Advertisement

டிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள படம் டிராபிக் ராமசாமி. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, பா.விஜய் என பலர் நட்புக்காக நடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களோடு நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி, டிராபிக் ராமசாமியாக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நட்புக்காக நடித்துள்ள அனைவருமே உதவி செய்வது போன்று தான் நடித்துள்ளார்களாம்.
அதேப்போல் விஜய் சேதுபதியும் ஒரு காட்சியில் வந்து உதவி செய்துவிட்டு செல்லும் வேடமாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement