அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு கவிழுமா?

திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த தினகனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக சந்தித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு எதேனும் பிரச்னை ஏற்படுமா?

ஆம் (82%)

இல்லை (18%)

கருத்துகள் (27+13)

 1. kandavel

  chinnamanibalan


  Thoothukudi,இந்தியா


  09-ஜூன்-2017 19:17 IST

  ஆட்சி என்பது அட்சய பாத்திரம் போல.கமிஷன்,கையூட்டு என்ற பெயரில் கோடி கோடியாக கொட்டி கொண்டிருக்கிறது.இதனை இழக்க இன்றைய ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள்.எனவே அவர்களிடம் பிணக்குகள் ஆயிரம் இருப்பினும் ,அணிகள் பல ஏற்படினும், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் தங்களை வளப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை நிறைவேற்ற நிச்சயம் பாடுபடுவர். ஆனால் தமிழக மக்கள்படும் துயரங்களுக்கு அளவேயில்லாமல் போகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

 2. kandavel

  தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்


  கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா


  09-ஜூன்-2017 14:19 IST

  விழுந்து விடும் என்பதை விட விழக்கூடாது என்பதே விருப்பம். மீண்டும் தேர்தல் வந்தால் மட்டும் என்ன நடந்து விடும் திமுக ஆட்சிக்கு வரும்.. அவர்கள் என்ன ரொம்ப நேர்மையாகவும் நலத்திட்ட நோக்கோடும் ஆட்சி நடத்துவார்களோ ... அவர்களுக்கு இந்த ஆட்சியே மேல்

 3. kandavel

  g.s,rajan


  chennai ,இந்தியா


  09-ஜூன்-2017 14:03 IST

  என்ன அரசாங்கம் அப்படின்னு ஒண்ணு நடக்குதா தமிழ்நாட்டுல ,அப்படி ஒண்ணும் அறிகுறி தெரியலையே மக்களுக்கு ஒண்ணுமே புரியலையே ஜி.எஸ்.ராஜன் சென்னை

 4. kandavel

  T.S.SUDARSAN


  Chennai,இந்தியா


  09-ஜூன்-2017 13:15 IST

  சசிகலா குடும்ப குழப்பதினால் அஈ அதி முக அழிந்துவிடும்

 5. kandavel

  Paranthaman


  kadappa,இந்தியா


  09-ஜூன்-2017 13:13 IST

  கட்சி ஆட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் இரண்டாக பிளவு பட்ட அணிகள் ஆகியவைகளிடையில் தினமும் நடக்கும் குழப்பங்கள். சுதந்திரம் பெற்ற பின் இது நாள் வரை எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிர்வாக குளறுபடிகள்.கட்சி பணிக்கு உரிய தொண்டர்கள் முன்வராமை தேர்தல் ஆணையம் தரவேண்டிய ஆணைகளில் சுணக்கம் .ஜெயாவின் அகால மரண மர்ம முடிச்சுகள் அவிழாமை அதிமுக மீதுள்ள மக்கள் வெறுப்பு ஆகியவைகளால் ஜூலை 17க்கு பின் அதிமுக ஆட்சி தானாக கவிழும். அல்லது கவிழ்க்கப்படும். திண்ணைக்காக காத்திருக்கும் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க பாஜகவினர் விரைந்து தமிழகத்தில் செயல்படுவது அவசியம்..

 6. kandavel

  Chandrasekaran Balasubramaniam


  ERODE,இந்தியா


  09-ஜூன்-2017 12:51 IST

  இல்லை. தினகரன் மிரட்டுகிறான்.கவிழ்ந்தால் அவன் திகாரில்

 7. kandavel

  Vasudevan Ragunathan


  Coimbatore,இந்தியா


  08-ஜூன்-2017 18:09 IST

  மறுதேர்தல் தான் ஒரே தீர்வு. அதுவரை இந்த அலைகள் ஓயாது

 8. kandavel

  Rajappa


  BANGALORE,இந்தியா


  08-ஜூன்-2017 17:35 IST

  குழப்பம் நேர்ந்தால்தான் தெளிவு பிறக்கும் மக்களுக்கும் புத்தி வரும் தமிழ்நாடு பிழைக்கும்

 9. kandavel

  s mani


  bhavani,இந்தியா


  08-ஜூன்-2017 17:06 IST

  கூட்டு கொள்ளை கும்பல் ADMK வருடம் இருக்கு ஏதோ ஜெயலலிதா இருந்ததால் இவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆட்சி களைந்து தேர்தல் வந்தால் வெற்றி பெறுவோமா னு பயம் அதனால் இருக்கிற 4 வருடத்தில் சம்பாதித்தால் தான் அதனால் கண்டிப்பாய் ஆட்சி கலையாது

 10. kandavel

  S ANBUSELVAN


  AL JUBAIL,சவுதி அரேபியா


  08-ஜூன்-2017 17:03 IST

  கவிழ்ந்தால் நல்லது.......மக்களுக்கு இந்த திருடர்களிடமிருட்ந்து விமோசனம் கிடைக்கும்.... கொஞ்சம் பரவாயில்லாத ஆட்சி கிடைக்கும்.. எவ்வளவு சீக்கிரம் இவர்கள் தொலைந்தால் நல்லது...