Advertisement

பிரபாஸ் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்

பாகுபலி-2 படத்தை அடுத்து சாஹோ படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து தெலுங்கில் வெளியான ஜில் என்ற படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெறுகிறது. மேலும், தேசிய விருது பெற்ற பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜான் என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement