Advertisement

சர்கார் படம் பிசினஸில் சாதனை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6-ஆம் தேதி செவ்வாய்கிழமை வெளியாகிறது. விஜய் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தின் கேரளா மாநில தியேட்டரிகல் உரிமம் சுமார் 10 கோடிக்கு விலைபோயுள்ளது. சர்கார் படத்தின் கேரள விநியோக உரிமையை IFAR INTERNEATIONAL என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

சர்கார் படத்தின் கேரளா விநியோக உரிமையை வாங்குவதற்கு பல நிறுவனங்களுக்கு இடையில் பலத்த போட்டி இருந்தது. கடைசியில் இந்நிறுவனம் சர்கார் படத்தின் விநியோக உரிமையை 10 கோடிக்கு வாங்கியுள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மெர்சல் படத்தின் கேரள விநியோக 6.6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றும், இப்போது சர்கார் அதை விட பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஏரியாக்களின் விநியோக உரிமை மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை வல்லபனேனி அசோக் என்பவர் 6.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஏரியாக்களில் இவர் தான் விநியோகம் செய்தார்.

இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட சர்கார் படத்தின் தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடுகள், மற்ற இதர டிஜிட்டல் உள்ளிட்ட எல்லாமும் சேர்த்து சுமார் ரூ.200 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறம் பெருமைப்படும் விஷயம் என்றாலும், படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தால் மட்டுமே இப்படம் வெற்றிப்படமாக அமையும் இல்லை என்றால் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா

  We are waiting for this movie...Definitely it will be a good movie. Congrats Vijay sir...

 • Arul Krish -

  vada Chennai 10000 times better

 • sura Gopalan -

  மொக்கை படத்துக்கு இவ்வளவு விளம்பரமா?

 • sura Gopalan -

  தளபதி நீ என்னதான் காவி போட்டு சுத்தினாலும் இந்துக்கள் ஓட்டு உனக்கு இல்லை.

 • பாரதன். - ,

  இந்த வியாபாரத்திற்காகத்தான் காசு அள்ளிக் குவிக்கத்தான், அரசியலுக்கு நாளையே வரப்போவதுபோல், சீன் போடுவது, பிரச்சினையான விஷயங்களைப் பேசி விளம்பரம் தேடிக் கொள்வார். இவர் அரசியலுக்கு வரமாட்டார் ரசிகர்களே ஏமாந்து விடாதீர்கள்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இது வேற மாதிரி பாஸ், படமெடுத்து சம்பாதித்து தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் தயாரிக்கும் படமா இது. இந்தியாவின் டாப் டென் கோடிஸ்வரரின் படம். எந்திரன் மாதிரி சர்க்கார் படமும் கருப்பை வெள்ளையாக்க வரும் படம்.

 • rishi - varanasi,இந்தியா

  தமிழன் படம் மாதிரி தான் மொத்தனமும் உதிக்கும், கதை திருடன் முருகதாஸ் உனக்கு வைக்கப்போறோம் வேட்டு, விஜய் நீ கருத்து சொல்லுற அளவுக்கு விஜய்க்கு அறிவும் கிடையாது , சுயமா யோசிக்கவும் தெரியாது.

 • ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  unga aasai padam vetriyadaya koodathu appadithane

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  படம் கண்டிப்பாக ஊற்றிக்கொள்ளும். முதலீடு செய்தவர்கள் தலையில் துண்டுதான்... இப்போது சினிமாக்காரனுங்கல்லாம் சீப் மினிஸ்டர் ஆக துடிக்கறானுங்க. அதுவும் நேரா சீப் மினிஸ்டர் போஸ்டுதான்... என்ன பெரிய சமூக புரட்சியை இவ்ரு செய்துட்டார்ன்னு தெரியல்ல. இவர் வந்து சினிமாவுல சம்பாதிச்சது பத்தாதுன்னு இப்போ அரசியல்ல சம்பாதிக்க பாக்குறாரு. சுடாலின் அவ்ளோ ஈஸியா வுட்டுடுவாரா..? கமலும் ரஜினியும் சும்மா பாத்துக்கிட்டு நிப்பாங்களா ? பகல் கனவு காணுறானுங்கோ. காணாபோய்டுவானுங்கோ. இவனுங்களுக்கு விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். நல்ல மனுஷன்...

 • SudhanPauldurai -

  பாவம் விதி யார விட்டுச்சி. கோவிந்த கோவிந்த.

 • மங்காத்தா மண்டயன் -

  இதெல்லாம் ஒரு business ஆ எங்க தலவலி படன் 200000000 கோடிக்கு போகும் ஆனால் படம் 10 கோடி தான் வசூல் செய்யும்

  • Jeeva -

   dai yaaru da nee

  • Vijay - Bangalore

   appuram eppadi 10000000 kodi lapam varuthunu puriyamataiguthu ...

  • Lokesh - Chennai

   Spyder 2 Sarkar kandipa odathu. Thala last 10 Movies la 3 fils only flop. விஜய் ஓவர் பட்ஜெட் ஓடற மாதிரி இருக்கும் ஆனா லாபம் வராது. ஏற்கனவே மூணு பிரோடுசேர் அவுட் தற்கொலை செஞ்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement