Advertisement

ஹீரோக்களை வருத்தப்பட வைத்த 'தமிழ்ப்படம் 2'

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள 'தமிழ்ப்படம் 2' இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி.

சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த தமிழ்ப்படம் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

ரஜினி தொடங்கி தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. அப்படி இருந்தும் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் இந்தப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார்கள். இது தவறான விஷயம் என்ற ஆதங்கம் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதாம்.

நம்மை நக்கலடிக்கும் படத்தை நாமே ஆதரிக்கலாமா என்று வருத்தப்பட்டுள்ளனர். இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

  நடிகர்கள் சுதந்திரமாக நடிக்க வாய்ப்புக்கொடுக்கவும். நடிகன் என்பவன் ஒரு கதாபாத்திரத்தின் விம்பம். அவன் புகை பிடித்தால் என்ன? மது அருந்தினால் என்ன? ஒரு விம்பம் அந்த கதாபாத்திரம். தட் சிட்... புகைத்தலுக்கோ - மதுவுக்கோ திரையில் தடை விளம்பரம் வரும்போது எனது மகன் - மக்களுக்குத் தெரிகின்றது, சிகரெட் பாத்தப்போறார்கள், சாராயம் குடிக்கப்போறார்கள் என்று, அதனால், பிள்ளைகளுக்குத் தெரிகின்றது என்ன நடக்கப்போகின்றது... அடுத்த கட்டத்தில்... ஆனால், அன்று சிகரெட் புகைத்தாலும் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், ரஜினியின் வரவு பலருக்கு பயிற்சி கொடுத்தார். ஆனாலும், புகைபிடிக்காதவனும் இருந்தார்கள் தானே? சிலர் பலத்தைக் கற்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

 • இரட்டை மெழுகுவர்த்தி நமது சின்னம் - madurai,இந்தியா

  படம் என்பது மக்களுக்கு மனஉளைச்சலை போக்கும் ஒரு பொழுதுபோக்கு மருந்து என்பதை இந்த படம் காண்பித்திருக்கிறது.. நன்றி... முன்னணி நடிகர்கள் என்றாலும் அவர்களை கலாய்துள்ளது மக்களுக்காவே என்பதால் இது எப்படி தவறாகும்..

 • தலைவா - chennai,இந்தியா

  நிச்சயம் இந்த படங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் சினிமாக்காரர்கள் அட்டகத்திகள் அவர்கள் வேலை மக்களை சந்தோசப்படுத்துவதே தவிர மக்களுக்கு தலைவனாகி வழி நடத்துதல் அல்ல என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் விழிப்புணர்ச்சி படம்.

  • Shriram - Chennai,இந்தியா

   பாய் நீ சொல்றத நான் ஒத்துக்குறேண். ஆனா உன் பேர மாத்து.

 • ,😁😁 -

  l support this film

 • S.Ganesan - Hosur,இந்தியா

  ஏற்கனவே பல படங்களில் MGR மற்றும் சிவாஜியை கிண்டல் செய்து வந்த சீன்கள் இவர்களுக்கு தெரியாதா ? இப்போது இவர்களை கிண்டல் செய்தால் அது தவறா ? எந்த ஊர் நியாயம் இது ? திருமுருக கிருபானந்த வாரியாரை கிண்டல் செய்து சின்னி ஜெயந்த் பேசியது இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். கலைஞர் , காமராஜர் பாணியில் நகைச்சுவை என்ற பெயரில் பலரும் கிண்டலாக பேசியது இவர்களுக்கு தெரியாதா ? இதை பெரிது படுத்தாமல் ஜாலியாக போங்க பாஸ்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  நீங்க ஊரை ஏமாத்தி கோடிகளில் புரளலாம், குறிப்பிட்ட இனத்தவரின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்யலாம். ஹிந்து மதத்தை புண் படுத்தும் விடாம நடிக்கலாம் ஊரை ஏமாத்தலாம். நடிக்க வாய்ப்பு தரேன்னு சொல்லி பெண்களை ஏமாத்தலாம் . ஆனால உங்களை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதா ? அட போங்கடா பொச கேட்ட பயலுவளா. இந்த படத்துக்கு எங்க ஆதரவு உண்டு .

 • Kalyanaraman S - Bangalore,இந்தியா

  இதே ஹீரோக்கள் தங்களுடைய படங்களில் அரசியல்வாதிகள், போலீஸ், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மந்திரிகள் போன்றவர்களை கிண்டல் செய்து நடித்தது நினைவுக்கு வரவில்லையோ? அவர்கள் மற்றவர்களை கலாய்த்தால், மற்றவர்கள் அதையே செய்தால் வருத்தம் என்ன சினிமா உலகமடா இது?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  படத்தில் நடித்துக்கொண்டே ஹீரோக்களை கிண்டல் அடித்தது கௌண்டமணி தான் . அவர் என்ன செய்தாலும் யாரும் கோவித்து கொள்ளமாட்டார்கள் . பழைய படங்களில் ஆடு நாய் நடிக்கும் அதற்கு பெயர் வைத்து இருப்பார்கள் . சரத் குமார் ராமு ராமு என்று ஆட்டை தேடுவார் .அதை கூட கிண்டல் செய்து, ஆட்டுக்கு ராமு ..நாய்க்கு சோமு ...போங்கடா டேய், என்று போகிற போக்கில் கலாய்த்துவிடுவார் . அது போல தான் அமுதன் படமும் .

 • KayD - Mississauga,கனடா

  சினிமா ஒரு என்டேர்டைன்மெண்ட் மீடியா .. heros thaangal kindaliadika pattu irukirom ru feel panarganana avanga andha maathri roles la acting koduthathaal thaanae. TP2 vala nichayam inimel indha dubaakur heroism movies aatam kuraiyum. nalla movies varum. All the best TP2 team for an eye er movie to tamil cinema citizens ku.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement