Advertisement

தமன்னாவை உற்சாகப்படுத்திய படம்!

தமன்னாவின் கேரியரில் ராஜமவுலியின் பாகுபலியில் நடித்த அவந்திகா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரைக்கும் தமன்னாவை கவர்ச்சி நாயகியாக மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், ராஜமவுலி மட்டுமே அவரை புரட்சி பெண்ணாக பயன்படுத்தினார். அதனால் அந்த படம் தமன்னாவிற்குள் இருந்து ஆவேசமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது.

என்றாலும், அதன்பிறகு மீண்டும் அவரை இயக்குனர்கள் ரொமான்டிக் நாயகியாகவே நடிக்க வைத்து வந்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் சுதந்திர போராட்ட களத்தில் போராடும் பெண்ணாக நடிக்கிறாராம் தமன்னா. அந்த வகையில், இந்த படத்திலும் அவருக்கு புரட்சிகரமான வேடம்தானாம். அதனால், இந்த படமும் எனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் முக்கிய படமாக அமைந்துள்ளது என்று உற்சாகமாக கூறி வருகிறார் தமன்னா.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement