Advertisement

மம்முட்டி படத்தில் 60 புதுமுகங்கள்

மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் 'பதினெட்டாம் படி' என்கிற படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இந்தப்படத்திற்காக மம்முட்டி தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றில் மம்முட்டியை அடையாளம் கண்டுகொள்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது.

அந்த அளவுக்கு மிகவும் வித்தியாசமான கேங்ஸ்டர் லுக்கில் இதில் நடிக்கவுள்ளார் மம்முட்டி. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து 60 புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். மலையாளத்தில் பிரபல எழுத்தாளரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement