Advertisement

ரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் நான்கைந்து படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டாலும், புலி முருகன் தந்த அனுபவம் அவரது மற்ற படங்களில் ரசிகர்களுக்கு இன்னும் கிடைக்கவே இல்லை. அப்படி ஒரு அனுபவத்தை தரும் விதமாகத்தான் அவர் தற்போது நடித்து வரும் ஒடியன் படம் உருவாகி வருகிறது.

நேற்று வெளியான ஒடியன் படத்தின் மிரட்டலான டிரைலர் அதை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.. இளமை, மற்றும் வயதான கெட்டப்புகளில் மோகன்லாலின் ஆக்சன் காட்சிகளின் சாம்பிளாக இந்த டிரைலர் உருவாகியுள்ளது.

குறிப்பாக 2.O படத்தின் டிரைலர் இறுதியில் ரஜினி குக்கூ என பறவை போல வினோத சப்தம் கொடுப்பாரே, அப்படி இந்த டிரைலரில் மோகன்லாலும் அதேபோல ஒரு சப்தம் கொடுத்துள்ளது ஆச்சர்யமான ஒன்று.

அறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

#Odiyan Official Trailerhttps://t.co/o0IjWlS0Hr— Mohanlal (@Mohanlal) October 10, 2018

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement