Advertisement

சர்ச்சையால் 'சர்கார்' முன்பதிவில் சறுக்கல்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' படம் முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், நேற்று படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பல தியேட்டர்களில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மறு தணிக்கை முடிவடைந்து இன்று மதியக் காட்சி முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் படம் திரையிடப்படுகிறது.

இதனிடையே, 'சர்கார்' படத்தின் வசூல் நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதால் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சீட்டுகள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக உள்ளன. மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளியான முதல் வார இறுதி நாட்களிலேயே 'சர்கார்' படத்தின் முன்பதிவு எதிர்பார்த்தபடி ஹவுஸ்புல் ஆகாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. படத்திற்கான சர்ச்சை எழுந்ததும் அதனாலேயே 'மெர்சல்' படம் போல இந்தப் படம் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு மாறாக 'சர்கார்' படத்திற்கு நடந்து வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • ???????????? ??????? - Perth,ஆஸ்திரேலியா

  அடேய் இப்படி சொல்லியே இவன் மொக்கை படத்தை எல்லாம் ஓட வைங்க.

 • JMK - Madurai,இந்தியா

  இதெல்லாம் ஒரு படம் இது எப்படி பாகுபலி ரெகார்டை முறியடிக்கும் ? கிட்ட கூட நெருங்க முடியாது ஹா ஹா ஹா விஜய் ரசிகர்களுக்கு பிமிலிக்கு பிளாக்கி மாமா பிசுக்கோத்து / வட போச்சே

 • lingan - chennai,இந்தியா

  படம் ரொம்ப சுமார் . கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல .

  • JMK - Madurai,இந்தியா

   it is true I saw this film yesterday ags cinema navalur very few people almost (20 people only) watch that movie ? how it possible to beat bhagubali record? one time watchable not to equal mersal ?

 • kesavan - COIMBATORE,இந்தியா

  இது ஒரு ட்ரெண்ட் இப்ப படத்தை ஓட வைக்க

 • raji - CHENNAI,இந்தியா

  படம் நன்றாக இல்லை லாஜிக் இல்லை சொதப்பல். கொட்டாவி விட வைக்கிறது. இதுவே காரணம்.

 • Amal Raj -

  Pl visit ticket new. come and spi cinemas. com all shows full. summa alanthu vidanthinga.

 • Praveen - Chennai,இந்தியா

  Morachi tholachi ethaatha energy, ethirtha athuthaa ennoda valarchi.... Definitely Thalapathy film will enter 200crore in this week.

 • serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ

  விஜய் பால்ஸ் சும்மாவே வடை சுடுவாங்க .. ஈப்போ சொல்லவா வென்னும்.. 1000 கோடி வசூல்னு சொல்லுவானுக ... டூபாக்கூர் பசங்க.. ட்ரைலர் விடீயோவை ஈவனுகளே திரும்ப திரும்ப பாத்துட்டு .. மில்லியன் பெரு பாத்தாங்கனு சொல்லுவானுக.. ட்ரவுசர் போட்ட பசங்க.. Immature fans

 • vira - tamil naadu,இந்தியா

  தெறிக்க விடலாமா

 • thiru - Chennai,இந்தியா

  மக்களிடம் படத்தை பற்றிய விமர்சனம் வெளிவர துவங்கி விட்டது.. படம் ரொம்பவும் சுமாரான படம்.. எனவே தான் முன்பதிவு குறைந்து விட்டது...

  • பாரதன். - ,

   திருவின் கருத்து சரியானதே. வெறும் அரசியல் பிரசாரமாகவே இருக்கிறது. கதையெல்லாம் ஒன்றும் இல்லை. லாஜிக்-ம் இல்லை. எதிமறை விளம்பரத்தால்தான் முதல் மூன்று நாட்கள் ஓடியது. இனிமேல் போணியாகாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement