Advertisement

பிக்பாஸில் மும்தாஜ்?

கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல, அதில் பங்கேற்ற பிரபலங்களும் தற்போது மிக பிரபலமாகி இருப்பதால், பிக்பாஸ் சீசன்-2வில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், மோனிசா என் மோனோலிசா, குஷி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜூம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன்-1 நடந்தபோதே இவரை அழைத்தனர். ஆனால் அப்போது பெரிதாக ஆர்வம் காட்டாத மும்தாஜ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ரைசா, ஜூலி உள்ளிட்டோர் சினிமா பிசியாகி விட்டதைப்பார்த்து தனக்கும் ஒரு ரீ-என்ட்ரி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் சீசன்-2வில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement