Advertisement

கிண்டலடிக்கப்பட்ட 'விஷ்ணுவிஷால்-17'

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'கதாநாயகன்'. முருகானந்தம் இயக்கிய இந்தப்படம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. கதாநாயகன் படம் வணிகரீதியில் படு தோல்வியடைந்ததால், கிட்டத்தட்ட ஒரு வருடமாக வேறு படங்களில் நடிக்காமலே இருந்தார் விஷ்ணுவிஷால்.

'ராட்சசன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜகஜால கில்லாடி' என மூன்று படங்கள் முடிவடைந்தும் விஷ்ணு விஷாலின் அடுத்த படம் எதுவும் இன்னும் ரிலீஸாகவில்லை.இந்நிலையில், புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். அவருடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் நான்காவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தலைப்பு வைக்கப்படாத சூழலில் நடிகரின் பெயருடன் பட எண்ணிக்கையை குறிப்பிடுவதுபோல் தன்னுடைய புதிய படத்தையும் 'விஷ்ணுவிஷால்-17' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விஷ்ணுவிஷாலை கிண்டல் பண்ணி வருகிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement