Advertisement

பாராட்டுக்களைப் பெறும் ராணாவின் சந்திரபாபு நாயுடு தோற்றம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், நடிகருமான என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்டிஆர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் என்டிஆர் ஆக அவருடைய மகன் பாலகிருஷ்ணாவும், அவரது மனைவி பர்வதம்மாவாக வித்யா பாலனும் நடிக்கிறார்கள். என்டிஆரின் மருமகனும், தற்போதைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடித்து வருகிறார்.

1984ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடுவின் இளமைத் தோற்றத்தில் ராணாவின் கெட்அப் போஸ்டர் ஒன்றை அவர் டுவிட்டரில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தார்கள். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் ராணாவின் சந்திரபாபு நாயுடு கெட்-அப் அற்புதமாக உள்ளதாகக் கூறி வருகிறார்கள்.

என்டிஆருடன் சந்திரபாபு நாயுடு 1984ம் ஆண்டு இருப்பதான படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement