Advertisement

வருங்கால மாமியாருக்கு வாழ்த்து!

பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முகத்தில், திருமண களை தாண்டவமாடுகிறது. சக நடிகர் ரன்பீர் கபூரை, அவர் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதுகுறித்து வாய் திறக்க மறுத்து விட்டார். ஆனால், ரன்பீர், 'ஆம்... ஆலியா பட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என, 'சஸ்பென்ஸ்' வைத்து பேசினார்.
சமீபத்தில், ரன்பீரின் தாய், தன், 60வது பிறந்த நாளை கொண்டாடினார். நள்ளிரவில் அங்கு சென்ற ஆலியா, தன் வருங்கால மாமியாருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால், விரைவிலேயே இவர்களது திருமணம் நடக்கும் என்கின்றனர், பாலிவுட் பிரபலங்கள். ஆனால், 'ரன்பீர், ஒரு காதல் மன்னன். ஏற்கனவே, கத்ரீனா, தீபிகா போன்ற நடிகையரை காதலித்து, 'கழற்றி' விட்டவர். அதனால், ஆலியா விஷயத்தில், இப்போதைக்கு எதுவும் கூற முடியாது' என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement