Advertisement

விஜய் பட விழாவில் ரஜினி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. அக்டோபர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சர்கார் படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்கார் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான், ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது. அதன் காரணமாக இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • மங்காத்தாமண்டயன் -

    தலைவா எங்க தல(வலி) படத்துக்கும் போகும் அப்ப தான் ஒரு விளம்பரம் கிடைக்கும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கூத்தாடிக்கு கூத்தாடிதான் துணை...

  • raja - chennai,இந்தியா

    பேட்ட" செய்யாத எங்க கிட்ட "சேட்டை" மாற்ற போரார் என் தலைவர் "நாட்டை" காசுக்கு போடாத "ஓட்டை" திறந்து வைங்கடா "கேட்டை" அதிர போகுது "கோட்டை" வெட்ட போறோம் உங்க வாலுங்கள "ஒட்டை"

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

    இருக்கற இம்சை போதாதுன்னு இவனுங்க வேற .. ரெண்டு பேரும் ஒளறுவானுங்க .. போதாக்குறைக்கு சன் நிறுவனம் வேற .. ஏன்யா மாறன், தாத்தா செத்த துக்கமே இல்லையா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement