Advertisement

சர்கார் - திரையில் ஒன்று, நிஜத்தில் வேறொன்று

விஜய் நடித்து கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான 'சர்கார்' படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதால் தமிழக அமைச்சர்கள் படத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.

'சர்கார்' படத்தில் விஜய்யின் ஹீரோயிசமான காட்சிகள் பல இருக்கின்றன. பாடல்களிலும் அப்படிப்பட்ட வரிகள் உள்ளன. திரையில் மட்டும் ஹீரோசியத்தைக் காட்டிய விஜய், நிஜத்தில் நேற்றிலிருந்து 'சர்கார்' பட பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. படத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர்கள் தான் கருத்து தெரிவித்தனர்.

'சர்கார்' படத்தில் 'ஒரு விரல் புரட்சி' என்று பாடிய விஜய், ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. 'வேர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து' எனப் பாடிவிட்டு படக்குழு அலறிப் போய்க் கிடக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்கார் ஆடியோ விழாவில், விஜய் சொன்னபடியே, இந்த விவகாரத்திலும் அவர் உம்முன்னு, கம்முன்னு இருக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  விஜய் ரசிகன் வெறியன் என்று சொல்லிக்கொள்பவனே ஒரு நிமிடம் யோசி சினிமா ஒரு மாயை. சர்க்கார் படத்தை ஒரு நிமிடம் நன்றாகப்பார்க்கும் போது யோசி இப்படி நடக்க முடியுமா என்று அப்பொழுது புரியும் விஜய்யாவாது ஒரு மண்ணாவது என்று அதில் வந்த காட்சிகள் எதுவும் நிஜமில்லை. ஒரு வோட்டு கள்ளவோட்டு- கோர்ட்டு-தேர்தல் கான்செல்-மறுதேர்தல் 10 நாளில், ஒருவன் 50 பேரை வெறும் கையால் அடித்து துவைப்பானாம். காதிலே பிரகதீஸ்வரர் கோவில் நந்தி அளவுக்கு வளையம் தொங்க விட்டாங்கப்பா இந்த சர்காரிலே (அந்த படத்தை நான் பார்த்து விட்டேன்) தாங்க முடியவில்லை. மாயை என்பது வேறு மாயை தான் நிஜம் என்று சொல்கின்றது சர்க்கார். அறிவை தியேட்டர் வெளியே கழட்டி வைத்து விட்டு அந்த படத்தை பார்க்க்க தியேட்டர் உள்ளே செல்லவும், இல்லையென்றால் சே தூ தூ என்று துப்ப வரும் ஒவொரு காட்சியும் மிகை படுத்தப்பட்ட என்றால் சுத்தமாக ௧௦௦/௧௦௦௦/100000 மடங்கு மிகைப்படுத்தப்பட்ட படம் இது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  படம் வரும் முன் தாக்குவது ஜெயலலிதா ஸ்டைல் படம் வந்த பின் தூக்குவது எடப்பாடி ஸ்டைல் இரண்டாவதில் தொண்டருக்கு போராட்ட உற்சாகம் எதிர்தரப்புக்கு சேதாரம் அதிகம் தினகரன் ஸ்டாலின் ஓசி சோறு போராளிகள் என பலரை அசால்டாக ஓரங்கட்டி ஆட்சி செய்யும் எடபடியார் உடன் ஜோசப் விஜய் போன்ற buildup பார்ட்டிமோதினால் basement காணாமல் போகும்

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  ரசிகர்கள் கிட்டே இருந்தே பயந்து ஓடுவான்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இன்னுமா விஜய்க்கு அரசியல் ஆசை? கமல் போன்ற நடிகர்கள் (ரஜினியும் கூட) formal எடுகேஷன் அதிகம் இல்லை என்றாலும் தனியே நிறைய படித்து நன்கு அறிவு பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த விஜய்யோ விருக்கம் பாக்கம் ஸ்கூல் ஒட சரி. ஒரு வித மான 'டான்ஸ்' ஆடியே சம்பாதித்து விட்டார். ஆண்களில் ,கமல் ,Ajith.போன்ற நடன ஸ்டைல் இவருக்கு எந்த விதத்திலும் வராது.

 • Sekar Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கிட்டத்தட்ட ஒரு ஸ்கூல் ட்ராப் அவுட் கேஸ். பேருக்கு கொஞ்ச நாள் காலேஜ்.படிப்பு ஏறல அடுத்து என்ன செய்வது என்று புரியல. தூத்துக்குடி பாஷையில் சொன்னால் தரிசு, தரிசு.எப்படியோ சினிமாவில் பிக்கப் ஆயிடிச்சு.குடும்ப தொழில்.பின்னாடி ஒரு தரிசு கூட்டம்.விடுங்கப்பா எழுதி ,சொல்லி கொடுப்பதை நடிக்க வேண்டும், இரண்டு கால்களையும் வளைத்து வளைத்து ஆட வேண்டும்.இதுவெல்லாம் ஒரு விஷயம்னு இன்னும் பேசிகிட்டு, எழுதிக்கிட்டு... வேற புது சப்ஜெக்ட் கிடைக்கலையா.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   கிளிக் ஆயிடுச்சா? அப்பன் எம்புட்டு காச கொட்டி கிளிக் ஆக்கினான் இவன...

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  இவன் படத்துல டாக்டர் பத்து ரூபாய்க்கு வைத்தியம் பாப்பாரு. அந்த தியேட்டர் டிக்கட் பத்து ரூபாய்க்கு வேணாம், ஒரு பத்து ரூபா தள்ளுபடி செஞ்சு குடுப்பானுவளா? இந்த ஆளு தினக்கூலியா நடிக்க கோடி கணக்குல சம்பளம். ரசிகன் சொத்துக்கு லாட்டரி.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  விஜய் அமைதியாக இருப்பது தான் நல்லது. இவர்களின் லெவலுக்கு இறங்க வேண்டாம்

  • madhavan rajan - trichy,இந்தியா

   to form a sarkaar he should come to the party politics level. He cannot ask for votes as a film hero.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  . 9 வருஷ அதிமுக ஆட்சி, நாலரை வருஷ பீஜேபீ ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்யவே இல்லை. என்ன சொல்லிகிட்டு மக்கள் முகத்தில் முழிப்பது தெரியவில்லை. மேலும் மேலும் தப்பு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

 • சுறாபாண்டி -

  அவன் வயிறு ரொம்பிடுச்சு, அப்பறம் அவன் ஏன் குரல் கொடுக்குறான்

 • kesavan - COIMBATORE,இந்தியா

  கலர் டீ.வி ஓ.சி யா கொடுத்த அதுல பிசினஸ் பண்ணுன சன் டிவி குடும்பம் தயாரிக்க இந்த படத்துல இப்படி ஒரு மெசேஜ்(இலவசத்த பத்தி) . வாழ்க ஜனநாயகம் . நாடு ஊருபடட்டும்.வாழ்க விஜய் ரசிக அடிமைகள்.

 • santhu - chennai,இந்தியா

  உங்களை போன்றவர்களுக்கு இது செய்தி . ஆனால் சம்பந்த பட்டவர்களுக்கு அது பிரச்னை.

 • m.sankar_ - chennai,இந்தியா

  டே விஜய், நீ எல்லாம் ஒரு மனுசன், ஒனக்கு எல்லாம் ஓரு மீசை, இனிமேலாவது ஒரு காரியத்த செயும்போது புத்தியோட செய். எற்கனவே சுறா ஒரு படத்தை பேரை கெடுத்தாங்க. புத்திலல மனுஷன் ட நீ. நீ எல்லாம் சி ம்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   If the public vote after receiving money, they will vote only for such persons.

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  விஜய் அண்ணா உங்கள் நடிப்பை பார்த்து ஆளும் கட்சியினருக்கு பயம் வந்துவிட்டது. இவை எல்லாம் நிஜமாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அம்மா அம்மா என்று கூறிக்கொண்டிருக்கும் கட்சியினர் மட்டும் தான் மிரண்டுபோயி இருக்கிறார்கள். மற்றபடி மீதியுள்ள அமுக வினர்,பாஜக வினர், திமுக வினர், ரசிகர்கள், மற்ற எல்லா மக்களும் இந்த படத்தை ஆதரிக்கின்றனர். நீ ஏன் ணா பயப்படுற ? இதற்காக ஆளும்கட்சியினரை சென்று பார்த்து மன்றாட வேண்டாம். அவர்கள் வெத்துவேட்டு. சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டும் நீக்கிவிடுங்கள். அவ்வளவுதான். so simple. இந்த இடத்தில் தெரியாத எதிரிகளை விட தெரிந்த எதிரிகளிடம் தான் " அள்ளு ".

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஆக இந்த படத்தை பாத்து fan , மிக்ஸி ன்னு இலவசம் வந்த எல்லாத்தையும் தூக்கி போட்ட நானு என் ஓட்ட போடா மறந்துட்டேன் பாருங்க....இப்ப என்னடான்னா இந்தாளு அந்த சீனை தூக்கிட்டான்...அப்போ என் fan , மிக்ஸி ? ஆக வடை போச்சே...

  • madhavan rajan - trichy,இந்தியா

   Here that is the tr. You should only talk bravely, but in action show that you are a coward. Follow kamal's footsteps. Your words and action need not be in one direction. Only then, you will be a successful politician to become CM.

  • Anvardeen - chennai,இந்தியா

   visai anna ippo pesa mattar. padam odanumilla success meet nnu onnu vapanuga appo vanthu athe eluthi kudutha dialogue vittuttu vera padathukku nadikka poyiduvaar..

 • ajith -

  bayam its a very big problem for human its not easy to handle vantha than theriyum dialogues all can talk facing is different

  • madhavan rajan - trichy

   if more torture is given, he will also talk like kamal (during visvaroopam release) that he will leave India. He has many properties abroad. No problem.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  நீ யாருக்காக நடித்து கொடுத்தயோ அவர்களாலேயே மற்றுமொரு வடிவேலாக ஆக்கப்பட போகிறாய். இது நடக்கிறதா இல்லையா என எதிர்காலம் உனக்கு உணர்த்தும்

  • ajith - ,

   right

 • Praveen - Chennai,இந்தியா

  It's not a big issue... If it is... Definitely Thalapathy would be entered.

 • serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ

  அட ஈவன் அரசியல்வாதிஆகா ஆசைப்பட்டு .. எல்லார் காளிலும் விழுவான். முதல்ல DMK கூட இருந்தான் அப்பறம் ADMK கூட, ஈப்போ மறுபடியும் DMK கூட ..... ஈவன் தனியா ஒன்னும் முடியாதுனு ஈவனுக்கே தெரியும்... அன்னைக்கு அவன் Fans கூட்டத்துல ஓடுநாண்பாரு அதுமாதிரி ஓடவேண்டியது தான். மத்தவங்க புகழ்ல ஓட்டிக்கறது தான் ஈவன் பொலாப்பு. யாரு currentla நல்ல directornu பெரு எடுக்கறாங்களோ அவங்கள புடிச்சுக்கறது , அதே மாதிரி யாரு நல்ல music directornu பெரு எடுக்கறாங்களோ அவங்கள புடிச்சுக்கறது , அதே மாதிரி யாரு நல்ல camera man பெரு எடுக்கறாங்களோ அவங்கள புடிச்சுக்கறது. எல்லா படத்துலயும் - ஒழுக்கமா நடிக்கரனோ இல்லையோ SHOW விடுறது மட்டும் கண்டிப்பா செய்யுவன். பிட் படம் நடிச்சவனுக்கு - முதல்வர் ஆச வேற. Immatured fans...

 • Tamilselvan - Chennai,இந்தியா

  சந்தர்ப்ப வாதி .

 • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

  இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்றங்களே..

 • Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவரும் தங்கள் ஒரு படத்திற்கான சம்பளம் என்ன அதற்கு வருமான வரி செலுத்துகிறார்களா என்று இதுவரை யாரும் சொன்னதாக சரித்திரம் இல்லை. ஆனால் அரசியல் வாதிகள் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.

 • பாரதன். - ,

  நான் தான் தொடர்ந்து சொல்லி வருகிறேனே, அவர் ஒரு வியாபாரி என்று. வியாபாரத்திற்கு பரபரப்பான எதையாவது சொல்லி காசு அள்ளி செல்லும் ஒரு வியாபாரி. விஜய்-க்கு கொள்கை என்பது காசு சம்பாதிப்பது மட்டுமே.

 • vira - tamil naadu,இந்தியா

  மானம் வெட்கம் அவமானம் இதெல்லாம் ஒன்னும் இல்ல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement