகாய், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், காரத்தில் சிறப்பானது. பச்சை, நீலம், ஊதா நிறங்களில் காணப்படும் இந்த மிளகாய், பழுத்தால் சிகப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. நீலகிரி மாவட்டம், பந்தலுார், கூடலுார் பகுதிகளில், இந்த மிளகாய் குறைந்தளவில் விளைவிக்கப்படுகிறது.

இதில், புரோட்டின், கொழுப்பு, இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துகள் அதிகளவில் உள்ளன. இந்த மிளகாய்க்கு, கேரளாவில் கிராக்கி உள்ளது. ரத்தக்கொதிப்பு, வாதம், மூட்டுவலி, காசநோய், சளி போன்றவற்றை, கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ள காந்தாரி மிளகாய், ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.பந்தலுார் பகுதியில், தற்போது கிலோ ஒன்றுக்கு, 150 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கேரளாவில், 490 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுவதால், நீலகிரி விவசாயிகள், இதை கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement