Advertisement

தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய வருண் தவான்

வருண் தவான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் சுய் தாகா. கைத்தறி துணிகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அனுஷ்கா சர்மாவுக்கு தேசிய விருது பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிற படம். தேசிய விருது பெற்ற சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். மனீஷ் சர்மா தயாரித்துள்ளார். வருகிற 28ம் தேதி வெளிவருகிறது.

வருண் தவான் இந்த படத்தில் மவுஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் இந்த கதாபாத்திரத்திற்கு சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் அதனை படம் முழுக்க பயன்படுத்தி உள்ளனர்.
"மவுஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என்கிறார் வருண் தவான் .
வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது "என்கிறார் அனுஷ்கா சர்மா. தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement