Advertisement

முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் : வரலட்சுமி

விஜய் நடித்த சர்கார் படம், கடும் சர்ச்சைகளை சந்தித்து வந்தன. நேற்று, ஆளும் அரசை படத்தை எதிர்த்ததால் பல ஊர்களில் படங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, நண்பகல் முதல் படம் மீண்டும் பிரச்னையின்றி திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்கார் சர்ச்சைகளில் வரலட்சுமி ஏற்று நடித்த கோமளவல்லி கதாபாத்திரமும் ஒன்று. தற்போது அந்த பெயர் வரும் இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்கு எழுந்த சர்ச்சை குறித்து வரலட்சுமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது :

"ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். தயவு செய்து இந்தமாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்" என பதிவிட்டிருக்கிறார்.

சர்கார் பட பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : எங்கள் உணர்வுகளையும், உரிமைகளையும் வன்முறை மூலம் ஒடுக்கிவிட முடியும் என நினைப்பவர்களுக்கு முதலில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விடுகிறேன். ஒரு குரலை அடக்கினால் கர்ஜனையை கேட்க செய்வோம். நீங்கள் தணிக்கை துறையை மூடிவிடுங்கள், நாங்கள் புரொமோஷன் துறையை மூடிவிடுகிறோம். இது முட்டாள்தனமானது, நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • praba - madurai,இந்தியா

  எல்லாம் ஒரு விளம்பரம் தான்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயா ,விஷால் ,கொஞ்சம் ஜாக்கிரதை Varalakshmi விஷயத்தில் .தான் செய்வதுவும் பேசுவதுவும் இரண்டு Oscar அவார்ட் வாங்கியது மாதிரி இருக்கு.

 • Joseph - Tirunelveli,இந்தியா

  well said

 • nicolethomson - bengalooru,இந்தியா

  முட்டாள்தனமான படம் எடுப்பதை எப்போ நிறுத்துவீங்க வரலட்சுமி, ஏனென்றால் கருப்பு பணம் இருக்கு என்று வரி கட்டாத நாயகனும், அவனுக்கு சப்போர்ட்டாய் ஒரு கட்சியும் என்று எல்லாம் ஏமாற்றும் ரகம், இதில் முட்டாள்கள் மக்கள் தானே வரம். இப்போ யாரை சொல்லுவது முட்டாள்தனமான என்று ? உங்களுக்கு நிஜமாவே அறிவிற்கு என்றால் நல்ல கதை பற்றி சிந்திக்கலாமே, ?

  • Kailash - Chennai,இந்தியா

   கருப்பு பணத்தையும் ஹவாலா பணத்தையும் மோடிஜி நவம்பர் 2016 அன்றே ஒழித்துவிட்டார் இன்னமும் கருப்பு பணம் என்று உளறிக்கொண்டு இருக்க வேண்டாம் நீங்கள் வீடு வாங்குவதை கைடு லைன் படி பதிவு செய்தீர்களா அல்லது மார்கெட் விலைக்கு பதிவு செய்திர்களா? அனைத்து பரிமாற்றமும் வங்கி மூலம் செய்கிறீர்களா அல்லது மறைமுகமாக செய்கிறீர்களா

 • Bhaskaran - Madurai,இந்தியா

  டெஸ்ட்

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  @புகழ், உங்களை பார்த்தால் நிஜமாகவே மிகவும் பரிதாபமாக இருக்கிறது.......தினகரன் பத்திரிகை அலுவலக தீ ஒரு விபத்து என்று நீதிபதி சொன்னது உங்களுக்கும் உங்கள் ஆதரவு கட்சித்தலைவர் மற்றும் அவரது மக்களுக்கும் (அதாங்க குடும்பத்தார்) பிடித்திருப்பதால் அந்த தீர்ப்பு சரியானது என்று முழங்கும் தாங்கள் எல்லா தீர்ப்புகளையும் இதே கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறீர்களா/பார்த்தீர்களா?.......... சபரிமலை விவகாரத்தில் நீங்கள் தீர்ப்பு எழுதிய நீதியரசர்களை பற்றி எழுதிய கருத்துக்களை நீங்கள் நினைவு கூற வேண்டும்...........ஓசியில் கிடைக்கும் அனைத்தையும் தீயில் போடவேண்டும் என்றால் தலைக்காட்சி பெட்டியையும்தானே போட்டிருக்கவேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு நியாயமாக்கப்படவில்லையா? ஏன்? மக்களுக்கு ஓசையாக பொருட்களையும் பணத்தையும் கொடுத்து பாழ்படுத்தியதே உங்கள் தானைத் தலைவரும் அவரது அடிவருடிகளும்தானே? தா பா கிருஷ்ணன் கொலைவழக்கும் ஒரு விபத்துதானா? திருமங்கலம் பார்முலா ஒரு கற்பனையா? சொல்லுங்கள்............இது தவிர என்னுடைய ஒரு கேள்விக்கும் தாங்கள் சொன்ன பதில் "நான் எப்போதும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை" .. . . . . தங்களுடைய இங்கே போடப்பட்டிருக்கும் தரமானதா, தரமற்றதா?......

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  வராத லட்சுமி ...இக்கதையில் வரும் காட்சிகள் , கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனைன்னு போட்டுட்டு இப்படி செய்யற செயல் கேவலமா இல்ல? திருட்டு கதை , காப்பி அரசியல் வச்சிக்கிட்டு சோசலிசம் பேச 100 கோடி செலவு பண்ணி படம் எடுப்பங்களாம் ..போவியா ...

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  திரு செல்வராஜ் அவர்களுக்கு எனது கருத்தை படித்து என்னிடம் எதிர் கேள்வி கேட்டதற்கு நன்றி. நான் என்கருத்தில் எங்காவது நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா எனும் கேள்வி வரும்படி யாரையாவது ஆதரித்து கருத்து எழுதி இருக்கிறேனா? முதலில் என்ன செயல் நடந்தததோ அது குறித்தே எனது கருத்தை தெரிவித்திருக்கிறேன். மற்றவை அதன் பின்விளைவுகள். அது இப்படித்தான் அமையவேண்டும் என யாராவது எதிர்பார்த்தால் அது சரியான புரிதலில்லாமல்தான் இருக்கும். நீங்களே சொல்லுங்கள் பெருவாரியான மக்களால் மதிக்கப்படும் மறைந்த தலைவரை அது ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ அவமானப்படுத்துவது முறையா? நிச்சயம் மனிதம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இலவசங்கள் தேவையில்லை என இப்பொழுது நாட்டில் பரவலாக பேசப்படும் பொருளாக இருப்பது உண்மைதான். அது இதுவரை கொடுக்கப்பட்டது சரியா? இனியும் தேவையா? என முன்பு அதை பெரும் நிலையிலிருந்து இப்போது முன்னேற்றம் அடைந்த சாதாரண குடிமகன் நினைக்கலாம் ஆனால் அதை தீர்மானம் செய்வதும் நடைமுறைப்படுத்துவதற்குமுன் பொருளாதார வல்லுனர்களிடமும் சமூக நீதியின்பால் உண்மையான அக்கறை கொண்டவர்களிடமும் உண்மையாக ஏழை மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களிடமும் ஆலோசித்துதானே அதை மாற்றுவது சரியாக இருக்கும். மிக நல்லதை செய்வதாக நினைத்து அதை சொல்லி இருக்கும் ( முன்பு மிக சாதனமாக இருந்து இப்போது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ) திரு முருகதாஸ் அவர்கள் யாரிடமாவது கலந்து ஆலோசித்தாரா? இப்போது அனைத்து டிவி விவாதங்களிலும் விவாதம் செய்பவர்களில் சமூக அக்கறை கொண்டவர்களும் பொருளாதார வல்லுனர்களும் சொல்வதை கவனித்த்தீர்களா? இல்லையெனில் யூ டியூபில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல நாம்தென் தமிழ் நாட்டில் பிறந்து கூகுளின் முதன்மை செயலாளர் பதவியில் வீற்றிருக்கும் திரு சுந்தர் பிச்சை அவர்களை நீங்களோ மற்றவர்களோ பெருமையாக நினைக்கிறீர்களோ இல்லையோ நான் அவரை மிக பெருமையாகவும் இன்றய இளைஞர்களின் சாதனை நாயகனாகவும் நினைக்கின்றேன். உலகின் முதல் முன்னணி நிறுவனத்தில் உச்ச பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு சாதனை தமிழனை நினைவுகூரும் விதமாக கதா பாத்திரத்தின் பெயரையும் பணியாற்றும் நிறுவனத்தி பெயரையும் கதையில் அமைத்து விட்டு அவரை மிக கேவலப்படுத்தும் விதமாக கதாநாயகன் " நான் ஒரு கார்ப்ரேட் கிரிமினல் என சொல்லி " பெருமையாக கர்ச்சிப்பதும் உங்களுக்கு ஏற்புடையதா? மேலும் நீதிமன்ற காட்சி ஒன்றை அமைத்து அதில் வரும் தலைமை நீதிபதியாக வருபவர் 49p எனும் சட்டப்பிரிவை "இப்படி ஒரு சட்டமிருப்பது யாருக்குமே தெரியாதே" என அவரே தன வாயாலே சொல்வதாக காட்சியமைத்திருப்பதும் நமது நீதி மன்றங்களையும் நீதிபதிகளையும் அவமதிப்பதாக ஆகாதா? இதில் உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை காண்பவர்கள் இந்த காட்சியை பார்த்தால் நம்நாட்டையும் நீதித்துறையையும் எப்படி நினைப்பார்கள். முதலில் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். நன்றி .

 • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

  படம் எடுத்து பணம் வாங்கியாச்சு விஜய் இனிமேல் அதை பற்றி பேச மாட்டார் ஏன்னா அவர்தான் கம்முன்னு இருந்த ஜம்முன்னு இருக்கலாம் முன்னு சொல்லிட்டார் விஜய் எங்காவது வாயை தொறந்தார்களா இல்ல படத்தை எடுத்த நிறுவனம் தான் வாயை தொறந்ததா? ரஜினி, கமல் ,விஜய் போன்றவர்கள் அவுங்க வாங்கும் சம்பள உண்மை சொல்லுகிறர்களா இல்லை ஒழுங்கா வரி காட்டுகிறார்களா யாருக்காவது தெரியுமா ? 50 r 60 கோடி சம்பளம் இவனுக எப்படி நாட்டை நல்லபடியாக வலி நடத்த முடியும் இவனுக முதலில் நல்ல விதமாக கணக்கு கொடுக்கட்டும் அப்புறம் பேசலாம்>

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஒன்னும் புரியலை...கணக்கு காட்டுங்க கணக்கு காட்டுங்கன்னு கேக்குற நாம் வருமான வரி துறையா..? அவங்க கணக்கு காட்ட வேண்டிய இடம் வருமானவரித்துறை. உங்க கிட்ட ஏன் சொல்லணும் புரியல?..உங்களுக்கு அவங்க சொத்துமதிப்பு தெரியணும்ன்னா அவங்க தேர்தலில் நிக்கும் போது தங்களின் சொத்து விவரம் அறிவிப்பாங்க..அத விட்டுட்டு கருத்து சொல்றதுக்கெல்லாம் கணக்கு கட்ட முடியுமா? ஆமா இதெல்லாம் நம்ம ஊரு அரசியல் வாதிகளிடம் கேட்டுருக்கோமா? ரோடு போடா எவ்வளவு செலவாச்சு ஏன் போட்ட ரோடு குண்டும் குழியுமாச்சு ( அந்த ரோட்டுல வீடுகட்டுறோம்ன்னு சொல்லி கனரக வாகனமான மணல் லாரியை ஒட்டி அந்த ரோடு அதை தாங்காதுன்னு தெரிஞ்சும் நாம டேமேஜ் பன்றது வேற விஷயம்...) அதுக்கு செலவு செஞ்சது எவ்வளவுன்னு கேள்வி கேக்க மாட்டோம்...( தகவல் அறியும் உரிமைச்சட்டத்துல கூட...) அதுமட்டுமல்ல அஞ்சு வருஷத்திலே உன் வருமானம் பெருகுச்சே எவ்வளவு சம்பாரிச்ச அதுக்கு ஒழுங்கா வரி கட்டுனய எப்படின்னு MP , MLA வை கேக்கமாட்டோம்..(அதுசரி கேட்ட ஆளவச்சு அப்பு அப்புன்னு அப்பிடுவாங்க இல்ல?) ஆனா நடிகனை பாத்து டாய் கணக்கு காட்டுறன்னு வீரமா கேப்போம்...ஏன்னா? அவன் நம்மள அடிக்க மாட்டான் இல்லா...வீர தமிழர்கள் நாம..மீசையை முறுக்குவோம்...

  • Kailash - Chennai,இந்தியா

   மிக சரியான கருத்து...

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  ஹலோ மேடம், நீங்க இன்னும் நிபுணன் படத்தில அர்ஜுனுக்கு மேல் உள்ள பாலியல் புகாருக்கு எந்த கருதும் ட்விட் பின்னாலயே ஏன்? நீக்க மட்டும் பெண்களுக்கு திரைத்துறையில் பாதுகாப்பு வேனும்ம்னு கூவிட்டு அர்ஜுன் விஷயத்தில் காம்ம்ன்னு இருக்கீங்களே why ? நீங்க மட்டும் அல்ல அண்ணன் பிரசன்னாவும்... இத்தனைக்கும் நீங்க ரெண்டு பெரும் அந்த படத்துல ஆகிட்டு கொடுத்தீங்க. இதுக்கு மட்டும் மாஞ்சு மாஞ்சு கருத்து சொல்றீங்க....தனக்கு வந்த ரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்டினி... நீங்க ரொம்ப நல்லவருங்க..

 • Sathish Kumar - Tiruvannamalai,இந்தியா

  சர்க்கார் படம் vs குற்றமுள்ள நெஞ்சு.....

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பாக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கிறா ஆனா வாயிதான் சரியில்லே மூடிக்கிட்டு இருந்தா உருப்படலாம். சும்மா நடிகங்கள எதுத்த ஸ்ரீ ரெட்டி என்ன பாடுபட்டுச்சுன்னு பாத்தோம் இந்த பொண்ணு என்னல்லாம் படப்போகுதோ? ஹ்ம்ம்..

 • m.sankar_ - chennai,இந்தியா

  . அம்மா இருக்கும்போது நீ இந்தமாதிரி நடிச்சிருந்த, ஒன்னை பாராட்டலாம்.

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  முதலிலேயே வேறு பெயர் வைத்திருக்கலாமே

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   உங்களுக்கு தெரியுது பய புள்ள முருகுக்கு எங்க போச்சு புத்தி...சரி அந்த புள்ளைக்குத்தான் தெரியல ( கதை திருடுறத தவிர) அப்புராணி...அவிக கூட சுத்திகிட்டு இருபங்கில்லா உதவி இயக்குனருன்னு அவங்களுக்கு கூடவா இது தோணல...அட அந்த வசனகர்த்தா எவ்வளவு பெரிய ஆளு ( B. Jeyamohan ) ..அவர்க்கு கூட தோணாமப்போச்சே...

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பொறுப்பற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள்-நடிகைகள் போன்றவர்களால் தான் தரம் கெட்ட படங்கள் வெளியிடப்படுகின்றன. 2006- 2011 காலப்பகுதியில் ஆட்சியில் இருந்தவர்களால், திரை உலகம் பட்டபாட்டை மறந்து விட்டார்களாம் கோலாலம்பூரில் உள்ள மடுவத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர் சொன்னார்: "இப்படியா ஜெயலலிதா அவர்களையும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தாழ்த்துவார்கள்" என்று. எம்ஜிஆர் அவர்கள் ஒரு படத்தில் பாடுவார்: " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நானுனக்குச் சொல்லட்டுமா இன்று ". விபரம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். இலக்கு வைக்கப்பட்ட நபரோ வாய் திறக்கவில்லை. திறந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? தானே தன் செயற்பாட்டை ஒத்துக் கொண்டதாகச் செய்திகள் பரவியிருக்கும்.

  • hasan - Chennai,இந்தியா

   இப்போ நாங்கள் அத்தனை பேரும் அப்படித்தான் என்று ஒத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் போஸ்டரை கிழிப்பது அடித்து நொருக்குவது எல்லாம்.

 • s t rajan - chennai,இந்தியா

  இந்த சினிமாக்காரர்கள் என்ன தேசபக்தி செம்மல்களா ? இவர்களும் அந்த அரசியலில் நுழைந்து கொள்ளையடிக்கத் தானே இப்படிப் படம் எடுக்கிறார்கள். தற்போதுள்ள எல்லா அரசியல் வ்யாதிகளுக்கும் மூலகாரணமே இந்த ஏமாற்றுக் கும்பல் தான். நல்லவராக நடித்து ஏமாற்றிய என்டீஆர், எம்ஜீஆர், ஜெயா, கருணாநிதி, கமல் எல்லாமே "வெள்ளித்திரை" நல்லவர்களே.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இதைவிட அரசியலை கேவலமா சித்தரித்த படங்கள் பலவந்துருக்கே கோமளவல்லி ன்னா ஜெயமட்டும்தானா .?????நிழலில் கூட ஜெயா இறுக்கப்படாது என்று அதிமுக எண்ணுதா ????????எல்லோரும் எல்லை மீறுறானுக ஆளவும் தெரியலே சினிமாக்கு வீணா விளம்பரம் செய்றாதைபோலே இருக்கே இந்த அடாவடித்தனமெல்லாம் அதிமுகளே பதவியே இருப்போரெல்லாம் மினிமம் டிக்ரீ படிச்சுருக்கானுக அறிவு ஜீரோ ஒருஅமுக்கிய வேலைகளின் செயல்களே இல்லே நடக்கலே ஒண்ணாந்தேதி லட்டுபோல லக்ஷம் ரூபாய் சம்பளம் வாங்கிண்டு கொளிக்குறீங்களே செய்யாத அநியாயம் இல்லீங்க நீங்கல்லாம் அந்தம்மாவின் பேரை வச்சுண்டு அரசியல் பண்ணுறீங்க அதான் கார்ப்பரேஷன் லே என்ன நடக்குது என்று எந்தமந்திரியும் கண்டுக்கிறானா ????????ஒர்ஸ்ட் ஆட்ச்சியே நடக்குது ஐயோ கள்ளப்பணம் பண்ணமுடியலேன்னு ஒருபக்கம் முக கட்சியே ஓலம் தினகரனுக்கு செல்லாக்காசு எக்ஸ் எம் எல் ஏ க்கலைவச்சுண்டு தவிக்குறாங்க கேவலம் முனிமணிநேரம் சினிமாக்கு இவ்ளோகேவலமான போராட்டம் எந்த பிராடுகளை மறைக்க இவ்ளோ அவன்தரைகள் ??

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் அம்மணி. ஓட்டை வாயை திறந்து வாங்கி கட்டிக்கொள்கிறீர்கள்?

 • ajith -

  What I think can I say about you in public you will accept it If you want to fight stand in election dont make yourself fool first every thing is for money all shut your mouth and sit

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  அம்மா வர்ற லட்சுமி நீ பேசுனத ஓங்கப்பருகிட்ட சொன்னாயா. அந்த படத்துல எடுத்து சொன்னத எல்லாம் ஓங்க அப்பாரு சரின்னு சொன்னாரா? சரி கருத்து சுதந்திரம் என சொல்கிறாய் அந்த சுதந்திரம் எனக்குமிருப்பதால் உண்ணைப்பற்றி எனக்கொரு கருத்திருக்கிறது என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு கருத்தெழுதினால் பாற்பவர்களோ நீயோ சே சே இது அவரோட கருத்து அவருக்கு எதுவும் சொல்ல உரிமையிருக்கிறது என மகிழ்ச்சி அடைவீர்களா? மேலும் இந்த படத்தை எடுத்த படத்தயாரிப்பு நிறுவனம் இந்த பூனையும் பால் குடிக்குமா என மிக அமைதியாய் ஏதும் நடவாததுபோல் அவர்கள் வேலையை செய்து கொண்டிருக்கிரார்கள். அவர்கள் என்ன நினைத்து படம் எடுத்தார்களோ, அது நடந்து கொண்டிருக்கிறது என நினைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். வடிவேலு நிலைமை இயக்குனருக்கும், நடிகருக்கும் வராமல் இருக்கட்டும். அதிமுக காரர்களின் கோபம் சரியா என கேட்பவர்களிடம் ஒரு கேள்வி. இது கற்பனைக்கதை என்று முதலில் சொல்கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த படத்தில் வரும் முதல்வராக இருப்பவர் மிக கெட்டவராக காட்டி இருப்பார்கள் அதில் கேள்வியில்லை. அவர் வழங்கும் இலவசங்கள் நாட்டுக்கு தேவை இல்லை என சொல்கிறார்கள். அதிலும் கேள்வி இல்லை. (இவை தேவையா இல்லையா என பொருளாதார சமுகநலனில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்களா என தெரிய வில்லை? டிவி விவாதங்களில் வருபவர்கள் இவை கட்டாயம் தேவை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.) அதே சமயம் அந்த இலவசப்பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சியை நன்கு கவனியுங்கள். அந்த இலவச பொருள்களில் இருக்கும் படம் அந்த திரைப்படத்தில் இருக்கும் முதல்வர் கதா பாத்திரம் ஏற்றவரின் படமா அல்லது ஜெயலலிதா அவர்களின் படமா? இதுபோல மறைந்த பெருவாரியான மக்களால் மதிக்கப்படும் தலைவரையும் நம்மை ஆளும் அரசு முத்திரையையும் கொண்ட படத்தை தீயிட்டு கொளுத்துவதுதான் கருத்து சுதந்திரமா? நாட்டிலுள்ள சட்டம் படித்த யாருமே இதை பார்த்தர்களா. சட்டப்படி அரசு முத்திரையை தீயிட்டு கொளுத்த ஒரு குடிமகனுக்கு உரிமையுள்ளதா. இதை அனுமதித்தால் அடுத்து சட்டத்தை மீறி எதை வேண்டுமானாலும் கொளுத்த ஆரம்பித்து விடுவார்களே. இதனால் பிரச்சினை வரும், வரட்டும் பார்த்துக் கொள்வோம் என தெரிந்தே இதை படமாக்கியிருக்கிறார்கள். அதனால் வரும் எதிர்ப்புகளை அவர்கள் எதிர்கொண்டு ஆக வேண்டும். வெறுமனே இது சினிமா என கடந்து போக முடியுமா? நேர்மையுடன் சொல்லுங்கள் பார்ப்போம்

  • ajith - ,

   great

  • SelvaRaj - San Jose,யூ.எஸ்.ஏ

   Are you accepting the story depicts the current ADMK government's actions and JJ's misusing of the taxpayers' money?

 • Prakash - Erode,இந்தியா

  OK I think it is not correct suggest

 • Prakash - Erode,இந்தியா

  பொதுவான கருத்து தெரிவிக்க விரும்பினால் அது ஒரு உன்னத அனுபவம் உள்ளவர்கள் தெரவிக்கட்டும். இது போன்ற கருத்து ஒரு கட்சியை மட்டும் சாடுவது போல் உள்ளது இது சரியான பொதுவான கருத்து இல்லை.

 • Praveen - Chennai,இந்தியா

  Ethirtha athuthaa ennoda valarchi.... Super lines... Apt to Thalapathy...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மிகவும் சரியான சிறப்பான கருத்து வரலட்சுமி பாராட்டுக்கள். இனி இந்தப் பெண்ணை தனிமனித விமர்சனம் செய்வார்கள். அதுவும் இணையதளங்களில். ஒரே ஒரு சினிமாவைப் பார்த்து உதறல் எடுத்த பேடிகள்.

  • Kailash - Chennai,இந்தியா

   உங்கள் கருத்து சரியானதுதான். உங்கள் கருத்துக்கு dislike செய்தவர்கள் பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை கூட்டணி பிரிந்தால் பாஜக காரர்கள் வெட்கமில்லாமல் வரலட்சுமி சொன்னதை ஆதரிப்பார்கள்...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  என்ன மோ பத்திரிகை ஆபீஸில் யாரையோ கொன்னுட்டாங்களாம் இவருக்கு தெரியுமாம். அது விபத்து தான், கொலை அல்ல என்று சொன்ன நீதிபதி களை விட இந்த கோழை அறிவாளியா? தக்காளி இவருக்கு தெரியும் என்றால் ஆதாராத்துடன் வழக்கு போடறது தானே. திமுக பற்றி பொய்களை எழுதி பொய்யான குற்றச்சாட்டு களை போடுவதே இவரை மாதிரி ஆசாமி களுக்கு பிழைப்பு..இது வெட்கக்கேடு. ஒரே ஒரு சினிமா அதுவும் இரண்டரை மணிநேர படத்தை பார்த்தே ச்சும்மா அதிர்ந்து நடுங்கி வேட்டியை நனைத்து விட்ட தைரியசாலிகளை நினைத்து சிரிப்பு வருகிறது.

 • sankar - london,யுனைடெட் கிங்டம்

  எவ்வளவோ பெயர் இருக்கையில் ஏன் அந்த பெயர் மட்டும் கதைக்கு தேவை ..... பல மனைவிகள் மற்றும் துணைவிகளின் .... இணைவிகளின் பெயர்கள் கைவசம் உள்ளதே ..... வைத்து இருக்கலாமே ???

 • Raman C Iyer - Hyderabad,இந்தியா

  பாவம் ... ரொம்ப கூவாதம்மா...

 • பாரதன். - ,

  உங்கள் கருத்து சுதந்திரத்தைதிமுகவுக்கு எதிராக இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொளுத்தியிருக்க வேண்டும், படத்தில் நெகெடிவ் கதாபாத்திரத்திற்கு கருணாநிதி குடும்பத்தாரின் பெயரை வைத்திருக்க வேண்டும். பாடல்களை, வசனங்களை திமுகவுக்கு எதிராக எழுதியிருக்க வேண்டும். திமுகவினர் படத்துடன் சேர்த்தது உங்களையும் கொளுத்தியிருப்பார்கள். தினகரன் பத்திரிகையுடன் சேர்த்தது அங்கு பணியாற்றியவரையும் சேர்த்தது திமுகவினர் கொளுத்தியது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். அப்போது நான் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவன் என்பதால் நன்றாக அறிவேன்.

 • பாரதன். - ,

  படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் உங்கள் கருத்தென்றால், இப்போது நடக்கும் நிகழ்வுகளும் சரியானதே.

  • dinesh - ,

   he is right if u can show anything in movie n u want others to b silent n accepting it as ur creative right. well same applies2u for reaction shiwn

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement