Advertisement

சல்மான்கானின் குணத்தோடு வளரும் ஷாருக்கான் மகன்

சமீபகாலமாக பாலிவுட்டின் இரு துருவங்களாக சல்மான்கானும் ஷாருக்கானும் பொதுவெளியில் தங்களது நட்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இதன்மூலம் இவர்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்பதை அறிந்து இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.. இந்தநிலையில் சல்மான்கான் தற்போது நடத்திவரும் தஸ் கா தத் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஷாருக்கான்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது 5 வயது மகன் அப்ராம் இப்போதே சல்மான்கான் பாணியில் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் ஐ லவ் யூ சொல்கிறான் எனகூறினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், "பெண்களிடம் ஐ லவ் யூ சொல்வது நல்ல விஷயம் தானே" என கூறி நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக்கினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement