Advertisement

யூ டியூப்பில் வெளியான கத்தி...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'. கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார் விஜய். சமந்தா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருந்தார்.

ஆக்ஷன் படமான இந்தப் படம், விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் படமாகவும் இருந்தது. இந்தப் படம் மூலம்தான் லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தது.

'கத்தி' படம் வெளியாகி 4 வருடங்கள் கழிந்தநிலையில், தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இன்றி, கத்திப் படத்தை ரசிகர்கள் யூ டியூப்பில் பார்க்கலாம். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூ டியூப் பக்கத்தில் கத்தியை ரசிக்கலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • மங்காத்தாமண்டயன் -

    கத்தி நல்ல படம் தான் அதை விட எங்க தல(வலி)ன் விசுவாசம் படம் நல்லா இருக்கும்

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    இவனெல்லாம் ஒரு நடிகன் இவன் நடிச்ச படத்தை ப்ரீயா காட்டினா கூட பீதியல ஊரை காலி பண்ணிடுவோம். இதையெல்லாம் செய்தியா போடுறீங்களே எசமான்... இது ஞாயமாரே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement