Advertisement

இன்று துவங்கியது 'எஸ்கே-13'

வருடத்துக்கு ஒரு படத்தில் நடிப்பதால் வருமான இழப்பு என்பதை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து 'சீமராஜா' படப்பிடிப்பில் பிசியாக இருந்தவர், அடுத்து ஆர்.ரவிகுமார் இயக்கும் சயன்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை கடந்த மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. எனவே 'எஸ்கே-13' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. எம்.ராஜேஷும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement