Advertisement

கனாவில் மெக்கானிக் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இதனை அவரது நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை இது. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். காதலனாக தர்ஷன் நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதவும் மெக்கானிக்காக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முதன் முறையாக இதில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றம் என்றாலும் 5 காட்சிகளில் நடித்திருக்கிறாராம். அதில் ஒன்று பக்காவான சண்டைக் காட்சி என்கிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • suraGopalan -

    கொஞ்சம் ஓவரா தெரியவில்லை????

    • Yaro Oruvan - DUBAI

      konjam over illa.. rombaaaaaaaaaaaaaaaaaaaaaaa over

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement