Advertisement

கோமுகி அணை பூங்காவில் புத்துயிர் பெறும் சிலைகள்

கச்சிராயபாளையம்: கோமுகி அணை பூங்காவில் உள்ள சிலைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கல்வராயன் மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை 1966ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது சுற்றுலா பயணகளை கவரும் வகையில் கோமுகி அணையின் பல இடங்களில் வியூவ் பாயிண்ட், புத்தர், ஏசு, நேரு ஆகியோரது சிலைகளும், காவலர்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை சித்தரிக்கும் சிலைகளும், பல்வேறு அலங்கார வளைவுகளும் அமைக்கப் பட்டது. இவைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், நாளடைவில் சிலைகள் அனைத்தும் சிதிலமடைந்தன. பொதுபணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் கோமுகி அணை காட்சி பகுதிகளில் உள் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, கோமுகி அணை அருகில் உள்ள பூங்கா பகுதியில் சிதலமடைந்த சிலைகள் புணரமைக்கப்பட்டு, புத்துயிர் பெற்று வருகிறது. இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement