Advertisement

நயன்தாரா படத்தின் டிரெய்லரை பாராட்டிய சமந்தா

சமீபகாலமாக நயன்தாரா தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் சக நடிகைகளை ரொம்பவே கவர்ந்து வருகிறது. அதனால் அவரைப் போலவே அடுத்தபடியாக வித்தியாசமான கதைகள் பக்கம் சில நடிகைகள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சமந்தாவும் ஒருவர்.

இதுவரை வழக்கமான நாயகியாக நடித்து வந்த சமந்தா தற்போது நயன்தாரா பாணியில் அழுத்தமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளார். அதோடு நயன்தாரா நடிக்கும் படங்களைப்பற்றியும் அவ்வப்போது பாசிட்டீவான கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் சமந்தா, தற்போது நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தின் டிரெய்லர் சிறப்பாக உள்ளதாக தெரிவித்திருப்பவர், இந்த படத்தை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement