Advertisement

பூமராங் - மொட்டையடித்த அதர்வா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். மேகா ஆகாஷ், இந்துஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் விவசாயிகள் பிரச்னையை உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தில் மூன்று மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கிறார் அதர்வா. அதில் ஒரு கெட்டப்பில் தலையில் மொட்டையடித்து நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்காக ஹாலிவுட்டில் இருந்து மார்க் டிராய் டிசோசா, பிரீத்தி ஷில் ஆகிய மேக்கப் மேன்களை கொண்டு வந்து அதர்வாவின் மூன்று கெட்டப்புகளையும் வித்தியாசப்படுத்தி காண்பித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement