Advertisement

பேட்ட தீம் மியூசிக் கம்போசிங்கை வெளியிட்ட அனிருத்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்பட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் அனிருத்தின் பின்னணியும் இசையும் இடம் பெற்றிருந்தது. இதை ரசிகர்கள் வரவேற்ற போதும், சிலர் இது ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் இசையை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், பேட்ட படத்திற்காக தான் கம்போஸ் செய்த தீம் மியூசிக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement