Advertisement

ரெமோ வில்லனுக்கு அண்ணனாக மாறிய மம்முட்டி

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் காதலுக்கு வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் அன்சன் பால். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பிரபல பாலிவுட் நடிகரும் நாடக ஆசிரியருமான அனுபம் கெர் நடத்தி வரும் நடிப்பு பயிற்சி பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டவர் தான் இந்த அன்சன் பால்.

தற்போது மம்முட்டி நடித்து நாளை வெளியாகவுள்ள போலீஸ் ஸ்டோரியான 'ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்' படத்தில் மம்முட்டியின் தம்பியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் அன்சன் பால். இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவரை தனது சகோதரர் என்றே மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவாராம் மம்முட்டி. நாளை வெளியாகும் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் அன்சன் பால்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement