Advertisement

மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ்

சமீபகாலமாக காஸ்டிங் கவுச் என்கிற வார்த்தை திரையுலகையையே கதிகலங்க வைத்து வருகிறது. வாய்ப்பு தருவதாக சொல்லி படுக்கைக்கு அழைக்கும் சினிமா பிரபலங்களை பற்றி அவ்வப்போது சாதாரண நடிகைகளில் இருந்து முன்னணியில் உள்ள நடிகைகள் வரை சிலர் புகார் பாத்திரம் வாசித்து வருகிறார்கள். சமீபகாலமாக தெலுங்கு திரையுலகையே தனது புகார்களால் கதறவிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி..

இந்தநிலையில் மலையாள நடிகை ஹனிரோஸும் மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்ச்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்த நிலையை அடையும் வரை இந்த காஸ்டிங் கவுச்சின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தமாதிரி நேரங்களில் நம்மை மூளைச்சலவை செய்யும் வேலைகூட நடக்கும். நல்லவேளையாக எனக்கு என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் துணையாக இருப்பதால் இதுபோன்ற சங்கடங்களில் சிக்கவில்லை" என கூறியுள்ளார் ஹனிரோஸ்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    என்னவோ ...இதெல்லாம் புதுசு போல் செய்தியாக்குகிறார்களே ? அன்றைக்கும் இது உண்டு , இன்றும் உண்டு, நாளையும் இருக்கும் .....இந்த துறையில் இன்றியமையாத அம்சம். தரை டிக்கெட்டில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கூட தெரிந்த 'ரகசியம்'

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement