Advertisement

எளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி நிச்சயதார்த்தம்

ரசிகர்களை தனது கணீர் குரலால் கவர்ந்தவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையிழந்த மாற்று திறனாளியான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். தற்போது இவருக்கும், கேரளாவை சேர்ந்த அனூப் என்பவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்களது திருமணம் வரும் அக்-22ஆம் தேதி, வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெற உள்ளது.

கடந்த 2016 டிசம்பரில் விஜயலட்சுமிக்கு சந்தோஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று, 2017 மார்ச்சில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் மணமகன் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்தார் என கூறி அந்த திருமணத்தையே அதிரடியாக நிறுத்தினார் விஜயலட்சுமி.

தற்போது இவர் திருமணம் செய்யவுள்ள அனூப் என்பவர் இன்டீரியர் டெக்ரேட்டர் மட்டுமல்ல, ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. அதுமட்டுமல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விஜயலட்சுமியை திருமணம் செய்ய பெண் கேட்டு அணுகியவர் தானாம். அப்போது சில காரணங்களால் அது கை கூடாமல் போக, இப்போது, நடந்த அனைத்தையும் அறிந்து தானே மீண்டும் தேடிவந்து விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தாராம் அனூப்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Sathish - Coimbatore ,இந்தியா

    யாரு இவன் யாரு இவன் கல்ல தூக்கி போறானே..

  • Naga - Muscat,ஓமன்

    வாழ்த்துக்கள்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பெண்ணின், பேருக்கும், புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு வரவில்லை என்று முழுமையாக நம்பி, இருவரும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.. மனங்கள் சேர்ந்தால் தான் மணம்.. நல்ல குணங்கள் நிறைந்தால் குடும்பம் மகிழ்வுடன் வளரும். வாழ்த்துக்கள்.

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    என்ன மாதிரி குரல் வளம் இந்த பெண்ணுக்கு சரி குரல்தான் அப்படி என்றால் வீணையிலும் வெளுத்து வாங்குகிறார்..கையில் இருக்கும் அந்த இசைக்கருவி மூலம் ஒரு புது மொழியை பேசுகிறார். யூ டியூபில் இல் "புதிய புதிய உலகம் தேடி போகிறேன் என்னை விடு" பாடலையும் "காற்றே காற்றே என்ற சற்று பழமையான மெட்டில் இசையமைக்கப்பட்டிருக்கும் பாடலையும் கேட்டுப்பாருங்கள். நல்ல அமைதியான மகிழ்ச்சியான மனா வாழ்க்கை அமைந்திட வாழ்த்துக்கள், விஜி

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    நல்லவர்களுக்கு நிச்சயம் நல்ல வாழ்வு உண்டு

  • Sekar KR - Chennai,இந்தியா

    பொக்கிஷம் இருக்கவேண்டிய இடத்தில்தான் இருக்கவேண்டும். வாழ்த்துக்கள்

  • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

    நல்லுள்ளங்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • VENKAT - COIMBATORE,இந்தியா

    வாழ்த்துக்கள் சகோதரி...... நன்றி அனூப்......

  • ram - sydney,ஆஸ்திரேலியா

    வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement