Advertisement

பெண்கள் அமைப்பில் நான் இல்லை : அனு சித்தாரா உஷார்

மலையாள திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும், திலீப் விவகாரத்தை தொடர்ந்து, சினிமாவில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெண்கள் நல அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார்கள். முன்னணி நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ள இந்த சங்கத்தினர் பல விஷயங்களில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதனால் இந்த அமைப்பில் இல்லாத நடிகைகள் பலருக்கும் அவர்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக கருதி கண்டனங்களும் ஆபாச அர்ச்சனைகளும் சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் தரப்பில் இருந்து பறக்கின்றன. இதனால் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனு சித்தாரா, முன்னெச்சரிகையாக, தான் பெண்கள் நல அமைப்பில் உறுப்பினராக இல்லை என்று உஷாராக கூறியுள்ளார்.

மேலும், மலையாள நடிகர் சங்கத்தில் மட்டுமே உறுப்பினராக இருப்பதாகவும் 'மீ டூ'வில் குறிப்பிடும் அளவுக்கு தான் எந்தவிதமான கசப்பான அனுபவங்களையும் மலையாள சினிமாவில் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement