Advertisement

நோட்டாவில் நடிகரான முருகதாஸ்

கே.எஸ்.ரவிக்குமார் போன்று இயக்குநர் முருகதாஸூம் அவ்வப்போது தன் படங்களில் தலைகாட்டுவார். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலில் தோன்றினார். கத்தியில் தண்ணீர் குடத்தை தூக்கியபடி ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஜய் தேரகொண்டா, மெஹ்ரீன் நடித்துள்ள நோட்டா படத்திலும் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் சங்கரின் குரு, முருகதாஸ் ஆவார்.

இதுகுறித்து ஆனந்த் சங்கர் டுவிட்டரில் என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம். என்னுடைய இயக்குநரை நடிகராக நான் இயக்கி உள்ளேன் என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    முருகதாஸ் குருவா? இல்லை ஆனந்த் சங்கா் குருவா? ஒன்னும் புரியலை.

  • das - Chennai

    யாருக்கு யாரு குருனு சரியா போடு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement