Advertisement

சைரா - அமிதாப், விஜய் சேதுபதி கெட்-அப் வெளியானது

தெலுங்குத் திரையுலகின் மெகா தயாரிப்பாக உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம்.

இப்படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். கோசாயி வெங்கண்ணா என்ற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்கிறார். ஏற்கெனவே, இந்தத் தோற்றத்தில் இருக்கும் அமிதாப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. இருந்தாலும் இன்று அதிகாரப்பூர்வமாக அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

அதோடு, படத்தில் நடிக்கும் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியின் தோற்றப் புகைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில், ஒபாயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதீப், அபிநயா சக்கரவர்த்தி என் ரோலில் நடிக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement