Advertisement

சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்

மீ டூ விவகாரத்தில் இயக்குனர் லீலா மணிமேகலையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் இயக்குனர் சுசி கணேசன். இதைத் தொடர்ந்து லீலா மணிமேகலை மீது, அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் சுசி கணேசன்.

மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் சித்தார்த், லீலா மணிமேகலைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை விரும்பாத இயக்குனர் சுசி கணேசன், சித்தார்த்தின் வீட்டிற்கு போன் செய்து அவரது தந்தையிடம் லீலா மணிமேகலை விஷயத்தில் சித்தார்த் ஆதரவு தரக்கூடாது என கூறி மிரட்டியதாக, சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சுசி கணேசனின் மிரட்டலை தொடர்ந்து முன்பை விட லீலா மணிமேகலைக்கு தனது பலமான ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளார் சித்தார்த்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா

    எதற்கெடுத்தாலும் சப்போர்ட் செயும் சித்தார்த் அவர்களே "" இவ்வளவு கேவலமா லாரன்ஸை பேசிய ரெட்டுக்காரு அவர் படத்தில் நடிக்கிறாராம் என்ன சார் அப்போ இங்கே பணம் தானா காரணம் இதற்க்கு என்ன சொல்ல போகிறீர் மாவீரன் சித்தார்த் அவர்களே லாரென்ஸ் ஐ பேசி அவன் கையிலேயே படத்துக்கு அட்வான்ஸ் இப்போ காசு பணம் துட்டு பணம் மணி இதுதானே, இவனது கட்டிப்பிடிப்பான் என்று தானே படத்திற்கு வருகிறீர்கள் பின்னர்

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    @நடுவர், சித்தார்த் சொல்வதில் என்ன தவறு கண்டீர்? சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா? அவர் அவருக்கு சரியென்று தோன்றியதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்.............அது தவறா? தன்மீது தவறில்லையென்றால், எதற்காக, சுசி கணேசன் அவரை மிரட்டவேண்டும்?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஒன்று மட்டும் தெரிகிறது சினிமாத்துறையில் உள்ள எந்த பெண்மணியும் சத்தியவான் சாவித்திரியும் இல்லை..கற்புக்கரசி கண்ணகியும் இல்லை,...படி தாண்டா பத்தினையும் இல்லை...

  • Naduvar - Toronto,கனடா

    எம்மா யாராவது இந்த சித்தர்மேல ஒரு மீடூவ போடுங்கம்மா ...ரொம்ப ஆடுறன்

    • Kailash - Chennai,இந்தியா

      யாரும் போட்டுவிடக்கூடாது என்று தான் கண்ணை மூடி கொண்டு ஆதரிக்கிறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement