Advertisement

ஜனசதாப்தி ரயிலில் காயம்குளம் கொச்சுன்னி புரமோஷன்

மோகன்லால், நிவின்பாலி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் காயம்குளம் கொச்சுன்னி. தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கினார் ரோஷன் ஆண்ட்ரூஸ், அவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வெள்ளையார் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்த ஒரு பலே கொள்ளையனின் கதைதான் இந்த காயம்குளம் கொச்சுன்னி.

வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகளை கடந்த ஜூலை இறுதியிலேயே துவங்கிவிட்டனர்.. புதுப்புது பாணிகளில் இந்தப்படத்தின் விளம்பர யுக்திகளை மேற்கொள்ள இருக்கின்றனராம் படக்குழுவினர்.

அந்தவகையில் புரமோஷனின் ஒரு பகுதியாக இன்று முதல் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ஜனசதாப்தி ரயிலின் வெளிப்பக்கம் முழுதும் காயம்குளம் கொச்சுன்னி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.. இது ரயில் பயணிகளை ரொம்பவே கவர்ந்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement