Advertisement

பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக் அதிமுக : குஷ்பு டுவீட்

விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னையை பெருசுபடுத்த விரும்பாத சர்கார் படக்குழு, அதிருப்திகரமான காட்சிகளை நீக்கியுள்ளது.

இருப்பினும், சர்கார் படத்துக்கு திரையுலகினர் ரஜினி, கமல் உள்பட பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். அதுகுறித்து குஷ்புவும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், "தமிழக அரசு மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்குதெல்லாம் புதிதல்ல. இதையெல்லாம் பல விஜய் படங்கள் வெளியாகும்போது பார்த்து விட்டோம். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • madhavan rajan - trichy,இந்தியா

    பேஸ்மெண்ட் வீக்காக இருந்தால் தவறுதான். ஆனால் பேஸ்மெண்ட் இல்லாமல் இருக்குற வீட்டுக்கு (காங்கிரஸ்) என்ன சொல்வீங்க. காங்கிரஸ் இந்திரா காலத்திலிருந்து திமுகவின் பேஸ்மெண்டில் தான் வீடு கட்டியிருக்கிறது என்பதை இவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் யாருடைய பேஸ்மெண்டில் இவர்கள் ஆட்சியில் தொடர்கிறார்கள். பீகாரில் என்ன நிலைமை. உ பி யில் என்ன நிலைமை. இவர்களெல்லாம் மற்ற கட்சியைப் பற்றி பேசுவதுதான் கேவலம்.

  • Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஹாஹாஹா வந்துருச்சுய்யா ஹை வே லாரி அம்மா நீங்க ஒரு பெரிய கடல் அதுல நிறைய கப்பல் கவுந்துருக்குது - அதுல ஏன் ஓட்டை போட்ட பத்தி பேசுறீங்க

  • Rock -

    ஆண்ட்டி சுந்தர் மாமா பத்தி சொல்ராங்க.

  • கதை சொல்லி -

    உங்களுக்கு பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்கு பில்டிங் வீக்காகிடுச்சின்னு எல்லோருக்கும் தெரியும். திருநா புட்டு புட்டு வச்சாரே

  • Raman C Iyer - Hyderabad,இந்தியா

    நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க மொதல்ல DMK இப்போ காங்கிரஸ் நாளைக்கு எங்கவோ படம் நடுச்சமா போனமான இருங்க மேடம்

  • vira - tamil naadu,இந்தியா

    அம்மா நீங்க உங்க வேலைய பாருங்க மக்கள் தீர்ப்பு தான் ஜெயிக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement