Advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட விருப்பமா?

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினியின் 2.0, விஜய்யின் சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைக்க தொடங்கியதில் இருந்தே புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். தற்போது, டுவிட்டரில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களிடம் இசைக்கான ஆர்வம் உள்ளதா? நீங்கள் மேடை ஏற, இதுவே சரியான தருணம். நட்சத்திர பாடகரை தேடி வருகிறேன். அது நீங்கள் என்றால், உங்கள் விவரங்களை இங்கே தெரிவிக்கவும்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ARRived என்ற பெயரில் யு-டியூப் உடன் இணைந்து இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார் ரஹ்மான். பாட விருப்பம் உள்ளவர்கள் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் பாடிய வீடியோவை சம்பந்தப்பட்ட தளத்தில் பதிவிட கேட்டுள்ளார்.
Is your passion for music authentic? Then it's time you ARRived on the big stage! @YouTubeIndia and I are looking for the next great singing star. If you think you're it, send in your entries here → https://t.co/5T5ZmgyqE7 #ARRivedSeries pic.twitter.com/odXQ2B3vd9— A.R.Rahman (@arrahman) September 13, 2018

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement