Advertisement

சிம்பு படத்தில் இணைந்த மகத்

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற அத்தாரின்டிக்கி தாரேதி படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. சிம்பு ஹீரோவா நடிக்க, மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். சுந்தர் சி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் மகத்தும் நடிக்கிறார். மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்த மகத், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். அந்த நட்பின் காரணமாக இந்தப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement