Advertisement

குத்தாட்ட நாயகியான ஓவியா

பிக்பாஸ் முதல் சீசனுக்கு பின், சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ஓவியா. அதில் பலரால் துாற்றப்பட்ட ஜூலி கூட, ஒரு படத்தில் நடித்து முடித்து, அப்படம் வெளியாகும் நிலையில் உள்ளது. ஆனால், எண்ணற்ற ரசிகர்களின் தேர்வாக இருந்த ஓவியா நடித்து, இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இப்போதைக்கு, ஓவியா ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், அவர் குத்தாட்டம் போட்ட, சிலுக்குவார்பட்டி சிங்கம் படம், டிச., 21ம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது. சென்சாரில், யு சான்று பெற்றுள்ள இப்படத்தில், விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க, ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா, இப்படத்தை இயக்கி உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement